13-08-2024, 09:41 AM
(This post was last modified: 13-08-2024, 09:41 AM by krishkj. Edited 1 time in total. Edited 1 time in total.)
#கனவே_நிஜமாகு
தொடர் 37
பிருந்தா கேட்ட கேள்விக்கு
சிவநேசன் புன்னகையுடன் பதில் சொல்ல ஆரம்பித்தான்
அன்று மஞ்சுளா திருமணம் நின்றதிலும் நேர்மையான கணக்கு பிள்ளையும் மனைவியும் தற்கொலை செய்து கொண்டதாலும்
தாத்தா வாக்கு தவறி போனதால் ஊரார் பழிக்கு தலைமறைவாகி விட்டார்
சகஜநிலை திரும்பிய பிறகு
வீட்டுக்கு வந்தவர்
மஞ்சுளா அண்ணணுடன் பேசும் ஏமாற்று திட்டங்களை ஏதெச்சையாக அறிந்தவர்
தன்னோட முகத்தை மறைத்து ஆதரவற்ற சித்தர் வேடம் போட்டு
குடும்பத்தில் அப்பாவுக்கு அறிவுரை சொல்லும் சாமியாராக வீட்டிலேயேம முகம் மறைத்து வாழ்ந்திருக்கார் மஞ்சுளா மேல் பார்வை வைத்து கொண்டே கண்காணித்திருக்கார்
சகுந்தலா அம்மாவை கொல்ல மஞ்சுளா எடுத்த சூழ்ச்சிகளை முறியடிச்சிருக்கார் என்னையும் பலமுறை கொல்ல முயன்றதையும் தந்திரமாக தடுத்திருக்கிறார்
தாத்தா
மாமா இவ்வளவு பாதுகாப்பாக தடுத்தவர்
உங்க அப்பா அம்மா விபத்தை ஏன் தடுக்க முடியவில்லை தாத்தாவால்
பிருந்தா கேட்க
பிருந்தா மஞ்சுளா செய்யும் சூழ்ச்சிகளை சாமியார் தான் ஏதோ மந்திரத்தால் தடுப்பதாக மஞ்சுளா நினைத்து கொண்டாள்
தாத்தா இல்லாத நேரம் பார்த்து தான் மஞ்சுளா விபத்தை ஏற்படுத்தி கொன்றிருக்கிறாள்
மாமா விபத்து நடந்த அன்று தாத்தா எங்கே போனார்
பச் பிருந்தா அன்று சித்திர பௌர்ணமி
தாத்தா சதுரகிரி மலைக்கு மாதம் தோறும் போவதும்
அப்பா அம்மா குற்றாலீஸ்வரரை தரிசிக்க போவதை அறிந்து திட்டமிட்டு கொன்றிருக்கிறாள்
அடிபாவி கடவுளை வணங்க போறவரையா கொன்றிருக்கிறாள்
இவ மனுசியா
கயல்விழி சபித்தாள்
மாமா அதன்பின் தாத்தா எங்கே
தாத்தா திரும்பி வந்து மகனை பிணமாக பார்த்து உள்ளுக்குள் கதறி அழுதார்
அப்பாவோட இறுதி சடங்கைகூட பார்க்க விருப்பம் இல்லாமல்
வீட்டைவிட்டே சென்றுவிட்டார்
மாமா மஞ்சுளா சூழ்ச்சி அறிந்தும் தாத்தா முதலிலேயே தடுத்திருக்கலாமே
பிருந்தா அங்கே தான் மஞ்சுளாவின் பலம்
தாத்தா அப்பாவுக்கு நெருக்கமான வேலையாட்கள் மேல் திருட்டு பழி சுமத்தி அப்பாவாலேயே வேலையை விட்டுவிரட்டிவிட்டு
தன்னோட அடியாட்களை வீட்டுக்குள் நிரப்பி விட்டாள் தாத்தா வாயை திறந்தா தாத்தாவும் காலி அதனால் தான் தன்னை பெற்ற பிள்ளையிடம் கூட காட்டி கொள்ளவில்லை
தம்பி சிவநேசா என்னோட அப்பா அண்ணா செத்தபிறகு எங்கே போனார்
அத்தை நீங்க சென்னைக்கு போன மூன்றாம் நாளே உங்க வீட்டுக்கும் வந்துவிட்டார்
என்ன சொல்றே சிவநேசா
என் வீட்டுக்கே வரலையே
அக்கா வீட்டிலேயே அப்பா அம்மாவுக்கே தெரியாமல் இருந்தவர் உங்க வீட்டுக்கு வந்தும்
அப்பா எப்போ வந்தார்னு புரியலியே
அத்தை உங்க வீட்ல தான் அப்பா இறந்ததில் இருந்து நான் உங்க வீட்டுக்குவந்த நாளில் இரண்டுநாள் முந்திவரை உங்க வீட்டு சோற்றை தின்று வாழ்ந்தவர் தான்
தம்பி அப்பா படத்தையாவது காட்டு
புரியலையே
அத்தை உங்க வீட்டுக்கு பலவருடமா காலை மாலை உணவு கேட்டுவரும் காவி வேட்டி கட்டிய பெரியவரை தெரியுமா
அவரை தெரியுமாவா மாமா நான் சிறுமியா இருந்ததில் இருந்து அவருக்கு தான் சாப்பாடு தருவேன் நல்ல பாசம் என்மேல
அப்படி போடு மண்டு
அவர் தான் அத்தையோட அப்பா நம்ம தாத்தா
இதைகேட்டு பத்மாவதி மட்டுமல்ல ரதிமீனா வும் திடுகிட்டு அதிர்ந்தார்கள்
மாமா நம்ப முடியல பெரிய சம்ராஜ்த்தை ஆண்டவர் பார்க்க பிச்சைக்கார் போல
எங்ககிட்ட பழகினாரே
மீனா அவர் யாரிடமும் கையேந்தியதில்ல கையேந்தவும் மாட்டார்
சொந்தமகள் வீட்டு உணவு பிச்சை சோறாகாது
மாமா கடைசிவரை முகத்தை காட்டாமல் ஏன்
எங்களை பார்க்காம போயிட்டார்
ரதிமீனா அழுதாள்
சிவனேசனுக்கோ என்னவோ ஆகிவிட்டது
ஏய் அழாதே தாத்தா விரைவில் வருவார்
ஏன் போனார்னு சொல்லவா?
தொடரும்