26-08-2024, 03:54 PM
"தம்பி, இந்த போட்டோ பாரேன், உன் மாமா குடுத்துட்டு போனாங்க"
அம்மா சொல்லவும் டிவி பார்த்துக்கொண்டிருந்த குமார் நிமிர்ந்தது தன் அம்மாவை பார்த்தான். அம்மாவை பார்த்ததும் ஒரு சிறு புன்னகை உதடோரம் வந்தது குமாருக்கு. என்ன போட்டோ தருகிறாள் அம்மா என்று புரிந்துகொண்டவன்,
" உங்களுக்கு பிடிச்சிருக்கா அம்மா" என்று கேட்டான்.
அவன் அம்மா செல்வி மிகவும் அன்பானவள், எல்லாரும் மரியாதை வைத்திருக்கும் வீட்டின் பெரியவள். 9 சகோதர சகோதரிகள் உடைய பெரிய குடும்பத்தில் 5அவதாக பிறந்து, ஏழ்மை நிலையால் மிகவும் கஷ்ட பட்ட செல்வி, தன் சொந்த உழைப்பால் தன் குடும்பத்தை நிலை உயர்த்தினாள். ஒரு ஆசிரியயாய் இருந்து ஓய்வு பெற்றவள். சிறுவயதில் இருந்து தெளிவான - சரியான முடிவெடுக்கும் இயல்புடையவளாக இருந்ததால் செல்வியின் வார்த்தைக்கு அவள் உடன்பிறப்புகள் மற்றும் சொந்தங்கள் மத்தியில் கூட மதிப்பு அதிகம்.
குமாருக்கு அம்மா என்றல் உயிர், அம்மாவுக்கோ குமார் தான் எல்லாம். மகனுக்காக்க பெண் பார்க்கும் படலம் 2 வருடங்களாக நடத்திவந்தாள் செல்வி. தன் மகனின் அன்பான பண்பான குணத்திற்கு ஏற்றாற்போல் நல்ல பெண் வேண்டும் என்று அலசி ஆராய்ந்து பார்த்து வந்தாள். இப்படி தேடிக்கொண்டு இருந்த நேரத்தில் தான் ஓவியாவின் புகைப்படம் கொடுக்கப்பட்டது அவளிடம்.
[img][/img]
அந்த புகைப்படத்தை பார்த்தவுடன் பெண்ணை பிடித்து விட்டது செல்விக்கு. தன் மகனுக்கு இவள் தான் மனைவி ஆகவேண்டும் என்று முடிவுஎடுத்துவிட்டாள். உங்களுக்கு பிடிச்சிருக்கா என்று தன் மகன் கேட்டவுடன் பெருமை கொண்டாள்செல்வி. தன் மகனிடம்
" எனக்கு புடிக்குறதுக்கு முன்னாடி உனக்கு புடிக்கணும்ல டா, நீ தான கட்டிக்கப்போற" என்று கேட்டாள்.
குமார் அம்மாவின் முகத்தை பார்த்து " அம்மா, நான் கல்யாணம் பண்ணா - ஒரு பொண்ணு மட்டும் இந்த குடும்பத்துல சேர போறது இல்ல, நம்ம குடும்பமும் இன்னொரு குடும்பமும் சேர போகுது, எனக்கு பொண்டாட்டிய வரவ, உங்களுக்கும் அப்பாகும் நல்ல மருமகளா, அதேபோல நான் அவளோட அப்பா அம்மாக்கு நல்ல மருமகனான இருக்கனும், இது தான நீங்க எனக்கு சொல்லி கொடுத்தது. அந்த போட்டோல இருக்க பொண்ணு அப்படி பட்ட பொண்ணா, அவங்க குடும்பம் எல்லாம் பாத்து தான் நீங்க எனக்கு இந்த போட்டோ கொண்டு வந்திருப்பீங்க, அதனால தான் கேட்டேன் - உங்களுக்கு ஓகே தான னு? "
இதில் இருந்தே குமார் மற்றும் அவன் அம்மா செல்வியின் குணம் வாசகர்களுக்கு புரிந்திருக்கும் என நம்புகிறேன்.
"எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு டா, நல்ல பொண்ணு, நல்ல குடும்பம், பொண்ணு B.Sc . கம்ப்யூட்டர் சயின்ஸ் பிடிச்சிருக்கா. விசாரிச்ச எல்லாரும் தங்கமான பொண்ணுன்னு சொன்னாங்க. உனக்கு நல்ல ஜோடின்னு தோணுது"
போட்டோ வாங்கி பார்த்தவன் அப்படியே போட்டோல இருந்து கண் எடுக்காம பாத்துட்டு இருந்தான். தான் இதுவரை எந்த பொண்ணையும் காதலிச்சது இல்ல, தப்பான எண்ணத்துல பாத்தது கூட இல்ல.
அவன் நண்பர்கள் "அவனை ஏன்டா இப்படி இருக்க, நீ நெனச்சா சாதாரணமா எந்த பொண்ணையும் மடிக்கலாம், நீ என்னடானா ரொம்ப நல்லவனா இருக்கணும்னு சொல்ற. நல்ல பொண்ணுங்களாம் இப்போ இல்லடா, கல்யாணம் பண்ண நம்ம கூட நல்ல இருந்த போதும்னு இருக்க காலம் டா, லைப் என்ஜோய் பண்ணு."
இப்படியெல்லாம் அவன் மனசை மாத்த முயற்சி செய்தும் கூட அவன் அம்மா சொல் கேட்டு கடைபிடிப்பவனாக இருந்தான்.
" நான் உண்மையா இருந்ததுக்கு கடவுள் என்ன கைவிடலை, ரொம்ப நன்றி கடவுளே, இவளே எனக்கு பொண்டாட்டியா வரணும் சாமி" என்று ஒரு சிறு வேண்டுதல் செய்துவிட்டு, " எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு மா" என்று தன் தாயிடம் சம்மதம் தெரிவித்தான்.

Anitha Purushan