12-08-2024, 11:15 PM
(This post was last modified: 12-08-2024, 11:17 PM by Geneliarasigan. Edited 3 times in total. Edited 3 times in total.)
மன்னிக்கவும் நண்பா,நான் உங்கள் கதையை இன்னும் படிக்கவில்லை.உங்கள் comment மட்டும் படித்து இந்த கருத்தை பதிவு செய்கிறேன்.வாசகராக இருந்த பொழுது எனக்கு நிறைய நேரம் கிடைத்தது .ஆனா எப்போ கதையை எழுத ஆரம்பித்தோனோ அப்பவே வேறு கதைகளை படிக்க எனக்கு சுத்தமா நேரம் கிடைக்கல..வாசகராக இருந்த பொழுது இந்த தளம் மட்டுமல்லாமல் வேறு தளங்களுக்கும் சென்று கதைகளை படிக்க நேரம் இருந்தது.நான் எழுதும் கதைகளை முடித்து விட்டு சீக்கிரம் வேறு கதைகளை படிக்கலாம் என்று எண்ணம்..,ஆனா இப்போ எழுதும் கதை சிந்துபாத் போல இன்னும் இழுத்து கொண்டே போகிறது..நேரம் கிடைக்காததால் நான்கு நாட்களுக்கு ஒருமுறை தான் பதிவே போட முடியுது.ஒரு ரைட்டராக உங்க வருத்தத்தை புரிந்து கொள்ள முடியுது..நானும் மூன்றே மூன்று வாசகர்களுக்காக தான் தொடர்ந்து எழுதறேன்..அது போல் நீங்களும் எதை பற்றியும் கவலைப்படாமல் தொடர்ந்து எழுதுங்கள்..என்னாலும் கதையை படிக்காமல் சூப்பர்,nice update என போட்டு ஊக்கப்படுத்த முடியும்..ஆனால் எனக்கு அதில் விருப்பமில்லை.கதையை படித்து உள்வாங்கி கொண்டு,கருத்தை பதிவிட வேண்டும் என்பதே என் எண்ணம்..