Fantasy என்ன பண்றது என் லவ்வர் ஆச்சே!!
என்ன பண்றது என் லவ்வர் ஆச்சே!! - பாகம் 25



சௌமியா அடித்த அடியில் மலர் கதி கலங்கி பொய் நின்றாள் ..அவளையும் அறியாமல் கண்ணீர் மிதமாக வழிய ஆரம்பித்தது 

"அரிப்பெடுத்த சிறுக்கி..!! போனா போகுது எதோ சின்ன வயசு ன்னு ..நீ பண்றதை எல்லாம் சகிச்சிக்கிட்டு போனா , இப்படி தான் பண்ணுவியா    ....?"மரியாதையா வெளிய போடி தேவடியா ,,என்றால் கடும் கோபமாக 


அண்ணியின் மோசமான பேச்சு  கிஷோரின்  மூளையில் சுரீர்ர்ர் என்று உறைத்தது. இன்ஸ்டன்டாய் ஒரு கோபம் அவனுக்குள் கொப்பளிக்க ஆரம்பித்தது. ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு அண்ணியிடம் சொன்னான் 

"அண்ணி ...... இங்க என்ன நடந்ததுன்னு தெரியாம அப்டிலாம் பேசாதீங்க .. ..மலர் ரொம்ப நல்லவ ..!!".

"என்னடா.. இவ்ளோ நேரம்  உன் வருங்கால  பொண்டாட்டி  செஞ்சதை பார்த்து வராத கோபம் ,  என்ன பார்த்ததும்  கோவம் பொத்துக்கிட்டு வருது..? இவா அப்டி என்ன சொக்குப்பொடி போட்டு உன்னை மயக்குனா..? ம்ம்ம்..?"

"அண்ணி .. ப்ளீஸ் ..!!"

"சொல்லுடா..!! எனக்கு இப்போ தெரிஞ்சாகனும்.. எதைக்காட்டி உங்களை எல்லாரையும்  அவ சந்தோஷப்படுத்தினான்னு.. எனக்கு இப்போ தெரிஞ்சாகனும்.. சொல்லு..!!"

சௌமியா விகாரமாக முகத்தை வைத்துக் கொண்டு, கண்களை உருட்டிக் கேட்டாள். அவள் வாயில் இருந்து விழுந்த விஷ வார்த்தைகளில்  கிஷோர் உஷ்னமானான் . 

அது வரை அமைதியா இருந்த வள்ளி ..ஆத்திரத்துடன் ஒற்றை விரலை நீட்டி, என்னடி.. அப்டியே பத்தினி மாதிரி பேசுற ..? நான் பேசுனா.. உன் வண்டவாளம்லாம் வெளிய வந்துடும்னு ன்னு சௌமியாவை எச்சரித்தாள் ..வள்ளி ""போதுமடி .. இத்தோட நிறுத்திக்கோ.. இதுதான் உன் லிமிட்..!! இதுக்கு மேல மலரை  பத்தி தப்பா பேசுன..?"

உனக்கு எப்படி இந்த வீட்ல மருமகன்னு உரிமை இருக்கோ , அதே மாதிரி தான் மலருக்கும் இருக்கு ?...நாங்க இருக்கும் போதே அவளை வீட்ட விட்டு வெளிய போ சொல்றலவுக்கு உனக்கு திமிராயிடுச்சா..?

அதுவரை அமைதியா அழுதுகொண்டிருந்த மலர் .." போதும் ..உங்களை கையெடுத்து கும்பிடுறேங்க.. தயவு செஞ்சு எனக்காக இங்க யாரும் சண்டை போட வேண்டாம் ,,அக்கா நீங்க நினைக்கிற மாதிரி நான்  அப்படிப்பட்ட பொண்ணு இல்லை..!!" மலர் கண்ணீருடன் சவுமியாவை கையெடுத்து கும்பிட்டாள்...இனிமே இந்த வீட்டுக்கு வர மாட்டேன் ..வர மாட்டேன் ன்னு சொல்லிவிட்டு  திரும்பி, விடுவிடுவென வெளிய நடந்தாள் 

கிஷோருக்கு அண்ணி மீது கோபம், மனதுக்குள் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. ச்சே..!! எப்படியெல்லாம் வக்கிரமாக பேசுகிறாள்..? இவளும் ஒரு பொம்பளைதானே..? இன்னொரு பெண்ணை பற்றி தப்பாக பேச எப்படித்தான் இவளுக்கு நாக்கு வளைகிறதோ..?

