Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
ஷகிப் அல் ஹசன்: வங்கதேசத்தின் வெற்றியில் ஆல்ரவுண்டராக அசத்தி சாதனை

[Image: _107525431_ssssss.jpg]படத்தின் காப்புரிமைALEX DAVIDSON/GETTY IMAGES
வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே சவுத்தாம்டனில் நடந்த ஐசிசி உலகக்கோப்பை லீக் போட்டியில் 62 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் வெற்றிபெற்றுள்ளது.
இந்த போட்டியில் டாஸ்' வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
வங்கதேச பேட்டிங்கில் தொடக்க வீரர்கள் லிட்டன் டாஸ் மற்றும் தமீம் இக்பால் ஆகிய இருவரும் நிதானமாக விளையாடினர். லிட்டன் டாஸ் 16 ரன்களில் ஆட்டமிழக்க, தமீம் இக்பால் 53 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார்.
இதன்பின்னர் களமிறங்கிய முஸ்ஃபிகுர் ரஹீம் மற்றும் ஷகிப் அல் ஹசன் இணை சிறப்பாக விளையாடியது.
அதிரடியாக விளையாடிய முஸ்ஃபிகுர் ரஹீம் 87 பந்துகளில் 83 ரன்கள் எடுத்தார். இதேவேளையில் அனுபவம் வாய்ந்த ஷகிப் அல் ஹசன் அரைசதம் எடுத்தார். இதையடுத்து வங்கதேச அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 262 ரன்கள் எடுத்தது.
[Image: _107525435_rahim.jpg]படத்தின் காப்புரிமைALEX DAVIDSON/GETTY IMAGESImage captionமுஸ்ஃபிகுர் ரஹீம்
263 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்துவந்ததால் வெற்றி இலக்கை அந்த அணியால் நெருங்கமுடியவில்லை.
இந்தியாவுக்கு எதிராக நடந்த முந்தைய போட்டியில் மிக குறைந்த ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்ற ஆப்கானிஸ்தான் இந்த போட்டியில் எதிர்பார்த்த அளவு பேட்டிங்கில் ஜொலிக்கவில்லை.
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடிய முகமது நபி ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் ஷின்வாரி மட்டும் போராடி 49 ரன்கள் எடுத்தார்.
47 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் அணி 200 ரன்களை மட்டும் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததால் 62 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் வென்றது.
இப்போட்டியில், 50 ரன்கள் மற்றும் 5 விக்கெட்களை கைப்பற்றியதன் மூலம், உலகக்கோப்பை தொடரில் முன்னாள் இந்திய வீரர் யுவராஜ் சிங்கிற்கு பின் இந்த சாதனையை ஷகிப் அல் ஹசன் எட்டியுள்ளார்

[Image: _107525429_gettyimages-1158032549.jpg]படத்தின் காப்புரிமைALEX DAVIDSON/GETTY IMAGESImage captionஷகிப் அல் ஹசன்
கடந்த 2011 உலகக்கோப்பை தொடரில் அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் யுவராஜ் சிங் இந்த சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றியின் மூலம், எஞ்சியுள்ள போட்டிகள் அனைத்திலும் வென்றால் வங்கதேச அணி அரையிறுதி போட்டிக்கு தகுதிபெறும் வாய்ப்பு அதிகரிக்கும்.
இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள வங்கதேசம் 3 வெற்றிகளுடன், 7 புள்ளிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. அதேவேளையில் 7 போட்டிகளில் விளையாடியுள்ள ஆப்கானிஸ்தான் அணி அனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 25-06-2019, 09:50 AM



Users browsing this thread: 102 Guest(s)