05-08-2024, 07:57 PM
free image hosting
#கனவே_நிஜமாகு
தொடர் 26
நீதிபதி
அரசு தரப்பு வாதம் முதலில் தொடங்கட்டும் எதிர் தரப்பு பிறகு குறுக்கு விசாரணை செய்யலாம்
சிவனேசன் பணிவாக சரிங்க ஐயா
நீதிபதி
ஏம்மா ஏன் கொலை செய்தே காரணம் என்ன
ஐயா கொலை செய்யும் எண்ணமே எனக்கில்லை
நான் கார்மேகத்திடம் கொடுத்த 60 லட்சம் பணத்தை வாங்க தான் அவரோட வீட்டுக்கு போனேன்
மை லார்ட் இது சுத்த பொய்
என்ன அரசுதரப்பில் மறுப்பா
அவர் முழுதும் சொல்லி முடிக்கல அதுக்குள்ளயா
மன்னிச்சிடுங்க மை லார்ட்
எத்தனை மன்னிப்பு கேட்பாரோ
நீ மேற்கொண்டு சொல்லுமா
சொல்றேன் ஐயா பணம் கேக்கபோய் தான் கார்மேகம் அடியாட்களோடு சேர்ந்து என்னை கடுமையாக தாக்கினார்கள் கொலை செய்வதாக மிரட்டினார்கள்
அதிகமா அடி வாங்கியதால் வலி தாங்காமல் கார்மேகம் அவரை கன்னத்துல அடிச்சிட்டேன்
வெறி பிடிச்சவர் போல தலைமுடியை கொத்தாக பிடித்து தரதரன்னு பஞ்சாயத்து மேடைவரை இழுத்துட்டு போய் கத்தியால கழுத்தை அறுக்க பார்த்தார்
பயந்து போனேன் என் ஒரே மகன் உயிருக்கு போராடும் போது நான் செத்து போனா மகனோட கதி அதனால தான் சரெலென கத்தியை பிடுங்கி அவர்கழுத்தில் வைத்தேன் கோபத்தால அறுத்துட்டேன்
இதாங்க ஐயா நடந்தது
கார்மேகம் மனைவி
எழுந்து கத்தினாள்
இவ சொல்வதெல்லாம் பொய்
யாரும்மா நீங்க எதை சொல்வதென்றாலும் சாட்சி கூண்டில் வந்து சொல்லு
கூண்டில் ஏறினாள்
உன் பெயர் என்ன
இருளாயி
சரி இவர் சொல்வதெல்லாம் பொய்னு எதை வைத்து சொல்கிறீர்கள்
மை லார்ட் இவர் கண்ணால பார்த்த சாட்சி தான்
இருளாயி அம்மா பிரியா சொல்வது பொய்னு நீதிபதி முன் விளக்க வேண்டும்
பிரியா உங்க வீட்டுக்கு வரவே இல்லையா
சத்தியமா வரவே இல்லை
அப்போ எப்படி பஞ்சாயத்து மேடையில் கொலை செய்திருக்கார் இவர்
என் கணவரை பிரியா தலைமுடியை பிடித்து தரதரனு இழுத்து போவதை வீட்டு வேலையாள் சொல்ல தான் பதறியடித்து ஓடி போய் பார்த்தேன் கோழியை அறுப்பது போல அறுத்து போட்டுட்டா
அதுசரி பிரியா 60 லட்சம் கொடுத்தது உண்மையா
கிடையாது அவ கணவரிடம் தான் தினசரி பணம் வாங்குவா அவளிடம் அவ்வளவு பணம் ஏது சத்தியமா கிடையாது
மை லார்ட் பிரியா பணம் கிடைக்காத வெறியில் தான் கொலை செய்திருக்கிறார் நேரில் பார்த்த இருளாயி அம்மாவே சாட்சி
சிவநேசன் எழுந்தான்
நீதிபதி ஐயா சாட்சியை குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும்
மை லார்ட் சாதாரண பொதுமக்கள் குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க கூடாது வழக்கறிஞர் மட்டுமே குறுக்கு விசாரணை செய்ய முடியும்
அரசுதரப்பு ஐயா அப்படினு சட்டத்தில் எந்த பிரிவு சொல்கிறது
ஆளானபட்ட ஜனதிபதி மீதே சாதாரண குடிமகன் புகாரளிக்கவோ வழக்கு தொடரவோ அனுமதிக்கும் பட்சத்தில் சாதாரண குடிமகன் தானே வாதாட முடியும் என்பதும் சட்டமேதை அம்பேத்கர் வைத்திருக்கார் அதையெல்லாம் மறைத்து வழக்கறிஞர்கள் மட்டுமே காசு பார்க்கனும்னு சட்டம் நீங்களே போடறிங்களா
அரசு வழக்கறிஞர் முகத்தில் ஈயாடவில்லை சட்டத்தையே தன் பாக்கெட் ல போட்டிருப்பான் போல
இருளாயி மாட்டிக்கிட்டா மௌனமாக அமர்ந்துவிட்டார்
நீதிபதி
பொதுமக்கள் யாரும் வாதாடவோ சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை செய்யவோ அனுமதி உண்டு
நன்றிங்க ஐயா
சிவநேசன் இருளாயியிடம்
சம்பந்தப்பட்ட பிரியா உங்க வீட்டுக்கே வரலைனு தானே சொல்கிறீர்கள் உண்மையா
உண்மை தான்
அப்படியா அப்போ உங்க அடியாள் கட்டையன் உங்க வீட்டுல வந்து பிரியா தன்னோட மகன் வைத்திய செலவுக்கு பணம் கேட்டு மன்றாடியதா சொல்றாரே
