Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
கடைசி ஓவரில் ஷமி ஹாட்ரிக்: ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்தியா 'த்ரில்' வெற்றி
[Image: Shami.jpg]
நன்றி: டிவிட்டர்/உலகக் கோப்பை கிரிக்கெட்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் 'த்ரில்' வெற்றி பெற்றது. 

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய (சனிக்கிழமை) ஆட்டத்தில் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்தது


225 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பூம்ரா மற்றும் ஷமி பந்தை எதிர்கொள்ள திணறினர். இதன் விளைவாக ஸஸாய் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன்பிறகு, கேப்டன் நைப் மற்றும் ரஹ்மத் ஷா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த இணை பெரிதளவு ரன்களை குவிக்காவிட்டாலும், விக்கெட்டை பாதுகாத்து விளையாடியது. வெற்றிக்கு தேவையான ரன் ரேட், நெருக்கடியளிக்கும் வகையில் இல்லாதது ஆப்கானிஸ்தானுக்கு சாதகமாக அமைந்தது. நல்ல அடித்தளம் அமைத்து விளையாடி வந்த நைப் 27 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதையடுத்து, ரஹ்மத் ஷா மற்றும் ஷாகிதி மீண்டும் பாட்னர்ஷிப் அமைத்து விளையாடினர். இந்த இணையும், ரன் ரேட்டை மனதில் கொள்ளாமல் ஆட்டத்தை கடைசி கட்டம் வரை எடுத்துச் செல்லும் நோக்கத்தில் விளையாடினர். இதனால், இந்திய அணிக்கு நெருக்கடி அதிகரித்தது. 

பூம்ரா இரட்டை அடி:

இந்த நிலையில், பூம்ரா தனது இரண்டாவது ஸ்பெல்லை வீச வந்தார். இதில், அவர் ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி ஆப்கானிஸ்தானுக்கு நெருக்கடியை உண்டாக்கினார். அடுத்து களமிறங்கிய அஸ்கார் 8 ரன்களுக்கு சாஹல் பந்தில் ஆட்டமிழந்தார். இதனால், அந்த அணிக்கு நெருக்கடி கூடியது. 

ஆனால், முகமது நபி மற்றும் ஸாத்ரான் சற்று துரிதமாக ரன் சேர்த்து விளையாடினர். இதனால், அந்த அணி வெற்றியை நெருங்க தொடங்கியது. இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் மீண்டும் ஒரு விக்கெட்டை இழந்தது. ஸாத்ரான் 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

எனினும், முகமது நபி ஆப்கானிஸ்தானுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் களத்தில் நின்று விளையாடி வந்தார். அவருக்கு சிறிது நேரம் ஒத்துழைத்த ரஷித் கான் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

இந்த கட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு 24 பந்துகளில் 32 ரன்கள் தேவைப்பட்டது. அந்த அணி 7 விக்கெட்டுகளை இழந்திருந்தாலும் நபி நம்பிக்கை நட்சத்திரமாக களத்தில் இருந்தார். அவர் பூம்ரா ஓவரிலேயே சிக்ஸர் அடிக்க இந்திய அணிக்கு நெருக்கடி மேலும் அதிகரித்தது.

ஆனால், 48-வது ஓவரை வீசிய ஷமி வெறும் 3 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்த ஆட்டத்தை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். 49-வது ஓவரில், பூம்ரா தனது யார்க்கர் பாணிக்கே திரும்பி 5 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். 

இதனால், கடைசி ஓவரில் ஆப்கானிஸ்தான் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. ஷமி வீசிய முதல் பந்தையே நபி பவுண்டரிக்கு விரட்டி மிரட்டினார். இதன்மூலம், அவர் தனது அரைசதத்தையும் எட்டினார். ஆனால், ஷமி அடுத்த பந்தை சிறப்பாக வீசி ரன் எடுக்காமல் கட்டுப்படுத்தினார். 

ஷமி ஹாட்ரிக்:

3-வது பந்தை நபி மீண்டும் பவுண்டரிக்கு விரட்ட நினைத்து, பாண்டியாவிடம் கேட்ச் ஆனார். அவர் 52 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்த இரண்டு பந்துகளையும் அற்புதமாக வீசிய ஷமி, அப்தப் அலாம் மற்றும் முஜீப்பை போல்டாக்கினார். இதன்மூலம், உலகக் கோப்பையில் ஷமி ஹாட்ரிக் விக்கெட்டுகள் சாதனை புரிந்தார். 

இதனால், அந்த அணி 49.5 ஓவர்களில் 213 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் 'த்ரில்' வெற்றி பெற்றது
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 23-06-2019, 09:54 AM



Users browsing this thread: 42 Guest(s)