07-08-2024, 11:44 PM
(This post was last modified: 07-08-2024, 11:46 PM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
Episode - 68
நடந்தது என்ன? என்று புரியாமல் ராஜா அமைதியாக இருந்தான்..
காலிங்பெல் ஓசை கேட்டு,கதவை திறக்க ஷன்மதி தான் வந்து இருந்தாள்."உள்ளே வா ஷன்மதி" என சஞ்சனா அழைத்தாள்..
ராஜாவின் அம்மாவிற்கும் நடப்பது என்ன என்று புரியவில்லை.
ராஜா இருவரையும் பார்த்து,"நான் உங்க ரெண்டு பேர்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்."என்றான்.
குழந்தை சாராவை அவன் அம்மாவிடம் கொடுக்க,அது செல்லாமல் அடம் பிடித்தது.
"டேய் செல்லம்,அப்பா எங்கேயும் போகல..மேலே மொட்டை மாடி தான் போறேன்..உன் அம்மா எனக்கும் உனக்கும் தெரியாம ஏதோ தகிடுதத்தம் பண்ணி இருக்கா..அதை என்னன்னு கொஞ்சம் விசாரிச்சிட்டு உடனே வரேன்.."
ராஜாவின் அம்மாவும்"டேய் ராஜா,மூணு பேரும் என்ன ரகசியமா என்ன பண்ணி இருக்கீங்க..!எதுவா இருந்தாலும் இங்கேயே பேசு..நானும் தெரிஞ்சிக்கனும்"
"அம்மா,இது எனக்கும்,என் மனைவிக்கும் இருக்கும் விசயம்.சில விசயங்கள் தெரிந்து கொள்ளாமல் இருப்பது தான் நல்லது.கொஞ்சம் அமைதியா இருங்க..நான் போய் பேசிட்டு வரேன்..ரெண்டு பேரும் மேலே வாங்க..!"என விறுவிறுவென மேலே சென்றான்.
சஞ்சனாவை பார்த்து,"உண்மையை சொல்லு சஞ்சனா,நீ எப்போ என் வாழ்வில் வந்தாய்..நீ என் மனைவி என்றால் நீயே எதற்கு ஷன்மதியை எனக்கு திருமணம் செய்து வைத்தாய்.உண்மையில் எனக்கு என்ன நடந்தது.!மறைக்காமல் சொல்லு.."
சஞ்சனா சற்று தயக்கத்துடன்,ஆரம்பத்தில் அவனுடன் ஏற்பட்ட காதலையும்,பிறகு ஷன்மதி காதலை விட்டு கொடுத்ததையும் சொன்னாள்.அவர்களுக்குள் ஏற்பட்ட சந்திப்புகளை ஒவ்வொன்றாக சொல்ல சொல்ல அவனுக்கு பழைய நினைவுகள் ஞாபகம் வர ஆரம்பித்தது."நான் உன்னை விரும்பியது போலவே ஷன்மதியும் உன்னை விரும்பினாள் ராஜா..ஆனா உன்னிடம் முதலில் நான் காதல் சொன்னதால் நீ என்னை விரும்பினாய்..நம் இருவருக்கும் திருமணம் நடந்தது.ஷன்மதிக்கும் வேறு இடத்தில் திருமணம் நடந்தது.ஆனால் உன்னை மனதில் வைத்து கொண்டு அவளால் வேறு ஒருவனுடன் வாழ முடியவில்லை.அதுவும் அந்த அரக்கனிடம் தினம் தினம் சித்திரவதை அனுபவிக்க முடியாமல் இந்தியா வந்தாள்.அவளோட ஒரே ஆதரவான அவள் அப்பாவும் அவளை கைவிட திருச்சியில் தனிமரமாக உன்னையே நினைத்து வாழ்ந்து கொண்டு இருந்தாள்.அப்ப தான் உனக்கு திருச்சி டிரான்ஸ்ஃபர் ஆச்சு.உனக்கு ஒரு accident ஆகி மூன்று வருட நினைவுகள் எல்லாம் மறந்து போச்சு..அதில் தான் நாம் சந்தித்த நினைவுகள்,கல்யாணம் பண்ணியது எல்லாம் உனக்கு மறந்து போச்சு.ஷன்மதி தான் விபத்துக்குள்ளாகி இருந்த உன்னை காப்பாற்றினாள்,அப்போ நான் அவள் வீட்டுக்கு போன பொழுது தான் உன்னையே அவ இன்னும் நினைச்சிட்டு இருப்பதை பார்த்தேன்.பாலைவனமாய் இருந்த அவள் வாழ்வில் கொஞ்சமேனும் பசுமையை தர அவளை உனக்கு கல்யாணம் செய்து வைத்தேன்.."என்று சஞ்சனா சொல்லி முடிக்க,
"நான் என்ன விளையாட்டு பொருளா..சஞ்சனா..!இன்னோருவரிடம் எடுத்து கொடுக்க..!எனக்கென்று உணர்வுகள் கிடையாதா..!எனக்கு ஏற்பட்ட தற்காலிக ஞாபக மறதியை வச்சு நீ விளையாடி இருக்கே.."
