20-08-2024, 09:54 PM
#வன_ராணி
தொடர் 1
கட்டியக்காரன் வருகை
ஆலால தோப்புக்குளே
ஆலால கண்டனவன்
நாடக மேடையிலே
நடத்தவரார் பாருங்கையா
ஆட்டிவைச்ச சிவனுக்கு
ஆடாத பேர்களில்லை
சலங்கையிட்ட கால்களுக்கு
சாயாத பேர்களில்லை
சிவனோட காலடிக்கு
செந்தமிழே பூச்சொரியும்
நாராயணன் கோவிலிலும்
நல்லமுதம் பூச்சொரியும்
ஊருக்குள்ள நாடகமாம் உனக்கொரு காவலுக்கு
நாதியில்ல மக்களுக்கு
நடமாடும் நாடகமாம்
கலங்குகின்ற மக்களுக்கு
கவலைமறக்க நாடகமாம்
கழனியிலே கைகொடுக்க
கங்கைநதி அத்தனையும்
நட்சத்திரம் அத்தனையும்
நாயகனை சுற்றிவரும்
கலைகளின் வெகுமதியாம்
கலைமகளின் நாடகமாம்
வசனம்
நாடகம் காணவந்த பெரியோரே தாய்மாரே சிறியோரே குறும்போரே
நடத்துகிற நாடகமாம் நாயகனால் நடத்துவதாம்
வஞ்சிநாட்டு மன்னன் வஞ்சக வலையில் வீழ்ந்து அழிய போகும் நிலை கண்டு வஞ்சிநாட்டு இளவரசன் வஞ்சிநாட்டை மீட்க தன்னோட மலைநாட்டு காதலி உதவியுடன் நாடகம் தொடர்கிறது
அனைவரும் குறட்டை விடாமல் கைபேசி கெட்டியா பிடிச்சிட்டு நாடகம் பார்க்க வேணும்
பராக் பராக் பராக்
கட்டியக்காரன் பாடல்
கொப்பரை ஏந்தி
கஞ்சிகுடிப்பது அந்தகாலம்
கையையே ஏந்தி
கஞ்சிகேட்பது இந்தக்காலம்
பாதசாரியா நடந்து போனது அந்தகாலம்
பாட்டிவீட்டுக்கு ஏரோப்ளான் போவது இந்த காலம்
இட்லிமூடிய அடுப்பில வைத்தது அந்த காலம்
இல்லிமூடிய பொண்ணுங்க போடுவது இந்த காலம்
வசனம்
தாளக்காரர்
யோவ் இட்லி மூடி இட்லி சுடத்தான்
பொண்ணுங்க எங்கே மூடுவாங்க
அதுவா இது தான் பிராவை காட்டுகிறார்
கூட்டமே கொல்லென்று சிரிக்கிறது
யோவ் இது இட்லி மூடியா
ஆமா அப்படிதான் தெரியுது
இட்லி போல தானே இருக்கு
அடபாவி சந்தடி சாக்கில் சொல்றியா இருடா வர்றேன் சாட்டையை எடுக்க கட்டியக்காரன் தப்பி ஓடுகிறான் காட்சி முடிந்தது அடுத்து
தொடரும்
#வன_ராணி
காட்சி 2
இடம் கொல்லிமலை
மலையக மன்னன் மகளான கண்மணிதேவி தோழிகளுடன் இயற்கை எழில் கொஞ்சும் காட்டில் விளையாட
பாடல்
கண்மணிதேவி
கொல்லிமலைச் சாரலிலே
கொட்டுமழைத் தூறலிலே
இயற்கையெழில் பாராடி
இறைவன் செயல் தானடி
பாராய் பாராய் தோழியாரே
தோழி மணிமாலா
வண்ண வண்ண பூக்களங்கெ
வண்டு சுற்றும் கோலமடி
எந்தன் மன ஓட்டமெல்லாம்
என்மாமன் மேலே சுற்றுதடி
கண்மணிதேவி
காட்டுமுயல் கூட்டமெல்லாம்
காலுரசி ஓடுதடி
செயற்கையுடன் இயற்கையுமே சேர்ந்து விளையாடுதடி
கட்டழகி எண்ணமெல்லாம்
கவிவர்மனை தேடுதடி
தோழி ரத்னா
அணிலினங்கள் ஒன்றோடொன்று
ஆனந்தமாய் விளையாடவே
ஆசைமனம் வானிலேறி
ஆனந்தமாய் பறக்குதடி
கண்மணிதேவி
சோடிக்கிளி ஆட்டமே
சுகபோக வாழ்வினிலே
தோகைமயில் கூட்டமே
தோகையவள் மேனியிலே
லாலாலாலாலா
வசனம்
மணிமாலா
கண்மணி தோழியாரே
ஆகாச கங்கை ஆற்றில்
நீந்திகளிப்போமா தோழி
கண்மணிதேவி
நீந்திகளிப்போமே தோழி
நாணம் ஏதாடி தோழி
ஆற்றில் இறங்குவோம் தோழியாரே
பாடல்
கண்மணிதேவி
பாவாடை மேலுயர்த்தி
பருவத்தை மூடிகட்டி
ஆத்தோரம் இறங்குங்கடி
அலையடிக்க நீந்திடவே
ரத்னா
ஆத்தோர நீச்சலிலே
ஆனந்தம் பொங்குதடி
