25-06-2019, 09:38 AM
சென்னையில் ஒரே நாளில் 11 செயின்பறிப்புகள்: வழிப்பறி கொள்ளையர்களுடன் போராடிய 3 பெண்கள் காயம்
செயின் பறிப்பு கொள்ளையர்களும் பாதிக்கப்பட்ட பெண்களும்
சென்னையில் அதிகரித்திருந்த செயின் பறிப்பு, செல்போன் பறிப்புகள் சிசிடிவி கேமராக்கள் அதிக அளவில் நிறுவப்பட்டவுடன் குறைந்திருந்த நிலையில் மீண்டும் அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 11 சம்பவங்களில் 3 பெண்கள் காயமடைந்தனர்.
சென்னையில் செயின் பறிப்புகள், செல்போன் பறிப்புகள் அதிரித்து பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத நிலை இருந்தது. நுங்கம்பாக்கத்தில் செல்போன் பறிப்பின்போது ஒரு மாணவன் கொல்லப்பட்டார். பின்னர் குன்றத்தூரில் ஒரு பெண்மணி சாலையில் இழுத்துச் செல்லப்பட்டு காயமடைந்தார்.
ஐடி பெண் ஊழியர் லாவண்யா கொடூரமாக தாக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்குப்பின் உயிர் பிழைத்தார். கோயம்பேடு அருகே பேத்தி மற்றும் மகளுடன் வந்த வயதான பெண் தாக்கப்பட்டு கீழே விழ சாவகாசமாக அவரிடம் செயினை பறித்துச் சென்றனர். புழல் அருகே கார் ஓட்டுனர் வழிப்பறியில் கொல்லப்பட்டார்.
இதுபோன்ற தொடர் சம்பவங்கள் காரணமாக கண்காணிப்பு கேமராக்களை அதிக அளவில் நிறுவ காவல் ஆணையர் உத்தரவிட்டார். இதனால் செயின் பறிப்பு செல்போன் பறிப்பு குற்றவாளிகள் எளிதாக சிக்கினர். இதையடுத்து குற்ற எண்ணிக்கை 90 சதவீதம் குறைந்தது.
இந்நிலையில் சமீப காலமாக மீண்டும் செயின் பறிப்பு, செல்போன் பறிப்புகள் ஆங்காங்கே தலைதூக்க தொடங்கியது. இதன் உச்சமாக ஒரே நாளில் நேற்று 10 செயின் பறிப்புச் சம்பவங்களும் ஒரு செல்போன் பறிப்புச் சம்பவமும் நடந்துள்ளது.
இதில் செயின் பறிப்பின்போது கொள்ளையர்களுடன் போராடிய மூன்று பெண்கள் கடுமையான காயமடைந்தனர். அவர்களில் இருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.
முதல் சம்பவமாக நேற்று முன்தினம் மாலை 5-30 மணி அளவில் பெரும்பாக்கம் இந்திராநகர் பிரதான சாலையில் நடந்துச் சென்ற அதே பகுதியில் வசிக்கும் பாலாம்மாள்(75) என்கிற மூதாட்டியிடம் மோட்டார் சைக்கிளில் தன்னந்தனியாக வந்த நபர் அவர் கழுத்திலிருந்த 3.5 சவரன் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றுள்ளார். பள்ளிக்கரணை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 வது சம்பவத்தில் திருவல்லிக்கேணி பேயாழ்வார் தெருவில் வசிக்கும் சுதாதேவி (57) என்பவர் காலை 8-20 மணி அளவில் வடக்கு குளக்கரை சாலை வழியாக நடந்துச் சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் அவர் கழுத்திலிருந்த 5 சவரன் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றனர். இதுகுறித்து ஐஸ் ஹவுஸ் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3-வது சம்பவத்தில் கோட்டூர் ஏரிக்கரை சாலையில் வசிக்கும் குணசீலன் எனபவரின் மனைவி செல்வி (38), காலை 9-00 மணி அளவில் திருமண நிகழ்ச்சி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் போது ஏரிக்கரை சாலை வழியாக நடந்துச் சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் செல்வியிடம் நகையை பறிக்க முயன்றுள்ளனர்.
அதிர்ச்சியடைந்த செல்வி தடுக்க முயன்றதால்,கொள்ளையர்கள் பைக்கோடு கீழே விழுந்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் செல்வியை அடித்து உதைத்துள்ளனர், சரமாரியாக கன்னத்தில் அறைந்து தாக்கியுள்ளனர். செல்வி அலறி சத்தம்போட்டதால் அவர்கள் நகையை பறிக்க முடியாமல் தப்பித்து சென்றனர்.
கோட்டூர்புரம் போலீஸாரிடம் செல்வி புகார் அளித்துள்ளனர். சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செல்விக்கு முகத்திலும், தலையிலும் காயம் ஏற்பட்டது.
