Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
காதலனை நம்பி சென்று ஏமாந்த சிறுமி
பதிவு : ஜூன் 24, 2019, 12:01 AM

ஆந்திராவில் 16 வயது சிறுமியை அடைத்து வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் குண்டூர் நகரைச் சேர்ந்த அந்த 16 வயது சிறுமிக்கு ஓங்கோலை சேர்ந்த ராம் என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை பெற்றோர் கண்டித்ததால், ராமின் அழைப்பின் படி கடந்த 5 நாட்களுக்கு முன்பு சிறுமி வீட்டிவிட்டு வெளியேறி ஓங்கோலுக்கு தனியே சென்றுள்ளார். 

காலையில் ஓங்கோல் பேருந்து நிலையத்து சென்றடைந்த சிறுமி மாலை வரை ராமை தொடர்புகொண்டும், அவர் பதிலளிக்கவில்லை. இதனால் அழுதபடி உட்கார்ந்திருந்த சிறுமியிடம் பாஜி என்ற மாற்றுத்திறனாளி ஒருவர் பேச்சு கொடுத்த தனது தனது நண்பன் அறைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு 2 நாட்கள் சிறுமியை அடைத்து வைத்து பாஜியும் அவரது நண்பர் ஆகாசும் சிறுமி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளனர்.

இதனைதொடர்ந்து அருகே தங்கியிருந்த பொறியியல் கல்லூரி மாணவர்களிடம் சிறுமியை பற்றி தெரிவித்து அவர்களது அறைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிறுமியை நான்கு நாட்கள் அடைத்து வைத்து நான்கு மாணவர்களும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே அங்கிருந்து தப்பிய சிறுமி போலீசில் நடந்தவற்றை தெரிவிக்க குற்றம் சாட்டப்பட்ட மாற்றுத்திறனாளி பாஜி, ஆகாஷ், இரண்டு பொறியியல் மாணவர்களை கைது செய்துள்ளனர். தலைமறைவாக இரண்டு பேரை தேடி வரும் போலீசார் சிறுமியை வரவழைத்த ராமையும் தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 24-06-2019, 09:53 AM



Users browsing this thread: 105 Guest(s)