17-08-2024, 07:35 PM
தேடித் தேடி களைத்துப் போய் ஒரு நாள் பீச்சுக்கு சென்று தனியாக உட்கார்ந்து என் நிலைமையை எண்ணி அழுதேன். என் குழந்தை எங்கே? யாரிடம் இருக்கு? இருக்கிறதா, அல்லது செத்துவிட்டதா? ஐயோ!! ஒன்றுமே புரியவில்லை. தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழி இல்லை என்று முடிவு செய்து, கடலுக்குள் இறங்கி நடந்தேன்.
மயக்கம் தெளிந்து கண் விழித்து பார்த்தால் என்னை சுற்றி அடையாளம் தெரியாத பல புது முகங்கள்.
அட!!, நான் சாகவில்லையா? என்ன கொடுமை இது?!! இன்னும் என்னவெல்லாம் அனுபவிக்கனும்னு கடவுள் எழுதி வச்சிருக்கானோ? சாகப் போனால் கூட சாக முடியவில்லை என்று நினைத்துகொண்டு, கண்ணீர் விட்டபோது, "மல்லிகா" என்று யாரோ அழைக்க, திரும்பிப் பார்த்த்தேன்.
திரும்பிப் பார்த்தால்,….. பத்மா.
பத்மா கண்ணீரோடு நின்றிருந்தாள். அவளை கண்டதும் அதுவரை அடக்கி இருந்த துயரத்தை, துக்கத்தை இயலாமையை,ஏமாற்றத்தை,…எல்லாம் சேர்த்து 'ஓ'வென்று அழுது, கொட்டி தீர்த்தேன். "பத்மா பாத்தியா எனக்கு வந்த நிலைமையை.?..இந்த மாதிரி நிலைமை, என் எதிரிக்கு கூட வரக்கூடாது" என்று கத்தி, கதறி அழுதேன்.
நான் இருந்தது ஒரு மருத்துவமனை.
பத்மா தான் கடலில் மிதந்து கரை ஒதுங்கிய என்னை காப்பாற்ற உதவி செய்து, மருத்துவமனையிலும் சேர்த்து பார்த்து கொண்டாள். மருத்துவமனைக்கு பணம் கட்டியதும் அவள்தான்.
நான் நார்மலுக்கு வந்த்தும், என்னை தைரியப் படுத்தி அவள் வீட்டுக்கு என்னை அழைத்து சென்றாள்.
நடந்ததை எல்லாம் அவளிடம் சொல்லி கதறி அழுதேன்.
ஒரு வாரத்துக்குப் பிறகு பத்மாவையும் கூட்டிக்கொண்டு, முன்பு குடி இருந்த வீட்டுக்கு சென்றேன்.
அங்கிருந்த ஒருவர் தான் என் தம்பி வந்து போன விஷயத்தை சொன்னார்கள். திரும்பவும் அவன் வந்தால்,… இந்த அட்ரஸில் வந்து பார்க்கச் சொல்லுங்கள் என்று சொல்லி ஒரு பேப்பரில் பத்மா வீட்டு அட்ரஸ் எழுதி கொடுத்துவிட்டு வந்தேன்.
அடுத்த வாரத்திலேயே, என் தம்பி நான் தங்கி இருந்த பத்மா வீட்டுக்கு வந்தான்.
அம்மாவுக்கு உடல் நிலை ரொம்ப மோசமாகி விட்டதை பற்றியும், அப்பா குடித்து குடித்து, தன்னையே அழித்து கொள்வதையும், வீட்டின் நிலைமையே மோசமாகி விட்டதையும் வருத்தத்தோடு சொன்னான்.
என் குழந்தை என் அம்மா வீட்டில் தான் இருக்கிறது என்ற விஷயத்தை அவன் சொன்னதும் தான் எனக்கு ஒரு தெம்பு வந்தது.
இனி குழந்தைக்காக வாழ வேண்டும் என முடிவெடுத்தேன்.
"அக்கா,நீ கஷ்டப்பட்டது போதும் அக்கா, ஊருக்கே வந்துடு. அப்பா,அம்மா பழசை எல்லாம் மறந்திட்டாங்க. நம்ம குடும்பத்தை கவனிக்க ஆளே இல்லை. அப்பாவும் ஒரு நடைப் பிணமாதான் வாழ்ந்திட்டு இருக்கார். தங்கச்சி சரியா படிக்கிறதில்லை. நீ அங்கே வந்துட்டீன்னா எல்லாம் சரியா போயடும்கா. ப்ளீஸ் வாக்கா" என்று அழைத்த என் தம்பியின் முகத்தை அன்புடனும், பாசத்துடனும் பார்த்துக்கொண்டிருந்தபோது, பத்மா என் அருகில் வந்து, "உன் தம்பி சொல்றதும் சரிதான். உன் வீட்டுக்கே போயிடு மல்லிகா, நீ தனியா இங்கே இருந்து இனிமே கஷ்டப்பட வேண்டாம். உன் குழந்தையை நல்லா படிக்க வை. அது, நீ உன் ஊருக்கு போனாதான் முடியும்" என்று சொன்னதும், நன்றாக யோசித்து பார்த்த பின் வீட்டுக்கு செல்ல முடிவெடுத்தேன்.
