14-08-2024, 12:05 PM
அன்பு கதாசிரியருக்கு Gunman19000 உங்கள் பரம ரசிகனின் ஒரு விண்ணப்பம்.
நான் என் கமெண்ட் ஒன்றில் சொன்னபடி பழைய எக்ஸோபி தளம் மூடப்பட்ட பின் மீண்டும் துவங்கப்பட்ட இந்த தளத்தில் நல்ல கதைகளை தேடி தேடி கிடைக்காமல் இனி இந்த தளத்திற்கு திரும்ப வரக் கூடாது என்று நினைத்துக் கொண்டிருந்த போது உங்கள் கதையை படித்தேன். அன்று முதல் உங்கள் கதையின் பரம ரசிகனாகி விட்டேன். ஆனால் நாளாக நாளாக நீங்களும் அப்டேட்டுகள் குறைத்துக் கொண்டதால் என்னுடைய பழக்கப்படி உங்கள் கதையை காபி செய்து அதில் இருந்த சின்ன சின்ன எழுத்து இலக்கணப் பிழைகளை திருத்தி, எனக்காக நானே கதையை எழுதி நானே படித்து ரசிக்கத் துவங்கி விட்டேன்.
இப்போது கதை நூறு பக்கங்களுக்கு மேல் பதிவிடும் அளவுக்கு வளர்ந்து விட்டதால் அதை பதிவு செய்தால் என்ன என்று ஒரு எண்ணம் தோன்றியது. எதுவாயிருந்தாலும் மூலக் கதை உங்களுடையது என்பதால் உங்கள் அனுமதி பெற்று தான் கதையை முதலில் இருந்து தனி திரியாக பதிவு செய்ய வேண்டும் என்று நினைத்தேன்.
உங்கள் கதையில் சம்பவங்களுக்கான ஐடியாக்கள் தான் கதையின் சிறப்பே. நான் அத்துடன் என் கற்பனையையும் சேர்த்து கதையை பெரிதாக்கி இருக்கிறேன். நீங்கள் ஓகே சொன்னால் உங்கள் கதையை குறிப்பிட்டு என் கதையை தனித் திரியாக எழுத விரும்புகிறேன்.
உங்கள் பதிலை, அனுமதியை ஆவலுடன் எதிர்பார்த்து....
மன்மத கதைகளின் ரசிகன். மன்மதன்.