20-08-2024, 10:03 PM
automatic spinner online
#வன_ராணி
காட்சி 8
கொல்லிமலை க்காடு
கண்மணிதேவி தோழிகளுடன்
ஆகாசகங்கை அருவி பக்கம் இயற்கை எழில் கண்டு மயங்கி
பாடுகிறாள்
கண்மணிதேவி
கொல்லிமலைச் சோலையிலே
கொஞ்சும்கிளி நானிருந்தேன்
பார்வையாலே இதயத்தை
பறித்துசென்ற மன்னவனில்
பருவமங்கை உன்னோடு
படுத்துறங்க ஆசையடா
பாவாடை தாவணியும்
பருவராகம் மீட்டுதடி
பச்சரிசி பல்லழகி
பால்நிலா முகத்தழகி
பருவத்தின் முன்னிரண்டும்
பற்றவைக்கும் நெருப்பழகி
பாலாடை என்னிதழ்கள்
பனிமலர் தேன்பொழிய
பருவத்தின் கோட்டையிலே
பறந்துவந்த அன்னமவள்
பகலிரவு உன்னோடு
படுத்தாலே பெருங்கனவு
பஞ்சணையில் நீயெனக்கு
பச்சைக்கிளி ஓர்உறவு
பருவமங்கை மேலிருக்கும்
பருவங்கள் விம்முதடா
பருவக்கொடி உன்னுடனே
படந்துவிடத் துடிக்குதடா
கண்மணிதேவி பாடி முடித்தாள்
மணிமாலா
என்னடி கண்மணி பருவம் முத்தி போச்சா
கண்மணிதேவி
ஆமாம் உனக்கு மட்டும் என்ன
சோழநாட்டு சளிமூக்கு இளவரசன் சங்கரன் போதுமே
மணிமாலா
போடி அவன் எனக்கு
பொழிலொழுகும் மங்கையுடன்
புகுந்தாடும் கள்வண்டே
எழிலோங்கும்.பெண்ணழகில்
இடம்சென்று என்னசெய்தாய்
விழியெங்கும் வனிதைமனம்
விரிவாக உரைத்திடவும்
விழியேங்கும் மன்னவனில்
விடைதேடும் என்னழகில்
கொஞ்சும்மொழி உரைப்பாயோ
கொஞ்சுமெழில் கோகிலமே
தஞ்சமென வருவாயோ
தங்கிவளர் சித்திரமே
#வன_ராணி
காட்சி 9
வஞ்சிநாட்டு அரசசபை
மன்னர்
வஞ்சிநாடான்
வரியே இல்லா வஞ்சி நாட்டில் வரிகள் போட்டு ஏய்த்தவன் யார்
உண்மை இன்றே அறிய வேண்டும்
இளவரசன் கோபம் கொண்டு குற்றமதை சொன்னதாலே
மந்திரி
மகேசுவரன்
வஞ்சிநாட்டு மன்னர் வேந்தே
வஞ்சிநாட்டில் வரிகள் இல்லை
வஞ்சகர்கள் யாரோ அந்தோ
வரிகள் போட்டார் அறியேன் நானும்
விவசாயி
வஞ்சிநாட்டில் வரிகள் போட்ட
வஞ்சகரை அறிவேன் நானும்
நின்றால் வரி நடந்தால் வரி
நீதி தவறவைத்தார் மன்னா
மந்திரியின் சூழ்ச்சியாலே
மக்களெல்லாம் துன்பம் கண்டோய்
மன்னர்
மந்திரியாரே என்ன இது
மந்திரி
மன்னா அந்தோ அறியேன் நானும்
மக்களுக்கு துன்பம் தந்தா
சொல்வதெல்லாம் பொய்கள் நூறு
சொல்வதெல்லாம் சுலபம தானே
மக்களுக்கு துன்பம் தந்தால்
மரணத்தையே தொடுவேன் நானே
வஞ்சிநாட்டு மக்கள் தன்பால்
வஞ்சகமே கொண்டேன் இல்லை
இளவரசன்
நடிப்பை கொண்டு ஆடுகின்ற
நரிகுணத்தை கொண்டாய் நீயே
வஞ்சகமாய் மக்கள் வாழ்வை
வறுமையிலே வைத்த உன்னை
வாளெடுத்து வீழ்த்தி சாய்ப்பேன்
