மான்சி கதைகள் by sathiyan
விடியலைத் தேடும் மான்சி - அத்தியாயம் - 6

இரவு வந்ததும் சாட்டை ஓபன் செய்து சிமிக்கு ஒரு ஹாய் போட்டுவிட்டு மெயிலை திறந்தான்..... அவன் அனுப்பிய மெயிலுக்கு பதில் வந்திருந்தது "நீங்கள் கேட்டதை செய்வதற்கு முயற்சி செய்கிறேன்" என்று தான்.....

முகம் லேசாக மலர சாட்டில் அவள் வருவதற்காக காத்திருந்தான்.... சரியாக அவளுக்கு பதினோரு மணியெனும் போது "ஹாய் சத்யன்" என்று பதில் வந்தது....

"ம்ம் சாப்ட்டியா சிமி?" இத்தனை நாள் நட்பில் இன்றுதான் அவள் வயிற்றைப் பற்றி கேட்கிறான்....

மான்சிக்கோ திகைப்புதான் "ம்ம்" என்றாள்..

"என்ன டிபன்?"

"காலைல எப்பவுமே எனக்கும் அப்பாவுக்கும் கோதுமை உப்புமா தான்.... இன்னைக்கும் அதுதான் "இப்போதெல்லாம் அவன் ஒரு வார்த்தை கேட்டாலும் இவள் விரிவாகத்தான் பதில் சொல்கிறாள்..

"ம்ம்,, மதியம் சாப்பாடு?"

"அப்பா கேன்டீன்ல சாப்பிட்டுப்பாங்க,, எனக்கு அதே உப்புமா தான் கப்ல போட்டு எடுத்துட்டு வந்துடுவேன்" புன்னகை செய்யும் பொம்மை ஒன்று....

"ஷிட்,, சீக்கிரமே ருசியறியும் செல்கள் செத்துடும்" சுவற்றில் முட்டிக் கொள்ளும் பொம்மை ஒன்று....

"அதெல்லாம் ஒன்னும் ஆகாது,, பத்து வருஷதுக்கு மேலயும் அதான் சாப்பிடுறேன்"

"நான் அனுப்பிய மெயில் படிச்சியா?"

"ம்ம்,, படிச்சேன்"

"அதைப் பத்தி ஏதாவது யோசிச்சியா?".

"ம்ம்,, நடந்து முடிஞ்சதைப் பத்தி இனி பேசி பிரயோஜனம் இல்லை.... இனி நடப்பவை மட்டும் உங்கக்கிட்ட பகிர்ந்துக்குறேன்"

"சொல்றதோட நிறுத்தாம செய்யனும்" அவனின் வார்த்தைகளில் உரிமையான அதட்டல் ஒழிந்து கிடந்தது....

"ம்ம்".....



"சம்பாதிக்கிறயே,, நல்லதா வாங்கி சாப்பிடலாம்ல?"

"ஏன்,, இப்ப சாப்பிடுறது நல்லா தானே இருக்கு?."

"உன்னைத் திருத்தவே முடியாது,, எப்படியாவது போய்த் தொலைனு விடவும் முடியலை"

"வேண்டாம் சத்யன்,, யாரும் எனக்காக பரிதாபப்படவோ,, வருத்தப்படுவோ வேண்டாம்"

"அம்மா தாயே,, தெரியாம பேசிட்டேன்,, மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏறிடப் போகுது"

இதைப் படித்ததும் மான்சிக்கு சிரிப்பு தான் வந்தது

சற்றுநேரம் கவிதைகளைப் பற்றிப் பேசிவிட்டு சத்யன் உறங்கப் போய்விட... மான்சியும் தனது அலுவல்களை கவனிக்க ஆரம்பித்தாள்...

அடுத்த சில நாட்களும் இதே முறையில் சென்றது... காலையும் மாலையும் வந்தான் நலம் விசாரித்தான்,, கவிதைகளைப் பற்றி கருத்துகள் கூறினான்... தனது கல்லூரியில் நடக்கும் கலாட்டாக்களைப் பகிர்ந்துகொள்வான்..... சாப்பிட்டாளா என்பதில் அதிக அக்கரை காட்டினான்....... சாட்டில் பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் தனது உரிமையை நிலை நாட்டினான்.... அந்த உரிமை நட்பால் வந்தது தான் என்று இருவரும் நம்பினார்கள்....