ஷன்மதி குறுக்கே வந்து,"அப்படி எல்லாம் இல்ல ராஜா.."என இடை நிறுத்தினாள்.
ராஜா உடனே.."ஷன்மதி இதில் உன் தப்பு சின்னது தான்.ஆனா சஞ்சனா செய்தது தான் பெரிய தப்பு..இந்த தப்போட ஆரம்ப புள்ளியே அவ தான்..சொல்லு சஞ்சனா ஏன் இப்படி பண்ணே..!"
சஞ்சனா அவனிடம்,"டேய் புரிஞ்சிக்கோடா..!நான் உன்மேல உயிரையே வைச்சு இருக்கேன்.அது எந்த அளவுக்கு என்றால் உன்னை நேசிக்கும் ஒருவர் கூட கஷ்டபடக்கூடாது என்று நினைத்தேன்..ஷன்மதி உன்னை உயிருக்கு உயிராய் காதலித்தாள்.அவள் தனியா கஷ்டப்படுவது நீயே கஷ்டபடுவது போல எனக்கு தோணுச்சு..அந்த நேரத்தில் இது தான் சரியென தோன்றியது. ஆனா உன்னை பிரிந்த இந்த மூன்று மாதத்தில் நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா..!ஒவ்வொரு நாளும் உன்னை பிரிஞ்சி துடிச்சேன்.அப்போ எனக்கு பெருமளவு உறுதுணையாக இருந்தது நமக்கு பிறந்த குழந்தைகள் தான்.அது போல ஷன்மதிக்கும் உன்னோட நினைவா அவளுக்கு ஒரு குழந்தை பிறந்தால் அவளும் சந்தோஷமா இருப்பா தானே..!அதை தான் நான் விரும்பினேன்.."
ராஜா கோபத்துடன்,"அப்போ ஜார்ஜ் கூட தான் உன்னை விரும்பினான்..உன்னை அவனுக்கு தூக்கி கொடுத்து விடட்டுமா..!"
"டேய் ராஜா, ஜார்ஜ் என்மேல வச்சி இருந்தது வெறும் lust.ஆனா ஷன்மதி உன் மேல வச்சி இருப்பது காதல்..அப்போ சார் கூட தான்,முதன்முதலா என்னிடம் லவ் சொல்ல வந்தப்போ,ஜார்ஜ் என்னிடம் புரோபோஸ் பண்ணியதை பார்த்து அவனுக்கு விட்டு கொடுத்து தானே ஒடினே..அதுவும் என் மேல இருக்கும் அன்பினால் தானே..அதை தான் நான் இப்ப செய்தேன்.."
ராஜா சற்றும் தயங்காமல்,"இங்கே பாரு சஞ்சனா,அப்ப கூட நான் அங்கே ஜார்ஜ் விருப்பத்தை பார்க்கல.என்னோட சஞ்சனா விருப்பப்பட்டால் என்று தான் விலகினேன்.ஓருவேளை என் சஞ்சனாவிற்கு விருப்பம் இல்லை என்றால் யாருக்கும் நான் அவளை விட்டு கொடுத்து இருக்கவே மாட்டேன்.அதுவும் என் காதலியா இருக்கும் பொழுதே..!அது போல நீ என்னோட விருப்பத்தை தான் பார்த்து இருக்க வேண்டும்.."என்று சொல்ல சஞ்சனா கலங்கிய கண்களுடன் அவனை கட்டி கொண்டாள்.
