11-08-2024, 06:52 PM
#கனவே_நிஜமாகு
தொடர் 31
புளியறை சிவனேசன் பங்களாவில்
செங்கோட்டை உட்கோட்ட
நடுவர் நீதிமன்ற நீதிபதி முன் பங்களா
ஏலம் விடப்பட்டது
சிவனேசன் கார் நுழைந்த போது
20 கோடிக்கு ஏலம்
உயர்ந்து இருக்க
சிவநேசன் சிரிப்போடு
35 கோடிக்கு ஏலம் கேக்க
கூட்டமே திகைத்து போனது
சிவனேசனை எதிர்பாக்காத மஞ்சுளா நடுங்கி விட்டாள்
நடுவர் நீதிமன்ற
நீதிபதி
இவ்வளவு ஏலம் போகுமா பங்களா
சிவனேசன் சிரித்து கொண்டே
போகாது சார்
ஏன்னா இது என்னோட பூர்வீக பங்களா
எவனோ வாசல்ல வந்து நின்னு ஏலம் போட்டா செல்லுமா
நான் நீதிபதி தான்
பங்களா மற்றும் சொத்துக்கள் எல்லாமே மஞ்சுளா பெயரில் பாலகிருஷ்ணன் உயில் எழுதி வைத்திருக்கார்
பாருங்க
பார்த்தான்
பார்த்துவிட்டு
இன்னும். பலமாக சிரித்தான்
ஏன் சிரிக்கிறே இது போலியா
போலி இல்லாம
உயில் எழுதியதா சொன்ன தேதியில் என் அப்பாவால் எப்படி
உயில் எழுத முடியும்
ஏன் முடியாது
அடேய் பண்ணாடை மடையா
அப்பா இந்த தேதிக்கு முந்தைய மாதமே விபத்தில் இறந்திருக்கார்
விபத்தில் இறந்த அப்பா எழுந்துவந்தா உயில் எழுதுவார்
சிவனேசன் கிடுக்கிப்பிடி யில் நீதிபதி மாட்டிக் கொண்டதில் நடுங்கினார்
இருந்தாலும் அதிகார பலத்தால்
சுதாரித்து கொண்டார்
நான் எதையும் ஆராயாமல் ஏலம்
மஞ்சுளா கடனுக்காக ஏலம் போட சம்மதிப்பதில்லை
பத்திரபதிவு அதிகாரிகள் ஆட்சியர் எல்லாமே சூழ்ந்திருக்கோம்
அவர்களிடமே கேக்கலாம்
அப்படியா
பத்திரபதிவு அதிகாரிகளே
உயில் எழுதபட்ட காலம் 52 வருடங்கள் முன்பு
சரியே ஆனா
உயில் பத்திரம் அப்படி பழமையா தெரியுதா
பாருங்க
பார்த்தார்கள்
பழமையாக இல்லாமல் புதிதாக இருந்ததை கண்டு திகைத்தார்கள்
அதுமட்டும் இல்லிங்க
உயில் எழுதபட்ட முத்திரைத்தாள்
இந்தகால முத்திரைத்தாள்
அந்தகாலத்தில் எப்படி போனது
சிவநேசன் உடைத்த உண்மையில் நீதிபதி நடுங்க ஆரம்பித்து விட்டார்
மாவட்ட ஆட்சியருக்கே
உண்மை தெரிந்துவிட்டது
அதே நேரம்
மஞ்சுளா தலைமுடியை கொத்தாக பிடித்து கன்னத்தில் ஆவேசமாக மாறி மாறி அறைந்து கொண்டிருந்தார் செல்வதேவர்
மஞ்சுளா அலறல் சத்தத்தில்
மஞ்சுளா வின் சொந்த அண்ணனான
செங்கோட்டை நீதிபதி ஓடிப்போய் தடுக்க போக
செல்வதேவர் எட்டி உதைத்தார்
தூர போய் விழுந்த மஞ்சுளா அண்ணன் காவலரை நோக்கி கத்தினார் அவனை பிடிங்க