வஞ்சகனே உன்னை பாராய்
மந்திரி
தோளில் தூக்கிவளர்த்த தம்பி
துடிப்பதென்ன என்றன் மேலே
துரோகமதை கொள்வேன் நானா
தூயதமிழர் வாழும் நாட்டில்
இளவரசன்
தோளில் இட்டால் போதுமன்றோ
துரோகம் செய்தாய் மக்களுக்கே
பந்தபாசம் இங்கே இல்லை
பாவிகளும் ஆடும் எல்லை
வஞ்சிநாட்டில் இல்லையேடா
வாழவைக்கும் வஞ்சி நாட்டில்
இராணி மலர்க்கொடி
கோபத்தையே குறைத்து நல்ல
குற்றாலமாய் மாறு மைந்தா
மந்திரியும் தந்தை போலும்
மனதினிலே நினைத்தல் நன்றாம்
குற்றசாட்டை சொன்னால் மட்டும்
குறைகளன்றோ தீரும் இல்லை
இளவரசன்
தாயை போன்ற அம்மா உன்னை
தலைவணங்கும் சேயாய் நானும்
வஞ்சிநாட்டு மக்கள் வாழ்வு
வெந்துபோன நெஞ்சம் கண்டு
சீற்றம் கொண்டேன் நெஞ்சத்தாலே
மந்திரி
எந்தன் கீழே இருப்பவனோ
ஏப்பம்விட நினைத்திருப்பான்
ஏப்பம்விட நினைத்தவனை
எட்டிபிடித்து வீழ்த்திவிட்டாய்
குற்றம் செய்த அவனைவிட்டு
குற்றம் என்னை சொன்னதென்ன
இளவரசே அமைதி கொள்க
இனியும் இல்லை வரிகள் நாட்டில்
இளவரசன்
பொய்யை சொல்லும் மூடமைந்தா
புலியாய் பாய்வேன் நீயும்பாராய்
வஞ்சிநாட்டு மக்கள் முன்னே
வாளினிலே சாய்வாய் மண்ணில்
மன்னர்
அன்பு தம்பி அமைதிக் கொள்வாய்
அதை உணர்ந்து நீதி சொல்வேன்
மந்திரி நீ நாட்டைவிட்டு
நாளையுடன் ஓடிப் போடா
#வன_ராணி
காட்சி 10
இளவரசனால் மந்திரி நாட்டைவிட்டு மன்னர் ஓட சொன்னதால்
கொதிநிலையில் மந்திரி இருக்க
ராணி மலர்க்கொடி
கொதிநிலையில் இருக்கும் உன்னை
கண்கள் கண்டு கலங்குதைய்யா
முட்டாள் அந்த மைந்தனாலே
முடிந்திடுமா நம்ம காதல்
முறியடிப்போம் கவலை வேண்டாம்
மன்னவனே நீயே வேண்டும்
மந்திரி
ஏன்டிஅடி பேதை பெண்ணே
எழுந்து ஆடும் நாகம்போல
என்னிடத்தில் ஆடிவிட்டான்
எமனெனவே நினைப்பை போலும்
ராணி
எழுந்து ஆடும் அவனையன்றோ
எழுந்து ஓட வைப்பேன் நானே
கள்ளக்காதல் கொண்ட நெஞ்சில்
கருநாகத்தில் நஞ்சே தூங்கும்
கவலையென்ன எந்தன் மன்னா
கட்டழகி நான் இருக்க
மந்திரி
கட்டழகி நீயிருக்க
கவலையில்லை எந்தன்மானே
காலமெல்லாம் நாமிருக்க
காலமது வருமோ கண்ணே
ராணி
காதலுக்கும் காலம்வரும்
கள்ளகாதல் கூடவரும்
சூழ்ச்சியாலே வீழ்த்தியானே
சுறுக்குகயிற்றில் வைப்பேன் பாராய்
மந்திரியுடன் ராணி கள்ளகாதல் சல்லபத்தில் இருக்க
ஏதெச்சையாக வந்த இளவரசன் பார்த்துவிட
மந்திரியும் ராணியும் திகைத்து போனார்கள்
மந்திரி ராணியின் அந்தபுரம் விட்டே ஓடிப்போனான்
இனி
தொடரும்