Poll: உங்களுக்கு பிடித்த நடிகை யார்?
You do not have permission to vote in this poll.
Anushka Shetty
9.58%
41 9.58%
Kajal Aggarwal
7.24%
31 7.24%
Nayan Thara
7.48%
32 7.48%
Kiara Advani
3.04%
13 3.04%
Rakul Preet Singh
3.74%
16 3.74%
Indhuja
4.67%
20 4.67%
Pooja Hedge
3.74%
16 3.74%
Sridivya
4.67%
20 4.67%
Samantha Ruth Prabhu
6.07%
26 6.07%
Priya Bhavani Shankar
8.88%
38 8.88%
Shruthi Hassan
3.97%
17 3.97%
Manju Warrier
3.27%
14 3.27%
Priya Anand
5.37%
23 5.37%
Andrea
2.34%
10 2.34%
Rai lakshmi
2.80%
12 2.80%
Vedhika
2.57%
11 2.57%
Trisha Krishnan
5.14%
22 5.14%
Kavya Madhavan
3.74%
16 3.74%
Anupama
4.91%
21 4.91%
Regina Cassandra
6.78%
29 6.78%
Total 428 vote(s) 100%
* You voted for this item. [Show Results]

Thriller வனரானி கிராமிய நாடக தொடர்
#94
#வன_ராணி

காட்சி 4

கொல்லிமலை காட்டில் தனியாக நடக்கும்
கண்மணிதேவி
பார்வை இளவரசன் மேலேயே வர
கவின்மொழிவர்மன்
இளவரசி பார்வையில் நகைத்தான்
என்ன தேவியாரே முகத்தில் வழியுது
அதுவா காதல் தேனருவி
இளவரசன் புன்னகைத்தான்

பாடல்

கண்மணிதேவி

உள்ளம்தந்த உணர்வாலே நான் பாடுவேன்
உறங்குமின்ப உலகமொன்றை நான் காட்டுவேன்
இல்லமென்னும் இதயக்கோயில் நான் ஏறியே
இன்பமென்னும் காதல் தேரில் நானாடவா

கவிமொழிவர்மன்

கண்மணிப் பறவையே நான் பாடவா கனியிதழை பனிமலரில் நான் தேடவா
கண்ணசைவில் காதலெனும் தேர் ஓட்டவா
கண்மணியுன் கலையழகை நான் பாடவா

கண்மணிதேவி

மாலை வந்த தென்றலவன் தீண்ட கண்டேன்
மலர்ந்து விட்ட மலராக உன்னில் நின்றேன்
நாளை உந்தன் உறவையெண்ணி நின்று
நெஞ்சில் புது உணர்வலைகள் பொங்க கண்டேன்

ஆண்

மல்லிமலர்க் கூந்தலிலே வண்டு போல
மதுவருந்தி பாடுகிறேன் அழகே உன்னால்
அசைகின்ற அல்லிமலர் தண்டு போல
ஆடுதடி இடையழகு என்னைச் சுற்றி

இருவரும் தனிமை உணர்வில் காதல் பொங்க பாடிக்கொண்டும்
சீண்டிக் கொண்டும் காட்டுவழியாக வந்தவர்கள்

மலையமன் வசிக்கும்
கொல்லிப்பாவை கோட்டை
வந்தடைந்தார்கள்
கொல்லிப்பாவை கோட்டை பெயர் தான்
கொல்லிப்பாவை அம்மன்கோவில் நடுவே இருக்க
சுற்றிலும் மலைவாசி குடிசை வீடுகள் தான்
மலையமன் வீடுமட்டும்
மூங்கிலால் ஆன கலை வேலைபாடுகள் அமைத்து பிரமண்டமாக கட்டபட்டிருந்தன

தூரத்தில் கண்மணிதேவி இளவரசனுடன் வருவதை கண்டு

மணிமாலா ரத்னா இருவரும் ஓடிப்போய் மகிழ்ச்சி பொங்க
இளவரசே வருக வருக

கவிமொழிவர்மன் புன்னகையுடன்
வரவேற்பை ஏற்றான்

ஆராவரம் கேட்டு மலையமன்
வெளியே வந்தார்

கண்மணிதேவி

தந்தையே இவர்

மலையமன்

கையமர்த்தினார் கண்மணி சொல்ல தேவையில்லை
வஞ்சிநாட்டு இளவரசன் கவிமொழிவர்மன் தான்
உங்க காதல் மணிமாலா சொல்லி விட்டாள்