என்னைக் காப்பாற்றி, வாழ்வில் ஒளி ஏற்றிய பத்மாவுக்கு ஆயிரம் நன்றி சொல்லி விட்டு, நான் என் தம்பியுடன் என் ஊருக்கு சென்றேன்.
ஊருக்குள் காலடி எடுத்து வைத்து, அந்த சுதந்திரமான இயற்கை காற்றை சுவாசித்தபோது,என் சிறு வயது நினைவுகள் மனத் திரையில் வந்து போனது.
ஊரே மாறிப் போய் இருந்தது. வீட்டை நெருங்கும் போது நான் பிறந்து வளர்ந்த வீட்டைப் பார்த்தேன். பராமரிப்பின்றி பாழடைந்து கிடந்தது. வீட்டுக்குள் நுழைந்தால், அப்பா அங்கு இல்லை, அம்மா மட்டும் வீட்டின் ஓரத்தில் கன்னங்கள் குழி விழுந்து, கண்கள் சுருங்கிப் போய், வற்றிப்போன உடலுடன், கிழிந்த நாராய் கயிற்றுக் கட்டிலில் படுத்திருக்க, அருகில் சென்று அவளைப் பார்த்த நான் துக்கம் தாளாமல் அழுதுவிட்டேன்.
என்னை தேற்றிய என் தம்பி அம்மாவின் அருகில் சென்று "அம்மா,யார் வந்திருக்கா பாரேன்" என்று சொன்னதும், வந்திருப்பது யார் என்று தெரிந்து கொள்ளும் விதமாக, கண்களை சுறுக்கி பார்த்தவள், வந்திருப்பது தன் பாசத்திற்குரிய மூத்த மகள் என்று தெரிந்ததும், கண்களில் கண்ணீர் வடிய எழ முயற்சி செய்து, என் கைகளைப் பற்றி "மல்லிகா, இத்தனை நாள் எங்கேம்மா போய் இருந்தே?!! எங்களை எல்லாம் மறந்திட்டு போயிட்டியம்மா!! இப்பதான் இந்த வீட்டுக்கு வழி தெரிஞ்சுதா?!! பாத்தியா நம்ம வீடு இருக்கிற நிலைமையை" என்று ஈனக்குரலில் அழுது, விசும்பி, சில நிமிடங்கள் கழித்து, கண்ணீரை துடைத்துக்கொண்டு, சந்தஓஷத்தை முகத்தில் காட்டி, "இனிமே நீ இங்கதான் இருக்கணும். உன் குழந்தையை, உன் தங்கச்சி கோவிலுக்கு கொண்டுபோய் இருக்கா. இப்ப வந்திடுவா. போ. பசியோட வந்திருப்பே. உள்ளே போய் சாப்பிடு" என்று பரிவுடன் சொன்னாள் தாய்.
என் புது வாழ்க்கையை என் வீட்டில் ஆரம்பித்தேன். அப்பா தான் குடியை மறக்க சிரமப் பட்டார்.
4 வருடங்கள் ஓடிவிட்டது.
வீட்டில் நான், என் குழந்தை, என் அப்பா, தம்பி, தங்கை மட்டும் இருந்தோம். விட்ட படிப்பை தொடர்ந்து படித்து, பக்கத்து பிரைவேட் எலிமெண்டரி ஸ்கூலில், டீச்சர் ஆக வேலைக்கு சேர்ந்தேன். அரையாண்டு விடுமுறையில் லீவில் வீட்டில் இருந்தேன். அப்பா எப்போதும் மிகுந்த வருத்தமாக, அம்மா படுத்த படுக்கையான துக்கத்தில், எதிலும் ஈடுபாடு இல்லாமல் ஏனோ, தானோ என்று இருந்து வந்தார். அவர் வருத்தமாக, எந்த சந்தோசமும் இல்லாமல், வாழ்க்கையே வெறுத்து போனது போல யாருடனும் அதிகம் பேசாமல் இருந்தது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தைத் தந்தது.
ஒரு நாள் பக்கத்து ஊர் லாட்ஜில் இவரை பார்த்த என் தம்பி, எப்படியோ வீட்டுக்கு அழைத்து வந்து விட்டான். போலீஸில் மாட்டியிருந்தால் எவ்வளவு அவமானம் !! இந்த நிலைமையில் அவர் குடிப்பது இன்னும் அதிகமானது. தினமும் குடித்து விட்டுதான் வீட்டுக்கு வருவார். வீட்டில் படுத்த படுக்கையாக இருக்கும் அம்மா, அப்பாவின் நிலை கண்டு மிகவும் வருந்தினார்.
