17-09-2024, 01:14 PM
(10-08-2024, 08:24 PM)Muthukdt Wrote:நீங்கள் ஒரு சிறந்த எழுத்தாளர் தான் அதில் உங்களுக்கு எந்தவொரு சந்தேகமும் வேண்டாம். ஆனால் ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு பிறகு உங்கள் பதிவை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து அப்படியே கதையை மாதக் கணக்கில் கிடப்பில் போட்டு விட்டு போய் விட்டீர்கள். ஆனால் நீங்கள் ஆன்லைன் கூட வருவது இல்லை. ஒரு குறிப்பிட்ட கட்டம் வரைக்கும் ரசிகர்கள் எழுதும் விமர்சனங்களை படித்து அதற்கு உரிய பதிலை கூட பதிவு செய்து வந்தீர்ர்கள்.தற்போது அதைக் கூட செய்வது இல்லை நண்பா. நான் ஏதாவது தப்பா சொல்லி இருந்தால் மன்னிக்கவும் நண்பா
உங்கள் பாராட்டு வரிகளுக்கும், விமரிசனங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். உங்களிடம் மட்டுமல்ல, இந்த கதையை இதுவரை ரசித்து படித்து விமரிசனம் செய்து வந்த அனைத்து ரசிகர்களிடமும் கதையை தொடர்வதில் ஏற்பட்ட இடைவெளி அதிகமானதற்கும், விமரிசனங்களுக்கு பதிலளிக்காமல் விட்டதற்கும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
நான் பலமுறை ஏற்கெனவே சொல்லியிருந்தாலும், மீண்டும் ஒரு முறை சொல்கிறேன். இந்த கதையை அதன் மூலக்கதையின் பாதையிலேயே கொண்டு சென்றிருந்தால் கதை என்றோ முடிவு பெற்றிருக்கும். ஆனால் ஆரம்பத்தில் பிழை நீக்கி மட்டும் பதிவு செய்த நான் போக போக வரிகளை சேர்த்து பின் மூலக் கதையில் இல்லாத சம்பவங்களை சேர்த்து புதிய கேரக்டர்களை சேர்த்து எழுத துவங்கிய பின் கதைக்கு அதிகமான எஃபெர்ட் போட வேண்டியதாகி விட்டது.
அதையும் சிறப்பாகவே செய்தேன். வாசகர்களின் வ்யூஸ் அடிப்படையில் என் கதை முதல் பத்து இடங்களுக்குள் வந்திருப்பதே அதற்கு சாட்சி.
அதே சமயம் என் கதைக்கு இந்த அளவு வரவேற்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அந்த வரவேற்பு எனக்கு அதிகமான பொறுப்பை கொண்டு வந்த்து. கதையின் முடிவு எல்லோருக்கும் திருப்தியானதாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து மனதில் முடிவு பகுதியை உருவாக்கி விட்டேன்.
அந்த முடிவு பகுதியை எழுதுவதிலும் எனக்கு எந்த சிரம்மும் இல்லை. ப்ரசனை என்னவென்றால் கதை இப்போது நிற்கும் இடத்திற்கும் நான் மனதில் வைத்திருக்கும் க்ளைமாக்ஸுற்கும் இடையில் உள்ள பகுதியை எழுதி இரண்டையும் இயல்பாக இணைக்கும் முயற்சி தான் கொஞ்சம் சிரமப்படுத்துகிறது. சிறுக சிறுக செய்து வருகிறேன்.
விரைவில் கதை மீண்டும் வேகம் எடுக்கும் என்று நானும் நம்புகிறேன். நீங்களும் நம்புங்கள். தொடர்ந்து ஆதரவு கொடுங்கள்.
மன்மத கதைகளின் ரசிகன். மன்மதன்.