04-08-2024, 11:49 PM
#கனவே_நிஜமாகு
தொடர் 25
திருநெல்வேலி
குற்றவியல் நீதி மன்றம்
வாசலில்
ரதிமீனா சிவநேசன் காத்திருக்க
சிறிது நேரத்தில்
இன்பெக்டர் மைதிலி யுடன் பிரியா
நடந்து வந்தாள் பிரியா முகத்தில் சோர்வு
சிவனேசன் பார்த்தான் எதற்காக வும் கலங்காத பிரியா கலங்கி நிற்பதை பார்க்க இயலாமல் முகத்தை திருப்பி கொண்டான்
பிரியா சிவநேசன் முன் வந்தாள்
தடாலென காலில் வீழ்ந்து கதறி அழுதாள் கூட்டமே வேடிக்கை பார்த்தன சிவநேசன் அதிர்ந்தான்
ரதிமீனா சுதாரித்து
பிரியா எழுந்திரு கலங்கும் நேரம் இதுவல்ல
மேற்கொண்டு என்ன செய்யனும்னு யோசிப்போம்
மைதிலி மேடம் சொன்னதை கவனத்தில் கொள் அரசு வக்கில் குறுக்கு விசாரணையில் உண்மையை கொட்டிவிடாதே மாமாவே வாதாட போகிறார் சரியா
சரிங்க மேடம் பையன் எப்படி
அவனுக்கென்ன நல்லா இருக்கான்
மக பானுமதி வீட்டிலேயே கவனித்து கொள்கிறாள் அவளும் பயிற்சி முடித்த டாக்டர் தான்
உன் பையனுக்கு பானுமேல பாசம் அக்கா அக்கானு சொல்றான்
ரொம்ப நன்றிங்க மா
நன்றி கிடக்கட்டும் கோர்ட் ல எச்சரிக்கை யா நடந்துக்கோ அரசு வக்கில் வாயை புடுங்க பார்ப்பான் வாயே திறக்காதே சரியா
தலையாட்டினாள்
கோர்டில்
பிரியா முறைவர
மைதிலி நீதிபதி முன் பிரியாவை
காட்டி இவர் தான் பிரியா நாட்டாமை கொலை வழக்கில் தானாக சரணடைந்து கைது செய்யபட்டுள்ளார் கொலைக்கான வாக்குமூலம் பதிவு செய்பட்டுள்ளது ஆவணங்கள் சமர்பிக்கிறேன்
சல்யூட் அடித்துவிட்டு போய் அமர்ந்தாள் மைதிலி
அரசு தரப்பு வக்கில்
யுவர் ஆனர்
குற்றாவளி கூண்டில் இருக்கும் பிரியா என்பவர்
ஊராட்சி தலைவரும் நாட்டாமையுமான கார்மேகம் என்பவரை வீடு புகுந்து தாக்குதல் நடத்தி தரதரவென பஞ்சாயத்து மேடைவரை இழுத்துவந்து கழுத்தை அறுத்து கொலை செய்திருக்கிறாள்
நீதிபதி
பிரியாவை பார்த்து
அரசு வக்கில் சொல்வது உண்மையா
இல்லை ஐயா சுத்த பொய் அரசு வக்கில் பாதி பொய்யை திணித்து இருக்கிறார்
நீதிபதி
வாக்குமூலத்தை குறித்து கொண்டார்
காவல் துறை உங்களை அடித்து துன்புறுத்தியதா
இல்லை ஐயா குற்றம் என்மேல் இல்லையென சட்டத்துக்காக கைது செய்ததாக மட்டும் சொல்லி இருக்கார் ஐயா
அரசு வக்கில்
மை லார்ட் இவ பொய் சொல்றா
நீதிபதி
அரசுதரப்பு வழக்கறிஞர் வார்த்தையை கவனமாக கையாள வேண்டும் சிறுமியா இருந்தாலும் அவ இவ எனும் மரியாதை குறைவான வார்த்தைகளை பயன்படுத்த கூடாது
மன்னிச்சிடுங்க மை லார்ட் இனிமேல் அப்படி பேச மாட்டேன்
நீதிபதி
ஏன்மா உனக்காக வாதாட வழக்கறிஞர் இருக்காரா
சட்ட உதவி மூலம் நியமிக்க சொல்லவா
மைதிலி
மை லார்ட்
வழக்கறிஞர் இன்றி இவரோட கணவரே பொது வாக வாதாட அனுமதி தரவேண்டும்
நீதிபதி
யார் அவர்
மை லார்ட்
பிசியா அவர்களை கல்லிடைகுறிச்சி கிராம மக்கள் முன்னிலையில் திருமணம் செய்தவர் பிரியா மீதுள்ள கோபத்தால்
தன்னோட அத்தை மகளை திருமணம் செய்துள்ளார்
அவரோட பூர்விகம்
தென்காசி புளியறை பூலிதேவன் வம்சத்தை சேர்ந்த
பிரமனந்தம் பாலகிருஷ்ணன் சகுந்தலா மகன் ஆவார்
பரம்பரை பெயர் சிவநேசன் ஊரில் முனியப்பன்
பிரமனந்தம் பாலகிருஷ்ணன் சகுந்தலா
.பெயரை கேட்டு நீதிபதிக்கு தூக்கிவாரி போட்டது
அவரை வர சொல்லுங்க
சிவநேசன் சார் வாங்க
சிவநேசன் கரங்கள் கூப்ப
சிவனேசனை பார்த்த நீதிபதி திதைதத்தார்
மை லார்ட் இவர் சிவநேசன் மனைவி
ரதிமீனா வை மைதிலி அறிமுகபட்டுத்த
ரதிமீனா வை பார்த்த நீதிபதி வியப்பின் உச்சிக்கே சென்றுவிட்டார்
தொடரும்