Adultery காமவனத்தில் ராதா (RRR - Radha Ramesh Ramya)
பல விமர்சனங்களுக்கு பிறகு, இக்கதைக்கு சில விளக்கங்கள் கொடுக்க வேண்டும் என எண்ணுகிறேன். அது என் கடமையும் கூட..

1. ராதா தன் கணவன் ரமேஷ் அளித்த வசதியில் சுதந்திரத்தில் அவன் மனைவியாக சொகுசாக வாழ்ந்து வருபவள். படுக்கையறை சுகத்தையும் வெளியே சுற்றும் வாய்ப்பை தவிர, அவன் கணவன் அவளிற்கு எந்த குறையும் வைக்கவில்லை. அதனால் ராம் பிரசாத் மூலம்‌ ஒரு வாய்ப்பு அமைய அதை முதலில் தயங்கி பின்னர் ஏற்கிறாள். கணவனை தவிர பிற ஆண்மகன் சுகம் அளிக்கிறான் என்பதற்காக யாரும் ஒரேடியாக கணவனை விட்டு பிரிந்து விட மாட்டார்கள். ராதாவின் ஆரம்ப தடுமாற்றம் அவன் கணவன் அளித்த அன்பினால் அன்றி வேறோன்றுமில்லை. அதனால் தான் ஒரு வாரம் கழித்து திரும்பி வந்துவிடுவேன் என கூறுகிறாள். Indecent proposal படத்தை இங்கு ஒரு உதாரணமாக கூறலாம். திரும்ப அவன் கணவனிடம் சேருவோமா என்ற ஆழ்மன ஆசைகள் காரணமாக கணவனிடம் திரும்பி வருவதாக கூறுகிறாள்.

2. இக்கதையில் யாருமே ஹீரோ ஹிரோயின் கிடையாது என்பதையும் தெளிவு படுத்தி விடுகிறேன். சூழ்நிலைகளை கருத்தில் கொண்டே எழுதியிருக்கிறேன். 

3. ராதாவை தாழ்த்தி ரம்யாவை தலையில் தூக்கி வைத்து கொண்டாடவில்லை. ரம்யாவும் ஒரு விதத்தில் சுயநலக்காரி தான். பெண் துணையில்லாத ஆணின் நல்ல குணநலன்களை பார்த்து அதை சாதகமாக பயன்படுத்தி தனக்கு நல்வாழ்க்கை அமைவதில் மிக கவனமாக காய் நகர்த்துகிறாள் என்பதை பல காட்சிகளில் விளக்கியிருக்கிறேன்.

4. ராதா கணவனுக்கு ஏற்றவாறு வாழ்ந்து, அந்த வாழ்க்கை வெறுத்து போய் விட்ட பின் தான் பிற ஆண்களை சல்லாபிக்கிறாள். அதையே ஆண்கள் செய்தால் அது ஆண்மைத்தனம். பெண்கள் செய்தால் கள்ளத்தனமா? ராதாவை உயர்வாக சொல்ல வரவில்லை. ராதாவின் பக்கம் இருக்கும் நியாயமும் தெரிய வேண்டும் என்பதால் சொல்கிறேன்.

5. ரமேஷ் ஒரு சராசரியான கணவன். விதிவசத்தால் ராம்பிரசாத்திடம் மாட்டி கொள்கிறான். என்ன காரணமாக இருந்தாலும், மனைவியை அடகு வைத்தது கணவனுக்கு அழகல்ல.. அவன் எப்படி ஹிரோ ஆவான். அவனும் இங்கு சூழ்நிலை கைதியே.

6. ராம் பிரசாத் மாதிரியான ஆண்கள் இந்த சமூகம் முழுக்க நிறைந்திருக்கிறார்கள். அதிகப்படியான பணமும், வசதியும் இருந்ததனால் இவ்வாய்ப்பு கிடைத்ததால் ராம் பிரசாத் பொம்பளை பொறுக்கியாக மாறி போனான். இல்லையெனில் அவனும் சாதாரணமாக சபலம் பிடித்த சராசரியாக ஆணாக பெண்களை உரசும் பொறுக்கியாக மட்டுமே இருந்திருப்பான்.

7. Group sex நடக்கும் போது சில நேரம் உணர்ச்சிகளின் எல்லை மீறலின் காரணமாக ஆணையும் சேர்த்து ஒ* செய்ய வேண்டிய நிலை வரலாம். அதையே இங்கே பதிவு செய்திருக்கிறேன். இது ஒன்றும் புதிதில்லை என எண்ணுகிறேன். அது கதையின் போக்கை கெடுப்பதாக நினைத்தால் மன்னிக்கவும்.

8. ரமேஷுக்கும் ரம்யாவுக்கும் ஒரு இணைப்பு ஏற்படுத்தவே.. ரம்யாவை பலவந்தப்படுத்தும் சூழ்நிலை அமைத்து.. ரமேஷ் அவளை காப்பாற்றும் வழி ஏற்படுத்தி கொடுத்தேன். ரமேஷை ஹிரோவாக உயர்த்தும் எண்ணத்தில் அல்ல..

