05-08-2024, 08:03 PM
#கனவே_நிஜமாகு
தொடர் 28
கார் திருநெல்வேலி சாலையில் விரைந்து கொண்டிருக்க
ரதிமீனா கேட்டாள்
மாமா இருட்டுகடை அல்வா கிடைக்குமா
இருட்டினா தான் கிடைக்கும்
இப்போ கிடையாது
ஏன் மாமா இப்படி
இரவில் தானே மல்லிகையும் அல்வாவும் வாங்குவாங்க பகல்லயா
லூசா நீ போடா மாமா
செல்வ தேவர் சிரித்தார்
ரதிம்மா அந்த கடை அல்வா அப்படி தான் இரவு தொடங்கினா 3 மணி நேரத்தில் விற்று தீர்ந்துவிடும்
அந்தவகை அல்வா சூடா இருக்கும் போதே சாப்பிட்டா தான் சுவை இருக்கும்
சூடாறி போனா சுவையோ மணமோ இருக்காது
அப்படியா அண்ணா மாலைப்பொழுது வாங்கிடலாம்
எதுக்கு மீனா அதுக்கா
ரதிமீனா முறைத்தாள்
அதெல்லாம் நான் பார்த்துக்கறேன் வீட்டுக்கே வரவழைக்கிறேன் அந்தகடை ஓனர் நம்ம உறவு தான் மா
செல்வதேவர் சொல்ல வீடு வந்துவிட்டது
ஹாலில் ஏதெச்சையாக வந்த பொன்னி
வீட்டுக்குள் நுழையும் இருவரை பார்த்து ஷாக்காகி நின்றாள்
பாலகிருஷ்ணன் சகுந்தலா
எப்படி விபத்தில் இறந்து கண் முன்னே
பிரமையா தன்னையே பார்த்து கொண்டாள்
பொன்னி என்ன பார்க்கிறே
இவங்க எப்படி உயிரோடு
அடி மண்டு
இவன் சிவநேசன் இவர் என் மாமாவோட தங்கை மக சொல்லி முடிக்க
தன் கண்களையே நம்ப முடியவில்லை
பாலகிருஷ்ணன் அப்பாவிடம் சொல்லி அடம்பிடித்து செல்வதேவரை எனக்கு கட்டிவைத்த சிவநேசனா இது அப்பாவை போல அச்சு அசலாக மனைவியோ அம்மாவை போல
என்ன விந்தை
ஏய் சிவனேசா எங்கேடா போனே
பாசத்தோடு அணைத்து கொண்டாள்
செல்வதேவன் முழுவதும் பொன்னியிடம் சொன்னான்
பொன்னி கண்கலங்கினாள்
இருடா தேனீர் கொண்டுவர்றேன்
செல்வ தேவரும் உடை மாற்ற சென்றுவிட்டார்
யாரும் இல்லாததை சாக்காக வைத்து ரதிமீனா விடம் எல்லை மீற போக
வாசலில் சலனம்
இருவரும் திரும்ப அழகிய தேவதை வந்து கொண்டிருந்தாள்
இருவரை பார்த்து புருவம் உயர்த்தியவள்
யாரு நீங்க
சிவநேசன் முந்திக் கொண்டான்
நாங்களா உன்னை பொண்ணு பார்க்க வந்தவங்க தான்
என்னையா மூஞ்சை பாரு ஓணான் மூக்கு
அதுசரி ஓணான் மூக்கு மாமனுக்கு எலிமூக்கு பொண்ணு சரியாதானே இருக்கும்
நான் எலிமூக்கா லூசா நீ
அப்ப கிளிமூக்கா நீ யப்பா நீ அழகாவே இல்ல
இவளை பார்த்தியா குரங்கு மூக்கா அழகா இருக்கா
ரதிமீனா சிரித்துவிட்டாள்
இளம்பெண்ணுக்கோ கோபம் பொங்க
அம்மா காட்டுகத்தல் கத்தினாள்
என்ன மீனா இங்கே இடி சத்தம் மழை வரப்போகுதா
மாமியார் வர போகுது போய்யா மண்டைல போட்டேனா மெண்டல் ஆயிடுவே
என்னடி இவ்ளோ கத்தறே
அம்மோவ் இந்த சளிமூக்கு என்னை கட்டிக்க போகுதாம்
அதனால என்ன கட்டி வைச்சிட்டா ட போச்சி
அம்மா லூசா நீ அப்பா வரட்டும் சொல்றேன்
செல்வதேவரும் வர
அப்பா இந்த குரங்கு மூஞ்சை கட்டிக்க சொல்லுது அம்மா
பிருந்தா இவரை
தாராளமா கட்டிக்கோ மா
இதென்ன கூத்து
பிருந்தா அழ ஆரம்பித்து விட்டாள்
ரதிமீனா சிரிப்பை அடக்க முடியாமல்
சட்டென கைபேசி எடுத்து புகைப்படத்தை காட்டினாள்
பிருந்தா முகம் பிரகாசமானது
யாருங்க இவரு
இவர் தான் மாப்பிள்ளை இந்த குரங்கு மூஞ்சி இல்லைடி
அப்பா நிசமாவா என்னை இவருக்கு பெண் பார்க்க வந்தாங்க
செல்வதேவர் சிவனேசனை பார்க்க
சிவநேசன் சிரிப்போடு
வீட்டுக்குள் இவ நுழையும் போதெ பொன்னி அக்கா சாயலை வைத்தே உங்க மகள்னு தெரிந்தது
என்னோட இரட்டை குழந்தைகளில் பானுமதி க்கு வரன் பார்த்துட்டேன்
சுந்தரேசனுக்கு பொருத்தமான பெண்ணை தேடிட்டு இருந்தேன் கிடைச்சிடுச்சி மாமா
பிருந்தா இவர் என்னோட சொந்த அக்கா மகன் தான் இவரோட பையனை கட்டிக்க சம்மதமா
ம் ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டு ஓடி போனாள் 18 வயது நிரம்பிய பிருந்தா வுக்கு காதலோ ஏதும் பிடிக்காது
சுந்தரேசன் முகத்தை கண்டபிறகு தானாகவே காதல் பிறந்துவிட்டது
மாமா பாரு வெக்கத்தை
மறுபடியும் பிருந்தா திரும்பி வந்தாள்
அத்தை ரதிமீனா வையே தயக்கத்தோடு பார்த்தாள்
ரதிமீனா என்னம்மா மருமகளே
அந்த போட்டோவை தர்றிங்களா
என்னாது போட்டோவை பார்த்து டூயட் பாடபோறியா
போங்க அத்தை
ரதிமீனா சிரித்துக் கொண்டே
சுந்தரேசன் வாட்சப் நெம்பர் நீயே வீடியோ கால் பன்னு போ
நெம்பரை வாங்கி கொண்டு அறையை நோக்கி குஷியாக ஓடினாள்
ரதிமீனா பொன்னி சிவநேசன் நால்வரும் பிருந்தா துள்ளி குதித்து ஓடுவதை கண்டு கலகலவென சிரித்தார்கள்
தொடரும்