13-08-2024, 12:19 AM
28
தேவி வீலென்று கத்திவிட்டாள். ராணியும் நடுங்கிக் கொண்டு இருந்தாள். இருவரும் ராஜனை இருக்கமாகப் பிடித்துக்கொண்டார்கள். எல்லோரின் முகத்திலும் ஒரு இனம் புரியாத பயம் அப்பி இருந்தது.
ரதிக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை.
ரெங்கம்மா உருவம் பேச ஆரம்பித்தது.
“யாரும் பயப்படாதீங்க. நான் ஒண்ணும் பேய் பிசாசு இல்ல. நானும் உங்களை போல ஒரு ஜீவராசிதான். என்னோட பேரு Stellara Silicota (ஸ்டெல்லாரா சிலிகோட்டா)... நான்தான் ரெங்கம்மாவா பல வருஷம் சென்னைல இருந்தேன். ராணி, என் தங்கமே, இங்க வாடிம்மா.”
கைகளை நீட்டி அழைத்தது ஸ்டெல்லாரா என்கிற ரெங்கம்மா.
ஒருவித பயந்துடனேயே ராணி அருகே சென்றாள்.
“நான் உனக்கு ரெங்கம்மாதான். நீதான் என் மகனை பத்திரமா பாத்துக்கறியே... எனக்கு ரொம்ப சந்தோஷம்.”
“மகனா? யாரு உங்க மகன்?”, ராணி படபடவென்று வெடித்தாள்.
ஒன்றும் பேசாமல் Neural Link-இல் அவளுக்கு தேவையான தகவல்களை அனுப்ப, ராணி அதைப் புரிந்து கொள்ள முடியாமல் தத்தளிதாள்.
ஜானகி ஆத்திரத்துடன், “ இங்க என்ன எழவு நடக்குத்துன்னே தெரியல.” என்று கத்தினாள்.
ஸ்டெல்லாரா பாட்டனிடம் சொன்னதை பொறுமையாக விவரித்தது.
***
கேட்டு முடித்தவுடன் அனைவரின் முகத்திலும் ஈ ஆடவில்லை.
ஜானகிதான் திரும்பவும் பேசத் தொடங்கினாள்.
“அப்போ நீ.... சாரி... நீங்கதான் எங்களோட அம்மாவா? என்னால நம்பவே முடியல.” என்று கண் கலங்கி அழுதாள்.
“அழாதே மகளே. நான் உங்களை, என் வயித்துல சுமக்கல. அப்போ எனக்கு அந்த வாய்ப்பு இல்ல. ஆனா, உங்க ரெண்டு பேரோட எல்லா சுக துக்கத்திலும் நான் உங்க பக்கத்திலதான் இருந்திருக்கேன்.” என்று ஜானகியை அணைத்துக் கொண்டது ஸ்டெல்லாரா என்கிற ரெங்கம்மா.
ராஜன் வியர்த்து விறுவிறுத்து நின்று கொண்டிருந்தார். அவரையும் இழுத்து அணைத்தது.
யுவியும் ரூபாவும் இதெல்லாம் தங்களுக்கு எப்போதோ தெரியும் என்று தோரணையாக அமர்ந்திருந்தார்கள். தேவியும் மற்றவர்களும் நடப்பதை ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
ரதியின் கடுகளவு drone காமிராக்கள் தொடர்ந்து படம் பிடித்துக் கொண்டிருந்தன.
***
அந்த கொட்டாரத்தில் அமைதி நிலவியது. பல மணி நேரம் யாரும் பேசிக்கொள்ளவில்லை.
வேணுவுக்கு இருப்பு கொள்ளவில்லை. அவன் கற்பனையே செய்யாத, செய்ய முடியாத சம்பவங்களை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.
ராஜன் மூலம் பிறந்த சுஜாவின் மகனும் ஒருவிதத்தில் half-alien என்று நினைத்தபோது அவனுக்கு மயக்கமே வரும் போல இருந்தது.
ஸ்டெல்லாரா ஒவ்வொருவரிடமும் அன்பாக பேசியது. கடைசியாக ரதியிடம் வந்தது.
***
“How do you feel now?”, ரதியை கேட்டது ஸ்டெல்லாரா.
“I am better than others. They look like hit by a train-wreck”, ரதி பதில் சொன்னாள்.
(நான் அவர்களைவிட பரவாயில்லை. அவர்கள் எல்லோரும் ஏதோ ரயில் விபத்தில் சிக்கியது போல் தெரிகிறார்கள்)
ஸ்டெல்லாரா வாய்விட்டு சிரித்தது.
ரதிக்கு பயமாக இருந்தாலும், " நான் சில சந்தேகங்களை, கேள்விகளை கேட்கலாமா? "
என்ன இருந்தாலும் அவள் ஒரு Investigative Journalist அல்லவா? தைரியமாக கேட்டுவிட்டாள்.