கிஷோருக்கு அண்ணி மீது இருந்த கொஞ்ச நஞ்ச நல்ல மதிப்பும், அன்றோடு போனது. அதன் பிறகு இன்று வரை, அவன் தன் அண்ணியிடம்  ஒழுங்காக முகம் கொடுத்து பேசுவது கிடையாது. அவள் மீதான கோபம், இன்றும் கூட ஆறா ரணமாக அவன் மனதுக்குள் இருக்கிறது. அண்ணி மீதான கோபம் ஒருபுறம் என்றால், காதலி சவுமியா மீதான இரக்கம் இன்னொருபுறம் அவனை வாட்டியது. ச்சே..!! எவ்வளவு நல்ல பெண் என் சௌமிய ..? அண்ணியின் சுடுசொல் தாங்காமல் எப்படி எல்லாம் துடித்து போயிருப்பாள்..? எந்த தவறுமே செய்யாதவளுக்கு, என்னால் அப்படி ஒரு களங்கம் வந்துவிட்டதே..? இல்லை.. இனிமேல் அவளுக்கு என்னால் எந்த கஷ்டமும் வரக்கூடாது..!!

கிஷோர்    அவளை பார்ப்பதை, அவளுடன் பேசுவதை நிறுத்தினான் . வீட்டில் அண்ணியும் அண்ணனும்  சண்டை போடும்போது, முன்பு போல போர்வைக்குள் முடங்கிக்கொண்டான் ...எப்போவது வெளிய போகும்போது எதிர்ச்சியா .மலரை  பார்க்க நேரிடும். அப்போது கூட, பெரும்பாலும் தலையை குனிந்தேதான் அமைதியா கடந்துசெல்வான் 

. எப்போதாவது இருவர்  கண்கள் சந்தித்துக் கொள்ள நேரிட்டாலும், உடனே வேறெங்காவது திருப்பிக் கொள்வான் . இத்தனை நாளாய் 'மலர் ...மலர் ..' என்று திரிந்துவிட்டு, இப்போது அவள் முகத்தை கூட சரியாக பார்க்காமல் இருப்பது, இதயத்தில் வெடி வைத்தது மாதிரி இருந்தது.

ஒரு இரண்டு வாரம் அதே மாதிரி சென்றது....கிஷோருக்கு இந்த நிலமை என்றால் , அங்க மலரின் நிலமை இதை விடவும் மோசமாக போய்க்கொண்டிருந்தது ...

எப்போதும் துரு துறுவென வீட்டை சுற்றி வருபவள் ..இந்த இரண்டு வாரம் முடங்கியே  கிடந்தாள் ..

'டக்.. டக்.. டக்..' என்று அவள் கதவு  தட்டும் சத்தம் கேட்டது. நிமிர்ந்து பார்த்தால், மலரின் அம்மா மரகதம் நின்றிருந்தாள்.." என்னடி ஆச்சு , கேட்டாலும் ஒன்னும் சொல்ல மாட்டுக்க , இப்படியே எத்தனை நாள் தான் வீட்லையே முடங்கி இருக்கப்போற 

மலர் தன் அம்மாவின் முகத்தை பார்க்காமல் வேறெங்கேயோ பார்த்துக் கொண்டு, ஒரு மாதிரி உலர்ந்துபோன குரலில் சொன்னாள்." என்ன கொஞ்சம் தனியா விடுங்க ம்மா ப்ளீஸ் "