அப்போ எப்படி வீட்டுக்கே வரலைனு சொல்றிங்க
இருளாயி மென்று விழுங்கினாள்
என்னம்மா வெத்திலை போட்டிருக்கியா துப்ப முடியாம தவிக்கறிங்களே கொஞ்சம் வெளியே போய் எச்சிலை துப்பிட்டு இங்க வந்து உண்மையை துப்பிடுங்க
இருளாயி பேந்த பேந்த விழித்தாள்
அரசு வக்கில் பக்கத்தில் இருக்கும் மைதிலி யிடம் கிசுகிசுப்பாக
என்ன மேடம் வழக்கறிஞர் கூட தோற்றுவிடும் திறமை கொண்டுள்ளாரே
யோவ் அவர் சாதாரண மானவர் இல்லை கார்மேகம் பல கொலைகளை செய்தவன் இந்தபல கொலை கேசில் நீயும் உடந்தைனு வாதாடினாலும் நீ அவ்ளோதான் வாயை மூடிக்கிட்டு இரு
நீதிபதி ஐயா இவர் பதில் சொல்ல தடுமாறுவதில் இருந்தே இவர் சொல்வதில் இருந்தே புரிந்திருக்கும் ஐயா
ஏன்மா பிரியா 60 லட்சம் நிச்சயமாக தரலையா
நிச்சயமாக கிடையாது அவ்வளவு பணம் அவளிடம் ஏது
அப்படியா சரிம்மா
நீதிபதி ஐயா கார்மேகம் கணக்குபிள்ளையிடம் விசாரிக்க வேண்டும் அவரை அழையுங்கள்
அமீனா
நீலகண்டன் நீலகண்டன் கணக்குபிள்ளையை அழைக்க கூண்டில் ஏறினார்
கணக்குபிள்ளை ஐயா பிரியாவின் தந்தை பூர்வீக நிலத்தை விற்க ஏற்பாடு பன்னது நீங்க தானே
அது உண்மை தான்
அப்போ நிலம் விற்கபட்ட தொகை எவ்வளவு அந்த பணம் யாரிடம் சென்றது
நிலம் விற்கபட்ட தொகை 75 லட்சம் பணம் இருளாயி அம்மா கணக்கில் தான் வரவு வைக்கபட்டுவிட்டது
பிரியா விடம் 60 லட்சம் தான்னு பொய் சொல்லி இருக்கார் இருளாயி
நன்றி ஐயா பயபடாமல் உண்மையை சொன்னதற்கு
உண்மைய சொல்லாம என்ன செய்ய படுபாவி என் மகளையே கெடுத்து மகளும் தற்கொலை செய்துட்டாளே
சிவநேசன் மனம் வலித்தது நீதிபதிக்கும் தான்
ஐயா சொன்னதை கேட்டிங்களா இருளாயி எவ்வளவு பொய் சொல்கிறார்
கார்மேகம் வீட்டில் சாதாரண மக்கள் பத்துபேர் போய் சண்டை போட்டாலும் அவரோட அடியாட்கள் அடித்து கொன்றுவிடுவார்கள்
அப்படி இருக்க
பலம் குறைந்த பிரியா வீட்டில் இருக்கும் அடியாட்களை மீறி கார்மேகம் மீது கை வைக்க இயலாது
கொலைக்கு காரணமே கார்மேகம் மற்றும் இருளாயி இருவரும் பிரியா பணத்தை அபகரிக்க
பிரியாவை பஞ்சாயத்து மேடைவரை இழுத்து வந்து வீட்டில் திருடியதாக திருட்டுபட்டம் கட்டதான் பொது மேடைவரை இழுத்து வந்துள்ளனர்
தன்னோட மகன் உயிருக்கு போராடும் நிலையில் தன்னோட பணத்தையும் தராமல் தனக்கு திருட்டுபட்டம் கட்ட முயலும் கார்மேகத்தை கொன்றிருக்கிறார்
கார்மேகத்தை கொல்லவில்லையேல் ஊர்மக்கள் கல்லடியில் பிரியா செத்திருப்பாள் இவரோட மகனும் அனாதை யாக இருப்பான்
அதைவிட கார்மேகம் 11 கொலைகள் செய்தவர் பல குடும்ப சொத்தை அபகரித்தவர்
இவர் மீது சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் குற்றவழக்குகள் நிறைய உள்ளது குற்றவழக்கு பெருகியதால் சம்பந்தப்பட்ட காவல் துறை யே கார்மேகத்தை என்கவுண்டர் செய்யவும் திட்டமிட்டுள்ளது
ஊரையே கடித்து சாகடிக்கும் நச்சு பாம்பை தான் பிரியா அடித்து கொன்றிருக்கிறார் காவல் துறை செய்ய முயன்ற என்கவுண்டரை பிரியா செய்துவிட்டாள்
இவருக்கு தண்டனை ஏதும் தராமல் மன்னித்து விட பணிவோடு வேண்டுகிறேன்
நீதிபதி
அரசுதரப்பு பதில் என்ன
மை லார்ட் எதிர்தரப்பு சொன்னதில் மனது வலிக்கிறது
அவசர கொலை மற்றும் பழிவாங்குவதற்கு என கொலை செய்தா தண்டிக்கலாம்
தன்னோட சொத்தை பிடுங்கி கொலையும் செய்ய முயலும் கிரிமினலை அடித்து கொன்றாலும் குற்றமில்லை பிரியா வுக்கு எதிராக வாதாட அரசுதரப்பில் ஏதுமில்லை
நீதிபதி தீர்ப்புக்கு அரசுதரப்பு கட்டுபடுகிறது
சொல்லிவிட்டு அமர்ந்தார்
கூட்டமே நீதிபதி தீர்ப்புக்காக காத்திருக்கிறது
தொடரும்