⭐♥️♥️காம அசுரன் காத்தவராயனும் மாயமலை கட்டழகு தேவதைகளும் ♥️♥️⭐
[quote pid='5683293' dateline='1722775641']
பாகம் - 106

மன்னர் காலம்

மகேந்திரவர்மன் போட்ட திட்டம் வேலை செய்தது.கோட்டையின் பின்பகுதியில் தேடிச் செல்ல நதியின் ஓசை கேட்டது.

நதியின் அருகே நிலா வெளிச்சத்தில் யாரோ நடந்து வருவது போல தோன்றியது..ஆனால் திடீரென அவ்வுருவம் காணாமல் போனது.
மகேந்திரவர்மன் கூட வந்த வீரர்களுக்கு பயத்தில் கை கால் நடுங்கின.கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு உருவம் வந்து ஒரு வீரனை கொத்தி போனது..இப்படியே காத்தவராயன் மகேந்திரவர்மன் கூட வந்த வீரர்களை ஒவ்வொருவராய் பலி வாங்கி விட்டான். அடுத்து மீதம் இருந்தது மகேந்திரவர்மன் மட்டுமே..

மகேந்திரவர்மனையும் காற்றாக வந்து தூக்கி தூக்கி போட்டான்.கடைசியில் அரண்மனை மொட்டை மாடியில் தூக்கி வீச மகேந்திரவர்மன் உருண்டு புரண்டு விழுந்தார்.

கை கால்கள் எங்கும் காயங்கள் உண்டாக மகேந்திரவர்மன் கத்தினார்.."டேய் காத்தவராயா..இது உன் இடம்,எனக்கு இப்போ கூட பயம் இல்லை.ஆவியாக இருப்பதால் உனக்கு பலம் கூடி இருந்தும் பயந்தாங்கொள்ளி போல இப்படி ஒளிந்து இருந்து போர் புரிகிறாயே..!வெக்கமா இல்ல..!உன்னை மும்முறை தோற்கடித்த மதிவதனியின் தந்தை போருக்கு அழைக்கிறேன்..தைரியம் இருந்தால் நேருக்கு நேர் போட்டிக்கு வாடா..!"

காத்தவராயன் விராடன் உடலில் மகேந்திரவர்மன் தோன்றினான்..

"பல வருடங்களுக்கு முன்பே,என்னிடம் தோற்று ஓடிய கோழை தானே நீ..!இப்போ மட்டும் எங்கிருந்து வந்தது இந்த தைரியம்..அன்று உனக்கு உயிர்ப்பிச்சை கொடுத்தேன்..இன்று அதற்கு வாய்ப்பே இல்லை.மதிவதனி போன்ற அற்புதமான பேரழகியை பெற்று,அவளை எனக்கு அனுபவிக்க கொடுத்த உனக்கு மட்டும் மரணத்தில் சலுகை தரலாம்  என நினைக்கிறேன்..உன்னோட முடிவு எப்படி இருக்க வேண்டும் என சொல்,அல்லது வலியில்லாத மரணம் நானே தரட்டுமா.."

மன்னரின் முகம் கோபத்தால் சிவந்தது."துஷ்டனே..!இதுவரை மாயமந்திரங்களை பயன்படுத்தி தந்திரமாக வெற்றி பெற்று கொண்டு இருந்தாய்.அதையும் என் மகள் உடைத்து உன் கையாலாகாததனத்தை வெளி உலகுக்கு காட்டி விட்டாள்..இன்று உனக்கு முடிவுரை எழுதும் நாள்"என மகேந்திரவர்மன் வாளை சுழற்றினார்.

மன்னன் பேச்சை கேட்டு காத்தவராயனுக்கும் கோபம் வந்தது. "மாமனார் என்று போனால் போகிறது என்று உன்னை விட்டு வைத்தால் உன் வாய் எல்லை மீறி விட்டது.இப்பவே  உன்னை கொன்று பித்ரு லோகத்துக்கு அனுப்பி வைக்கிறேன்"என காத்தவராயன் மகேந்திரவர்மன் மீது பாய்ந்தான்..

