Romance தோழி--- மனைவி ---காதலி (நிறைவு )
#15
கருத்து தெரிவித்த நல்ல உள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்

சுதா : திவ்யா பேசிய பிறகு யோசனையில் இருந்தால. கடவுளே சின்ன வயசுல இருந்தே அவனை எனக்கு ரொம்ப பிடிக்கும். இப்போ வந்தவா திவ்யா. அவள் என்கிட்ட ராகுல் கூட பேச கூடாதுன்னு சொல்ற. எப்படியும் திவ்யா தான் ராகுல் கூட வாழ போறா. நாம ராகுல பொறுத்தவரை ஒரு பிரண்டு தான். அவ மனசுல நான் இருக்கணும் எப்படியோ எனக்கு தெரியல. ஆனா ஒரு தோழியா அவன் மனசுல நான் இப்பவும் இருக்கேன். அது என்னைக்கு காதலா மாறுமோ தெரியல. என் காதுல அவன்கிட்ட சொல்லவும் முடியல. இப்போ நான் பிரியக்கூடிய நேரம் வந்துடுச்சா. யோசித்துக் கொண்டிருக்கும் போது ராகுல் அங்கிருந்து வந்தான்.

சுதா : ஐயோ இவ வேற இப்ப வாரானே. எப்படி இவனை அவாய்ட் பண்றது 

ராகுல் : என்னடி ரொம்ப யோசிச்சுட்டே இருக்க. எனக்கு இந்த கல்யாணத்துல ஒரு துளி கூட இஷ்டம் கிடையாது. உன்னாலயும் அம்மாவும் தான் நான் எதுக்கு நான் சம்மதிச்சிருக்கேன். இன்னொன்னு உன்னைய விட்டுக் கொடுத்துதான் இந்த கல்யாணம் நடக்கும்னா அது நான் நடக்க விட மாட்டேன். என்ன புரியுதா.

சுதா : கொஞ்சம் கோபப்பட்டு பேசுவது போல் பேசினால். டேய் என்ன விளையாடுறியா. அந்தப் பொண்ணு தான் உன் கூட கடைசி வரைக்கும் வாழ போகுது. நானா வாடா உன் கூட கடைசி வரை இருக்க போறேன். அந்தப் பொண்ணு உன் பொண்டாட்டி. நான் ஜஸ்ட் ஃபார் பிரண்டு மட்டும் தான் அதை புரிஞ்சுக்கோ. இன்னைக்கு சொல்றதன் கேட்டுக்கோ. அந்தப் பொண்ணு கிட்ட நீ பேசும்போது என்ன பத்தி உயர்வா பேசக்கூடாது. சொல்லிட்டேன் 

ராகுல் : ஆமா இப்ப எதுக்கு உன் முகம் மாறி கோபப்படுற மாதிரி பேசுற மாதிரி தெரியுது. ஹலோ மேடம் நான் தான் கோபப்படனும். நீ இப்ப கோவப்பட்ட அடுத்த நிமிஷம் வந்த கல்யாணத்தை நிப்பாட்டி விடுவேன். என்ன பத்தி உனக்கு நல்லா தெரியும். நீ எனக்கு ஒரு கண்ணுன்னா என் அம்மா எனக்கு ஒரு கண்ணு. இப்ப வந்தவா திவ்யா அவள் எல்லாம் கொண்டு. உன் இடத்துல என்னைக்கு வைக்க மாட்டேன். அவள் இன்னும் எனக்கு பொண்டாட்டியை ஆகல. அவள் எனக்கு பொண்டாட்டியா ஆகி என் மனசுல இடம் புடிச்சா மட்டும் தான். உனக்கு கொடுக்குற அங்கீகாரம் அவளுக்கு கொடுப்பேன். அது அவள் நடந்து கொள்வது பொறுத்து தான் இருக்கு 

சுதா : கல்யாணத்தை நிறுத்த போறியா நிறுத்து யார் என்ன செய்ய போற. இதனால வருத்தப்பட போறது நான் இல்ல நீ இல்ல உன் அம்மா தான். அவங்க ஏற்கனவே சொன்னதை செய்யக் கூடியவர்கள் நல்ல யோசிச்சு முடிவெடு.

