13-08-2024, 09:43 AM
#கனவே_நிஜமாகு
தொடர் 39
குற்றாலீஸ்வரன் கோவிலில்
பார்த்த மனிதனை
முத்துதேவர் பார்த்து திகைத்தார்
நேரில் மகன் பிரமனந்தம் பாலகிருஷ்ணன்
கண்களையே நம்ப முடியவில்லை
அதே நேரம்
அந்த வழியாக போன சன்னியாசி
பாவம் பேரனை மகன்னு நினைச்சிட்டு பாட்டுக்கு சொல்லிட்டே போக
முத்துதேவருக்கு புரிந்து போனது
காணாமல் போன பேரனா மகன் உருவில் அச்சு அசலாக
தம்பி
முத்துதேவர் அழைத்தார்
என்ன பெரியவரே
ஏதாச்சும் உதவி வேணுமா
இல்லைப்பா உன்னோடு கொஞ்சம் பேசனும்
கொடிமரம் பிரகாரம் பக்கம் வருகிறாயா
வாங்க
இருவரும் அமர்ந்தார்கள்
முத்துதேவர் சிவனேசனையே பார்த்தார்
கண்கள் கலங்கியது
பெரியவரே ஏன் அழறிங்க
தம்பி என்னை தெரியுதா
தெரியலிங்களே யாருங்க நீங்க
நான் தான்பா உன்னோட தாத்தா
தாத்தாவா அப்படினு யாரையும் தெரியாதே
உன் அப்பா
பாலகிருஷ்ணன் அம்மா சகுந்தலா தெரியுமா
தெரியலியே ஐயா
தம்பி சிறுவயது நினைவுக்கு போய் யோசித்து பாரு
பெரிய்வருக்காக நினைவை பின்னோக்கி பார்க்க
புளியறை பங்களாவில் துள்ளி விளையாடியதும் அப்பா அம்மா ஓயாமல் கொஞ்சியதும்
அப்பா அம்மா முகமும் நினைவில் தெரிய
ஐயா தெரிந்துவிட்டது நான் சிறுவனாக புளியறை ல இருந்த நினைவு
சரியா நினைவு வந்துடுச்சே
என்னைப்பார்
சிவநேசன் உற்று பார்த்தான்
குபீரென மலர்ந்தான்
தாத்தா நீங்களா
நானே தான்டா எப்படி இருக்கே
இன்றுவரை எங்கே இருந்தே
மறுபடியும் நினைவை பின்னோக்கி பார்க்க
கோர விபத்து நினைவில் வர
கண்ணீர் வழிந்தது
தம்பி ஏன் அழறே
அப்பா அம்மா லாரில அழமாட்டாமல் கதறினான்
தம்பி இது கோவில் அமைதியாக இரு
அப்பா அம்மா சாவுக்கு காரணமானவளை நீ பழிவாங்கும் நேரம் வந்துவிட்டது
தாத்தா அப்பா அம்மாவை கொன்றவங்களை இனி நான் உயிரோடு விடமாட்டேன் அவங்க எங்கே இருக்காங்க
தம்பி அவசரபடாதே
நீ அவர்களை வீழ்த்த பயன்படுத்த போவது
உன் புத்திமுனை வித்தை
தாத்தா அது தெரியாதே
தெரிய வைக்கிறேன்
முத்துதேவர்
குற்றாலீஸ்வரனை நோக்கி கையெடுத்து வணங்கினார்
மடியில் இருந்து சித்தர் தந்த மூலிகை குப்பியை எடுத்தார்
தம்பி இந்த மருந்தை
கண்களை மூடாமலேயே ஒரே மடக்கில் குடித்துவிடு
மறுபேச்சு பேசாமல்
வாங்கி ஒரே மடக்கில் குடித்துவிட்டான்
அடுத்த நொடி சிவனேசன் உடல் வேர்த்து கொட்ட தொடங்கி கைகால் நடுங்க ஆரம்பித்து மயக்க நிலைக்கு சென்றுவிட்டான்
முத்துதேவர் படுக்க வைத்தார்
சில நிமிடத்தில் சிவனேசன்
தூங்கி எழுந்தவன் போல எழுந்து உக்கார்ந்தான்
தாத்தாவை பார்த்தான்
முத்துதேவர் சிரித்தார்
ஏன் தாத்தா சிரிக்கிறிங்க
உன் உடம்பை பார்
சிவனேசன் குனிந்து தன்னுடம்பை பார்த்தான் கைகால் எல்லாமே பார்த்தவன் திகைத்தான்
53 வயது உடல் 40 வயது கட்டுகோப்பான உடலாக மாறி இருக்க நரைத்த தலைமுடி மீசைகூட கருப்பாக மாறி இருந்தது
தாத்தா இது எப்படி சாத்தியம்
தம்பி இது சித்தர்கள் ராஜ்யம்
அவர்களால் செத்த பிணத்தையும் எழுந்து ஓட வைக்க முடியும்
தாத்தா புதிய சேதி
இதை நீங்களே குடித்திருக்கலாமே எனக்கு தந்துட்டிங்களே
தம்பி விதியெனும் ஓர் வார்த்தை விளங்காத சூத்திரமே
விதியெனும் சூத்திரத்தை விளங்க வைப்பார் யாருமில்லை
