Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
வில்லியம்சன் சதம்: நியூசி., 'திரில்' வெற்றி

மான்செஸ்டர்: விண்டீஸ் அணிக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் நியூசிலாந்து அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்றது.



[Image: Tamil_News_large_2304221.jpg]




இங்கிலாந்து மண்ணில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. மான்செஸ்டரில் நடந்த லீக் போட்டியில் நியூசிலாந்து, விண்டீஸ் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற விண்டீஸ் கேப்டன் ஹோல்டர் பவுலிங் தேர்வு செய்தார்.

நியூசிலாந்து அணி துவக்கத்திலேயே அதிர்ந்தது. காட்ரெல் 'வேகத்தில்' கப்டில், முன்ரோ டக் அவுட்டாகினர். கேப்டன் வில்லியம்சன், ராஸ் டெய்லர் ஜோடி பொறுப்புடன் விளையாடியது. டெய்லர் (69) அரை சதம் கடந்தார். வில்லியம்சன் (148) ஒரு நாள் அரங்கில் 13வது சதம் விளாசினார். நியூசிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 291 ரன்கள் எடுத்தது. விண்டீஸ் சார்பில் அதிக பட்சமாக காட்ரெல் 4 விக்கெட் வீழ்த்தினார்.


[Image: gallerye_030422365_2304221.jpg]








பிராத்வைட் சதம்

விண்டீஸ் அணிக்கு ஷாய் ஹோப், பூரன் தலா ஒரு ரன்களில் ஆட்டமிழந்தனர். ஹெட்மயர், கெய்ல் அரை சதம் விளாசினர். பெர்குசன் 'வேகத்தில்' ஹெட்மயர் (54), கேப்டன் ஹோல்டர் (0) சிக்கினர். கெய்ல் 87 ரன்கள் (8 பவுண்டரி, 6 சிக்சர்) எடுத்தார். லீவிஸ் டக் அவுட்டானார். பொறுப்புடன் விளையாடிய கார்லோஸ் பிராத்வைட் சதம் விளாசினார். இவர் பவுல்ட்டின் அபார 'கேட்ச்சில்' 101 ரன்களில் சிக்க, விண்டீஸ் அணி 49 ஓவரில் 286 ரன்கள் மட்டும் எடுத்து வீழ்ந்தது.
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 23-06-2019, 09:58 AM



Users browsing this thread: 100 Guest(s)