இரண்டு பேருக்கும் துவந்த யுத்தம் ஆரம்பாகியது..ஒருவரையொருவர் விட்டு கொடுக்காமல் மொட்டை மாடியில் சண்டை போட்டனர்.சில சமயம் காத்தவராயன் பின்வாங்க நேர்ந்தது.முன்பு போரில் என்னிடம் தோற்ற அதே மகேந்திரவர்மன் இவன்தானா. !என காத்தவராயனுக்கு சந்தேகம் வந்தது..

காத்தவராயனும், மகேந்திரவர்மனும் நீண்ட சண்டையிட்டு கொண்டே இருக்க,ஒரு கணத்தில் காத்தவராயன் கையில் இருந்த வாள் நழுவியது.

"காத்தவராயா.உன்னை பற்றி கிளப்பி விட்ட வதந்திகளை நம்பி போரில் ஏமாந்து விட்டேன்.ஆனால் என் மகள் உன்னை தோற்கடித்து வெல்லும் வழியை காட்டி விட்டாள்..இன்றோடு நீ தொலைந்தாய்.."என மகேந்திரவர்மன் அவன் மீது வாளோடு பாய காத்தவராயன் உடனே மாயமாய் மறைந்தான்.அங்கங்கே தோன்றி,மறைந்து காத்தவராயன்,மகேந்திரவர்மனை அலைக்கழிக்க,கடைசியாக மொட்டை மாடியில் இருந்த முற்றம் போன்ற அமைப்பில் மன்னன் முட்டி கொண்டான்..அதில் கண்ணாடி பதிக்கப்பட்டு கீழே விலாசினி இருப்பதை பார்க்க முடிந்தது..அதை பார்த்து மகேந்திரவர்மன் அயர்ந்து,"கோட்டை முழுக்க தேடினோமோ இந்த அறை கோட்டையில் தானே இருக்கிறது.இதை எப்படி தவற விட்டோம்"என அவர் யோசித்து தடுமாறி நின்றார்..

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு,மின்னல் போல் அந்த முற்றத்தின் மேலே தோன்றிய காத்தவராயன் மகேந்திரவர்மன் மார்பில் எட்டி உதைத்தான்.அவன் உதைத்த வேகத்தில் மன்னரும் பின்னாடி காற்றில் பறந்து கீழே விழுந்து மயக்கம் அடைய,அவர் மார்பில் வாளை பாய்ச்ச தயாரானான் காத்தவராயன்.

"அது என்னுடைய ரகசிய அறை..மகேந்திரவர்மா..!யாராலும் கண்டுபிடிக்க முடியாது.அந்த ரகசியத்தை அறியாமலேயே மயக்கத்திலேயே செத்து போ.."என காத்தவராயன் வாளை ஓங்கிய நேரம்"நில் காத்தவராயா..!இன்னும் ஒரு அடி நீ வாளை கீழே இறக்கினால் இவள் கழுத்தை அறுத்து போட்டு விடுவேன்.."என ஒரு பெண்ணின் உடலை அக்ரூரர் தரையில் கிடத்தினார்.

காத்தவராயன் கடகடவென சிரித்தான்.."என்ன அக்ரூரரே !விளையாட்டு காட்டியது போதும்.நீயாவது உன் மகளை கொல்வதாவது.."என காத்தவராயன் சிரித்து கொண்டே , மன்னன் நெஞ்சில் வாளை பாய்ச்ச கீழே இறக்கினான்.

"நான் பொய் உரைக்கவில்லை காத்தவராயா..!விலாசினி உடம்பில் உயிர் இருந்தால் தானே,அவள் வயிற்றில் வளரும் சிசுவை கொண்டு உன் உடலை பெற முடியும்.இதோ இப்பொழுதே இவளை அழிக்கிறேன்.."என படாரென அவள் நெஞ்சில் வாளை பாய்ச்சி விட்டார். விலாசினி அலறல் சத்தம் "விராடா...."என்று பயங்கரமா கேட்டது..அது விராடன் உடம்பில் இருந்த அவன் ஆத்மாவை தட்டி எழுப்பியது.