ராகுல் : என்ன சொன்ன திரும்ப சொல்லு உங்க அம்மாவா. எனக்கு பொண்ணு மட்டும் தான் பார்த்து இருக்கு அதுக்குள்ள இனி பிரிச்சிட்ட. அம்மா அம்மானு நீ வாய் நிறைய கூப்பிடாத இப்ப எனக்கு மட்டும் அம்மா அப்படின்னா உனக்கு யாரு.

சுதா : உண்மைதானடா. எனக்கா அவங்க அம்மா உனக்கு தானே அவங்க அம்மா. எனக்கு என்னைக்குமே அம்மா தான் இருக்காங்க. நீ என் பிரண்டு உங்க அம்மா உன் நானும் அம்மானு கூப்பிட்டேன் இதுல என்ன இருக்கு. அதுக்காக உங்க அம்மா ஒன்னும் என்னை பத்து மாசம் வயித்துல சுமந்தங்களா.

ராகுல் : அவள் பேசிய வார்த்தைகள் அவளுக்கு இதயமே நொறுங்கியது போல இருந்தது. சுதா எப்படி பேசக்கூடியவள் ஆளே இல்லையே. ஏன் இப்படி எல்லாம் பேசுற. சுதா நீ ரொம்ப பேசுற  அவனுடைய கண்கள் கலங்கியது

சுதா : யாருடா ரொம்ப பேசுறா. இங்க பாரு உனக்கு ஒரு லைப் வரப்போகுது ஒழுங்கா வாழ பாரு. இல்லன்னு வை உனக்கு தான் நஷ்டம் எனக்கு இல்ல.. உங்க வீட்ல ஒரு இழப்பு விழும் மனதை கல்லாக்கிக் கொண்டு சொன்னாள். ராகுல் தன்னை வெறுக்க வேண்டும் என்று 

ராகுல் : ச்சி நீ எல்லாம் பிரெண்டா. உன்ன போய் எவ்வளவு உயர்ந்த இடத்தில் வைத்திருந்தேன் தெரியுமா. எங்க வீட்ல எப்ப வரும் எங்க அம்மா. இதுல நல்லாவே தெரியுதுடி எனக்கு. உனக்கு கிறுக்கு தான் பிடிச்சிருக்கு. இப்ப சொல்றேன் கேட்டுக்கோ. நான் அந்த பொண்ண கல்யாணம் பண்றேன். அவள் கூட சந்தோசமா வாழ்வேன். நீ என் கண்ணுல கூட முழிக்காத. நான் ஒரு வேலை செத்தாலும். என் முகத்தை பார்க்க கூட வந்திராத. அழுது கொண்டே வெளியே சென்றான் 

சுதா : சாரிடா  நான் பேசுனது எல்லாமே உன் நல்லதுக்காக மட்டும் தான். என்ன வெறுத்து நீ சந்தோஷமா இருப்ப. அந்தப் பொண்ணு கூட நீ நல்லபடியா சந்தோசமா வாழனும். அதுதான் எனக்கு முக்கியம் அதுதான் எனக்கு வேணும்.

வைதேகி : அப்போது அங்கு கோபத்துடன் வந்தாள். என்னடி ஆச்சு உனக்கு. ராகுல் கோபப்பட்டு அழுதுகிட்டு போறான். அப்படி என்னடி சொன்ன 

சுதா : எனக்கு வேற வழி தெரியல டி. அவன் எப்பவும் நல்லா இருக்கணும். திவ்யா தான் நான் ராகுல் கிட்ட பேசுறது பிடிக்கலைன்னு சொல்லிட்டா அது உனக்கு ஏற்கனவே தெரியும். அதாண்டி அவனா என்னைய வெறுக்கிற மாதிரி நான் பேசி விட்டுட்டேன். இனி அவன் அந்த தாரணியம் மறந்து என்னையும் மறந்து அந்த திவ்யா கூட சந்தோஷமா வாழ்வான்.