9. ஆரம்பத்தில் இக்கதையை முழுக்க காமக்கதையாக ஆரம்பித்து பின்னர் வந்த கருத்துகள்.. விமர்சனங்கள் காரணமாக கனமான கதைக்களத்தை உள்ளே புகுத்தினேன். கதை களம் அபாரமாக இருக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் இடையில் தவிடுபோடி ஆனதால் இப்படி கைவிடும்படி ஆகி விட்டது.

10. விமர்சனங்கள் தான் இக்கதையின் பலம். அதுவே பலவீனம் ஆகி விட்டது பெரும் சோகம். யார் மீதும் பழி போட விரும்பவில்லை. கதையின் போக்கு சரியாக திரும்பவில்லை என எண்ணுகிறேன்.

எனக்கு தெரிந்த விளக்கங்களை மொத்தமும் இங்கே கொடுத்து விட்டேன். மேற்படி விளக்கம் கேட்டால் இத்திரியில் கொடுக்க மாட்டேன்.

ஆம்.. கனத்த இதயத்தோடு சொல்கிறேன். இக்கதையை நான் இனியும் தொடர போவதில்லை. கை விட்டு விட்டேன்.

மன அழுத்தம் காரணமாக இக்கதையை என்னால் இனிமேலும் தொடர முடியாது என்பதை மிகவும் வருத்தத்துடன் சொல்லி கொள்கிறேன். 

எந்த எதிர்பார்ப்பின்றி இக்கதையை ஆரம்பித்தேன். எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் கதையை மாற்றி.. சூழ்நிலையை மாற்றி.. கதாபாத்திரங்களை ஏற்றி.. உருமாற்றி.. என் நாளின் பெரும்பகுதியை இக்கதைக்காக செலவழித்துள்ளேன்.

மன அழுத்தத்தால் இன்று மேன்மேலும் வரும் விமர்சனங்களை கையாள முடியாமல் கைவிடும் முடிவை எடுப்பது‌ மனதுக்கு மிகவும் வருத்தமாக உள்ளது.

இடையில் கைவிடுவது கடினமான முடிவாக இருந்தாலும்.. அதுவே பொருத்தமாக இருப்பதாக இருப்பதாக எனக்கு படுகிறது. 

ஏனெனில் வார்த்தைகளும் உவமைகளும் சரியாக கோர்த்து வராமல் இக்கதையை நான் மேற்கோண்டு கொண்டு செல்வது மடத்தனமான முயற்சியாக மனதுக்கு படுகிறது. படைப்பின் தரமும் கெட்டு விடும். அதை வாசகர்களும் விரும்பமாட்டார்கள் என்பதால் இத்தகைய முடிவை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டேன்.

ஆனால் இக்கதையை யார் வேண்டுமானாலும் தொடரலாம். நினைத்தபடிக்கு எழுதலாம். அதற்கு முழு உரிமையும் சுதந்திரமும் அளிக்கிறேன். 

இக்கதையின் முடிவு பற்றி சில எண்ணங்கள் என்னிடம் உள்ளன. யாரேனும் தொடர விரும்பினால் அதற்கும் உதவி செய்ய தயாராய் உள்ளேன்.

மற்றபடி யார் மீதும் எந்த மன வருத்தமும் எனக்கு இல்லை.

ஆதரவு கொடுத்த அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்.

வேறோரு கதையை யோசித்து வைத்துள்ளேன். விரைவில் ஆரம்பிக்கவுள்ளேன். அது முழுக்க காம கதையாக அல்லாமல் காதல் கதைக்களத்தில் லேசான காமத்தை கலக்க இருக்கிறேன். அதுவரை குறுங்கதைகளை எழுதி என் மனக்குறையை தீர்த்து வருகிறேன்.

இனி எழுத போகும் புதுக்கதைக்கான ஆதரவை நான் உங்களிடம் கேட்க போவதில்லை. கதையை படித்த பின்னர் நீங்களே முடிவு எடுத்து கொள்ளலாம்.

இறுதியாக அனைவருக்கும் ஒரே ஒரு வேண்டுகோள். 

இன்செஸ்ட் கதைகளுக்கு கொடுக்கும் ஆதரவை தயவு செய்து மற்ற காம காதல் கதைகளை எழுதும் எழுத்தாளர்களுக்கும் கொடுங்களேன். பிரியாணியை ஒரு வேளை ரசித்து சாப்பிடலாம்.. முன்று வேளையும் பிரியாணி மட்டுமே உண்பேன் என்றால்..?

நன்றி நண்பர்களே... மீண்டும் சந்திப்போம்..!!  Namaskar
[+] 2 users Like Kavinrajan's post
Like Reply


Messages In This Thread
RE: காமவனத்தில் ராதா (பாவக் கதைகள்) - OnHold - by Kavinrajan - 11-09-2024, 11:22 PM



Users browsing this thread: 18 Guest(s)