மான்சிக்குள் நிறைய மாற்றங்கள்.... சத்யனை எதிர்பார்த்து காத்திருக்க ஆரம்பித்தாள்... அவன் வரும் வேளையில் அவள் முகம் தாமரையாக மலர்வதை தடுக்க முடியவில்லை.... அன்பாக அவன் கேட்கும் "சாப்ட்டயா சிமி?" என்ற வார்த்தைக்காகவே உயிரை வைத்துக் கொண்டு இருப்பது போல் தோன்றும்.... நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அவர்களின் நட்பு(?) வளர்ந்தது

மனம் இலகுவாக இருக்க வீட்டுப் பிரச்சனைகளையும் மான்சியால் எளிதாக சமாளிக்க முடிந்தது.... ஆனால் கலாவிடம் கொஞ்சம் நஞ்சம் இருந்த மனிதத்தன்மையும் தொலைந்து போக எப்பவுமே இறுகிப் போன முகத்தோடு அமர்ந்திருந்தாள்....

மான்சியால் கலாவை எளிதாக புரிந்துகொள்ள முடியும்... தகப்பனிடம் போய் அவரது தாம்பத்தியத்தைப் பற்றி பேசவும் முடியாது.... சித்தியிடம் சென்று தகப்பனை மன்னிக்கவும் சொல்ல முடியாது.... ரீத்து எதையுமே கண்டுகொள்ளாமல் அவளது கல்லூரி படிப்பும் அங்கே புதிதாய் கிடைத்த காதலனுமாக நிம்மதியாக இருக்க... மான்சி தான் இதில் மாட்டிக் கொண்டு அவதியுறுபவள்.... அதிலும் இப்போதெல்லாம் கலா பார்வையாலேயே பொசுக்க ஆரம்பித்து விட்டாள்.... முடிவேயில்லாத ஒன்றைத் தேடிச் செல்வதாகத் தோன்றியது....

அன்று கூட அப்படித்தான் காலை எழும்போதே பெரும் போராட்டமாக இருந்தது.... பத்ரியை ஜாடையாக ஏதோ திட்டிக் கொண்டிருக்க... தோட்டத்து வாசலில் தலையில் கைவைத்துக் கொண்டு அமர்ந்திருந்தார் பத்ரி.....

மான்சிக்கு சில சமயம் அப்பாவின் கையாலாகத் தனத்தை நினைத்து கோபமாகக் கூட வரும்.... 'கலாவின் வாழ்வை பற்றி நிமிட நேரம் யோசித்திருந்தால் கூட தான் பலிகடா ஆகிருக்க மாட்டோமே' என்று நிறைய முறை நினைத்ததுண்டு.... ஆனால் அவர் தனது அம்மா தேவியின் மீது வைத்திருக்கும் காதல் எல்லாவற்றையும் அடிப்போட்டு விடும்..... எதுவந்தாலும் அசையாத அந்த நேசம் நிஜமானதல்லவா? அந்த நேசத்திற்காக தான் அடிபடுவதில் தவறேதும் இல்லை என்றே எண்ணினாள்

அப்பாவை ஆறுதல் படுத்திவிட்டு அத்தனை வேலையையும் முடித்து அலுவலகம் கிளம்பினாள்..... ரயிலில் ஏறியதும் சத்யனைப் பற்றிய ஞாபகங்கள்.... இப்போது தான் இரவு சாப்பிட்டுக் கொண்டிருப்பானோ? அல்லது சாப்பிட்டு முடித்து எனக்காக காத்திருப்பானா? இன்று ஏனோ மனம் அதிகமாக அவனைத் தேடியது.....

அவசரமாக அலுவலகம் நோக்கி ஓடினாள்,, தனது இருக்கையில் அமர்ந்து அலுவல்களை பார்த்தாள்... சரியாக பதினோரு மணிக்கு அலுவலக வேலைகள் சற்று குறைந்தது.. தனது மெயிலை ஓபன் செய்தாள்...

"ஹாய் சிமி" என்ற வாசகத்தோடு காத்திருந்தான்

"ம்ம்,, வந்துட்டேன்"....

"நேத்தைவிட முபிபது நிமிஷம் லேட்,, ஆபிஸ்ல ஒர்க் அதிகமா? நானும் வந்து தொல்லை குடுக்கிறேனா?"