மரகதம் கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக் கொண்டு அவளுக்கு முன் நின்று கொண்டாள், அவள் கண்களையே கூர்மையாக பார்த்தாள்

அந்த கூர்பார்வையின் அர்த்தம் மலருக்கு  விளங்கவில்லை. ஆனால் ரொம்ப நேரத்திற்கு அந்த பார்வையை அவளால் எதிர்கொள்ள முடியவில்லை. தலையை குனிந்து கொண்டால் 

மரகதம் தன் ஒரு கையால் அவள் முகத்தை நிமிர்த்தினாள். அமைதியான குரலில் கேட்டாள்.

"ஏன் ..மலர் .. உண்கும் அந்த  கிஷோர் தம்பிக்கும் எதாவது பிரச்னையா  ..? ம்ம்..?"

"அ..அது.. அது வந்து..."  என்ன சொல்வதென்று தெரியாமல் மலர் திகைக்க,

"ம்ம்.. சொல்லு..!!"

"அவளுடைய கண்கள் மெல்ல கலங்க ஆரம்பித்தன. மூக்கை ஒரு தடவை உறிஞ்சிக் கொண்டவள், ஒரு மாதிரி தழதழக்கும் குரலில் அ..அது.. கிஷோர் என்கிட்ட பேச மாட்டுங்கா ம்மா , அவனை பாக்காம.. பேசாம  என்னால இருக்க முடியலை ம்மா ,  இனிமே அவன்கூட பேசவே கூடாதுன்னு.. நானும் நெனச்சேன்..!! 

 ஆனா.. ஆனா இந்த ரெண்டு வாரத்துல.. என்னால முடியல ம்மா ..!! அப்டியே பைத்தியம் புடிச்ச மாதிரி இருக்குது.. என்னால அவனை  பாக்காம.. பேசாம.. இருக்க முடியலை ம்மா ..!!
மிகவும் பரிதாபமான குரலில் சொன்னாள். அவளுடைய வார்த்தைகளில் மரகதம் அப்படியே உருகிப் போனால் .

மரகதம் ஓரிரு வினாடிகள் அமைதியாக மலரின் முகத்தையே பார்த்தாள்., பின்  அவள் கன்னத்தை தாங்கிப் பிடித்து கண்ணீரை துடைத்தபடி ..இதுக்கு எதுக்கு டி அழுகுற , அதான் நாங்க இருக்கோம்ல ..

நீ ரொம்பலாம் போட்டு எதையும் கொழப்பிக்காத...அம்மா கேக்குறதுக்கு மட்டும் பதில் சொல்லு.. சொல்றியா..?"

"ம்ம்.."

"கிஷோரை உனக்கு புடிச்சிருக்கா..?"

"ம்ம்.. பு..புடிச்சிருக்கு..ம்மா !!"

"அதே மாதிரி ...அவங்க அப்பா மூர்த்தியும் ..அண்ணன் கதிரையும் பிடிச்சிருக்கா ..?"

"ம்ம்.. ஆனா.."

"போதும்..!! அம்மவுக்கு இப்போதைக்கு இது போதும்..!! வேற எதுவும் வேணாம்..!! நீ எதைப் பத்தியும் யோசிக்காத.. எப்பவும் போலஜாலியா இரு 


.அம்மாகிட்ட சொல்லிட்டே ல ..இனி நாங்க பார்த்துக்குறோம் ...ன்னு மலரின் தலையை கோதியபடி வெளிய சென்றால் 



 இங்க கிஷோர் வீட்லயும் நிலமை அப்படியதான் இருந்தது ...அப்போ  திடீர்ன்னு ஒரு நாள் சௌமியாவின் அம்மா மருத்துவமனையில் அபாய கட்டத்தில் சேர்ந்திருப்பதாக செய்தி வர , ..வீட்டில் எல்லோரும் அடித்துபிடித்து பதட்டத்துடன் ஹாஸ்ப்பிட்டல் விரைந்தனர் 

