Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
இனி மரங்களை வெட்ட மாட்டோம்; கேள்வி கேட்பவர்களை வெட்டுவோம்’ - ராமதாஸ்!

நேற்று, சென்னை அடையாறில் உள்ள முத்தமிழ்ப் பேரவையில், `வளர்க்கப்படுகின்ற வெறுப்பு அரசியல்’ என்ற பெயரில் கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில், பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கலந்துகொண்டார்.
[Image: D9HYX_LUIAAw-oms_15419.jpg]

அப்போது மேடையில் பேசிய அவர், ``கல்கத்தாவிலிருந்து வெளிவரும் பத்திரிகையின் நிருபர் ஒருவர், என்னிடம், `நீங்கள் மரம் வெட்டினீங்களாமே?’ என்று கேட்டார். அப்போது நான் சொன்னேன், `100 தடவை அதற்கு நான் பதில் கூறிவிட்டேன். நீங்கள் அதே நோக்கத்தில் கேள்வி எழுப்ப என்ன காரணம்?' என்று கேட்டேன். இனிமேல் அதுபோல ஏதாவது போராட்டம் என்றால் மரங்களை வெட்ட மாட்டோம். இதுபோல கேள்வி கேட்பவர்களைத்தான் வெட்டி குறுக்கே போடுவோம்’ என்றேன். மக்கள் மத்தியில், `ராமதாஸ் ஒரு மரம் வெட்டி’ என்ற கருத்தை விதைக்க வேண்டும் என்பதுதான் அவர்களது நோக்கம். ஏன்டா நாய்களா... நான் மரத்த எங்கெங்க வைச்சிருங்கேன்னு வந்து பாருங்கடா. மரம் வைப்பவர்களுக்கு 1லட்சம் பரிசு தருகிறேன்” என்று பேசினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. பத்திரிகையாளர் சங்கங்கள் இதற்குக் கண்டனம் தெரிவித்தன.


[Image: ramadoss_11262_15098.jpg]
 
இந்நிலையில், இன்று சென்னை சிவானந்த சாலையில் உள்ள அண்ணா கலையரங்கத்தில், வழக்குரைஞர்கள் சமூக நீதி பேரவையின் மாநில பொதுக்குழு நடைபெற்றது. இதில், பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்,பா.ம.க தலைவர் ஜி.கே. மணி,  முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ், ஏ.கே மூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய ராமதாஸ், ``ஸ்டாலின் கூறும் பொய்களை ஊடகங்கள் பெரிதுபடுத்துகின்றன. இளவரசன் விவகாரத்தில் திவ்யாவின் தந்தை தற்கொலை செய்துகொண்டது குறித்து செய்தி வெளியிடாத ஊடகங்கள், இளவரசன் மரணத்தில் எங்கள்மீது பழி போடுகின்றன.
[Image: anbumani_12304_15314.jpg]
நேற்று பத்திரிகையாளர்கள் குறித்து தான் கூறிய கருத்துகளை மாற்றிக்கொள்ள மாட்டேன். வழக்குரைஞர்கள் சமூக நீதி பேரவை ஆர்.எஸ்.எஸ் அமைப்பைப் போல செயல்பட வேண்டும்.  உயர் நீதிமன்றத்தில் தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கக் கோரி அடுத்த வாரம் போராட்டம் நடத்தப்படும்” என்றார்.  முன்னதாகப் பேசிய அன்புமணி ராமதாஸ், ``நாடாளுமன்றத் தேர்தலில் பா.ம.க தோல்வியடைய ஊடகங்களும் முக்கியக் காரணம். நாங்கள் எதிர்த்துப் பேசினால் தான் திருமாவளவனுக்கு அரசியல் வாழ்க்கை கிடைக்கும்” என்று காட்டமாகத் தெரிவித்தார். நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்பும் ஸ்டாலின் பகல் கனவு கண்டுவருகிறார் என்றும், தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன், நீட் போன்ற பிரச்னைகள் உருவாக தி.மு.க தான் காரணம்” என்றும் தெரிவித்தார்
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 24-06-2019, 09:56 AM



Users browsing this thread: 16 Guest(s)