மான்சி சற்றுநேரம் பதிலே அனுப்பவில்லை என்றதும்...

"சிமி என்னாச்சு?"

"இல்லை உங்களை என்னைக்காவது தொந்தரவுனு நான் சொல்லிருக்கேனா?"

"ஓ.......... ஹாஹாஹா அதான் கோபமா?.... நீ தொந்தரவுன்னு சொன்னாலும் கூட நான் வந்துக்கிட்டே தான் இருப்பேன்... துப்புனாலும் உடனே தொடைச்சிட்டு சிரிக்கும் வெள்ளை மனம் படைத்தவன் நான்"

மான்சி சட்டென்று சிரித்துவிட்டாள் "அதுக்குப் பேர் வெள்ளை மனம் படைத்தவன் இல்லை.... எங்க ஊர் பக்கம் மானங்கெட்டவன்னு சொல்வோம்...."

"எவன் சொல்லாம கொல்லாம இப்படில்லாம் மாத்தினது?"

"உங்களை மாதிரி நல்லவங்க நாலு பேருதான்....."

"ஹாஹாஹாஹா,, சிமி,, நீ இப்படிலாம் பேசறதை கேட்க எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா,?"


"ம்ம்,, எனக்கே ஆச்சர்யமாத்தான் இருக்கு"

"சரி சிமி,, உன்னை பத்தி பேசுவோமா? "

சட்டென்று பேச்சு திசை மாற "என்னைப் த்தியா? என்ன பேசனும்?"

"இல்ல,, இவ்வளவு பிரச்சனைகளுக்கு மத்தியில் இருப்பதை விட,, உன்னை விரும்பும் ஒரு நல்லவனா பார்த்து மேரேஜ் பண்ணிக்கிட்டு சந்தோஷமா வாழலாமே சிமி"

"ம்ம்,, வாழலாம் தான்,, ஆனா எனக்கு மேரேஜ்ல ஆர்வமில்லை... விருப்பமும் இல்லை"

"ஏய்,, இதென்ன முட்டாள் தனமான பேச்சு... பெண் திருமண பந்தத்தில் இணைவது தான் அவ லைப்க்கு முழுமை"

"ம்ம் புரியுது சத்யன்.... ஆனா நான் போய்ட்டா என் அப்பா?.... அதைவிட என் சித்தி நான் கல்யாணம் செய்துக்க சம்மதிக்க மாட்டாங்க"

"வாட்? உன் சித்தி ஏன் சம்மதிக்க மாட்டாங்க?"

"அது வந்து அப்படித்தான்..... அவங்க அனுபவிக்காத தாம்பத்தியம் நான் அனுபவிக்க விடமாட்டாங்க"

"புரியலை சிமி"

"புரிய வேண்டாம் சத்யன்,, புரியனும்னு பல கதைகளை சொல்லனும்,, இப்போதைக்கு என் லைப்ல கல்யாணமே இல்லை"....

"இல்ல சிமி,, நீ பேசுறது ரொம்ப தவறு..... கல்யாணம் மட்டுமே உன் பிரச்சனைக்கு தீர்வுனு நான் நினைக்கிறேன்.... உன் சித்திக்கு தாம்பத்தியம் சரியில்லைன்னா அது உன் அப்பாவும் சித்தியும் பேசி தீர்க்க வேண்டிய பிரச்சனை... நீ ஏன் வாலின்டியரா அதுல கமிட் ஆகிக்கிற? நீ உன் லைப்பை மட்டும் யோசி சிமி"

மான்சிக்கு முனுக்கென்று கோபம் வந்தது... இவன் அதிகமாக தனது வாழ்வில் மூக்கை நுழைக்கிறானோ என்று தோன்ற "இதெல்லாம் நீங்க சொல்ல வேண்டிய அவசியமில்லை சத்யன்,, உங்களுக்கு ரொம்ப இடம் குடுத்துட்டேன் போலருக்கு" என்று பதில் அனுப்ப....

"ஆமா இடம் குடுத்து உன் மடில போட்டு கொஞ்சிக்கிட்டு இருக்க பாரு? சும்மா கடுப்பேத்தாத சிமி.... நான் சொன்னதை நிமிஷ நேரமாவது யோசிச்சுப் பாரு.. அதுல இருக்குற நியாயம் புரியும்" 



எது நியாயம்? அப்பாவை நிராதறவா விட்டுட்டு புருஷன்ற ஒருத்தன் பின்னாடி போறது தான் நியாயமா?"