கண்மணி மணிமாலா வை முறைத்தாள்

மணிமாலா நமுட்டு சிரிப்பை உதிர்த்தாள்

இளவரசே அமருங்கள்

இருக்கட்டும் மன்னரே

மன்னரா நானா அதெல்லாம் இல்லையே மலைகிராம மக்களை ஏதோ வாழ வைக்கிறேன் அவ்வளவே

இளவரசே வஞ்சி நாட்டு மக்கள் எப்படி வாழ்கிறார்கள்

வஞ்சிநாட்டு மக்களுக்கு என்னகுறை முப்போகம் விளைகிறது
வளத்துக்கு பஞ்சமில்லை

மலையமன் கடகடவென சிரித்தார்

ஏன் சிரிக்கிறீர்கள் மாமா

இளவரசே சிரிக்காம

வஞ்சிநாட்டு மன்னனோ
அந்தபுரம் அரண்மனை மட்டுமே சுற்றிவரத் தெரியும்
இளவரசே நீரும் மலையரசி கண்மணியை சுற்றிவரத் தெரியும்
ஆனா பொதுமக்கள் நலனை காண சுற்றி பார்க்க தெரியாதா

மாமா அதுக்கு மந்திரி மற்றும் கிராம மணியம் இருக்காரே

மலையமன் மறுபடியும் சிரித்தா.ர்

இளவரசே பொதுமக்கள் நலனை திருடர்கள் கையில் கொடுத்துவிட்டு குறட்டை விட்டா இப்படி தான்
வஞ்சிநாட்டு மக்கள் வரியே கட்ட தேவையில்லை மன்னர் அறிவிப்பு
ஆனா வஞ்சிநாட்டு மக்கள் வரி கட்டியே ஆகவேண்டும்
மந்திரியின் அடாவடி அறிவிப்பு

மாமா இதென்ன புதுசா இருக்கு மக்கள் வரிகட்டவே தேவையில்லை கஜனா நிரம்பிதான் இருக்கு

இளவரசே வஞ்சிநாட்டு கஜனா மந்திரியிடம் தான் நிரம்பி வழிகிறது
பொதுமக்கள் உழைப்பு எல்லாமே மந்திரியின் ஆட்களால் அபரிகரிக்க படுகிறது

இதெல்லாம் தாங்களுக்கு

எப்படி தெரியும்னு கேக்கிறீரா இளவரசே
மலையமன் கைகளை தட்டினார்

வந்து நின்ற கூட்டத்தாரை கண்டு திகைத்தான் இளவரசன்
கூட்டத்தில் தன்னோட நண்பனும் இருக்க
ஏய் கார்கோடா இங்கே எப்படி

இளவரசே மந்திரியின் ஆட்கள் அராஜகம் தாங்கவில்லை
மக்களிடம் விளையும் அனைத்தையும் வரி என பிடுங்கி கொள்கிறது மந்திரியின் ஆட்கள் இதை மன்னரிடம் முறையீடவும் மந்திரியின் ஆட்களே வாசலிலேயே விரட்டி விடுகிறார்கள்
நானே தனித்து அவர்களை எதிர்த்ததால் மந்திரி என் குடும்பம் மொத்ததையும் கொல்ல ஆட்கள் துரத்த உயிர்தப்பி இங்கே தஞ்சமடைந்தோம்

இளவரசன் ரத்தம் கொதித்தது
அடேய் மந்திரி பதரே உன்னை என்ன செய்கிறேன் பார் ஆவேசமானான்

இளவரசே அமைதி கொள்க
முதலில் மக்களை சந்தித்து குறைகளை போக்கு அதன்பிறகு மந்திரியின் ஆட்டத்தை நிறுத்த முயற்சி செய் மந்திரியின் ஆட்டம் அதிகமானால்
கண்மணிதேவி தோழிகளுடனும் மலையக படையும் கொங்குநாட்டு படையும் ஓடிவரும்
விரைந்து செல்க

இளவரசன் கண்மணியை பார்க்க
இளவரசே விரைந்து செல்க
கண்மணி கைகளை தட்டினாள்
காட்டுபுறா பறந்து வந்து கண்மணி தோளில் அமர்ந்தது
ஏய் கொல்லிமலரே இளவரசர் கூடவே போ இளவரசருக்கு ஆபத்தென்றால் சேதி சொல்ல விரைந்துவருக
கொல்லிபுறா பறந்து இளவரசன் தோளில் அமர்ந்தது
குதிரையை தட்டினான் ஆவேசத்துடன்
வஞ்சிநாட்டை நோக்கி

தொடரும்

[Image: 1b5210200426083875ad8269587491a5.jpg]

#வன_ராணி

காட்சி 5

வஞ்சிநாட்டு
கிராமத்தில் விவசாயி

பாடல்

பாடுபட்டு உழைச்சதெல்லாம்
பாவிகளுக்கே போச்சுதைய்யா
கஞ்சிக்கே வழியுமின்றி
கண்ணீரில் அலையுறோமே