“Oh sure. நான் அதுக்குத்தான் காத்துக்கிட்டு இருக்கேன். Go ahead! Just call me Sraa (ஸ்ரா)”
ரதி கேள்விக் கணைகளை தொடுக்க ஆரம்பித்தாள்.
***
ரதி: “நீங்க எதுக்காக இந்த பூமிக்கு வந்தீங்க? எங்க உலகத்தை ஆக்ரமிக்கவா?”
ஸ்ரா: “Oh no. நாங்க இங்க விருப்பப்பட்டு வரலே. எங்க கிரகம் ரொம்ப சின்னது. அதை சுத்தி சின்ன சின்ன Asteroid belt இருந்தது. நான் பொறந்ததே ஒரு asteroid-ல தான். எங்க மக்கள் அந்த asteroidல சுரங்க வேலை செஞ்சுகிட்டு இருக்கிறவங்க. டெக்னாலஜி எதுவும் பெருசா எங்களுக்கு தெரியாது. எப்படி நடந்துச்சுன்னு தெரியல, திடீருன்னு நாங்க இருக்கற Asteroid எங்க கிரகத்தை விட்டு விலக ஆரம்பிச்சது. பல பேரு பக்கத்தில் இருக்கற பெரிய Asteroid-க்கு தாவி தப்பிச்சுட்டாங்க. நாங்க மாட்டிக்கிட்டோம். பல Parsec தூரம் நாங்க விலகி வந்துட்டோம். அப்போ ஒரு supernova வெடிப்பு சம்பவத்தாலே எங்க Asteroid, ஒரு வால்நட்சத்திரமா (comet) மாறிடுச்சு. பல Parsec தொலைவு கடந்து இங்க பூமியில் வந்து விழுந்தோம். ”
Quote:மீயொளிர் விண்மீன் வெடிப்பு (Supernova) என்பது அளவில் பெரிய விண்மீன்கள் தம் எரிபொருள் எரிந்து தீர்ந்தபின் மாபெரும் அளவில் ஒளியாற்றலை வீசி பேரொளியுடன் வெடிப்பதை குறிக்கும்.
Parsec - புடைநொடி(parsec) என்பது "புடைபெயர்சியின் நொடி"(parallax of second) என்ற வாக்கியத்தின் குறுக்கம் ஆகும். புடைநொடி என்பது வானியல் அலகுகள் படி 3.26 ஒளியாண்டு ஆகும்.
விக்கிபீடியா - English - தமிழ்
ரதி: “ நாங்கன்னா?”
ஸ்ரா: “என்னையும் சேர்த்து 131 பேர் வந்தோம். ஆனா தப்பிப் பொழைச்சவங்க வெறும் 13 பேர். "
ரதி: “அப்போ எல்லோரும் இங்கதான் இருக்காங்களா?”
ஸ்ரா: “இல்ல.. எல்லாரும் இப்போ வேற வேற நாடுகள்ள ரிசர்ச் சைண்டிஸ்ட்டா இருக்காங்க.”
ரதி: “உங்களுக்கு சூப்பர் பவர் இருக்கா? எப்படி உங்க உருவத்தை மாத்தறீங்க? இதெல்லாம் எப்படி சாத்தியம்?”
ஸ்ரா: “மாயமில்ல மந்திரமில்லை. எல்லாம் சயின்ஸ். நீயும் மத்த மனுஷங்க மாதிரி எப்படி மூட நம்பிக்கைல இருக்காதே. என்னோட body transformation-ஐ பத்தி உனக்கு விளக்கமா சொல்றேன்.”
ரதி: “அப்படியில்ல... ஒரு டவுட். அவ்ளோதான்."
ஸ்ரா: சிரித்துக்கொண்டே, "நீங்க எப்படி கார்பன் மனிதர்களோ, அப்படித்தான் நாங்க - சிலிக்கன் ஜீவன்கள். எல்லாம் pure evolution. என்னால ஒரு நாளைக்கு மேல இந்த உருவத்தில இருக்க முடியாது. மேக்ஸிமம் 18 மணி நேரம். அதுக்கப்புறம் நான் உருகி மண்ணா மாறிடுவேன். எனர்ஜி வந்த பிறகு வேறு எந்த வடிவத்துக்கு மாறனுமோ அப்படி மாறிடுவேன்.”
Quote:
Amoebas are crafty, shape-shifting engineers
10 Surprising Shape-Shifting Organisms
ரதி: “உங்களுக்கு எப்படி எங்க மொழி தெரியும்?”
ஸ்ரா: சிரித்துக் கொண்டே, “ எனக்கு கிட்டத்தட்ட 26 மொழிகளுக்கு மேல பேசவும் எழுதவும் தெரியும். இது என்னோட 5 வது உருவப் படி மாற்றம் (transdifferentiation / பரம்பரை மறு நிரலாக்கம்). ஒவ்வொரு மாற்றமும் எங்களுக்கு 300 வருஷங்கள் நிலைச்சிருக்கும். அதில் போன படிமாற்றதோட எல்லா memories பரிமாற்றம் ஆயிடும்.”