"இதிலென்ன தப்பிருக்கு? காலம் காலமா நம்ம கலாச்சாரமே அது தானே?"

"கலாச்சாரமா? அதை நான் மாத்தியமைப்பேன்"

"மண்ணாங்கட்டி,, தூங்குறவனை எழுப்பலாம் தூங்குற மாதிரி நடிக்கிறவனை எழுப்பவே முடியாது.... நீயா திருந்தினா தான் உண்டு போலருக்கு"

"ஹலோ நீங்க ரொம்ப அதிகமா பேசுறீங்க"

"அதிகமாவா?.... இதுவே அதிகம்னா இனிமே நான் பேசுறதுக்கு என்ன சொல்லுவ?"

"ம் ஒன்னும் சொல்ல மாட்டேன்... சாட்டை குளோஸ் பண்ணிட்டு போய்க்கிட்டே இருப்பேன்...”

"எல்லாம் நேரம்டா சத்யா,, உன் நேரம் சரியில்லை.... சரி சரி நோ டென்ஷன்... இனிமே இது போல பேசுறதை தவிர்க்கப் பார்க்கிறேன்..."

"ம்ம்"

"கொஞ்சம் சிரிச்சாப்ல மூஞ்சிய வச்சுக்கிட்டு நாலு வார்த்தை நல்லதா சொன்னா நானும் நிம்மதியா போய் தூங்குவேன்ல"

புன்னகையில் பூத்தது மான்சியின் மலர் முகம் "என்ன பேசுறதாம்?"

"எதையாவது பேசு கண்ணே.... நமக்குள் இருப்பதைப் பற்றி நாலு வார்த்தைப் பேசு,, நமக்குள் இல்லாதததைப் பற்றி.... எதுவுமே பேசாத"

"நமக்குள்ள என்ன இருக்கு பேச?"

"ஸ்ஸ்ஸ் யப்பா முடியலை சாமி.... கண்ணை கட்டுதே...... இப்போ நான் ஏதாவது சொன்னா... ஹலோ நீங்க ஓவரா பேசுறீங்கன்னு சொல்லுவ... அதைவிட நைட் போடப் போற கவிதை இருந்தா நாலுவரி இப்பவே சொல்லு கேட்டுட்டு போய் தூங்குறேன்"

"ம்ம்,, வரவர நீங்க பேசுறதே புரியலை"

"எனக்கே புரியலை,, அப்புறம் எங்கருந்து உனக்குப் புரியும்.. சரி கவிதை சொல்லும்மா,, தூக்கம் கண்ணைக் கட்டுது"




" என்னை சூழ் கொண்டு..

" மகரந்தம் காத்த மலரே,

" இன்று நான் மலர்ந்ததைக் காண,

" நீ என் அருகில் இல்லையே!

"வெரி நைஸ்,, அப்போ நீ இன்றுதான் மலர்ந்திருக்கேன்னு உன் அம்மாவுக்கு சொல்ற? சரிதானே?"

ஏதோ சூட்சுமம் நிறைந்த வார்த்தைகள்... "ஹலோ இது கவிதை" என்றாள்....

"நான் மட்டும் காக்கா வடை தூக்கின கதைன்னா சொன்னேன்... கவிதை தான்... கவிதையே தான்... ஆனா முதல் முறையா உன் மலர்வை சொன்ன கவிதை"

"வேணாம் சத்யன் ப்ளீஸ்"

"ம்ம்,, உன்னை நீ உணர ஆரம்பிச்சுட்ட சிமி,, ஓகே நான் தூங்கப் போறேன்.... குட்நைட் சிமி"

"ம் குட்நைட் ஸ்வீட் ட்ரீம்ஸ் சத்யன்"

"நான் ஒரு கவிதை சொல்லவா சிமி?"

ஆர்வமானாள் மான்சி "ம் சொல்லுங்க சொல்லுங்க"


" வயதென்னவோ உன் னை மங்கை என்கிறது!

" நீயோ தாய் மடி தேடும் மழழையாகவே...

" என் கண்களுக்குத் தோன்றுகிறாய்!
[color][font]

"ம் ரொம்ப நல்லாருக்கு சத்யன்"

"ம் தாங்க்ஸ் சிமி" என்றவன் ஆப்லைன் போய்விட... மான்சி மறுபடியும் மறுபடியும் அவனுடைய கவிதை வரிகளையே திரும்பத் திரும்ப வாசித்தாள்....

