Romance தோழி--- மனைவி ---காதலி (நிறைவு )
#18
கருத்து தெரிவித்த நல்ல உள்ளங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் 

நிச்சயதார்த்தம் வேலைகள் நடைபெற்று கொண்டு இருந்தது 

திவ்யா ராகுல் ஒருவர் மனதை ஒருவர் புரிந்து கொண்டனர் 

நிச்சயதார்த்தம் சிறப்பாக நடைபெற்றது. சுதா மட்டும் வரவில்லை. வீட்டில் வருத்தம் பட்டு அழுது கொண்டு இருந்தால்.

பத்திரிகை கொடுக்கும் வேலை மும்முரமாக  ஆரம்பித்தது.

வைதேகி : ஹேய் என்னடி இன்னும் உன் காதலை சொல்லலையா டி. ஏன் டி 

சுதா : விடு சுதா ப்ளீஸ் என்ன கஷ்டபடுத்தாத 

வைதேகி : யாருக்கு டி கஷ்டம். உனக்கு இல்ல எங்களுக்கா, லூசு மாதிரி இருக்காத. கல்யாணம் பத்திரிக்கை வேற வந்துட்டு  டி 

சுதா : எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு டி. இந்த அளவுக்கு நெருங்கி வந்துட்டு. எனக்கு இருக்கிற ஒரே பயம் நான் என் காதலை இதுக்கப்புறம் சொல்லவே முடியாது  டி. செத்துரலாம் போல இருக்குடி.

வைதேகி : அப்படியா அடிச்சின்னா. லூசு மாதிரி பேசாத டி. நா வேணா ராகுல் கிட்ட பேச வாடி 

சுதா : சும்மா இரு டி. வேண்டாம். எனக்கு இந்த ஜென்மத்துல ராகுல் எனக்கு கிடைக்கல. அடுத்த ஜென்மத்துல  கிடைக்கட்டும்.

வைதேகி : யம்மா தியாகி. உன்ன மாதிரி யாராலும் இருக்க முடியாது. இந்த கடவுள் தான் உன்னை சேர்த்து வைக்கணும். Podi லூசு 

ராகுல் : டேய் விஜய் நம்ம தாரணி வீட்டுக்கு போய் என் கல்யாணத்துக்கு பத்திரிக்கை வைக்கணும் டா.

விஜய் : லூசா டா நீ மெண்டல் மாதிரி இருக்க. அவள் வீட்டுக்கு எதுக்குடா 

ராகுல் : ஒரு நல்ல பொண்ண நான் கல்யாணம் பண்றது அவ பாக்கணும். இப்படி ஒரு வாழ்க்கையை மிஸ் பண்ணிட்டோமே அவளுக்கு தோணனும். அதுக்கு தான் 

விஜய் : வந்து தொலைகிறேன். இருவரும் தாரணி வீட்டுக்கு சென்றனர்.

வைதேகி : ஒரு விஷயம் தெரியுமாடி 

சுதா : என்னடி விஷயம்

வைதேகி : ராகுல் தாரணி வீட்டுக்கு போயிருக்காங்க டி 

சுதா : லூசா டி அவன். அவ வீட்டுக்கு ஏன்டி போறான். போய் அவமானப்பட்டு தான் வர போறான் 

வைதேகி : நீ ஏண்டி இவ்வளவு கோவப்படுற. அவன் கல்யாணத்துக்கு தாரணி கூப்பிட போறான் உனக்கு என்ன டி. விடு 

சுதா : ஆமா எனக்கு என்ன கவலை 

ராகுல் சுதா வீட்டுக்கு வந்து பத்திரிகை கொடுத்து கல்யாணத்துக்கு குடும்பத்தோட வரணும். சொல்லிட்டேன் என்று அன்பு கட்டளை விட்டான்.

லதா : கண்டிப்பா வரோம். ராகுல்.. எங்க ஆசீர்வாதம் எப்பவும் உனக்கு உண்டு 

திருமண நாள் வந்தது.

மனமேடையில் திவ்யா ராகுல் மாலை உடன் இருந்தனர் 

சுதா : என்னால் இத பாக்க முடியல டி 

வைதேகி : இங்க இருந்தா உனக்கு கஷ்டமா இருக்கும் டி நீ கிளம்புறது தான் நல்லது.

ராகுல் : யாரும் இங்கிருந்து போகக்கூடாது. என் கல்யாணத்தை பார்த்துட்டு தான் போகணும். மீறி யார் யார் இங்கிருந்து போனா அடுத்த நிமிடம் கல்யாணம் நிறுத்திடுவேன்

தாரணி : டேய் பாத்தியா என் பழைய ஆள் எவ்ளோ ஸ்ட்ரோங் பேசுறான் 

விவேக் : சரி விடு எதுக்கு இப்படி எல்லாம் பேசுறான் 

தாரணி : என்கிட்ட கேட்டா எனக்கு எப்படி தெரியும் 

வைதேகி : ஹேய் வேற வழியே இல்ல நீ இருந்து தான் ஆகணும். இல்ல இவன் கல்யாணத்தை நிறுத்திடுவான் 

சுதா : என்னால இது எல்லாம் பாக்க முடியலடி. கடவுள் ஏன் தான் என்ன இப்படி கஷ்டம் படுத்துறாரோ 

வைதேகி : என்ன செய்ய நீ தான் முன்னாடியே உன் காதல் அவன் கிட்ட சொல்லி இருந்தா இந்த மாதிரி நடக்குமா டி.

சுதா : ஐயோ என்ன கொள்ளாத டி. இப்போ என்ன செய்ய. எல்லாம் கை மீறி போச்சே 

ஐயர் : கெட்டிமேளம் கெட்டிமேளம் சொல்ல 

திவ்யா எழுந்து சுதாவை உக்கார வைத்த உடனே 

ராகுல் சுதா கழுத்தில் தாலி கட்டினான்.

வைதேகி லதா கவிதா விஜய் அனைவரும் பூக்களை அள்ளி அள்ளி சந்தோசமாக போட்டனர்.

சுதாக்கு என்ன நடந்தது என்று புரியல.. ராகுலை பார்த்தால்.

ராகுல் : i love you டி என் பொண்டாட்டி 

சுதா : அவளால் எதுமே சொல்ல முடியவில்லை. இன்ப அதிர்ச்சியில் இருந்தால் 




ராகுல் எதுக்கு சுதா கழுத்தில் தாலி கட்டினான்.

என்ன நடந்து இருக்கும்.

அடுத்த பதிவில்.


இன்று எனக்கு உடம்பு சரி இல்ல அதான் சிறு பதிவு. அடுத்த பதிவு பெரிய பதிவாக போடுகிறேன் 
[+] 3 users Like Murugan siva's post
Like Reply


Messages In This Thread
RE: தோழி--- மனைவி ---காதலி - by Murugan siva - 17-09-2024, 06:14 PM



Users browsing this thread: 6 Guest(s)