வைதேகி : உன்னல்லாம் திருத்தவே முடியாதுடி. நீ என்ன பெரிய தியாகியா. ஆனா ஒன்னு ரொம்ப வருத்தப்படுவ  டி. நான் சொல்றத சொல்லிட்டேன் அப்புறம் உன் விருப்பம். ராகுல் கிட்ட உன் காதல சொல்லுடி அடுத்த நிமிஷம் நான் திவ்யா தூக்கி எறிஞ்சிட்டு உன் கூட வருவாண்டி.

சுதா : உன்கிட்ட ஆயிரம் தடவை சொல்லிட்டேன். நான் என் காதலை போய் ராகு கிட்ட சொன்னா பிரண்ட்ஷிப்பை கேவலப்படுத்தியான்னு நினைப்பான். அது வேண்டாம். எனக்கு ஒரு சத்தியம் பண்ணுடி. இந்த விஷயம் யாருக்குமே தெரியக்கூடாது. சொல்லிட்டேன்.

வைதேகி : சத்தியம் நான் பண்ண மாட்டேன்.

சுதா : அப்படினா இதோட என்கிட்ட பேசுறது நிப்பாட்டு 

வைதேகி : என்னடி விளையாட்ரியா. நீ தான் என் பெஸ்ட் ப்ரெண்ட்ஸ் டி சரி சத்தியம் பண்ணி சொல்றேன் இந்த விஷயத்தை யார்கிட்டயும் சொல்ல மாட்டேன் போதுமா சொல்லி வெளியே சென்றால் 

ராகுல் வீட்டில் 

கவிதா : டேய் அந்த பொண்ணு கிட்ட போன் போட்டு பேசு டா. 

ராகுல் : என்னமா நீ எந்த பொண்ணு கிட்ட என்ன பேச சொல்ற.

கவிதா : லூசாடா நீ உனக்கு பொண்ணு பாத்து வந்தோமே அந்த பொண்ணு கிட்ட் தான்.. வேற யாரு கிட்ட டா சொல்ல போறேன் 

ராகுல் : சரி பேசுறேன். சொல்லி ரூம்குள்ள சென்றான்.

திவ்யா : ராகுலுக்கு போன் போட்டால் 

ராகுல் : எரிச்சலில் போனை எடுத்து ஹலோ யாருங்க 

திவ்யா : நா தான் திவ்யா பேசுறேன். 

ராகுல் : ஓஓஓஓ சரி. என் நம்பர் எப்படி உங்க கிட்ட 

திவ்யா : என்ன மறந்துட்டீங்களா. நீங்க தான் போன் கொடுத்து நம்பர் சேவ் பண்ண சொன்னிங்க. மறந்துட்டீங்களா 

ராகுல் : சாரி வேற ஒரு டென்ஷன். சரி சொல்லுங்க 

திவ்யா : ஓஹோ அந்த சுதா. இவர்கிட்ட சண்டை போட்டு இருப்பாள் அதான் டென்ஷன்ல இருக்கார் போல. ஏன் என்னாச்சு 

ராகுல் : ஒன்னுல்ல எதுக்கு போன் போட்டிங்க 

திவ்யா : ஏன் நா பேச கூடாதா. நா தான் உங்க பொண்டாட்டி ஆக போறேன். அப்பறம் என்ன. சரி உங்களுக்கு என்ன கஷ்டமோ. இங்க பாருங்க கஷ்டம் எல்லாத்துக்கும் வரும். அதையே நினைச்சிட்டு இருந்தா மனசு தான் கஷ்டம். கவலை படாதீங்க 

ராகுல் : சுதா கோபப்படுத்தியது. திவ்யா பேச்சு அதற்கு ஆறுதலாக இருந்தது. தேங்க்ஸ் திவ்யா 

திவ்யா : விடுங்க. நமக்குள்ள என்ன தேங்க்ஸ்.வருத்தம் பட்டு இருக்கீங்க அதனால அப்படி பேசின.. சரி உங்க ப்ரெண்ட்ஷிப் பத்தி சொல்லுங்க. அவனிடம் போட்டு வாங்கினால் 

ராகுல் : ஒரு நல்ல தோழிக்கு உதாரணம். அவள் மட்டும் தான். திவ்யாவிடம் சுதாவை விட்டு கொடுக்காமல் பேசினான் 

