Romance பத்மினி எனும் பத்தினி
#26
அடுத்த பகுதி


வங்கியில் வேலை நேரம் 4 மணிக்கு முடியவும் கோகுலின் நம்பருக்கு போன் செய்ய மறுமுனையில் கோகுலோ என்ன இது புது நம்பர்ல இருந்து கால் வருகிறதே என நினைத்தபடி அதை அட்டேன் செய்ய ஹை கோகுல் நான் இந்து பேசுறேன் என்றாள் மறுமுனையில் கோகுலால் சரிவர பேச முடியாமல் முழித்தான் பிறகு சுதாரித்தபடி ஹா சொல்லுங்க இந்துமதி என பேச அவளும் தனது பழக்க வழக்கங்ககளை ஒவ்வொன்றாக கூற வேண்டா வெறுப்பாக அவற்றை கேட்டுக்கொண்டு இருந்தான் ஒரு கட்டத்தில் அவள் பேசுவதை கேட்க முடியாமல் தனக்கு அவசர வேலை இருப்பதாக சொல்லி பிறகு பேசுவதாக சொல்லிவிட்டு காலை கட் செய்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறி கம்மாக்கரையாரமாக நடக்க தொடங்கினான் தனது வேதனையை நினைத்து நொந்தபடி.


மறுமுனையில் நடராஜன் வங்கிக்கு சென்றுவிட்டு பிறகு பள்ளிக்கு சென்று வகுப்புகளை நடத்திவிட்டு முகுந்தன் வாத்தியை தனது வண்டியில் பின்னால் அமர வைத்து கொண்டு வந்து கொண்டிருந்தான் இவனை கண்டதும் வண்டியை நிறுத்திவிட்டு என்னடா புது மாப்பிள்ளை இங்கே எங்கே போற வா வீட்டுக்கு போகலாம் என அழைத்தான் பின்னால் தன் தந்தை அமர்ந்திருப்பதை கண்டும் முதல்முறையாக பயமின்றி மச்சான் எனக்கு இந்துவை பிடிக்கலடா எங்கப்பா ரொம்ப டார்ச்சர் பன்றாருடா நீ எதாவது பேசும் எங்கப்பாகிட்ட என சொல்ல இதை கேட்ட நடராஜனுக்கோ தூக்கிவாரிப்போட்டது.


காரணம் முகுந்தன் அவனுக்கு அப்பா இவனுக்கு ஆசிரியர் போதாக்குறைக்கு தனது மானசிக குருவாக நினைக்கிறான் கோகுலுக்கு தாய் இல்லை அந்த குறை இன்றி தனி ஆளாக அவனை வளர்த்தார் இதை கண் முன்னே கண்டவன் நடராஜன் அப்படி இருக்க அவரிடமே அவரை எதிர்த்து கேள்வி கேட்பது அவனால் முடியாத விஷயம் இதை இவன் நினைத்து கொண்டிருக்க வண்டியில் பின்னால் உட்கார்ந்து இருந்த முகுந்தன் இறங்கி வந்து பளார் என கோகுலை கண்ணத்தில் அடிக்க அவருக்கு பின்னால் இருந்து ஒரு கை அவரை தடுத்தது அந்த கைக்கு சொந்தகாரர் வேறு யாருமல்ல நடராஜனின் தந்தையே.


ஏன்டா முகுந்தா பையன் தோலுக்கு மேல வளர்ந்துட்டான் அவனுக்கு பொண்ணு வேற பார்த்துட்ட இனி அவன் குடும்பஸ்தன்டா ஊர்ல வெட்டவெளியில வைச்சு கை நீட்டி அடிக்கிற படாவா அடி இழுத்து புடுவேன் இழுத்து உன்னோட வாத்தியார் வேலையேல்லாம் வீட்டோட வைச்சிக்க ராஸ்கல் என கோபமாக கத்த அதுவரை கோபத்தோடு இருந்த முகுந்தன் கப்சிப் ஆனார். முகுந்தன் மற்றும் வேலாயுதம் இருவரும் பால்யகால நண்பர்கள் இருவரும் எங்கேயும் எப்போதும் ஒருவரை ஒருவர் விட்டு கொடுக்க மாட்டார்கள்.


முகுந்தன் பேச தொடங்கினார் இந்த பயலுக்கு பொண்ணு பார்த்தாச்சு இப்போ வந்துகிட்டு எனக்கு பொண்ணு பிடிக்கலன்னு சொல்றான்டா இந்த ஈனப்பய என திட்ட டேய் பெத்த பிள்ளைய இப்படியாட பேசுவ சரி இப்போ இதானே பிரச்சனை நான் பேசிக்கிறேன் நீ போ டேய் நடராஜா இவனை கூப்பிட்டு வீட்டுக்கு போ நான் பின்னால் என்ன கார்ல கோகுலை அழைச்சிக்கிட்டு வரேன் என சொல்ல சற்று நேரத்தில் அனைவரும் வேலாயுதம் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.


என்ன எல்லாம் ஒன்ன வந்து இருக்கிங்க என்று கேட்டபடி அவர்களை நோக்கி வந்தார் சீதாதேவியும் கோமளவள்ளியும் அனைவரும் இருக்க முகுந்தன் அனைத்தையும் சொன்னர் என் பையன் பத்மினிய விரும்புறான் எனக்கு அதில் உடன்பாடு இல்ல காரணம் நிறைய இருக்கு அதில் முதல் காரணம் அவங்க கட்ட சீர் எதிர்பார்க்க முடியாது இரண்டாவது அந்த பொண்ணை இவனுக்கு கட்டி வைச்சா என்னோட நண்பனுக்கு எதிரியா நான் மாறவேண்டி வரும் இத்தனை வருட நட்பை இந்த ஈனப்பயலுக்காக என்னால இழக்க முடியாது பையன் முக்கியமா நண்பன் முக்கியான்னு பார்த்தா எனக்கு நட்பு தான் முக்கியமான சொல்லி முடிக்க அந்த இடத்தில் வேலாயுதம் கண்கலங்கி போனார் பேச வார்த்தைகள் இன்றி அவர் முகுந்தனை பார்த்தபடி இருந்தார்.


மற்றவர்களும் கப்சிப் ஆகி போனார்கள் தன் தவறை அப்போது தான் கோகுல் உணர தொடங்கினான் பத்மினி தாய் வேலாயுதத்தின் தங்கை அவள் வீட்டு வேலைக்காரனோடு ஓடிப்போனவள் அதன் விளைவால் அதே ஊரை சேர்ந்த நாட்டாமை கதிரவனால் பல அவமானங்களுக்கு ஆளாக்கப்பட்டார் வேலாயுதம் அப்படிபட்ட பெண்ணின் பெண்ணான பத்மினையை தனது மகனுக்கு கட்டி வைக்க முகுந்தன் விரும்பவில்லை என்பதை உணர்ந்து படபடவென எழுந்து தந்தை காலில் தொப்பென்று விழுந்தான் கோகுல் அப்போது துள்ளலுடன் வீட்டுக்குள் வந்து கொண்டிருந்தாள் சித்ரா. கதை தொடரும்
[+] 2 users Like Natarajan Rajangam's post
Like Reply


Messages In This Thread
RE: பத்மினி எனும் பத்தினி - by Natarajan Rajangam - 14-09-2024, 11:18 AM



Users browsing this thread: 1 Guest(s)