Poll: உங்களுக்கு பிடித்த நடிகை யார்?
You do not have permission to vote in this poll.
Anushka Shetty
9.58%
41 9.58%
Kajal Aggarwal
7.24%
31 7.24%
Nayan Thara
7.48%
32 7.48%
Kiara Advani
3.04%
13 3.04%
Rakul Preet Singh
3.74%
16 3.74%
Indhuja
4.67%
20 4.67%
Pooja Hedge
3.74%
16 3.74%
Sridivya
4.67%
20 4.67%
Samantha Ruth Prabhu
6.07%
26 6.07%
Priya Bhavani Shankar
8.88%
38 8.88%
Shruthi Hassan
3.97%
17 3.97%
Manju Warrier
3.27%
14 3.27%
Priya Anand
5.37%
23 5.37%
Andrea
2.34%
10 2.34%
Rai lakshmi
2.80%
12 2.80%
Vedhika
2.57%
11 2.57%
Trisha Krishnan
5.14%
22 5.14%
Kavya Madhavan
3.74%
16 3.74%
Anupama
4.91%
21 4.91%
Regina Cassandra
6.78%
29 6.78%
Total 428 vote(s) 100%
* You voted for this item. [Show Results]

Thriller வனரானி கிராமிய நாடக தொடர்
#88
#கனவே_நிஜமாகு

தொடர் 40

சிவனேசன் ரதிமீனா வாழ்வில் பிரச்சினைகள் ஓய்ந்தது
செல்வதேவரின் மறைமுக ஆணையால் சிறையில் மஞ்சுளா மற்றும் அவளோட அண்ணனும் சிறை காண்கணிப்பாளரின் உத்தரவால் அடித்து கொல்லபட்டு
சிறையில் தற்கொலை செய்த வழக்காக முடித்துவைக்கபட்டுவிட்டது

பிரச்சினை முடிந்ததற்க்காக
குலதெய்வம் அங்களம்மா கருப்பசாமி க்கு
சிவனேசன் குடும்பம் மொத்தமும் பொங்கலிட்டு பூஜை செய்கிறது
கோவில் பூசாரி
குடும்பம் நல்ல நிலைக்கு வந்துள்ளது
அதனால் குலதெய்வத்தை போற்றி
குடும்பத்தில் உள்ளோர்
குலதெய்வம் அழைப்பு பாடலை பாடி தெய்வத்தை மகிழ்விக்க வேண்டும்

அப்படியே ஆகட்டும் ஐயா
ரதிமீனா பணிவோடு சொன்னாள்
மாமா முதல் பாட்டு நீங்க பாடுங்க

சிவநேசன் பாடுகிறான்

ஆனைமலைத் தோப்புக்குள்ளே
அமர்ந்திருக்கும் தாயவளே
பரசுராமனைப் பெற்றெடுத்து
பாரூலகில் விட்டவளே

கோபத்தை விட்டுமெள்ள. குலமேறி வாருமம்மா
ஊமையெந்தன் பேயுடலில்
உருவேறி வாருமம்மா

ஆடியிலே பொங்கலிட்டு
அழைக்கிறேன் உனையம்மா
ஆனைமலை மேடைவிட்டு ஆச்சியரே வாருமம்மா

மலையனூர் ரெல்லையிலே
மருவாடும் மந்திரமே
உன்னோடத் தேரோட
உயிர்செடிகள் பூக்குதம்மா

கொல்லிப்பாவை உன்னழகில்
கோர்த்தமுத்து வடமசைய கொங்கைரெண்டும் பாலொழுக
கொஞ்சுகின்ற தேவியரே

பாலாலே குறைச்சலுண்டோ
பரிவேட்டை நாயகியே
பூவாலே குறைச்சலுண்டோ
பூங்காற்று தேவியாரே

சிவநேசன் பாடி முடித்தான்

ரதிமீனா நீயும் பாடு

ரதிமீனா பாடுகிறாள்

புளியா மரத்தடியில் புன்னகைக்கும் அங்களம்மா
புற்றாகி நீயிருந்து
புவனத்தை காத்திடம்மா

பனையேறி மக்களிடம்
பருகநீர் கேட்டவளே
பருகநீர் இல்லையென
பனையழிய வைத்ததென்ன?

மஞ்சளிலே குளித்திருக்கும்
மலையனூர் அங்களம்மா
நெஞ்சினிலே குளித்திருக்கே நீலிமகமாயி அம்மா

பொன்னூஞ்சல் ரதமேறி
பூங்காவனம் சுற்றிவர
ஆடிடுவோம் பாடிடுவோம்
அங்களம்மா உனைசுற்றி

ஆடியிலே நீவந்தா
அம்மா புகழ்பாடிடுவோம்
ஆவணியில் அவதரிச்சா
ஆடிப்பாட கூடிடுவோம்

பனங்காட்டு சோலையிலே
பாம்பாக உருவெடுத்தா
பவுர்ணமியில் பால்நிலவில்
பாம்பாட்டம் ஆடிடுவோம்