"சாரிடா..!நான் பண்ண தப்பு இப்போ தான் புரியுது..என்னை மன்னிச்சு விடுடா.."
அவள் முகத்தை கைகளில் ஏந்தி,"மன்னிக்க கூடிய காரியமா மேடம் பண்ணி இருக்கீங்க" என்று கேட்டான்.
ராஜா ஷன்மதியிடம் திரும்பி,"சாரி ஷன்மதி,என்னையும் அறியாமல் உன் வாழ்வில் பாதிப்பு வரும்படி நான் நடந்து கொண்டேன். என் வாழ்வில் சஞ்சனாவை தவிர வேறு யாரையும் ஏற்றுகொள்ள என் மனம் மறுக்கிறது.அவளை யாருக்கும் விட்டு கொடுக்கவும் என் மனம் தயாராக இல்லை.உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைத்து கொடுக்க வேண்டியது என் பொறுப்பு.."
"என்னையும் மன்னிச்சிடு ராஜா..உங்க ரெண்டு பேர் வாழ்வில் மீண்டும் நான் குறுக்கே வந்தது தான் தப்பு..சஞ்சனா நினைத்தது நடந்து விட்டது..புரியவில்லையா.."என்று அவள் சொல்ல,
ராஜாவும்,சஞ்சனாவும் புரியாமல் விழித்தார்கள்.
ஷன்மதி லேசாக முறுவலித்து, "இப்போ நான் கர்ப்பமாக இருக்கேன் ராஜா..உன்னோடு கற்பனையில் வாழ்ந்து கொண்டு இருந்த எனக்கு, நிஜத்திலேயே 3 மாசம் கூட வாழும் பாக்கியம் கிடைத்தது.அதுக்கு சாட்சி தான் என் வயிற்றில் வளரும் குழந்தை. இது எனக்கு சஞ்சனா கொடுத்த பாக்கியம்..எனக்கு இது போதும்..என்னோட முன்னாள் கணவனை பற்றி என் அப்பாவிற்கு எல்லா விசயமும் தெரிந்து விட்டது..அவரும் என்னை வீட்டுக்கு திரும்ப வர சொல்லி விட்டார்.என்னை சூழ்ந்து இருந்த துயர மேகங்கள் எல்லாம் விலகிவிட்டன.."
ராஜாவை நெருங்கி ஷன்மதி வந்தாள்.சஞ்சனாவை பார்த்து,"உன்னோட ராஜாவிற்கு கடைசியாக ஒரு முத்தம் மட்டும் கொடுக்கிறேன்"என அனுமதி கேட்க,சஞ்சனாவும் சம்மதம் சொன்னாள்.
ராஜாவின் கன்னத்தில் இருபுறம் கை வைத்து அவன் நெற்றியில் ஈர இதழ்களை பதித்துவிட்டு விலகினாள்.
"நான் வரேன் ராஜா,வரேன் சஞ்சனா..இதற்கு மேல் உங்கள் வாழ்க்கையில் இருவரின் தோழியாக மட்டுமே வருவேன்."என சொல்லிவிட்டு விறுவிறுவென சென்று விட்டாள்..
சஞ்சனாவை பார்த்து ராஜா குறுகுறுப்பாக,"அப்புறம் மேடம்,ஷன்மதி நெற்றியில் தான் முத்தம் கொடுத்தா,தாங்கள் கொஞ்சம் என் இதழில் கொடுக்கலாமே.."
"அதெல்லாம் கொடுக்க முடியாது போடா..உன்னை பிரிஞ்சி மூணு மாசம் நான் எப்படி தவித்து இருப்பேன். நீயும் அந்த மாதிரி ஒரு மூணு நாள் கஷ்டப்படு..!"
"நீ இல்லாட்டி என்ன..!ஷன்மதி கேட்டா கொடுக்க போறா..இரு ஷன்மதியை கூப்பிடறேன்,"என அவன் வாயை திறக்க,அவள் செவ்விதழ்களை வைத்து அவன் வாயை உடனே பொத்தினாள்.
(முற்றும்)