Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
`அந்த ஆடியோ உண்மைதான்’ - தங்க தமிழ்ச்செல்வன் மீது பாயும் வெற்றிவேல்!

தங்க தமிழ்ச்செல்வன், டி.டி.வி. தினகரனை திட்டித்தீர்க்கும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
[Image: 160012_thumb_18528.jpg]
டி.டி.வி. தினகரனுக்கும் தங்க தமிழ்ச்செல்வனுக்கும் இடையே தேர்தல் முடிந்ததிலிருந்தே பிரச்னை ஆரம்பமாகிவிட்டது என கூறப்பட்டது. அதனை நிரூபிக்கும் விதமாக, தற்போது ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆடியோவில், டி.டி.வி. தினகரனின் உதவியாளரும் தங்க தமிழ்ச்செல்வனும் பேசிக்கொள்கிறார்கள். அதில், டி.டி.வி. தினகரன் எங்கே என கேட்கிறார் தங்க தமிழ்ச்செல்வன். அதற்கு அவர், "அண்ணன் இல்லை. நான் ஊருக்கு வந்துவிட்டேன்" என்கிறார். உடனே கோபப்படும் தங்க தமிழ்ச்செல்வன், "இந்த மாதிரி பொட்டத்தனமான அரசியல் பண்றதை நிறுத்தச்சொல்லுப்பா. உங்க அண்ணணை நிறுத்தச்சொல்லு. நான் விஸ்வரூபம் எடுத்தா, நீங்க அழிஞ்சிபோவீங்க. நான் நல்லவன். நேற்று நீங்க தேனியில கூட்டம்போட்டீங்க. நாளைக்கு நான் மதுரைல கூட்டம் போடவா? பாரு... என்ன நடக்குதுனு பாரு. இந்த பேடித்தனமான அரசியல பண்ண வேணாம்னு உங்க அண்ணன்ட சொல்லிடு. தோத்துப்போவ... என்னைக்கும் ஜெயிக்க மாட்ட" என்று கடுமையாகப் பேசுகிறார்.





[Image: images_(3)_18227.jpeg]
ஆடியோ பின்னணியும்... தங்க தமிழ்ச்செல்வனின் கோபமும் : 
மதுரை எம்.பி தேர்தலில் அ.ம.மு.க வேட்பாளராக நிறுத்தப்பட்ட டேவிட் அண்ணாதுரை, உசிலம்பட்டி முன்னாள் எம்.எல்.ஏ-வும், திருப்பரங்குன்றம் அ.ம.மு.க வேட்பாளருமான மகேந்திரன் ஆகிய இருவரது தலைமையில், நேற்று தேனியில் ஒரு கூட்டம் போட்டதாகவும், தங்க தமிழ்ச்செல்வனுக்குப் பதிலாக புதிய நபரை நியமிப்பது தொடர்பாக அக்கூட்டத்தில் பேசப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தங்க தமிழ்ச்செல்வன், அ.தி.மு.க'வில் இணையப்போகிறார் எனத் தகவல் வெளியான நிலையில், தேனிக்கு புதிய நிர்வாகியை டி.டி.வி. தினகரன் நியமிக்கச் சொல்லியதாகவும், அதன் அடிப்படையிலேயே கூட்டம் போடப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் கோபமடைந்த தங்க தமிழ்ச்செல்வன், டி.டி.வி. தினகரனின் உதவியாளரை அழைத்து கோபத்தைக் கொட்டித்தீர்த்துள்ளார். அதன்பின்னர், தனது கூடாரத்தை இன்று மாலை தேனியில் உள்ள தனியார் ஹோட்டலில் கூட்டினார். பின்னர், தனது ஆதரவாளர்களுடன் கம்பம் சென்றுள்ளார். இந்நிலையில், தங்க தமிழ்ச்செல்வனுடன் இருந்த பலர், சென்னை சென்றுவிட்டதாகவும் டி.டி.வி. தினகரனை சந்திக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்றகழகத்தைச்சேர்ந்த வெற்றிவேலிடம் பேசினோம். அவர், `ஆம் அந்த ஆடியோ உண்மைதான். அவருக்கு மனநிலை சரியில்லை. வீட்டிலிருப்பவர்கள், அவரை சரியான மருத்துவரிடம் காட்டினால் சிறந்தது” என்று கூறினார். 
தங்கதமிழ்செல்வனை தொடர்பு கொள்ள முயற்சித்தோம். ஆனால் அவர் செல்ஃபோன் அணைத்துவைக்கப்பட்டுள்ளது. அவர் விளக்கம் கொடுத்தால் பிரசுரிக்க தயாராக உள்ளோம். 
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 25-06-2019, 09:35 AM



Users browsing this thread: 51 Guest(s)