Romance தோழி--- மனைவி ---காதலி (நிறைவு )
#1
Heart 
வணக்கம் நண்பர்களே மீண்டும் ஒரு காதல் கதையை தொடர்கிறேன்.

ராகுல் : ஹேய்  சுதா எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம் டி. நீதான்டி வீட்ல சொல்லணும் 

சுதா : டேய் என்ன விளையாடுறியா. அம்மா எண்ண அடிச்சிடுவாங்க. நம்ம ரெண்டு பேரும் சின்ன வயசுல இருந்தே பிரண்டு. ஒரு பிரெண்டுக்கு நல்லது செய்றவள் தான்  ஃபிரண்ட். இப்போ உனக்கு கல்யாணம் ஆனா. முதல் ஆளா சந்தோசப்படுவது நான் மட்டும்தான்.

ராகுல் : இங்க பாரு எனக்கு இப்போதே கல்யாணம் வேண்டாம் நீ பேசினா மட்டும் தான் இது செயல்படும்.

சுதா : நோ way அதுக்கு வாய்ப்பே இல்லை.. ஏன்டா நீ கல்யாணம் செஞ்சா தான் என்ன 

ராகுல் : உனக்கு தெரியாதா நான் ஏன் இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம் என்கிறேன். எனக்கு பழைய காதல மறக்கவே முடியலடி 

சுதா : டேய் இன்னுமாடா நீ அந்த தாரணியை நினைச்சுட்டு இருக்க. டேய் அவளுக்கு பணம் தான் முக்கியம்னு போனவள் அவளை விடு. ஒன் லைப் பாரு 

ராகுல் : என்னால மறக்க முடியல டி. அவள் வேணா என் மேல பொய்யா காதல் வச்சிருக்கனா. ஆனால் நான் உசுரா தானே வச்சிருந்தேன். இப்படி பணம் தான் பெற சென்று போய்விட்டாளே.

சுதா : டேய் முட்டாள் மாதிரி பேசாத. அவள நினைச்சுகிட்டு உன் லைஃபை ஸ்பாயில் பண்ணாத. சீக்கிரமே கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணு. அம்மா எவ்வளவு ஓரத்த போட்டாங்க தெரியுமா என்கிட்ட போன் போட்டு 

ராகுல் : எனது மனசே இல்லடி. நான் ஒரே பொடி தான் சொல்ல போறேன். சொல்லிக்கொண்டே பைக்கை எடுத்து வீட்டிற்கு சென்றான்.

வைதேகி : ஹேய் சுதா நீ உன் காதலை அவன் கிட்ட சொல்ல வேண்டியது தானே டி 

சுதா : அவன் பிரண்ட்ஷிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்குறவன் டி. அவன் கிட்ட போய் நான் உன்னை காதலிக்கிறேன் என்று சொன்னால் எப்படி டி. அவன் என்ன என்ன நினைப்பான 

வைதேகி : போடி போடி லூசு. ஏற்கனவே நீ உன் மனசுல காதல வச்சுக்கிட்டு. சொல்லாம இருந்ததுனால தான் அந்த தாரணி. காதல் சொல்லி அவனை ஏமாத்திட்டு போயிட்டா. அப்பவே நீ அவன்கிட்ட காதல் சொல்லி இருந்தால் கண்டிப்பா அவன் உன்னை ஏற்றுக் கொள்வாண்டி.

சுதா : என் மனசுல காதல் இருக்கு அதே மாதிரி அவன் மனசுல காதல் இருக்குமா. ஒரு நட்பை அது தப்பா செஞ்ச மாதிரி  ஆகும் டி. அவன் எங்க இருந்தலும் நல்லா இருக்கட்டும் டி 

வைதேகி : பெரிய தியாகி மாதிரி பேசாதடி. உன்னைய அவங்க குடும்பத்துக்கு அப்படி புடிக்கும். ராகுல உங்க குடும்பத்துக்கு அப்படி புடிக்கும். ரெண்டு பேரும் குடும்பத்திலும் அப்படி பழகி இருக்கீங்க. இத தாண்டி நல்ல சான்ஸ் சீக்கிரமே உன் காதலை சொல்லி. அந்த ஏமாற்றுக்காரி தாரணி நினைப்ப இல்லாம ஆக்கு 