வேப்பிலை கரமெடுத்த
வேதவள்ளி அங்களம்மா
வேப்பிலையின் வாசத்திலே வியாதிகளும் ஓடுதம்மா

எலுமிச்சம் பழத்தினிலே எழுந்தருளும் அங்களம்மா
எமனுக்கும் எதிரியம்மா எங்களுக்கு தெய்வமம்மா

ஆலய வாசலிலே ஆராதனை ஆயிரமாம்
ஆலால சுந்தரிக்கு அத்தனையும் பாயிரங்கள்

அங்காள பரமேஸ்வரிக்கு அழகர்மலை சங்கநாதம்
ஆலயம்மன் கோவிலிலே
ஆடுதம்மா மணியோசை

பானுமதி நீயும் பாடு

வாகருப்பா வாகருப்பா
வட்டமுழி செந்நெருப்பா

தாகருப்பா தாகருப்பா
தாய்போல காவலிட்டு

வெட்டருவா மீசைக்குள்ள
வெடிசிரிப்பு ஏன்கருப்பா

கோலவிழி கண்ணுக்குள்ள
கோபமென்ன தீபிழம்பா

கோபக்காரன் முகத்தைகண்டு
குடுகுடுன்னு ஆகுதையா

பல்லுக்குள்ள பூகம்பமா
பார்த்தகண்ணு பதறுதையா

பேச்சுக்குள்ள சிவகாசியா
பட்டாசா மனம்வெடிக்க

சாராயம் தான்குடிச்சி
சாய்ந்தாடும் தேருக்குள்ள

சில்லரைகள் கலகலத்து
சாரலென கொட்டுதையா

சுருட்டுபுகை வட்டமிட
சுழலுதையா எம்மனசு

கறிச்சோறு தான்படைக்க
கையள்ளி நீயெடுக்க

கண்ணிரண்டும் மின்னலென
காண்பதெல்லாம் காட்சியப்பா

குறிசொல்லி எனையடிக்க
குற்றமெல்லாம் சாம்பலப்பா

கோட்டைபடி வாசல் வந்து
கும்பிட்டு நான் தொழவே

கண்திறந்த உன் அழகே
காலமெல்லாம் பூ வாசந்தான்

பானுமதி பாட
கருப்பன் பாட்டா
ரதிமீனா மகளை திருஷ்டி சுழித்தாள்

பிருந்தா உனக்கு பாட தெரியுமா ஆட தெரியுமா

மாமா இரண்டும் தெரியும்

அப்போ ஆடு பாடு

கட்டாரி வான்சுழல
கலிமணிகள் காதொலிர
வடசரிகை தோள்புரள. வாளெடுத்து வாகருப்பா

கொடுப்பாவி சீமையிலே
குலங்காக்கும் கருப்பண்ணா
நீலமுழிக் கண்ணிரண்டும்
நெருப்புதனல் கொட்டுதைய்யா

கொடுங்காட்டு பேய்களுக்கு
குற்றமில்லா நெஞ்சிருக்க
கோபவிழ்க் கண்ணிரண்டும்
கொழுந்துவிட்டு எரியுதைய்யா

கையேந்தி கேட்டவரம்
காலமெல்லாம் வந்திருக்க
மடியேந்தி கேட்டவரம்
மழலைகளே நிறைந்திருக்க

தெக்காலே நீயிருக்க
தென்நெல்லை பூசைவரும்
வடக்காலே நீயிருக்க
வனபேச்சி பூசைவரும்

கிழக்காலே நீயிருக்க
குலசையம்மன் பூசைவரும்
மேற்காலே நீயிருக்க
மலையாள பூசைவரும்

பூலோகம் ஆளவந்த
பொன்னம்பல கருப்பனுக்கு
ஊராரும் வடம்பிடிக்க
ஊர்க்கோல தேரிழுப்போம்

எட்டாத தேசமெல்லாம்
ஏறிவிடும் கருப்பனுக்கு
கொட்டாத பூசையெல்லாம்
கொடுக்கிறேன் கருப்பனுக்கு

பிருந்தா பாடறே தானே ஆடலியே
மாமா நான் பாடறேன் அதோ அவரு ஆடறாரு பாரு கருபசாமியை கை காட்டினாள்