அடாவடி ஆட்சி யாலே
அந்தோ நாங்கள்
என்ன செய்வோம்
ஐயோ உடல் பசியெடுக்க
அலையுதைய்யோ என்முயிரே

வியர்வை இட்டு வைத்தபயிர்
வஞ்சகரின் கையில் போச்சே
சாமத்திலும் காத்த பயிர்
சாவியாகிப் போச்சுதையா

கோவிலான குடும்பம் இன்று
குப்பை மேலே வாழ்வதென்ன
கொற்றவனின் கொடுமை யாலே
கைகொடுக்க யாரும் இல்லை

வசனம்

என்ன இந்த ஆட்சி ஐயோ
வரியும் இல்லை ஏதும் இல்லை அரசசபை திட்டம் வைத்தும்
அந்தவரி இந்தவரி இருப்பதையும் பிடுங்குகிறார்
தட்டிகேக்க யாருமில்லை யா
புலம்புகிறார்
விவசாயி

ஊருக்குள் குதிரைகளின் குளம்படி சத்தம்
மந்திரியின் ஆட்கள்
சாட்டையை சுழற்றிக் கொண்டு
ஊருக்குள் வந்தன

இன்று ம் வரிகட்டனும்
மந்திரியின் கையாள் அறிவிக்க

என்ன கொடுமை இது
போன வாரம் தானே விளைச்சலில் பாதியை வரியாக வாங்கினீர்கள்
மறுபடி என்னவரி

விளைச்சலில் பாதியை தான் கொடுத்தீர்கள்
மீதியையும் கொடுத்து விடுங்கள்

இதென்ன அநியாயமா இருக்கு மன்னரா சொன்னார்

ஏய் எவன் சொன்னா என்ன
வரிகட்ட போறாயா

முடியாது மன்னரிடம் முறையீடுவோம்

மண்ணாங்கட்டி மன்னராவது
எங்க மந்திரிதான் மன்னன்
டேய் வீட்டில் போய்
இருப்பதை அள்ளிட்டு வாங்கடா
வீரர்கள் உள்ளே நுழைய முய்ல
நிறுத்துங்கள்
கர்ஜனைக் குரல்

திரும்பி பார்க்க
இளவரசன் குதிரையில் இருந்து குதித்தான்
மந்திரி கையாள் முன் வந்து நின்றான்

என்ன உங்களை மக்கள் பாதுகாப்புக்கு வைத்தா
மக்களிடம் கொள்ளையீடும் திருடர்களாக மாறிவிட்டீர்களா

இளவரசே நாங்க ஒன்னும் திருடலை மன்னர் உத்தரவு அதன்படி நடக்கிறோம்

மன்னர் உத்தரவா என் அண்ணா எப்போது உத்தரவிட்டார்
உத்தரவைக் காட்டு

அதெல்லாம் உனக்கெதற்கு சும்மா இளவரசன் தான்
நாங்க படை வீரர்கள் இதில் நீ தலையீட முடியாது
டேய் என்னடா பார்த்திருக்கிறீர்கள் போய் அள்ளிட்டு வாங்கடா

விவசாயி குடிசைக்குள் நுழைய முயன்ற நான்கைந்து வீரகளின் தலைகள் இளவரசனின் வாள்வீச்சால்
அந்தரத்தில் பறந்தன
மந்திரியின் கையாள் விக்கித்து போய் பயந்தான்
உயிர்தப்ப குதிரையை தட்டி விட்டான் ஆனாலும் பயனில்லை
இளவரசன் வீசிய குறுவாள் கையாளின் கழுத்தை தைத்தன

விவசாயிகள்
இளவரசனை வணங்கினார்கள்

எதற்காகவும் யாருக்காகவும் எதையும் தராதீர்கள்
உங்களிடம் அபகரிக்கபட்ட அனைத்தையும் திருப்பிவிட உத்தரவிடுகிறேன்

அரண்மனை கஜனா அதிகாரிகளுக்கு மந்திரி ஆட்களால் பிடுங்கபட்ட அனைத்தும் விவசாயிகளுக்கே திருப்பியளிக்க உத்தரவிட்டான்
இளவரசன்
மந்திரியின் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் முடிவுடன்

தொடரும்
[+] 1 user Likes krishkj's post
Like Reply


Messages In This Thread
RE: கனவே நிஜமாகு நிறைவு பெற்றது... வனரானி தொடர் தொடங்கப்பட்டது - by krishkj - 20-08-2024, 09:56 PM



Users browsing this thread: 4 Guest(s)