அன்று மாலை அவளது மெயிலைக் கூட ஓபன் செய்ய முடியாதளவுக்கு ஆபிஸ் வேலை அதிகமாக இருந்தது.... ஆறு மணிக்கு சத்யன் காத்திருப்பானே என்று தோன்றினாலும் வாங்கும் சம்பளத்திற்கு நாணயமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அலுவலைக் கவனித்தாள்...

ஆறேமுக்காலுக்கு வேலை முடியவும் அலுவலகத்திலிருந்து கிளம்பும் நேரம் வந்துவிட மெயிலை ஓபன் செய்ய நேரமின்றி வீட்டுக்கு கிளம்பினாள்...

அவள் வரமுடியாத அந்த நிமிடம் தான் சத்யனின் வாழ்வில் சிமி எங்கே என்று அவனுக்கே உணர்த்திய நிமிடங்கள்.... அவளுக்காக அவன் தவித்த தவிப்பும் துடிப்பும் அவன் மனதுக்குள் காதல் வந்திருப்பதை உரக்கச் சொல்ல அவளைக் காணாமல் கண்ணீரால் கலைந்த ஓவியம் போலானான்...
[/font][/color]
வீட்டுக்கு வந்த மான்சிக்கோ பெரும் அதிர்ச்சியொன்று கை விரித்துக் காத்திருந்தது...... முகம் கழுவி விட்டு தனக்கான காபியைத் தயாரித்தவளிடம் வந்து நின்றாள் கலா.

"மான்சி,, உன்கிட்ட முக்கியமான விஷயம் பேசனும்...." என்றவளை ஆச்சர்யமாக பார்த்து "என்கிட்ட பேச அனுமதி கேட்கனுமா சித்தி,, எதுவாயிருந்தாலும் சொல்லுங்க கேட்க காத்திருக்கேன்" என்றாள் மான்சி....

"ம்ம்,, கொஞ்ச நாள் முன்னாடி உன்னை பெண் கேட்டாங்களே அந்த பெங்களூர் காரங்க... அவங்களோட மகனுக்கு நம்ம ரீத்துவை குடுக்கலாம்னு முடிவு பண்ணி நானே அவங்களுக்குப் போன் பண்ணி கேட்டேன்.... அவங்களுக்கு இந்த வீட்டுலருந்து ஒரு பெண் மருமகளா வரனுமாம்,, அது அக்காவா இருந்தா என்ன தங்கையா இருந்தா என்ன, எங்களுக்கு சம்மதம்னு சொல்லிட்டாங்க... பையன் வெளிநாட்டுல படிக்கிறானாம்... இந்த வருஷம் படிப்பு முடிச்சிட்டு வந்ததும் கல்யாணத்தை வச்சுக்கலாம்னு சொன்னாங்க.... இது விஷயமா உன் அப்பாகிட்ட பேசனும்னு சொன்னாங்க... அவருபாட்டுக்கு ஏடா கூடமா ஏதாவது பேசிட்டா எல்லாம் கெட்டுடும்... அதனால உன் அப்பாவை சமாதானம் பண்ணி அவங்ககிட்ட பேச வைக்க வேண்டியது உன் பொருப்பு" கலா மூச்சு வாங்க நீளமாக சொல்லி முடித்தாள்....

மான்சிக்கு நிஜத்தில் சந்தோஷமாகத்தான் இருந்தது... சட்டென்று சித்தியின் கையைப் பற்றி "நானாச்சு சித்தி... அப்பாவை பேச வச்சு கல்யாணத்தை நல்லபடியா முடிக்கலாம்,, நீங்க எந்த கவலையும் இல்லாம நிம்மதியா இருங்க" என்றாள்...

மான்சியை சில நிமிடங்கள் உற்றுப் பார்த்த கலா "இந்த கல்யாணம் நடக்கலைன்னா என்னை உயிரோடவே பார்க்க முடியாது மான்சி,, இது சத்தியம்" என்றாள்...

"அய்யோ சித்தி அப்படில்லாம் பேசாதீங்க... எல்லாம் நல்லபடியா முடியும்" என்று சித்தியை சமாதானம் செய்தாள்...

