Romance பத்மினி எனும் பத்தினி
#13
நீண்ட நாட்களாக கிடப்பில் போட்டுவிட்டேன் இனி குறிப்பிட்ட இடைவெளியில் கதையை எழுத உள்ளேன் நண்பர்களே,



        அடுத்த பகுதி, கோகுல் கவலையுடன் பத்மினி படத்தை தனது போனில் பார்த்தபடி அழுது கொண்டே உறங்கிவிட்டிருந்தான் இரவு பத்து மணி வாக்கில் அவன் அறையில் நுழைந்த முகுந்தன் வாத்தி (கோகுலின் தந்தை)  அவனது தலைகு அருகில் இருந்த போனை எடுத்து பார்க்க அதில் பத்மினி படங்களாக இருந்தன.

இந்த வீணாப்போனவன் கிட்ட எத்தனை தடவை சொல்றது ஒன்னும் இல்லாத இந்த பத்மினி தான் வேணும்னு ஏன் இப்படி கிடையா கிடக்குறான் நாம இவனுக்கு பார்த்துட்டு வந்துருக்குற பொண்ணு வீட்ல 50 சவரன் நகையும் காரும் தரதா சொல்லிருக்குறாங்க இந்த பத்மினிய கட்டிக்கிட்டா என்ன கிடைக்கும் அவங்க ஆத்தா காரி என்கிட்ட வந்தே சொல்லிட்டு போனா நகை எதுவும் பெருசா போட வழியில்ல கொஞ்சம் லோயர் மிடில் கிளாஸ் பையன் அளவுலயே பாருங்க சார்ன்னு சொல்லிட்டு போகுது இந்த பத்மினிய கட்டிக்கிட்ட யார் இவனை மதிப்பா என்ற மனதுக்குள் பேசிக்கொண்டு அவனது போனில் இருந்த பத்மினி படங்கள் அனைத்தையும் அழித்துவிட்டு கதவை சாத்திவிட்டு வெளியேறினார் முகுந்தன் வாத்தி.


       மறுநாள் காலை எழுந்த முகுந்தனுக்கு வழக்கம் போல போன் எடுத்து பத்மினி முகத்தில் கண்விழிப்பது அவனது வாடிக்கை எடுத்து பார்த்தால் அதில் அவன் பெண்பார்த்துவிட்டு வந்த போது அந்த பெண்ணுடன் போனில் தன் நண்பன் நடராஜன்  எடுத்த படம் முகத்திரையில் இருக்க இவனுக்கோ அதிர்ச்சி இது எப்படி சாத்தியம் இரவு நான் தூங்கும்போது கூட பார்த்தேனே உடனடியாக எழுந்த கோகுல் தன் அப்பாவிடம் சென்று முறையிட நான் தான் மாற்றி வைச்சேன் இனி உன் வாழ்வில் வாடிப்பட்டி இந்து தான் இருக்கனும் கண்ணா பத்மினி உனக்கு கிடையாது பொண்ணு பார்த்துட்டு வந்த பிறகு அடுத்தவளை நினைக்க கூடாது வரபோற பொண்டாட்டிக்கு நல்லவனா நடக்க பழகு இந்துக்கு போன் போட்டு பேசு சரியா என பதில் அளித்துவிட்டு நகர்ந்தார் முகுந்தன்.


      எந்தவித எதிர்ப்பும் காட்டமுடியாமல் கூனிக்குருகி போனான் கோகுல் என்ன செய்ய அவன் அப்பா பிள்ளையாகிற்றே தன் காதல் விவகாரத்தை நண்பனிடம் சொன்னால் மட்டுமே தனக்கு விடிவு கிடைக்கும் என்று நம்பினான் கோகுல் ஆனால் இதில் சிக்கல் பத்மினி இவனை அண்ணன் என்று அழைக்கிறாளே என்ன செய்ய இருவரும் காதலித்தால் நண்பனிடம் சொன்னால் சேர்த்து வைப்பான் இங்கே நான் மட்டும் தானே காதலிக்கிறேன் அவளிடம் என் காதலை கூட சொல்லவில்லையே என்ன வாழ்கை இது என புலம்பியபடி வேலைக்கு புறப்பட்டான் கோகுல்.
[+] 2 users Like Natarajan Rajangam's post
Like Reply


Messages In This Thread
RE: பத்மினி எனும் பத்தினி - by Natarajan Rajangam - 08-08-2024, 09:41 AM



Users browsing this thread: 7 Guest(s)