சுதா : என்னால முடியாதுடி ஒரு நட்புக்கு என்னோட துரோகம் செய்ய முடியாது. என் மனசுல என்னைக்கோ காதல் வந்துட்டு ராகுல் மேல. ஆனா அவன் இப்பவும் என்னைய ஒரு பிரண்ட்ஷிப்பா தான் பார்க்கிறான். அவன் கிட்ட போய் நான் உன்ன தோழனா பாக்கல காதலனா பார்க்கிறேன் என்றால். அப்புறம் அவன் என்னை வெறுத்துடுவான்டி.

வைதேகி : போடி கூறு கெட்டவளே. இப்ப நீ அவன் கிட்ட சொல்லல நான் போயி நீ காதலிக்கிற விஷயத்தை அவன் கிட்ட போய் சொல்லிடுவேன் 

சுதா : தயவு செய்து அந்த மாதிரி எதுவும் பண்ணிடாத டி.. எனக்கு இருக்கிற அதே காதல் அவனுக்கும் இருந்ததுன்னா. கண்டிப்பா நா அவனை தான் கல்யாணம் செஞ்சிகுவேன் டி.

ராகுல் வீட்டில் 

கவிதா : டேய் நீ கல்யாணத்துக்கு சம்மதிக்கல நா விஷம் குடிச்சி செத்துருவேன் 

ராகுல் : மா என்று கத்தி கொண்டு அவளை பார்த்து இப்படி எல்லாம் சொல்லாத மா. எனக்கு உன்ன விட்டா வேற யாரும் இருக்கா.

கவிதா : அப்படின்னா கல்யாண செஞ்சுக்கோ.

ராகுல் : சரி உங்க இஷ்டம் 

கவிதா : என் செல்லம். சொல்லிட்டு சுதாக்கு போன் போட்டு நீ சொன்ன மாதிரி அவன் கிட்ட பேசுனேன் அவன் சம்மதிச்சிட்டான் மா. நீ தானா கூட நின்னு எல்லாத்தையும் முடிச்சு வைக்கணும் 

சுதா : மனதிற்குள் அழுது கொண்டு. கண்டிப்பா மா. நீங்க கவலைப்படாதீங்க நானே இந்த கல்யாணத்தை முன்ன நின்னு நடத்தி காட்டுறேன். சொல்லிக் கொண்டு போனை வைத்தாள் 

வைதேகி : நீ எல்லாம் என்ன ஜென்மம். நீயே ட்ராவல் அம்மாகிட்ட இப்படி சொல்ல சொல்லி இருக்கியே டி ஏன்  டி இப்படி செஞ்ச 

சுதா : என்கிட்ட சொல்லி வருத்தப்படுறாங்கடி. நான் என்ன செய்ய முடியும். என்னால முடிஞ்சது இந்த மாதிரி சொல்லுங்க அவன் ஒத்துக்கிடுவான்னு சொன்னேன். அவங்களும் அதே மாதிரி பேசி இருக்காங்க ராகுல் கல்யாணத்துக்கு சம்பாதிச்சுட்டான் 

வைதேகி : நீ என்னடி செய்ய போற 

சுதா : அவன் கல்யாணத்தை ஏன் தலைமையில நின்னு நடத்தி காட்ட போறேன்.

வைதேகி : இங்க பாருடி ஒன்னே ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோ. நீ ராகுல் மேல வச்சு இருக்கிற காதல் உண்மையான காதல். அந்தக் காதலே உன்னை ராகுல் கிட்ட சேர்த்து வைக்கும். இது நிச்சயம் நடக்கும் பாரடி.

சுதா : போடி வாய மூடிட்டு..



 இந்தக் கதையும்.

 கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய். அந்தக் கதையும். தொடர்ந்து பதிவுகள் வரும். இது சின்ன பதிவுதான். நாளை பெரிய பதிவுடன் வருகிறேன் 
[+] 5 users Like Murugan siva's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
தோழி--- மனைவி ---காதலி (நிறைவு ) - by Murugan siva - 12-09-2024, 03:38 PM



Users browsing this thread: