Romance மெய்நிகர் பூவே
#40
நண்பர்கள் அனைவரும் என்னை மன்னித்து விடுங்கள். நான் இங்கே இந்த கதையை எழுதும் போது ரொம்ப சந்தோஷமாக தான் ஆரம்பித்தேன். ஆனால் இடையில் சிறு மனக்கசப்பு. அதில் இருந்து எனக்கு கதை எழுதும் ஆர்வம் சுத்தமாக போய் விட்டது.

உங்கள் குழந்தையை எடுத்து அதற்கு பெயர் மாற்றி அதற்கு வேறு ஒரு அடையாளத்தை கொடுத்து அதை தன்னுடையது என்று சொல்வது போல ஒரு நிகழ்வு நடந்தது எனக்கு.

நான் எழுதிய ஓகே கண்மணி கதையை Pratilipi தளத்தில் வேறு ஒருவர் சில மாற்றங்களுடன் பதிவிட்டு இருந்தார். 

அதை படித்ததும் ரொம்ப கஷ்டமாக இருந்தது. கதையின் பெயர்,சில நிகழ்வுகள் எல்லாம் மாற்றி சொல்லவே கஷ்டமா இருக்கு.

இங்க நிறைய பேருக்கு தெரிய மாட்டேங்குது. அந்த கதை நான் எழுதும் போது அதில் 50 சதவீதம் என்னுடைய வாழ்க்கையில் நடந்த உண்மை நிகழ்வுகள். அதை யாரோ ஒருத்தர் மாற்றி அதை அவருடைய கதையாக போஸ்ட் பண்ணிருக்காங்க.

போதா குறைக்கு கமெண்ட்ஸில் அனைவரிடமும் அது அவருடைய real life storynu சொல்றாங்க.

சூப்பரா இருக்குல்ல. எனக்கு எப்படி சொல்றதுன்னே தெரியல.என்னோட கதை நல்லா இருக்குதோ இல்லையான்னு எனக்கு தெரியாது.ஆனா அது என்னுடைய உழைப்பு. என்னோட குழந்தை அதை என்கிட்ட கலவாடிக்கொண்ட மாதிரி இருக்கு எனக்கு.

அவர் அங்க மாற்றியது கதையை மட்டும் இல்லை என்னுடைய வாழ்க்கையில் நான் சுமந்து கொண்டிருந்த அழகான நினைவுகளையும். 

தயவு செஞ்சி கதையின் பிரதி எடுப்பவர்கள் முடிந்த அளவுக்கு அந்த கதையை எழுதியவருக்கு உண்மையாக இருங்கள். 

உண்மையான வருத்தத்துடன் இதை சொல்றேன். நான் எல்லாரையும் சொல்லல. ஆன வெகு சிலர் இப்படிலா செய்யுறாங்க. நன்றி.
Like Reply


Messages In This Thread
RE: மெய்நிகர் பூவே - by bsbala92 - 24-06-2019, 11:28 PM
RE: மெய்நிகர் பூவே - by enjyxpy - 24-06-2019, 11:46 PM
RE: மெய்நிகர் பூவே - by enjyxpy - 28-06-2019, 08:38 PM



Users browsing this thread: 12 Guest(s)