12-08-2024, 10:54 AM
நான் முதன்முதலில் போடும் கமெண்ட் இது. இதுவரை login கூட செய்யாமல் கதை படித்தோமா, அடுத்த வேலைக்கு சென்றோமா என இருந்து விட்டேன் . அது எவ்வளவு பெரிய தவறு என இப்போதுதான் அறிந்தேன்.ஒரு கமெண்ட் செய்யவே இவ்வளவு எழுத்துக்கள் டைப் செய்ய சலிப்பாக இருக்கும் போது, ஒரு கதையை அதுவும் மாத கணக்கில் பிழை இல்லாமல் டைப் செய்து அன்றாட வாழ்வில் நேரம் ஒதுக்கி, எந்த ஒரு பிரயோஜனம் இல்லை என்றாலும் இதற்கான நேரத்தை செலவிடுவது என்பது உண்மையிலேயே எல்லா கதை எழுதும் ஆசிரியர்களுக்கும் தலை வணங்க வேண்டிய விசயம் நண்பா....இப்போதுதான் அதை நான் அறிந்து கொண்டேன். இனி நான் படிக்கும் எல்லா கதைகளுக்கும் என்னால் இயன்ற விமர்சனம் எழுத போகிறேன். உங்கள் கதை நான் விரும்பி படிக்கும் கதை, என்னை போன்று நிறைய பேர்கள் login கூட செய்யாமல் தான் படித்து கொண்டிருப்பார்கள் .எனவே கதை எழுதுவதை நிறுத்தாமல் தயவுசெய்து தொடர்ந்து எழுதுங்கள் நண்பா... உங்கள் கோபம் நியாயமானதே......