24-06-2019, 02:07 PM
பாகம் 3.
ECR ரோட்டில், கடலோரத்தில், நானும் மைதிலியும் உட்கார்ந்திருந்தோம். அவளது கண்களில் சாரை சாரையாகக் கண்ணீர். அவளைச் சமாதானப் படுத்த எந்த முயற்சியும் நானும் எடுக்க வில்லை. சொல்லப்போனால், நான் என்ன நினைக்கிறேன் என்று எனக்கே தெரியவில்லை!
கடலுக்கும் எங்களுக்கும் அதிக இடைவெளி இல்லை. அழுது கொண்டிருந்த மைதிலி, திடீரென எழுந்து கடலை நோக்கி ஓட ஆரம்பித்தாள்! அதிர்ச்சியில் இருந்த நான், உடனே சுதாரித்துக் கொண்டேன். கடலில் மிக உள்ளே செல்லும் முன் அவளை பிடித்து விட்டேன்.
ECR ரோட்டில், கடலோரத்தில், நானும் மைதிலியும் உட்கார்ந்திருந்தோம். அவளது கண்களில் சாரை சாரையாகக் கண்ணீர். அவளைச் சமாதானப் படுத்த எந்த முயற்சியும் நானும் எடுக்க வில்லை. சொல்லப்போனால், நான் என்ன நினைக்கிறேன் என்று எனக்கே தெரியவில்லை!
கடலுக்கும் எங்களுக்கும் அதிக இடைவெளி இல்லை. அழுது கொண்டிருந்த மைதிலி, திடீரென எழுந்து கடலை நோக்கி ஓட ஆரம்பித்தாள்! அதிர்ச்சியில் இருந்த நான், உடனே சுதாரித்துக் கொண்டேன். கடலில் மிக உள்ளே செல்லும் முன் அவளை பிடித்து விட்டேன்.
விடுங்க என்னை, விடுங்க! என்று கதறி அழுதாள்!
எதுக்கு, திரும்பப் போயி சாகுறதுக்கா?
நான் செத்தா உங்களுக்கென்ன? இன்னும் என்ன இருக்கு வாழ்க்கைல?
போ, போய் சாவு… அங்க ஏற்கனவே உன் புருஷன், பாதி கொன்னுட்டான். மிச்சம் மீதி இருக்கிறதை நீ வாங்கு! எனக்கு கோபமும், அதிர்ச்சியும் உச்சத்தை அடைந்திருந்தது…
ஆமா, உங்க பொண்டாட்டி ப்ரியா, ஒண்ணும் தெரியாத குழந்தை. அவ ஒண்ணுமே பண்ணலை? எல்லாமே என் புருசந்தான் பண்ணாரு?!
கோபத்தில், எங்களுக்குள் சண்டை வந்திருந்தாலும், இவ்வளவு நேரம் பேசியது, இருவருக்குமே கொஞ்சம் நிதானத்தை வரவழைத்திருந்தது! அதற்குள் தூரத்தில் ஆட்கள் யாரோ வர ஆரம்பித்திருந்தார்கள்!
3 பேர் வந்தார்கள். பார்த்தாலே தெரிந்தது, குடித்திருந்தர்கள், பொறுக்கித் தனம் செய்யக் கூடியவர்கள் என்று.
கண்ணீருடன் இருந்த மைதிலி, அவளது கையை அழுத்தி பிடித்திருந்த நான், என அவர்கள் பார்த்ததும், அவர்களுக்குள் எங்களைக் காட்டி பேச ஆரம்பித்தார்கள்!
சூழ்நிலையின் அபாயம் உணர்ந்தவுடன், மைதிலியிடம், மெதுவாக அதைச் சொன்னேன். ஏற்கனவே அதிர்ச்சியில் இருந்த மைதிலி, பயத்தில் என்னை மிகவும் நெருங்கி நின்றாள்!
அவளது பயத்தை உணர்ந்த நான், கண்ணைத் துடை! என்ன கமெண்ட் அடிச்சாலும், கண்டுக்காதே, முக்கியமாக பயந்த மாதிரி காட்டிக் கொள்ளவே கொள்ளாதே! என்று மென் குரலில் சொல்லி விட்டு, அவளது கையை விடாமல் கூட்டிக் கொண்டு காருக்குச் சென்றேன்!
அவர்கள் கமெண்ட் அடித்தாலும், கண்டுக்காமல், வேகமாக காருக்கு வந்து சேர்ந்தோம். காரை எடுத்து அந்த இடத்தை நகர்ந்த பின்புதான் தெரிந்தது, மைதிலி, பயத்தில் இன்னும் என்னை ஒட்டியே இருக்கிறாள் என்று!
அவளை ரிலாக்ஸ் செய்து விட்டு, கார் மெதுவாகச் செல்ல ஆரம்பித்தது!
திடீரென ஞாபகம் வந்தவனாகக் கேட்டேன், ப்ரேம் இந்த நேரத்துல எங்க வீட்டில் எப்படி? என்று மைதிலியிடம் கேட்டென்…
கண்ணீருடன், என் கிட்ட, ப்ராஜக்ட் மீட்டிங் இருக்கு, வர லேட்டாகும்னு சொல்லிட்டு போனாரு! இப்பதான் புரியுது என்ன மீட்டிங்னு…
எங்கு செல்வது, கொஞ்ச நேரம் தனியாக இருக்க வேண்டும்? நிறைய யோசிக்க வேண்டும்! ஆனால், இன்னும் சில மணி நேரங்களுக்கு இவளைத் தனியாக விடவும் பயமாக இருந்தது!
அப்பொழுதுதான் தோன்றியது, எங்களது இன்னொரு வீட்டிற்குச் செல்லலாம் என்று. உண்மையில், அதுதான் நான் முதலில் வாங்கிய வீடு. கோடம்பாக்கத்தில் இருந்தது. கல்யாணத்திற்கு முன்பு கோடம்பாக்கம் ஃப்ளாட்டில்தான் இருந்தேன். ஆஃபிசுக்கு, வேளச்சேரி வீடு பக்கம் என்பதாலும், காசு அதிகமாகவே இருந்ததாலும், இந்த வேளச்சேரி வீடு புதிதாக வாங்கினோம். கோடம்பாக்கம் வீடு, இப்பொழுது காலிதான். பெயிண்ட் பண்ணி விட்டு திரும்ப ரெண்ட்டுக்கு விடலாம் என்றூ எண்ணியிருந்தது ஞாபகத்திற்க்கு வந்தது.
வண்டி கோடம்பாக்கம் சென்றது. அபார்மெண்ட்டை அடைந்ததும்தான், தாம் எங்கிருக்கிறோம் என்பதையே உணர்ந்தாள் மைதிலி!
இங்க எதுக்குண்ணா?
சொல்றேன் வா!
என்னை, வீட்லியே விட்ருங்கண்ணா!
எதுக்கு, அங்கதான் தூக்கு மாட்டிக்க வசதியா இருக்குமா?
அவள் அதையும் யோசித்திருக்கிறாள் என்பதை அவள் முகமே சொல்லியது.
பேசாம என் கூட வா!
வேறு வழியின்றி, என்னைத் தொடர்ந்தாள்! வீட்டுனுள் நுழைந்தோம்!