ஒரு நாள் என்னை அருகில் அழைத்த அம்மா, "நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதே. என் நிலைமைதான் இப்படி ஆயிப் போச்சு. உன் வாழ்க்கையும் சரியா அமையலே. உங்க அப்பாவும் நீ வீட்டை விட்டு ஓடிப்போன சோகத்தையும், குடும்ப வறுமையையும் தாங்கமுடியாம, இப்படி குடிப் பழக்கத்துக்கு அடிமையாகி, உடம்பை கெடுத்துகிட்டார். கேட்டா,..."இனி என் வாழ்க்கையில் என்ன இருக்கு? இப்படியே இருந்து, நான் செத்துடறேன். இருக்கிறவங்களை அந்த ஆண்டவன் காப்பாத்தட்டும்.” என்று விரக்தியாக பேசுறார். ஏன் தான் கடவுள் நம்பல இப்படி சோதிக்கிறானோ தெரியலே" என்று ஸொல்லி வருத்தப்பட்டாள், அம்மா.
வீட்டில் கட்டுபடுத்தவும், கண்டிக்கவும், கவனிக்கவும் ஆள் இல்லை என்பதால் தம்பியும் சிகரெட் குடிப்பது, செக்ஸ் புத்தகம் படிப்பது என்று தறுதலையாக மாறத் தொடங்கினான். தங்கையும் ஒழுங்காக படிப்பதில்லை, அவள் எப்படி படித்துக்கொண்டிருக்கிறாள் என்று கவனிக்கவும் ஆள் இல்லை. மொத்தத்தில் அவரவர், அவரவர் இஷ்டப்படி இருந்தனர்.
நன்றாக வாழ்ந்த குடும்பம், நான் தடம் மாறியதால், எல்லாம் வழி தவறி, கட்டுப்பாடு இழந்து, கஷ்டப் பட்டுக்கொண்டிருந்தது. விவசாயம் செய்ய ஆள் இல்லை என்பதாலும், செலவுக்கு பணம் தேவைப் படுவதாலும் இருக்கிற நிலத்தில், பாதியை விற்று என் படிப்புக்கு செலவு செய்து மீதியை கடன் அடைக்க கொடுத்த அப்பா கண்ணீர் விட்டு அழுதார்.
இருந்த சொத்து பத்திரம், அம்மா போட்டிருந்த நகை எல்லாத்தையும் என்னிடம் கொடுத்து, "அம்மாவுக்கு வந்திருக்கிற நோயை குணப்படுத்த முடியாதுன்னு டாக்டர் சொல்லிட்டார். உன் தங்கச்சி கல்யாணத்துக்கு சேத்து வச்சிருந்த பணம், சொத்து பத்திரம், உன் அம்மாவோட நகை எல்லாம் உன்னிடம் கொடுத்திட்டேன். இதை வச்சு உன் புருஷனை கண்டு பிடித்து அவரோட சேர்ந்து வாழ்ந்து சந்தோசமா இரு. உன் தம்பொய், தங்கச்சியை நல்லா படிக்க வச்சு கரை சேத்து "சொல்லி கையை பிடிச்சுகிட்டு மறுபடியும் அழுதார்.
இந்த நேரத்துல, என்ன செய்யிறதுன்னு புரியாம, பத்மாவை பாத்து ஏதாவது உதவி கேட்கலாமுன்னு அவகிட்டே போனேன்.
நான் சொல்லச் சொல்ல, என் நிலைமையை, என் குடும்ப சூழ்நிலையை நல்லா கேட்டுகிட்டவ, “உங்க அம்மா ஆபரஷனுக்கு நெறைய பணம் வேணும். குடும்பம் கஷ்டத்தில் இருக்கிறதினாலே உங்க அப்பாவுக்கும் நிம்மதி இல்லே. கண்டிக்க ஆள் இல்லாதினாலே உன் தம்பி கேட்டுப் போக ஆரம்பிச்சிருக்கான். தங்கச்சிக்கு படிப்புல புரியாத்தை சொல்லிக் கொடுக்க ஆள் இல்லே. நீ உன் புருஷனை கண்டுபிடுச்சு, அவரோட சந்தோசமா வாழணும்னா, அதுக்கும் பணம் வேணும். இந்த சூழ்நிலையிலே நீயும் சந்தோசமா இல்லே. இதை எல்லாம் சரி பண்றது எப்படின்னு முதல்ல யோசிக்கணும்" என்று தீவிர யோசனையில் இருந்தவள், சட்டென்று ஏதோ தோன்றியவளாக, "நான் கேட்கிற கேள்விக்கு, பாவம், புண்ணியம் பாக்காம பிரக்டிகலா பதில் சொல்லு. சொல்வியா?!!”
“ம்,…சொல்றேன் பத்மா.”
"இப்ப உனக்கு அவசியமா தீக்கவேண்டிய முதல் பிரச்னை எது?"
"எல்லாமேதான் "
"சரி, அப்போ நான் சொல்றத கேளு. உங்க அம்மா ஆபரேஷனுக்கு பணம் வேணும்னா, உங்க அப்பா குடிக்கறதை விட்டுட்டு, பழையபடி விவசாயத்தை நல்லா கவனிக்கணும். உன் தம்பியை கண்டிக்கறதுக்கும் உங்க அப்பா பழையபடி மாறினாதான் முடியும். அப்போ உன் தங்கச்சியும் நல்லா படிக்க ஆரம்பிச்சிடுவா. அதுக்கு முதல்ல உங்க அப்பாவ நீதான் மாத்தணும்."