காவலர்கள் செல்வதேவரை நெருங்க
அடையாள அட்டையை காட்ட
திகைத்து சால்யூட் அடித்து நின்றார்கள்
மஞ்சுளா அண்ணனுக்கு திகைப்பு
யார் இவர் இவருக்கு சல்யூட் அடிக்க
காவலர்கள் சொன்னார்கள்
திருநெல்வேலி மாவட்ட தலைமை நீதிபதி செல்வாதேவர்
மஞ்சுளா மற்றும் அண்ணன் அரண்டார்கள்
ஏய் நான் யாருன்னு தெரியுமா
நீதிபதி இரண்டாம் பட்சம் தான்
மாமா பாலகிருஷ்ணன் மனைவியான சகுந்தலா வின் ஒரேதம்பி சரியா
அவனை இழுத்து வாங்க
சிறப்பு புலனாய்வு காவலர்கள்
75 வயது கிழவனை கைவிலங்கு போட்டு இழுத்து வந்தார்கள்
மஞ்சுளா மற்றும் அவளோட அண்ணன் இருவரும் இழுத்து வந்தவனை பார்க்க
மரணபயம் கொண்டுவிட்டனர்
என்ன பயமா பலநாள் திருடன் ஒருநாள் அகபடுவான் நிஜமே
அக்கா மாமாவை திட்டம் போட்டு கொன்ற உங்களுக்கு வாழ்நாள் முழுக்க ஆயுள் தண்டனையை விதிக்கிறேன் போ சிறையில்
அதே நேரம் இரண்டு காரில் இருந்து கூட்டம் ஓடிவர
மாமா இவங்களை சிறையில் போடுவதற்கு முன் அதோ வருகிற கூட்டத்துக்கு நீதி வழங்கிட்டு சிறையில் போடுங்க
என்னடா சிவனேசா இவங்க யாரு
மாமா இவங்க பில்டிங் வாங்க மஞ்சுளா கிட்ட
35 கோடி கொடுத்திருக்காங்க
ஆனா பில்டிங் ரதிமீனா பெயரில் இருந்ததால் மஞ்சுளா வால் ஏமாற்ற பட்டுள்ளார்கள்
அப்போ 35 கோடி எங்கே
மாமா இந்த மஞ்சுளா தன்னோட மகளை இவ அண்ணா மகனுக்கு கட்டி வைத்ததால
கருப்பதேவர் நிலத்தை 30 கோடிக்கு வாங்கி தந்திருக்கிறாள்
மஞ்சுளா அண்ணன் மறுத்தான்
இல்லை என் பணத்தில் தான் வாங்கியது
அப்படியா நிலம் வாங்கிய தேதி
எப்போ?
ஒரு மாதம் தான் ஆகிறது தேதியும் சொன்னான்
அப்படியா கூமுட்டை
இரு
நண்பரே மஞ்சுளா வுக்கு 35 கோடி எப்போ கொடுத்திங்க
மஞ்சுளா நிலம் வாங்கிய நான்கு நாட்களுக்கு முன் தேதியும் சொல்ல
மஞ்சுளா அண்ணன் ஏமாற்றபட்டதை உணர்ந்தார்
பேராசை மஞ்சுளா வால் பாடுபட்ட சொத்தும் போகபோவதால்
செல்வதேவர்
பத்திரபதிவு அதிகாரிகள் கவனத்திற்கு
மஞ்சுளா மகள் பெயரில் வாங்கபட்ட 30 கோடி நிலமும் மேலும் 5 கோடிக்கானதை மஞ்சுளா வின் அண்ணன் சொத்துக்கள் கைபற்றி
பணம் கொடுத்த
இவர் பெய்ரில் பத்திரபதிவு செய்து தர உத்தரவிடுகிறேன்
இவர்கள் இருவரையும் பாளை சிறையில் ஆயுள் தண்டனை அனுபவிக்க அடைத்துவிடவும்
காவல் துறை க்கும் உத்தரவிடுகிறேன்
தொடரும்