மற்ற இருவர் பாடனுமே யார் இருக்கிங்க
ரதிமீனா கேட்டாள்

பொன்னி முன்னே வந்தாள்

பாடுங்கள் அண்ணி

மனசெல்லாம் மணக்குதம்மா மலையனூர் தாயவளாம்

உன்பேரைச் சொன்னாலே ஊரெல்லாம் மணக்குதம்மா

தரிசெல்லாம் பரிசாகும் தாயான நீயெனக்கு

சேயான நானுனக்கு
சிரித்தாடும் சேயுனக்கு

கர்மேக குழலழகி
கரிசனமாப் பார்த்துப்புட்டா

கர்மவினை பக்கத்திலே
காட்டாது பயமெனக்கு

சிந்தூரப் பொட்டொளிரும் சிங்கார வடிவழகி

சித்தமெல்லாம் நிறைந்திருக்கும் செங்கமலப் பேரழகி

சமயத்திலே காப்பவளே சந்தோச வாழ்க்கையிலே

துயரமெல்லாம் தீர்ப்பவளே தூள்பறத்தும் தாயவளாம்

பச்சைவண்ணப் பைங்கிளியே
பார்வையிலே ஆள்பவளே

காசியிலே குடியிருக்கும் காமாட்சி தாயெனவும்

காசினியெல்லாம் ஆள்பவளே காளியான அங்காளம்மா

சூலிநீலி வாராகிதான்
சுழன்றோடும் பூமியிலே

வேலியாகிப் பிள்ளைகளை வாளெடுத்து காப்பவள்தான்

வேதனைகள் வேரறுக்கும் வீரியமுள்ள தாயவளாம்

எண்ணமெல்லாம் நீயாக எழுந்தாடும் தாயெனக்கு

இதயத்தில் உன்பெயரே என்றென்றும் ஒலிக்குதம்மா

செய்வதெல்லாம் உனக்கென்றே சிந்தையிலே பாடுகிறேன்

வாழும்வாழ்க்கை உனக்கென்றே வாழ்கிறேன் பூமியிலே

உன்னைஎண்ணும் போதேமனம் உருபாடத் தோன்றுதம்மா

பிழைக்கமுடியா என்னுயிரே
பிழைக்கவைத்த தாயவளே

உடலெல்லாம் மெய்புளக
உன்னழகை பாடுதம்மா

விழியெல்லாம் உனைகண்டு
வித்தைபாடல் கொட்டுதம்மா

வழியெல்லாம் உனைப்பற்றி வாழ்கிறேன் வாழ்க்கையம்மா

பொன்னி முடித்தாள்

அடுத்து யாரோ

நான் பாடுகிறேன்

செல்வ தேவர் முன் வந்தார்

கருங்கசை சேலைகட்டி களமாடும்காளியம்மா
அருள்எனும் மேடையிலே
ஆடிவரும் சூலியம்மா

விரிந்திருக்கும் கூந்தலிலே
வாடாமல்லி குடியிருக்க
வாடாவிளக்கு உன்னழகில்
வாரிதியும் தவழுதம்மா

இடுகாட்டில் நீயிருக்க
ஈசனவன் துணையிருக்க
தில்லையிலே நடனமிடும்
தென்காசி காளியம்மா

குருதியையே தந்திடறேன்
குழைந்துன்னை அழைக்கின்றேன்
ஆங்காரி காளியம்மா
ஆடியிங்கே வாருமம்மா

அலைபாயும் ஆசைகளே
ஆறாக ஓடுதம்மா
ஆடிவரும் உன்னழகால்
அழிந்தோட வேண்டுமம்மா

கர்மவினை கொல்லவர
காளியம்மா ஓடிவந்து
கைகொடுத்த காளியம்மா
கருணையொளி நீதானம்மா

திருவடிகள் சிந்தையிலே
தெண்டனிட்ட என்னுடலாம்
ஆடித்தேர் மேலமர்ந்து
ஆடிவரும் காளியம்மா

உன்னருளை நாடிவந்தேன்
உன்மடியில் சாயவந்தேன்
விழியெடுத்து பாருமம்மா
வெடிமுழக்க காளியம்மா

பாடி முடித்தார்

கோவில் பூசாரிக்கே மகிழ்ச்சி

பூசாரியும்

இறுதி பாட்டை பாடுகிறார்
உடுக்கை யுடன்

கருப்பா கருப்பா படிகருப்பா
கண்ணுக்குள் என்ன செந்நெருப்பா

அன்பே கருப்பா வா வா வா
அருளை தாராய் இருள் நீக்கி

ஐந்துமலை விட்டு வந்து
அழகர்மலை வா கருப்பா

வெள்ளை குதிரை மீதேறி விரைந்து ஓடி வாராயோ!

காவல் தெய்வம் நீயன்றோ
காடும் மேடும் உனதன்றோ

பாசக் கருப்பா நீயாரோ
பதினெட்டாம் படியில் உறங்குகிறாய்

கள்ளன் பதினெட்டு திருடர்களாம்
காவல் கருப்பன் நீதானாம்

முன்னோடி கருப்பா நீதானே
முத்துக் கருப்பன் பேர்தானே

கருப்பா கருப்பா படிகருப்பா
கண்ணை திறப்பா செந்நெருப்பா

உன்னை கண்டா குளிர்போகும்
ஊரும் உறவும் நலமாகும்

நீயே எங்கள் குலதெய்வம்
நெஞ்சில் கொண்டால் பயம் போகும்

வா வா கருப்பா என்னோடு
வராட்டி குதிப்பேன் பனையேறி

தா தா கருப்பா உன்னருளை
தராட்டி குதிப்பேன் மலையேறி

பாடி முடித்து ஆராத்தி காட்டி பூஜையை முடித்தார்
[+] 2 users Like krishkj's post
Like Reply


Messages In This Thread
RE: கனவே நிஜமாகு தொடர் கதை - by krishkj - 13-08-2024, 09:48 AM



Users browsing this thread: 3 Guest(s)