சவுமியா அவள் அம்மாவை பார்த்ததும் அழ ஆரம்பித்தாள் ...டாக்ட்டர் உடனடியாக 7 லச்சம் கேட்ட சொல்ல ..கையில் பணமில்லாமல் குடும்பமே திண்டாடியது ...நேரம் ஆக ஆக ..சவுமியாவின் அம்மா அபாய கட்டத்தை நெருங்கி கொண்டிருந்தாள் ...அவளை பார்க்க முடியாமல் சௌமியா நொடிந்து பொய் உக்கார்ந்து இருந்தாள் ..அப்படியே விட்டால் அவளையும் மருத்துவமனையில் சேர்த்துவிட வேண்டிய நிலை 

இதையெல்லாம் பார்த்து பதைபதைப்புடன் இருந்த கிஷோருக்கு ஒரு யோசனை தோன்ற ..மலருக்கு விஷயத்தை சொல்லி வாட்சப்பில் மெஸேஜ் செய்தான் , அடுத்த 5 நிமிஷத்தில் 10 லச்சம் அவன் அக்கவுண்டுக்கு வந்து சேர ..அதை உடனே அண்ணி கையில் திணித்தான் 

உனக்கு எது டா இவ்ளோ பணம் ...என்று கேட்டு பதமடிந்தால் 

மலர் தந்தா அண்ணி ...எனக்கு வேற வலி தெரியல அண்ணி ..நீங்க வேற எதை பத்தியும் யோசிக்காம உங்க அம்மாவை கவனிங்க ..என்று அவளை வலுக்கட்டாயமாக அனுப்பினான் 

அன்று மலர் தக்க சமயத்தில் பணம் கொடுத்து உதவியதால் , அவள் புண்ணியத்தில் சவுமியாவின் அம்மா பிழைத்திருந்தாள் .. மூன்று நாள் சவுமியா ஹாஸ்ப்பிட்டலில் இருந்துவிட்டு அவங்க அம்மா டிஸ்சார்ஜ் ஆனதும் , அவளை அவன் அண்ணன் தன் வீட்டுக்கு அழைத்துச்சென்றான் ..

சவுமியா வீட்டுக்கு வந்ததும் , நடந்த விஷயத்தை கிஷோரின் வீட்டில் தெரியப்படுத்தி மனதார கிஷோருக்கு நன்றி சொன்னாள் ,,..அப்படியே வள்ளி மற்றும் மூர்த்தியின்  காலில் விழுந்தாள் " நீங்க என்னை மன்னிச்சிருங்க ,    அன்னைக்கி தேவை இல்லாம மலர்  கிட்ட வார்த்தையை விட்டு விட்டேன் ..சௌமியாதான் எனக்கு தெய்வம் என அழுதாள் ..பதறி போய வள்ளியும் மூர்த்தியும் அவளுக்கு ஆறுதல் சொன்னார்கள் 

அதே சமயம் மலரை நினைத்து பூரிப்பு அடைந்தார்கள் .."இதுதான் என் மலருக்கும் மற்றவங்களுக்கும் உள்ள வித்தியாசம் ..அவ நல்ல மனசு மாதிரி யாருக்கும் வராது ..இப்படி பட்ட ஒருத்தி என் வீட்டுக்கு மருமகளா வர கொடுத்து வச்சிருக்கணும் "என பெருமையாக சொன்னாள்  
மலரை நினைத்து கதிரும் மூர்த்தியும் பெருமிதம் கொண்டனர் 

சவுமியா >>>  எனக்கு இப்போவே மலரை பார்த்து அவளை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வரணும்ன்னு தோணுது அத்தை , அப்ப தான் என் பாரம் குறையும் ..என்று உறுதியாக சொன்னாள்

