10-08-2024, 04:42 PM
அன்பு நண்பர்களுக்கு இனிய வணக்கங்கள்.
வழக்கம் போல மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நீண்ட இடைவெளி விழுந்து விட்டது.
கதையை துவங்கிய போது, முன்பே வெளிவந்த கதையை, சம்பவங்களை மாற்றாமல் அப்படியே காமக் கதையாக எழுத்து, இலக்கணப் பிழைகளை மட்டும் திருத்தி, கொஞ்சம் வர்ணனைகளை சேர்த்து கொஞ்சம் சம்பவங்களை விரிவாக சொல்லி, எழுதி முடிக்கலாம் என்று தான் நினைத்தேன்.
ஆனால் வாசகர்களின் அபாரமான வரவேற்பிலும், சிலரின் யோசனைகளிலும் எனக்கு கொஞ்சம் பெரிய எழுத்தாளர் என்ற எண்ணம் வந்து விட, கதையில் நிறைய மாற்றங்களை செய்தேன்.
கதையின் இறுதி பகுதி வரை மனதளவில் யோசித்து வைத்து விட்டாலும், எனக்கு இந்த கதையின் மேல் ஆர்வம் குறைந்து வேறொரு கதையில் கவனம் செலுத்த துவங்கி விட்டேன். அதனால் இந்த கதையை எழுத ஆர்வம் காட்டவில்லை.
அதுவும் வேறொரு எழுத்தாளரின் கதை தான். என்ன கதை என்பதை சில நாட்கள் கழித்து சொல்கிறேன்.
மனதில் ஒரு யோசனை இருந்தது. வாசகர்களிடம், அந்த இன்னொரு கதையின் எழுத்தாளரிடமும் அனுமதி வாங்கி புதிய கதையை எழுத துவங்கலாமா என்று.
பின் அப்படி அந்த கதையில் முழு கவனத்தையும் செலுத்த துவங்கி விட்டால், இந்த கதை முடிக்க முடியாமலே போய் விடும் என்பதால், இந்த கதையில் சில பாகங்களை பதிவு செய்து விட்டு, முடிந்தால் இரண்டு கதைகளையும் எழுத ஆரம்பித்து, இந்த கதையை முடிக்க முயற்சி செய்வோம் என்று நினைத்தேன்.
கொஞ்சம் மனதில் வலுக்கட்டாயமாக ஒரு ஆர்வத்தை உண்டாக்கிக் கொண்டு தான் இந்த பகுதியை எழுத ஆரம்பித்திருக்கிறேன்.
சில வசதிகளுக்காக இனி கதை அமுதா டீச்சர் சொல்வது போல இல்லாமல் கதையாசிரியர் சொல்வது போல தொடரும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
கதையின் அடுத்த பகுதியை முடிந்த வரை எழுதி இன்று இரவு பதிவு செய்யலாம் என்று நினைத்திருக்கிறேன்.
இப்படி பெரிய பெரிய இடைவெளிகள் விட்டு கதை எழுதுவதற்கு யாரும் திட்ட வேண்டாம். மன்னித்து தொடர்ந்து கதையை படித்து ரசித்து, கருத்துகள் தெரிவித்து ஆதரவு தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.
மன்மத கதைகளின் ரசிகன். மன்மதன்.