20-08-2024, 09:59 PM
#வன_ராணி
காட்சி 6
மன்னர் வஞ்சிநாடன்
வருகை
பாடல்
எங்கும் தமிழோசை
எதிலும் தமிழோசை
வாழ்க வாழ்க வாழ்க
பொங்கும் தமிழ்ப்பாட்டின்
புவியெங்கும் இன்னோசை
பாடுதம்மா என்னாசை
எழுந்தாட வாரும்மா
நனிநடம் போடுதம்மா நடமாடும் உலகமெங்கும்
குலவிளக்கை ஏற்றிவைத்தேன் கொஞ்சுதமிழ் உலகில்மின்ன
தேவாரம் தோகையாடும்
தேன்மொழியாள் நெஞ்சினிக்க புகழாரம் பாடுகிறேன்
பூங்காற்று தமிழைத்தொட்டு
கடலலையில் மீன்களெல்லாம்
கனிமொழித் தமிழ்ப்படிக்கும்
வஞ்சிநாட்டு பெண்களெல்லாம்
வண்ணத்தமிழ் தேனெடுக்கும்
தாளமிடும் மேடையொன்று
தலையாட்டி பாடுதம்மா
இசைக்கலையில் ஆடவந்த
இன்னமுது தமிழர்கூத்தில்
நானுமிங்கே ஆட வந்தேன்நாளெல்லாம் தமிழ்வளர்க்க
குலத்துதித்த ஒளிவிளக்கை
கும்பிடாத பேர்களில்லை
தமிழ்கொண்ட உள்ளமெல்லாம் தாயாகி நிற்குமுன்னால்
இன்பத்தமிழ் பாடுகிறோம்
ஏற்றிவைத்த நாடகத்தில்
மலைக்குடிகள் தானும்பாட மணவீசும் மலராய் வாவாவா
தமிழர் ஏற்றும் திருவிளக்கு தேசமெங்கும் அணைவதில்லை
பொங்கிவரும் பொங்கல்போல பொங்குத்தமிழ் குறைவதில்லை
வசனம்
காவலனே
மந்திரிசபை கூடுகிறது
அனைவரையும் அரசசபைக்கு
அழைத்து வாருங்கள்
உத்தரவு மன்னர் பெருமானே
தொடரும்
#வன_ராணி
காட்சி 7
வஞ்சிநாட்டில் அரசசபை கூடும் அதே நேரம்
கொல்லிமலை மலையக மன்னனின் குலதெய்வம்
கொல்லிப்பாவை க்கு
திருவிழா கோலகாலமாக நடக்கிறது
பூசாரி பூஜையை ஆரம்பித்து
ஆராத்தி சுற்றி விட்டு
மலையக மன்னரே
தாயை போற்றி பாடுங்கள்
மன்னர் மலையவன்
கொல்லிப்பாவை தாயை மனமுருக வணங்கி விட்டு பக்தி பொங்க பாடுகிறார்
கொல்லிமலை தாயவளாம் குலமக்கள் பொங்கலிட்டு
உறவெல்லாம் கூடிவந்து
ஊரெல்லாம் பொங்கல் வைப்போம்
எத்திக்கும் புகழ்மணக்கும்
எங்கம்மா தாயினுக்கு
பார்போற்றும் நாளையில. பச்சரிசி
பொங்கல்வைப்போம்
மூவுலக தாயவளாம்
முன்னோடி தேவியம்மா
கொண்டாடும் நாளையிலே
கொல்லிப்பாவை சரணடைவோம்
மார்தன்னில் சடைபுரளும் மாலவனின் தங்கையம்மா
சொக்கனுக்கு சொத்தான
சுந்தரியை போற்றிடுவோம்
கண்ணுக்குள் உலகத்தை காட்டுகிற தேவியம்மா
சுழன்றோடும் பூமியிலே
சுழிபோட்ட பாவையம்மா
அழியாத மலையரசிக்கு
அன்பாலே பொங்கலிட்டு
மரத்தடியாய் இருந்தாலும்
மறுக்காமல் பொங்கல்வைப்போம்
எங்கள்குலத் தாயவளாம்
என்னுலக ஒளிவிளக்கே
பொன்னழகே பூவழகே
பூக்காட்டு மணத்தழகே
ஊரெல்லாம் அழைக்கையிலே
உறவாடும் பொக்கிசமே
உன்முகத்தைப் பாரக்கையில
ஊனுறக்கம் மறந்ததம்மா
உலகாளும் தாயவளாம்
உமையவளின் அம்சமவள்
மூச்சுவிடும் இடமெல்லாம்
முத்தமிடும் தேவியம்மா