மீன்கூட்டம் பருவங்கொத்தி
மோகத்தை தூவுதடி
மணிமாலா
துள்ளாட்ட நீச்சலிலே
தனைமறந்து போகையிலே
பார்வையோடு மேய்கிறதே
பார்த்திருக்கும் யாரவனோ
வசனம்
கண்மணிதேவி திடுக்கிட்டாள்
மணிமாலா யார் நம்மை பார்ப்பது
கண்மணி அக்கரையில் பாரு மரத்துக்கு பின்னால்
கண்மணி பார்த்தாள்
தன்னை பார்த்து புன்னகைக்கும் முகத்தை கண்டு
நாணத்துடன் தோழிகளுடன்
கரையேறினாள்
கண்மணி தேவி
தொடரும்
#வன_ராணி
காட்சி 3
கண்மணிதேவி நாணம் கொண்ட வேளை கண்மணிதேவியின்
ஆபத்துதவிகளான மலைநாட்டு வீரர்கள்
கண்மணிதேவி குளிப்பதை பார்த்த இளைஞனை சுற்றி வளைத்தன
பார்த்திருந்த இளைஞனும் அசர வில்லை
சுற்றி வளைத்தவர்களை
சுழன்றடித்து பந்தாடினான்
கண்மணி ஆபத்துதவிகள் கண்மணி நோக்கி கூக்குரல் எழுப்பின
இளவரசே நிறுத்துங்கள் என் பாதுகாப்புக்கு வந்தவர்களை இப்படியா தாக்குவது
மலையரசி நானாக வம்புக்கு போகலையே
போகலை தான் இவர்கள் என் பாதுகாப்பாளர்கள் என தெரிந்தே விளையாடுகிறீர் இளவரசே
இவங்க இல்லைனா நான் காட்டில் சுதந்திரமாக நடமாட முடியுமா
கண்மணிதேவியின் ஆபத்துதவி தலைவர்
இளவரசி இவர் யாரும்மா வீரம்மிக்க எங்களையே பந்தாடி விட்டார் இவரை தெரியுமா
தெரியுமாவா இவர் வஞ்சிநாட்டு இளவரசர் மலையரசி அழகில் மயங்கி ஓடிவரும் பைத்தியம்
அம்மா இளவரசி வஞ்சிநாட்டு இளவரசரா இவர்
ஐயகோ தவறினை செய்திட்டேனே
இளவரசே தாங்களை யார் என அறியாமல் பிழை செய்துவிட்டேன்
அதெல்லாம் ஒன்றுமில்லை தளபதியாரே கண்மணி பாதுகாப்பாளர் என தெரிந்தும் சும்மா லேசான தாக்குதல் தான் நடத்தினேன் யாரையும் காயப்படுத்த வில்லை
இளவரசே நானறிவேன் பொம்மை தாக்குதலிலேயே என்படை திகைத்து போனதை
எங்க பாதுகாப்பைவிட இளவரசி உங்க பாதுகாப்பில் நலமா இருப்பார்
அதை கேட்ட இளவரசன் பலமாக சிரித்தான்
தளபதியாரே உங்க பாதுகாப்பு இளவரசி க்கு அவசியமே இல்லை
இளவரசி வேலுநாச்சி போன்ற வீர மங்கை நான்கூட இவரிடம் தோற்றுதான் போவேன்
பெண்மையின் வீரம் மகத்தான து தளபதியாரே
நன்றி இளவரசே
நாங்க
இளவரசி கண்மணிதேவி
நான் இளவரசனுடன் தனிமையில் பேச வேண்டும்
உத்தரவு இளவரசி நகர்ந்து போகிறோம்
கண்மணிதேவி தோழிகளை பார்க்க
குறிப்புணர்ந்து தோழிகளும் நகர்ந்து சென்றார்கள்
என்ன இளவரசே பெண்கள் குளிக்கும் இடத்திலா மறைந்திருந்து பார்ப்பது
கண்மணி நான் வந்த நோக்கம் வேறு உன்னைதேடி வர ஆற்றில் குளிக்கும் உன்னழகில் மயங்கி நின்றுவிட்டேன்
அவ்வளவே
கண்மணியும் யோசித்தாள் தன்னைதவீர வேறு பெண்ணை எதற்காகவும் பார்க்காத இளவரசன் தன்னை பார்வையால் மேய்ந்ததை மணிமாலா தவறாக புரிந்து கொண்டதை
உன்னைபற்றி எனக்கு தெரியாதா இளவரசே
அவசரமா தேடிவந்த நோக்கம் என்ன
இளவரசன் கண்மணிதேவியிட ம் சொன்னான்
கண்மணி யோசித்தாள்
இளவரசே இப்பிரச்சினைக்கு
மலையக மன்னர் அப்பா ஆலோசனை இன்றி ஏதும் செய்ய இயலாது அப்பாவுக்கு நாம் காதல் தெரியும் தன்னோட வருங்கால மருமகனுக்காக எதையும் செய்வார் வா போகலாம்
கொல்லிப்பாவை கோட்டை
தொடரும்