கிஷோர் >>> அது இனிமே முடியாது அண்ணி , சற்றே உடைந்து போன  குரலில் சொன்னான் 

சவுமியா >>> என் முடியாது கிஷோர் , நான் பொய் கூட்டிட்டு வரேன் ...அவ கால்ல கையில  விழுந்தாவது உங்க கல்யாணத்தை நான் நடத்தி வைப்பேன் 

கிஷோர் >>> அதுக்கு , அவா இங்க இருக்கணுமே , இடையில் புகுந்து பாவமாக சொன்னான்

வள்ளி >>>  என்ன டா சொல்லுற , மலர் இப்ப எங்க இருக்கா , என்று கேட்டு முகத்தை குழப்பமாய் சுருக்கினாள்.

கிஷோர் >>>  அவங்க குடும்பத்தோட அவங்க சொந்த ஊரான கன்னியாகுமரிக்கு போய்ட்டாங்க ம்மா , இனிமே திரும்ப வருவங்களான்னு எனக்கு தெரியல , என்றான்  மிகவும் சீரியஸான குரலில்

வள்ளி >>> ப்ச்.. இங்க பாரு  கன்னியகுமாரிக்கு தானே போயிருக்கா , எதோ அமெரிக்கா போன மாதிரி பீல் பண்ணுற , நாளைக்கியே நம்ம ரெண்டு பெரும்  பொய் குட்டி வருவோம் .... வள்ளியின் குரலிதான் சற்றேனும் தைரியம் தொணித்தது.

"ம்ம்ம்...!!" கிஷோரும் அம்மாவை பார்த்து உதடுகள் பிரித்து மெலிதாக புன்னகைத்தான்.   

சவுமியா >>> (உடனே முகம் மலர்ந்து போய், )  அத்தை நீங்க தனியா போக வேண்டாம் கூட நானும் வரேன் , என்று திடீர் உற்சாகத்துடன் சொன்னாள்.

வள்ளி >>> வேண்டாம் சவுமியா , அங்க நிலமை எப்படி இருக்குன்னு தெரியாது நானும் கிஷோரும் பொய் என் மருமகளை குட்டி வரோம் ..ன்னு உறுதியாக சொன்னாள்

மூர்த்தி >>>  வேண்டாம் வள்ளி நீங்க மட்டும் தனியா போக வேண்டாம் , சவுமியாவையும் கூட கூட்டிட்டு போங்க ..அப்பதான் அவ மனசும் ஆறுதல் ஆகும் ..நீங்க மூணு பெரும் சேர்ந்து போயிட்டு வாங்க ..நான் நாளைக்கியே டிக்கட் புக் பண்ணுறேன் என்று சொல்லவும் 

அனைவரின் முகத்திலும் பெரும் மகிழ்ச்சி 

அம்மாவின் யோசனைக்கு  பிறகு, நம்பிக்கையூட்டும் விதமாய் அவள் பேசியபிறகு, கிஷோரின் மனது இப்போது லேசாகிப் போயிருந்தது...மலரின் நினைவு திரும்ப திரும்ப அவன் மனதுக்குள் வந்து போய்க் கொண்டிருந்தாள். ஒரு இதமான உணர்வு உடலெங்கும் பரவ, அந்த உணர்வு எப்போதும் நீடித்திருக்க வேண்டும் என்று அவன் மனம் விரும்பியது. மீண்டும் தலையை நிமிர்த்தி அம்மாவை பார்த்து புன்னகைத்தான்.


என்னடா , மலரை பாக்க போகணும்ன்னு சொன்னதும் முகத்துல ஒரு கலை கேட்டுதே ...சொல்லிவிட்டு வள்ளி புன்னகைக்க,

கிஷோர் அவஸ்தையாய் நெளிந்தவாறே ஐயோ.. அப்படிலாம் ஒன்னும் இல்ல ம்மா ..!!" என்று வெட்கத்துடன் சொன்னவாறு, அவளுடைய மடியில் முகத்தை புதைத்துக் கொண்டான்.


