Romance பத்மினி எனும் பத்தினி
#20
தொடர்ச்சி.... அடுத்த பகுதி          அதே நேரம் காலை எழுந்த உடன் குளித்துவிட்டு பள்ளிக்கு கிளம்பினான் நடராஜன். அவனது அம்மா சீதாதேவி டேய் சாப்பிட்டு போட நேரம் இருக்கு கொஞ்சமாச்சு கேட்குறான பாரு இந்த வீணாப்போனவன் அந்த இத்துப்போன பிரண்டுகள பார்க்கலனா துரைக்கு அந்த நாளே போகாது போல டேய் ஒழுங்க பள்ளிக்கூடத்துக்கு போ அந்த கட்டை சுவற்றுப்பக்கம் போகதடா நடா என கோபமாக பேசினாள் அவன் தாய் அதை காதில் வாங்கமால் வண்டியை எடுத்துக்கொண்டு சிட்டாக பறந்தான் நடா.



       டேய் வந்துட்டான்டா நடா என்று சொன்னான் இளங்கோ அருகில் நின்றவன் இக்பால் மற்றும் பிலிப்ஸ். என்ன மச்சி லேட்டா வர என்னாச்சு என்று கேட்டான் இக்பால் டேய் விடுங்கடா அவன் என்ன நம்மல மாதிரியா வேலைக்கு வேற போறான் ஊர் தலைவர் மகன் போதாக்குறைக்கு லவ்வர்பாய் வேற என நக்கலாக சொன்னான் பிலிப்ஸ் டேய் டேய் ஓட்டாதிங்கடா என்று சொன்னபடி அந்த கட்டை சுவற்றுக்கு அருகே வண்டியை நிறுத்திவிட்டு அக்கா 4 பேருக்கு சூட 4 காஃபி அப்புறம் 4 பிளேட் இட்லிக்கா என்றான் நடா.


       என்ன மச்சி காலையில சாப்பிடலையா நாங்க தான் வீட்டுல உதவாக்கரைங்க உனக்கு வீட்ல சமையலுக்கு கூட வருங்கால மாமியாரையே வீட்டுல வைச்சிருக்கியே என கேட்டான் இக்பால் டேய் விடுங்கடா தினமும் மாமியார் கையில் தானே சாப்பிடுறேன் ஒரு நாள் பார்வதி அக்கா கடையில சாப்பிட்டுக்குறேன் என்னக்கா என்றான் நடா. அப்படி சொல்லு தம்பி என்றபடி காஃபி கப்பை அனைவருக்கும் கொடுத்துவிட்டு தனது தள்ளுவண்டியில் இட்லியை அனல் பறக்க குண்டானில் இருந்து எடுத்து தட்டில் வைத்தபடி இருந்தாள் பார்வதி.



         சரி மச்சான் இன்னைக்கு என்ன கணக்கு என்றான் பிலிப்ஸ் டேய் முதலில் சாப்பிடுறோம் பிறகு பேங்குக்கு போறோம் ஹெட்மாஸ்டர் கிட்ட இரண்டு மணி நேரம் பெர்மிசன் வாங்கிட்டேன் பேங்க்ல கேட்குற டாக்குமெண்டை சப்மிட் பன்றோம் லோன் வாங்குறோம் பிசினஸ் ஆரம்பிக்கிறோம் ஜெயிக்கிறோம் என்றனர் கொரசாக.



        தட்டில் இட்லி சட்னி சாம்பார் ஊற்றி பெரிய தட்டில் எடுத்து நான்கு பிளேட்களையும் கொண்டுவந்து அவரவர் கைகளில் தந்துவிட்டு குடித்த பேப்பர் கப்களை வாங்கி குப்பை தொட்டியில் போட்டபடி கேட்டால் பார்வதி ஏம்பா நடராசா உங்கப்பா கிட்ட இல்லாத பணமா பேங்குல வாங்க போற அவர்கிட்ட கேட்டா கொடுக்க போறாரு நீ எதுக்கு பா லோன் வாங்க போறா என கேட்டால் பார்வதி.


     அதற்கு பதில் கொடுத்தான் நடா, அக்கா அப்பன் காசுல முன்னேற எனக்கு துளி கூட விருப்பம் இல்ல படிக்க வைச்சதே அவருக்கு நான் நன்றி கடன் பட்டுருக்கேன் அவங்க கிட்ட கேட்டான் கொடுப்பாங்க ஆனா அது என்னோட சொந்த முயற்சியாக இருக்காதே அக்கா என்றான் நடா. அதுவும் சரிதான் தம்பி என்றபடி தனது வேலையை பார்க்க ஒருவழியாக அனைவரும் சாப்பிட்டு முடிக்க வங்கியை நோக்கி மூவர் கிளம்ப நடா அக்காவிடம் சாப்பிட்டதிற்கு பணத்தை கொடுத்துவிட்டு அவருக்கு அருகில் ஒரு காலை விபத்தில் இழந்து சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த சந்துருவிடம் மாமா இந்தாங்க என்று தனது வருங்கால மாமியார் கொடுத்த நொறுக்கி தீனி ஒரு பாக்கெட்டை கொடுத்துவிட்டு வண்டியை எடுத்து கொண்டு அவர்களோடு வங்கியை நோக்கி பயணித்தான்
Like Reply


Messages In This Thread
RE: பத்மினி எனும் பத்தினி - by Natarajan Rajangam - 10-08-2024, 11:49 PM



Users browsing this thread: 5 Guest(s)