4-வது சம்பவமாக ராயப்பேட்டை ஸ்ரீபுரம் முதல் தெருவில் வசிக்கும் ஜெயலட்சுமி(44) என்பவர் காலை 8-30 மணி அளவில் அதே தெரு முனையில் நடந்துச் சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டுபேர் நகையைப் பறிக்க முயல அவர் பறிக்கவிடாமல் கூச்சலிட்டதால் அவர்கள் தப்பிச் சென்றனர். ராயப்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
5-வது சம்பவமாக மயிலாப்பூர் ராதாகிருஷ்ணபுரம் தெருவில் வசிக்கும் சாந்தா(62) காலை 9 மணி அளவில் மயிலாப்பூர் முண்டக்கண்ணி அம்மன் கோவில் தெருவழியாக சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவர் கழுத்தில் அணிந்திருந்த 1 சவரன் தங்கச்சங்கிலியைப் பறித்துச் சென்றனர். மயிலாப்பூர் போலீஸார் விசாரணை.
6-வது சம்பவமாக கொடுங்கையூர், திருவள்ளூர் நகரில் வசிக்கும் ரமணி என்பவர் காலை 11-30 மணி அளவில் அம்பேத்கர் கல்லூரி அருகில் சென்றுக்கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் அவரது கழுத்திலிருந்த 3 சவரன் தங்கச்சங்கிலியை பறித்துள்ளனர். அப்போது அவர்கள் இழுத்துச் சென்றதில் கீழே விழுந்து முகத்தில் பலத்த காயமடைந்தார்.
7-வது சம்பவமாக ஆதம்பாக்கம் நீலமங்கை நகரில் வசிக்கும் முத்துலட்சுமி (65) என்பவர் மாலை இன்கம்டாக்ஸ் காலனி 2 வது தெருவில் மாலை 6-45 மணி அளவில் நடந்துச் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த இருவர் அவரிடமிருந்த 5 சவரன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு பறந்தனர்.
இதில் அவர் மோட்டார் சைக்கிளுடன் இழுத்துச் செல்லப்பட்டு கீழே விழுந்ததில் முகம், கைகால்களில் பலத்த காயம் மற்றும் சிராய்ப்பு காரணமாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆதம்பாக்கம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
8-வது சம்பவமாக சூளைமேடு பஜனைக்கோவில் தெருவில் வசிக்கும் கற்பககன்னி(28) என்பவர் இரவு 9-30 மணி அளவில் திருமங்கலம் 100 அடிச்சாலையில் நடந்து வந்துக்கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவர் கழுத்திலிருந்த 6 சவரன் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றனர். திருமங்கலம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
9-வது சம்பவமாக எழும்பூர் சுந்தர் தெருவில் வசிக்கும் மேரி (65) என்பவர் நேற்றிரவு 10 மணி அளவில் சாமிரெட்டி தெரு திருவீதி அம்மன் தெருவழியாக வந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவர் கழுத்தில் அணிந்திருந்த 2 சவரன் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றனர். எழும்பூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
10-வது சம்பவமாக சென்னை தேனாம்பேட்டை சீத்தாம்மாள் காலனியில் நடந்துச் சென்ற பெண்ணிடம், மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் அவர் கழுத்தில் இருந்து செயினை பறிக்க முயன்ற சம்பவம் நடந்துள்ளது. அப்போது அந்த பெண் கீழே விழுந்து காயமடைந்தார்.
அது தொடர்பான சிசிடிவி காட்சிகளை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். ஆனால் பாதிக்கப்பட்ட பெண் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவில்லை. ஆனாலும் போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
11-வது சம்பவமாக வில்லிவாக்கம், நொளம்பூர் பகுதியில் வசிக்கும் சுமிதா(29) வெளியூர் சென்றுவிட்டு திரும்ப வந்தவர் தனது தந்தைக்காக, கீழ்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் காத்துக்கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் அவரிடமிருந்த கைப்பயை பறித்துச் சென்றனர்.
அதில் ரூ.5000 ரொக்கப்பணமும், புத்தம் புதிய செல்போனும் இருந்தது. இதுகுறித்து கீழ்ப்பாக்கம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நாளில் 11 சம்பவங்களிலும் 11 பெண்கள் குறிப்பாக மூதாட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் 3 பெண்கள் கடுமையாக காயமடைந்துள்ளனர்.
11 இடங்களில் அடுத்தடுத்து நகை பறிப்பு, வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்றுள்ளது பெண்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது. மொத்தம் 26 சவரன் தங்க நகைகளை பறித்துச் சென்ற கொள்ளையர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
சென்னையில் மீண்டும் செயின் பறிப்பு சம்பவங்கள் தலை தூக்கியிருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளையர்களை விரைந்து பிடித்து நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

first 5 lakhs viewed thread tamil