அதே வேளையில் இங்க மலர் வீட்டில் ..

அன்று இரவு ..மலரின் அம்மா  மரகதம் மலரின் அப்பா அறைக்கு சென்றால் ..

என்னங்க உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயத்தை பத்தி பேசணும் , ன்னு  கேட்டுக்கொண்டே அறைக்குள் நுழைய  


என்ன மரகதம் , நம்ம பொண்ணை பத்தி தான ..!!"

ஆமாங்க நீங்க சொல்றதும் சரிதான்..!..எல்லாம் நம்ம பொண்ணு மலரை பத்தின விஷயம் தான் 

மரதகம்  தொடர்ந்தாள்..." 20 னால அவா முகமே சரி இல்ல ...இங்க ஊருக்கு வந்தாவது மாறுவான்னு தான் இங்க கூட்டிட்டு வந்தோம் , ஆனா இங்கயும் இப்படியே முடங்கியே இருக்கா , ..மத்த விஷயம் மாதிரி இது இல்லை ங்க ..இது நம்ம பொண்ணோட வாழ்கை பிரச்சனை நம்ம தான் அனுசரிச்சு போகணும் 


புரியுது மரகதம் , அதுக்கு நான் என்ன பண்ணனும்னு சொல்ற..?"

நீங்க ஒன்னும் பண்ண வேண்டாம் , நாளைக்கியே நானும் மலரும் ..அந்த கிஷோர் தம்பி வீட்டுக்கு கிளம்பி போறோம் ...அங்கிருந்து நிலமையை சரிசெஞ்சு ..கல்யாணத்துக்கு தேதியும் குறிச்சிட்டு வரோம் 

பரவால்ல , டி ..நா சொல்ல வந்ததை நீயும் சொல்லிட்ட , அப்போ நாளைக்கே  மலரோட கெளம்பி மெட்ராஸ் போங்க .. அவங்களை சம்மதிக்க வச்சு .. ரிஜிஸ்ட்ரேஷன் மேரேஜ்  வச்சுக்கலாம்..!!"...அப்ப்றமா ஊரு அறிய கல்யாணம் பண்ணி வைப்போம் 

நீங்க ரெண்டு பெரும் கெளம்புங்க .. நான் ரெண்டு நாள் கழிச்சு பொறுமையா வர்றேன்..!!"

"ம்ம்.. அதுவும் சரிதான்..!!" மரகதம் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, இரண்டு கைகளிலும் காபி கப்போடு மலர் அந்த அறைக்குள் நுழைந்தாள். சிரித்த முகத்துடன் அம்மாவிடம் கேட்டாள்.

புருஷனும் பொண்டாட்டியும்  குசுகுசுன்னு.. அப்டி என்ன ரகசியம் பேசுறீங்க..?"

சிங்காரம் தலையை லேசாக சாய்த்து, ஓரக்கண்ணால் மலரை பார்த்தார் . அப்புறம் கேலியான குரலில் கேஷுவலாக  " என் செல்லத்துக்கு marriage டெட் பிக்ஸ் பண்ண போறோம் ன்னு விஷயத்தை சொல்ல 

மலர் சந்தோஷத்தில் துள்ளி குதித்தல் 

அடுத்த நாளே ...மலரும் அவள் அம்மாவும்  சென்னைக்கு கிஷோர் வீட்டுக்கு கால் எடுத்து வைக்க ...அதே நேரம் கிஷோர் அண்ணி சவுமியா மற்றும் அம்மா வள்ளியை குட்டி விட்டு  மலரின் சொந்த ஊரான கன்னியகுமாரிக்கு காலடி எடுத்து வைத்தான் ..




தொடரும் ..... 
 
[+] 6 users Like Jeyjay's post
Like Reply


Messages In This Thread
RE: என்ன பண்றது என் லவ்வர் ஆச்சே!! - by Jeyjay - 24-09-2024, 07:50 PM



Users browsing this thread: 11 Guest(s)