23-06-2019, 09:56 AM
தங்கம் விலை தொடர்ந்து அதிகரிப்பு பவுன் ரூ.27 ஆயிரத்தை எட்டும் நகை வியாபாரிகள் தகவல்
சென்னை: கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் கடும் ஏற்றம், இறக்கங்கள் காணப்பட்டு வருகிறது. கடந்த 14ம் தேதி தங்கம் பவுன் ரூ.312 உயர்ந்து ரூ.25,288க்கு விற்பனையானது. இது இந்த மாதம் தொடங்கிய பிறகு அதிகபட்ச உயர்வாக கருதப்பட்டது. அதன்பிறகு தொடர்ந்து பவுன் ரூ.25,000த்துக்கு மேல் விற்பனையாகி வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் தங்கம் பவுனுக்கு ரூ.528 அதிகரித்து கிராம் ரூ.3,213க்கும், பவுன் ரூ.25,704க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து நேற்றும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.464 உயர்ந்து கிராம் ரூ.3,271க்கும் பவுன் ரூ.26,168க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், மாலையில் பவுனுக்கு ரூ.272 குறைந்தது.
இந்த நிலையில் இன்று காலையில் தங்கம் விலையில் கிராமுக்கு ரூ.22 அதிகரித்து ஒரு கிராம் ரூ.3259க்கும், பவுனுக்கு ரூ.176 அதிகரித்து ஒரு பவுன் ரூ.26,072க்கும் விற்பனையானது. இதுகுறித்து சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் கூறியதாவது:அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தலாம் என்ற ஒரு பதற்றமான சூழ்நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் தங்கத்தில் முதலீடு செய்வது என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பவுன் ரூ.27,000 தொட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
first 5 lakhs viewed thread tamil