11-08-2024, 06:50 PM
#கனவே_நிஜமாகு
தொடர் 30
திருநெல்வேலி
செல்வதேவர் வீடு
காலை விடிந்த நேரம்
ரதிமீனா வுக்கு பானுமதி யிடம் இருந்து போன் வந்தது
அம்மா எங்கே இருக்கே
பானு நெல்லையிலே இருக்கேன்
ஏன் காலைல அவசரமா போன் பன்றே
இரவே போன் செய்தேன் எடுக்கவே இல்லை குறட்டைல போயீட்டியா
ரதிமீனா தலையில் அடித்து கொண்டாள் மாமாவுடன் தனிமையில் இருப்பதால் கைபேசி பிசி என செட்டிங் செய்ததால்
பானு தூங்கிட்டேன் என்னம்மா
அம்மா நானும் தம்பியும் முத்தழகனுடன் புளியறை நோக்கி வருகிறோம் மதுரை தாண்டி விட்டோம்
தென்காசி ரோட்டுல காரில் பயணிக்கிறோம்
என்னாச்சுடி எதுக்கு
அம்மா அந்த மஞ்சுளா கும்பல் நம்ம பூர்வீக பங்களாவில் குடியிருக்கு பூர்வீக நிலத்தில் பொறுப்பெடுத்து காவலிடும் ஆட்களை விரட்டிவிட்டு ஆட்டம் போடறா அதை சொல்ல வந்தும் போன் எடுக்கல
உடனே வாங்கம்மா
சரி நீ நேரா ஊருக்கு போயிடாதே
செங்கோட்டை அச்சன் கோவில் சாலை சந்திப்பில் காத்திரு
நாங்களும் உடனே வருகிறோம்
சரிம்மா சீக்கரம் வாம்மா
மாமா பானு புளியறை நோக்கி வந்திட்டு இருக்கா
ஏன் மீனா திடீர்னு எதுக்கு பானு இப்படி
ரதிமீனா மஞ்சுளா விவகாரத்தை சொன்னாள்
சிவநேசன் முகத்தில் மர்மபுன்னகை
சிரித்து விட்டான்
ஏன்மாமா சிரிக்கிறே
நான் விரிச்ச வலைல தப்பி ஓடியவ தானாக வந்து சிக்கிட்டா
ஒன்னுமே புரியல மாமா நீங்க புரியாத புதிர் தான்
என்ன ரதிமா சிவநேசனுடன் என்ன விவாதம்
அண்ணா மஞ்சுளா பத்தி பேசினோம்
அவ எங்க இருக்கா கைல கிடைச்சா கூறு போடனும்
என் உயிர் அக்காவையும் மாமாவையும் தந்திரமா விபத்தை ஏற்படுத்தி கொன்றவளாச்சே
மாமா அதெல்லாம் விடுங்க அவ வாழ்நாளில் காணத துன்பத்தை இனி தான் அனுபவிக்க போறா
மாமா பொன்னி பிருந்தா எல்லாருமே உடனே கிளம்பலாம்
பிருந்தா மட்டும்
தன் தோழிகளுடன் கன்னியாகுமாரி போகனும் வரலைனு சொல்ல
ரதிமீனா
சரிதான் என் பையன் இவளை காண ஓடிவந்தா இவ தோழியோடு ஓடபோறா போல
அத்தை சுந்தரேசன் வருகிறாரா
நிசமாவா
நான் ஏன்டி பொய் சொல்ல போறேன்
எப்படியோ போ
அத்தை நான் கன்னியாகுமாரி போகல கூட வர்றேன்
பாருடா நேரில் கூட பார்க்கல
எலி மூக்கு
சிவநேசன் சிரித்துவிட்டான்
சிவநேசன் மாமாவை பார்த்து பிருந்தா முறைத்தாள்
எல்லாமே உன்னால தான் மாமா
க்கூம்
வாடி போகலாம்
கார் புறபட்டது புளியறை நோக்கி
ஒன்றரை மணி நேரத்தில்
ரதிமீனா கார் செங்கோட்டை வந்தடைய அச்சன் கோவில் சாலை சந்திப்பில் ரதிமீனா காரை நிறுத்தினாள்
பானுமதி க்கு போன் செய்ய முயல
பின்னாலேயே சர்ரென வந்து நின்றது பானுமதி யின் கார்
காரிலிருந்து இறங்கிய சுந்தரேசனை கண்ட பிருந்தா
ஓடி போய் கட்டிபிடித்து கொண்டாள்
எல்லோருமே திகைத்தார்கள்
பானுமதி தான்
ஏய் யார்நீ என் தம்பிய கட்டிபிடிக்க
கடுப்பானாள்
பானு அவன் கட்டிக்க போற என் தாய்மாமா பொண்ணு தான் பிருந்தா
பானுமதி பார்த்தாள்
சாரி பிருந்தா
சாரி கிடக்கட்டும் எங்களை பிரிக்காதே
சரி சரி பானுமதி
பிருந்தா வை தம்பியை நோக்கி தள்ளிவிட்டாள்
ரதிமீனா மற்றும் பொன்னி வாய்விட்டு சிரித்துவிட்டனர்
அனைவரும் புளியறை நோக்கி புறபட்டனர்
தொடரும்