13-08-2024, 09:39 AM
#கனவே_நிஜமாகு
தொடர் 35
மஞ்சுளா நாடகத்தை தொடங்கி விட்டாள் சிவநேசன் சொல்லும் போதே
வீட்டுக்குள் பானுமதி பிருந்தா முத்தழகன் சுந்தரேசன்
வந்துவிட்டனர்
அப்பா பானுமதி வாயெடுக்க
பானு எல்லோரும் உக்காருங்க
அப்புறமா பேசலாம்
ரதிமீனா தடுத்து
மேலே சொல்லுங்க மாமா
சொல்றேன்
தாத்தாவால் மஞ்சுளாவுக்கு நிச்சயிக்கபட்ட திருமணம்
அப்பாவால் தடைபட்டது
மஞ்சுளா வுடன் திருமணம் மறுநாள் நடக்க இருந்த நிலையில்
சகுந்தலா அம்மாவை
குற்றலீஸ்வரன் கோவிலில் வைத்து திருமணம் செய்துவிட்டார் அப்பா
இதை தாத்தா வீட்டில் ஏற்றாரா
ரதிமீனா கேக்க
அதுதான் இல்லை நடந்ததே வேறு
ஊரெல்லாம் பத்திரிகை வைத்து திருமண ஏற்பாடு ம் நிச்சயம் பன்னிவிட்ட நிலையில்
மஞ்சுளா திருமணம் தடைபட்டதாலும் நிச்சயிக்கபட்ட பெண்ணை யாரும் திருமணம் செய்ய மாட்டார்கள்
என கௌரவம் பார்த்து கணக்கு பிள்ளையும் அவரோட மனைவியும்
தூக்கிட்டு செத்து போயின
இதென்ன கொடுமை கௌரவம் எதில்னு தெரியாதா
சாதி கௌரவம் தான் முட்டாள்தனம் னா மூடநம்பிக்கை கௌரவம் அதைவிட முட்டாள் தனம்
ரதிமீனா எரிச்சலானாள்
இந்த முட்டாள் தனமான தற்கொலையால் தான் தாத்தா தலைமறைவாகிவிட்டார்
அதன் பின் நடந்தது என்ன
என்ன நடக்கும்
அப்பா உரிமையுடன் ஊரார் ஆதரவுடன் அம்மாவை கூட்டிக் கொண்டு வீட்டுக்கே வந்துவிட்டார்
மஞ்சுளா தந்தை இறந்ததை பற்றி கவலைபடாமல்
அப்பாவையும் அம்மாவையும் வரவேற்க
ஆரத்தி தட்டோடு வாசலில் நின்று சுத்தி போட்டு வீட்டுக்குள் போகவிட்ட பிறகே
அப்பா அம்மா இறுதி சடங்குக்கே சென்றிருக்கிறாள்
பார்ரா அப்பா அவ பயங்கர மூளைக்காரியா இருப்பா போல
ஆமாம் பானு
ஒருதலை காதல் என்றால் ஒன்று தனக்கு கிடைக்கவில்லையேல் தற்கொலை செய்து கொள்ளும்
தனக்கு கிடைக்காதது வேறுயாருக்கும் கிடைக்க கூடாதென கொன்றுவிடும் ஆசிட் வீசு முகத்தை சிதைக்கும்
ஒருதலைக் காதலும் மனநிலை பாதிக்கபட்ட சைக்கோ குணம் தான்
மஞ்சுளா இந்தரகம் இல்லை
அப்பா அவ எந்த ரகம்
பானு மஞ்சுளா அடைய நினைத்தது கிடைக்கவில்லையேல்
கொலை செய்தாவது அடைந்தே தீரவேண்டும் என்ற சைக்கோ குணமே மேலோங்கி இருக்கும்
ஒருதலைக்காதல் பைத்தியங்கள் அவசர குடுக்கைகள்
மஞ்சுளா போன்ற சைக்கோ பிறவிகள் அப்படி அல்ல வெளியே நல்லவ போல வேடமிடுவாள்
உள்ளே கொலைவெறி மனநிலை யில் இருப்பா
மாமா அதானே பார்த்தேன்
எங்க வீட்லயே என்னமா நடிச்சிருக்கா
பானு நடிப்பை நம்பி தானே முட்டாள் கூட்டம் நடிகை நடிகர்கள் பின்னே நாயாக அலையுது
உண்மை தான்பா
நானெல்லாம் அலைய மாட்டேன்
நானே பேரழகி தா
சிவநேசா அப்பா கல்யாணம் ஆனவுடன் மஞ்சுளா விலகிட்டாளா
அந்த சைக்கோ விலகுவாளா
கர்மகாரியம் முடிந்தபிறகு
மறுபடியும் வீட்டுக்கு வந்தா
அப்பா அம்மா இல்லாததால போக்கிடம் இல்லைனு கண்ணீர் சிந்தி அப்பா செய்த வேலையை கொடுங்க னு காலைபிடித்து கதறி அழுததால
அப்பா இரக்கபட்டு
வேலையும் தந்து வீட்டிலேயே தங்க அனுமதித்தார்
மாமா மஞ்சுளா இவ்வளவு வேடதாரி யா
மீனா இவளை போல இப்பவும் ஊரெல்லாம் நிறைய நிறைந்திருக்கு
என்ன செய்ய பொய்யை நம்பும் மனம் உணமையை நம்பாததால் தான்
இவ அப்பாவிடம் நிறைய பொய்கள் சொல்லியே சாதித்து இருக்கா
அப்பாவின் நம்பிக்கைகுறிய வேலைக்காரனை மயக்கி கல்யாணமும் செய்து அப்பாவுக்கு எதிராக வே செயல்பட வைத்தவள் தான்
அதற்கு முன் சகுந்தலா அம்மாவை தந்திரமாக கொன்றுவிட்டு மறுபடியும் ராணி ஆகலாம் என பல வழிகளில் அம்மாவை கொல்ல முயன்று தோற்றுதான் அப்பா வேலைக்காரனை கல்யாணம் செய்து அப்பா அம்மாவை கொல்ல
முயன்று ம் நான்கு வருடமாக முடியாமல் மஞ்சுளா இரண்டு பெண் ஒரு பையனை பெற்றிருக்கிறாள்
அப்பா அம்மாவும் ஓரே மகன் என்னை மட்டுமே பெற்றிருக்கிறார்கள்
மஞ்சுளா போல அப்பா அம்மா எனக்கு அக்காவோ தங்கையோ பெற்றிருப்பார்கள்
ஏன் என்னாச்சி மாமா ரதிமீனா
கேட்டாள்
ரதி நான் பிறந்த போதே கொல்ல முயன்றவளால் என்னை எந்தவழியிலும் கொல்ல இயலவில்லை
அடுத்தடுத்து அம்மா கர்பமானாலும் சில மாதங்களில் கலைந்து விடுகிறதால் மேற்கொண்டு குழந்தை வேண்டாமென அப்பா அம்மா முடிவெடுத்துட்டார்
பின்ணணியில் மஞ்சுளா கலந்துவிடும் மருந்தால் நிகழ்கிற உண்மை தெரியாமல்
இன்னும் சொல்ல முடியல மாமா
சிவநேசன் கதறி அழுதான்
தொடரும்