சிவசத்தி யை அன்றி
தம்பி மஞ்சுளா எனும் மாயக்காரியை தண்டித்தே தீரவேண்டும்
இன்றே நீ செயல்பட தயாராகு
தாத்தா என்ன செய்யனும்
தன்னோட கைபையில் இருந்து
போட்டோவை காட்டினார்
தாத்தா இது என் அம்மா போட்டோ
முத்துதேவர் சிரித்தார்
ஏன் தாத்தா சிரிக்கிறிங்க
தம்பி நீயோ அப்பா சாயல்ல இருக்கே
இவளோ அம்மா சாயல்ல இருக்கா
இவ உன் அம்மா இல்லை
உன்னோட அத்தைமக பெய்ர் ரதிமீனா
தாத்தா பத்மாவதி அத்தை மகளா
ஆமாம்
தற்போது சென்னையில் புகழ் பெற்ற டாக்டர் இவ
தாத்தா இப்போ நான் என்ன செய்யனும்
ரதிமீனா வீட்டுக்கு போகனும்
ரதிமீனா வை நீ கல்யாணம் பன்னி இணைபிரியாமல் வாழனும்
ரதிமீனா வீட்டை ஆட்டிபடைக்கும் மஞ்சுளா வை விரட்டனும்
தாத்தா இப்பவே கிளம்பறேன்
பொறுடா தம்பி
தற்போது நீ குடித்த மருந்தால் நூறு பேரை வீழ்த்தும் பலத்தை உடல் பெற்றுள்ளது
அதோடு ரகசியமாக மறைந்துள்ள எதையும் அறியும் ஆற்றல் உன் பார்வை பெற்றுள்ளது
இந்த பார்வை ஆற்றலை வைத்தே
உன் புத்திமுனை வித்தையை காட்டு
சிவனேசன் புரியுது தாத்தா
நல்லது இன்று மாலையே சென்னை கிளம்பு பஸ்க்கு பணம் இருக்கா
தாத்தா எனக்கென யாருமில்லை னு தான் தினசரி உழைப்பதில் உணவுக்கு போக மிச்சத்தை இல்லாதோருக்கு தந்துவிடுகிறேன்
கல்லிடை குறிச்சியில் வாழும் நிலையை சொன்னான்
பரவயில்லைடா கருணை குணம் கைவிடாது
சென்னை போக பணம் தருகிறேன்
போ
தாத்தா முகவரி தெரியாதே
முகவரி தேவையில்லை
சென்னை தேனம்பேட்டை சிக்னல் னு டிக்கெட் வாங்கு
அந்த ஸ்டாப்ல இறங்கு கால் போன போக்கில் போ
அப்பொழுது அதிகாலை விடிந்திருக்கும்
மற்றது தானாக நடக்கும்
தாத்தா நீங்க கூட வாங்களேன்
இல்லைடா
இதுவரை குடும்பத்தை சுமந்த சுமையை இறக்கி உன் தலையில் வைத்திட்டேன்
நான் பொதிகைமலையில் தியானத்தில் அமர போகிறேன்
பிரச்சினைகள் முடிந்ததும் வந்து குடும்பத்தோட இருப்பேன் போப்பா
குற்றாலீஸ்வரன் கூடவே துணை இருப்பான்
சிவநேசன் சொல்லி முடித்தான்
ரதிமீனா கண்கள் விரிய மாமாவை பார்த்தாள்
தாத்தா கொடுத்த பணத்தை தொலைத்து தேனீர் கடையில் குடித்துவிட்டு காசில்லாமல் தவித்தவரை காப்பாற்றி
கல்யாணம் பன்னிட்டு இணைபிரியா ஜோடியாக வாழ தாத்தா தான் காரணமா
தாத்தாவை மனதார கும்பிட்டாள் ரதிமீனா
அப்பா மிராகிள் சித்த மருந்தால் தானே இவ்வளவு பலம்
பிருந்தா கலகலவென சிரித்தாள்
பானுமதி அண்ணி
அப்பா சித்தா மருந்தால் பலம் பெற்றார்னு
என்னோடு மோத சொல்லு
ஏய் வாயாடி அப்பா பாவம்டி
ஏன் பானு பிருந்தா நீ மாமாவோடு மோதி பார்
நான் ரெடி மாமியாரே
அம்மா லூசா நீ பிருந்தாவை அப்பாவால கூட வெல்ல முடியாது
எப்படிமா சொல்றே பானு
ஐந்தருவியில் மஞ்சுளா மகள் வசந்தி ரவுடிகளோடுவர மின்னலென பிருந்தா ரவுடிகளை பந்தாடியதும் வசந்தி இரண்டுகையை உடைத்து ஓட வைத்ததையும் சொன்னாள்
சிவனேசன் வியந்தான்
பிருந்தா நீ பலசாலி தான்
அப்படியா மாமா இப்போ மோதலாமா
அட என்னால முடியாது
உன்னை வெல்ல ஒருத்தியால தான் முடியும்
யாரு மாமா அது
வேறயாரு உன்னோட மாமியார் ரதிமீனா தான்
மாமியார் மருமக சண்டை நல்லா இருக்கும்ல
பிருந்தா வாய்விட்டு சிரித்து விட்டாள்
ரதிமீனா மாமாவை அடிக்க பாய்ந்தாள் சிரிப்போடு
தொடரும்