எல்லோரும் ஆச்சரியமாக பார்க்க, ராணி முந்திக்கொண்டு, “ அப்படின்னா இப்போ உங்க வயசு என்ன? பாக்க 45 வயசு பொண்ணு மாதிரி இருக்கீங்க?”
ஸ்ரா: “இந்த படி மாற்றம் நான் உங்க அம்மாவை பாக்க வந்த போது நடந்தது. வயசுங்கறதை நான் பெருசா எடுத்துக்கறதில்ல. மனுஷங்களுக்கு சந்தேகம் வரக்கூடாதுங்கறதுக்காக எங்க உடம்பை 3 வருசத்துக்கு ஒருமுறை வயசான தோற்றத்துக்கு மாத்திக்கறோம்.”
ரதி: “அப்போ உங்களுக்கு சாவே இல்லயா? இதை கண்டுபிடிக்க எங்க scientists எல்லாம் எவ்ளோ கஷ்டப் படராங்க தெரியுமா?”
ஸ்ரா: “தெரியும்.. ஆனா எங்களுக்கு சாவே இல்லைன்னு யாரு சொன்னா? நாங்க 13 இருந்தோம். ஆனா இப்போ just 5 பேர்தான் மிஞ்சி இருக்கோம்.”
தேவி: “ ஏன்? என்னாச்சு அவங்களுக்கு?”
ஸ்ரா: “ எங்க உடல் உருமாற்றம் அடையலாம். ஆனா எங்க உடல் அதுக்கு முன்னாடி அழிஞ்சு போச்சுன்னா எப்படி உருமாறுவது? எங்க மக்கள் பலபேர் விமான விபத்துலயும், இயற்கை பேரழிவுலயும் அழிஞ்சிருக்காங்க. அதனால சாகா வரம் அப்படிங்கறது இல்லவே இல்லை.”
ரதி: “ஏன் இதை மக்களுக்கு முன்னமே சொல்லலே? இப்போ எதுக்கு இந்த டாக்குமெண்டரி செய்யறீங்க?”
ஸ்ரா: “ உங்க மனுசங்க உங்களுக்குள்ளயே இப்படி அடிச்சு கொன்னுக்கறீங்க. எங்களைப் பத்தி முன்னாடியே சொல்லி இருந்தா, நீங்க எங்களை அழிச்சிருப்பீங்க. நீங்களா எங்கள காப்பாத்தப் போறீங்க? நல்ல ஜோக். இப்ப சொல்றத்துக்கு ஒரு பெரிய காரணம் இருக்கு. அதை இப்போ சொல்ல மாட்டேன். நேரம் வரட்டும் சொல்றேன்.”
ரதி: “சரி நம்ம அரசியலுக்குள்ள போகவேண்டாம். உங்க குடும்பத்துக்கு வருவோம். நீங்க Alien race-ஐ இந்த பூமியில உருவாக்கப் போறீங்களா? அதுக்குதான் இத செய்யறீங்களா? ”
ஸ்ரா: “நிச்சயமா இல்லே. நான் என்னோட சந்ததியை பாதுகாக்க போராடிக்கிட்டு இருக்கேன். எனக்கு நடந்த உடல் மாற்றம் மாதிரி எங்க மக்கள் யாருக்கும் நடக்கவே இல்லை. இதுல நான் ஏன் பூமி மனுஷங்கள ஆதிக்கம் செய்யணும். நிச்சயமா இல்ல. என்னோட மற்ற சிலிக்கன் ஜீவராசிகள் எப்படி இருக்காங்க, என்ன ஆனாங்கன்னு இதுவரைக்கும் எங்களுக்கு தெரியாது. ரூபா, யுவியோட உதவியால அதுக்கு ஒரு வழி பிறந்திருக்கு.”
ரதி: “அப்போ நீங்க இந்த பூமியை விட்டுப் போகப் போறீங்களா?”
ஸ்ரா: “அதுக்கு இன்னும் நேரம் இருக்கு. அதுக்கு முன்னாடி நான் சொல்றதை நீ செய்யணும். ஏன் எதுக்குன்னு கேள்வி கேக்கதே.”
ஸ்டெல்லாரா சொன்னபடி செய்தாள் ரதி. அவளிடம் instructions கொடுத்துவிட்டு சிரித்தபடியே, “ நான் என்னோட குடும்பத்தோட கொஞ்சம் தனியா இருக்கணும், நீ போகலாம்" என்று சொன்னது.
ரதிக்கு இனிமேல் என்ன நடக்கப் போகிறது என்று புரிந்தபோது அவளுக்கு கீழே ஈரமானது.
அவள் தயக்கத்துடன், “நானும் உங்களோட இணைஞ்சுக்கலாமா?” குழைந்தால் ரதி.
ஸ்டெல்லாரா பலமாக சிரித்துக்கொண்டே, “வா" என்று அணைத்துக் கொண்டது.
***