முத்துமுத்துப் புன்னகையில்
முன்னோடி தேவிவர
முன்னோர்கள் தவமனைத்தும்
முன்னின்று வாழ்த்திடுமே
கொல்லிப்பாவை வருகையிலே
கோதையர்கள் கூடியெழில்
வாசலிலே பொங்கலிட்டு
வரவேற்ப்போம் உன்னையம்மா
தாயே போற்றி
மலையவன் பாடி முடிக்க
பூசாரி
இந்தமுறை கன்னி பெண்கள் சூழ்ந்து
கும்மி பாடல் பாடவேண்டும்
முதல் பாடல்
இளவரசி கண்மணிதேவி
ஆரம்பித்து தர
இளவரசியை அழைக்கிறேன்
இளவரசி மணிமாலா ரத்னாவுடன் இன்னும்பல கன்னி பெண்கள் சூழ
கும்மியிட தயாராக நின்றனர்
இளவரசி
பாடுகிறாள்
கும்மியடி பெண்ணே கும்மியடி கைவளை மலர்குலுங்க
கொஞ்சு தமிழ்ப் பாடலிட்டு
கொல்லிப்பாவை தொழுது நல்ல
கும்மியடிப்போமே கும்மியடி
மணிமாலா
மேற்கால ஆலமரம் நிழலிலே
மேருமலை எல்லை நிற்கும் குலதெய்வம் துணை வேணுமின்னு கொல்லிப்பாவை பேரைச் சொல்லி
கும்மியடிப்போமே கும்மியடி
ரத்னா
கொல்லிமலை தங்கக் கோட்டை கொல்லிப்பாவை பொற் கலையாம்
சந்தம் சொல்லிப் பாடிடுவோம் சோலைக் கிளிப் பாட்டுக்குள்ளே
கும்மியடிப்போமே கும்மியடி
இளவரசி
ஆடுமாடு கண்ணு நின்னு அழகயழகா செழிக்க வேணும்
கொல்லிப்பாவை முன்னே நின்னு
குடும்பம் எல்லாம் காக்கசொல்லி
கும்மியடிப்போமே கும்மியடி
மணிமாலா
பொன் விளைஞ்ச பூமியில
புள்ளகுட்டி சொந்தம் எல்லாம்
உள்ளங் குளிர்ந்திட வாழ்ந்திடவே
உதவ வேணும் கொல்லிப்பாவை
கும்மியடிப்போமே கும்மியடி
ரத்னா
குங்குமப் பொட்டுப் பளபளக்க
கோமள மஞ்ச மினுமினுக்க
கொண்டையில பூ மணக்க
கோதையர்கள் கூடி யெழில்
கும்மியடிப்போமே கும்மியடி
இளவரசி
சந்தனமும் குங்குமமும் நெற்றியிட்டு
சடையிலே சண்பகப் பூமணக்க
கண்ணுக்குள் சின்ன சேலாட
கொல்லிப்பாவை சுற்றி வந்து
கும்மியடிப்போமே கும்மியடி
மணிமாலா
தளிர்கொடி இடை புரள
தந்தனம் தந்தனம் என்றாட
தாமரைப் பூந்தனம் சேர்ந்தாட தமிழ்கொஞ்சி கொஞ்சி விளையாட
கும்மியடிப்போமே கும்மியடி
ரத்னா
அஞ்சு சடை தோள்புரள
அஞ்சுவிரல் செங்கை மலர்
முன்கையில் முந்தி வரும்
முத்துவளை சந்தம் வர
கும்மியடிப்போமே கும்மியடி
இளவரசி
சின்ன விரல் வித்தையிலே செல்வ நல்ல மோதிரமாம்
தோள்களில் மாணிக்க கல் தோகையவள் அழகு தோரணமாம்
கும்மியடிப்போமே கும்மியடி
மணிமாலா
காது மடல் ரத்தினமாம்
கதை சொல்லிப் பாடிவர
கொல்லிப்பாவை வாசலிலே கோல மயில் ஆயிரமாம்
கும்மியடிப்போமே கும்மியடி
இளவரசி
குலம்வாழ நலம் தந்தவளை கொல்லிமலை குடி கொண்டவளை குலதெய்வம் தாயே என்று
கண்ணிரண்டில் வைத்து நல்ல
கும்மியடிப்போமே கும்மியடி
ஓம் கொல்லிப்பாவை தாயே போற்றி போற்றி
அதன்பிறகு
நடனங்கள் விருந்துகள்
கோலகலமாக நடந்து முடிந்தது
தொடரும்