அன்று இரவு வழக்கம் போல தாமதமாக வந்த மகளை தனியறைக்கு அழைத்துச் சென்று பேசினாள் கலா....

அதன் பிறகு தனது அறைக்கு வந்த ரீத்து மான்சியிடம் வந்து "உன்னை கேட்ட மாப்பிள்ளைக்கு என்னை தரப் போறாளாம் அம்மா,, உனக்கு அதிலே வருத்தமில்லையே?" என்று கேட்க...

புன்னகையுடன் தங்கையின் தலை கோதிய மான்சி "எனக்கு ஏன்ம்மா வருத்தம்... நீ நல்லா சந்தோஷமா இருக்கனும்,, அது போதும் எனக்கு" என்றாள்...

"ம்ம் நீ திருந்தவே மாட்ட மான்சி,, மாப்ளை கலிபோர்ணியாவில் படிச்சுக்கிட்டு இருக்கானாம்... நல்ல பிக் ஷாட் தான் போலருக்கு,, ஓகே சொல்லிட்டேன்" என்றாள் ரீத்து...

"கலிபோர்ணியா என்ற வார்த்தையைத் தவிர வேறு எதுவுமே மான்சியின் காதில் விழவில்லை... "மாப்பிள்ளையோட பெயர் என்னவாம் ரீத்து?" என்று அவசரமாக கேட்க...

"ம் சத்யமூர்த்தியாம்... கலிபோர்ணியா யுணிவர்ஸிட்டியில் மேற் படிப்புப் படிக்கிறானாம்" தகவல் சொன்னபடி குளியலறைக்குள் புகுந்தாள் தங்கை...

மான்சியின் தலையில் மெல்ல வந்து விழுந்தது இடி.... 'அய்யோ இந்த சின்ன சந்தோஷம் கூட என் வாழ்க்கையில் நிலைக்காதா அம்மா' என்று உள்ளம் உருகியவளுக்கு இரண்டு விஷயம் ஞாபக அடுக்கில்... அப்போ சின்னு தான் சத்யனா? குழந்தையாக இருக்கும் போதே என் கண்ணீர் துடைத்து கழுத்தில் தனது அடையாளத்தை அணிவித்தவனா யாரென்றே தெரியாமல் என்னுடன் சாட்டில் பேசிய சத்யன்?



அம்மா சோதிக்க ஓர் அளவில்லையா? நண்பன் தான் என்றாலும் அந்த நட்பு கூட எனக்கு நிலைபெறாதா? காலமெல்லாம் உன் கவிதைகள் மட்டுமே எனக்குத் துணையா? இருக்கட்டும்... இந்த இன்பம் மட்டும் போதும் எனக்கு...



“ உன் வயிற்றில் நான் ...

“ ஒரு கொடியில் உணவாம் ...

“ இரு விழியில் உறக்கமாம்....

“ என் துடிப்பை நீ அறிவாயாம் ....

“ உன் தவிப்பை நான் உணர்ந்தேனாம்....

“ பூமியில் நான் பிறந்தவுடன்

“ தாயும், சேயும் வேறு வேறாக...

“ உன் உயிரையே என்னுடன் பங்கிட்டு,

“ ஒருயிராய் இருந்து..

“ ஈருயிராய் ஈன்ற பின்னும்...

“ கடமை தீர்ந்தென்று கை விரிக்காமல்..

“ உதிரத்தை உருக்கி உயிர்ப்பால் கொடுத்து...

“ அம்மா, அம்மா, அம்மா, என் அம்மா....

“ உனக்கு ஈடு ஈரேழு உலகிலும் இல்லையம்மா!!!
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:20 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:21 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:22 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:23 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:24 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:25 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:26 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:33 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:36 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:37 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:46 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:47 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:53 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:54 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:55 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:55 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:56 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 11:03 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 11:04 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:30 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:31 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:33 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:36 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:37 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:41 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:42 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:42 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:43 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:45 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:46 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:47 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:48 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:48 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:47 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:49 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:51 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:52 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:52 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:53 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:19 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:20 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:20 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:21 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:21 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:22 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:23 AM
RE: mansi stories by sathiyan - by Renjith - 14-02-2019, 12:18 PM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:24 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:24 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:26 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:27 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:28 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:29 AM
RE: மான்சி கதைகள் by sathiyan - by johnypowas - 24-06-2019, 10:37 AM



Users browsing this thread: 1 Guest(s)