திவ்யா : ச்ச இவங்க பிரச்சனை வெளியே சொல்ல மாட்டேன்கிறாரே. எப்படி கண்டுபிடிக்க நான் சொன்ன மாதிரி சுதா இவங்க கிட்ட சண்டை போட்டாங்களா எப்படி. சண்டை போடணும் போட்டா தான் எனக்கு நல்லது. என்று நினைத்துக் கொண்டு. உங்கள பாராட்ட வார்த்தையே இல்லைங்க நல்ல ஒரு பிரண்ட்ஷிப் இப்படியே கடைசி வரை மைந்தன் பண்ணுங்க 

ராகுல் : கண்டிப்பா கண்டிப்பா 

திவ்யா : அப்புறம் சொல்லுங்க சாப்பிட்டீங்களா 

ராகுல் : சாப்பிட்டேன் நீங்க சாப்டீங்களா. சுதா மேலே இருக்கிற கோபத்தில். திவ்யாவிடம் கொஞ்சம் கொஞ்சமாக நன்றாக பேச ஆரம்பித்தான் 

இருவரும் ஒருவர் மனதை ஒருவர் புரிந்து கொண்டு பேச ஆரம்பித்தனர்.

திவ்யா : மனதில் அந்த சுதாவை உங்ககிட்ட இருந்து மொத்தமா பிரிக்கணும் அது ஒன்னு தான் என்னுடைய டார்கெட். சீக்கிரமாகவே அதை செஞ்சு காட்டுவேன். அப்படியே நினைத்துக் கொண்டு உறங்கினால் 

சுதா வீட்டில் 

லதா : ஏனடி உன் காதலை அந்த ராகுல் கிட்ட சொன்னியா இல்லையா 

சுதா : விடுக்கா நான் சந்தோஷமா இருக்கிறது கடவுளுக்கு பிடிக்காது அக்கா 
. சரி அத்தான் எப்போ வருவாங்க.
:
லதா :அந்தக் கடவுள் உங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைப்பார் டி.

சுதா : நான் உன்கிட்ட என்ன கேட்டேன் நீ என்கிட்ட என்ன சொல்ற. அத்தான் எப்ப வருவாரு.

லதா : அவர் வெளியூர் போயிருக்கான்டி உனக்கு தெரியும் இல்ல. அப்புறம் என்ன நான் இங்க இருக்கிறது பிடிக்கலையா உனக்கு 

சுதா : அக்கா என்ன பேச்சு பேசுற. நான் வேலை பாக்குற இடத்துல ஒரு ஆறுதல் என்றால் அது வைதேகி, வீட்ல ஒரு ஆறுதல் தான் அது நீ மட்டும் தான் அக்கா. அத புரிஞ்சுக்கோ.

லதா : சரிடி வா சாப்பிட்டு தூங்குவோம்.

சுதா : மனதில் டேய் ராகுல் சாரிடா.உனக்கு ஒரு வாழ்க்கை இருக்கு அதுல நீ சந்தோசமா இருக்கணும். நான் என் காதலை சொன்னால் பிரண்ட்ஷிப்புக்கு அவமானம் என்று நீ என்னை தப்பா நினைச்சு விடுவ. என் காதல் எனக்கு உள்ளே இருக்கட்டும். என்ன பொறுத்த வர நீ சந்தோஷமா இருக்கணும். அந்த தாரணி உனக்கு கொடுக்காத சந்தோஷத்தை. திவ்யா உனக்கு கொடுப்பாங்க. நீங்க ரெண்டு பேரும் எப்பவும் சந்தோஷமா இருக்கணும். கடவுள் கிட்ட அதைத்தான் வேண்டுகிறேன் 

 சுதா இப்படியே நினைத்துக் கொண்டு உறங்கினால்.

 பார்ப்போம் கடவுள் இவர்களை சேர்ப்பாங்களா என்று 

 அடுத்த பதிவு வியாழக்கிழமை
[+] 3 users Like Murugan siva's post
Like Reply


Messages In This Thread
RE: தோழி--- மனைவி ---காதலி - by Murugan siva - 16-09-2024, 07:57 PM



Users browsing this thread: 2 Guest(s)