இதை பார்த்த காத்தவராயன் பதறவில்லை.ஆனால் விராடன் ஆத்மா பதறியது..அது காத்தவராயன் ஆவியை முந்தி கொண்டு மேலே வர விராடனுக்கு நினைவு வந்தது..

கீழே துடித்து கொண்டு இருந்த விலாசினியை பார்த்ததும் அவன் கண்கள் கலங்கியது. விலாசினியை பார்த்தான்,அவன் கையில் இருந்த வாளை பார்த்தான்.காத்தவராயன் ஆவி மீண்டும் உடலில் அவன் ஆத்மாவை மீறி ஆக்கிரமிப்பதை உணர்ந்தான்.நொடி பொழுதும் தாமதிக்கவில்லை..! தன் கழுத்தை தானே அறுத்து கொண்டான்..அவன் ரத்ததுளிகள் பட்டு மகேந்திரவர்மனுக்கு விழிப்பு வந்தது..

விராடன் உடலை காத்தவராயன் மீண்டும் ஆக்கிரமித்தாலும், விராடன் உடலில் உயிர் பிரிந்து கொண்டு இருப்பதை உணர்ந்தான்.."அக்ரூரரே..நீ ஜகஜால கில்லாடி தான். விராடன் உடலில் இருந்து என்னை வெளியே வரவைக்க நீர் போட்ட திட்டம் வெற்றி அடைந்தது.ஆனால் உன் மகள் உனக்கு கிடைக்க மாட்டாள்.."என காத்தவராயன் திரும்பி முற்றத்தை உற்று பார்க்க அதன் கண்ணாடி உடைந்து ஒரு துண்டு விலாசினி மார்பில் குத்தி அவள் உடல் துடிதுடிக்க ஆரம்பித்தது.மயக்கத்திலேயே விலாசினி உயிர் பிரிய ஆரம்பிக்க,இங்கே விராடன் உடலில் இருந்து காத்தவராயன் ஆவி வெளியே வர,அதற்காகவே காத்து இருந்த அக்ரூரர்.உடனே தன் மடியில் கட்டி எடுத்து வந்து இருந்த ஜாடியை எடுத்து மந்திரங்களை பிரயோகித்து அக்ரூரர் காத்தவராயனை ஜாடியில் அடைத்தார்.
சற்றும் தாமதிக்காமல் தன்னிடம் உள்ள மூலிகைகளை எடுத்து விராடன் கழுத்தில் கட்டு போட்டு,ஒவ்வொரு வாயுவாக அவன் உடம்பில் புகுத்தி கொண்டே வந்தார்.சரியாக 40 நிமிடங்களுக்கு பிறகு விராடன் இதயம் துடிக்க ஆரம்பித்தது..

மகேந்திரவர்மன் நடப்பது ஒன்றும் புரியாமல் பாத்து கொண்டு இருக்க,அவர் கண்முன்னேயே அக்ரூரர் வெட்டிய விலாசினி உடல் மறைந்தது..மன்னன் ஒடி சென்று முற்றத்தில் எட்டிப்பார்க்க அங்கே விலாசினி மார்பில் கண்ணாடி பாய்ந்து இரத்தம் வழிய இறந்து கிடந்தாள்.

"இது விலாசினி என்றால் இங்கே சற்றுமுன் இறந்து கிடந்த பெண் யார்..!அவள் உடல் எப்படி மாயமாய் மறைந்தது"என குழம்பினார்.

"அக்ரூரரே..!என்ன இது மாயம்..!இங்கே இறந்து கிடந்த பெண் உடல்  எங்கே போனது.."

"அது நான் உருவாக்கிய மாய விலாசினி மன்னா..!காத்தவராயனை மீறி விராடன் ஆத்மாவை வரவைக்க நான் நடத்திய நாடகம் அது.அது மாய விலாசினி என்று காத்தவராயனுக்கு நன்றாக தெரியும்.அவள் கழுத்தை நான் அறுத்த பொழுது அதில் இருந்து இரத்தம் வராது.அதை காத்தவராயன் நன்றாக பார்த்தான்.ஆனால் விலாசினியை நேசித்த விராடனுக்கு அது தெரியாது.அவனுக்கு பிரியமான விலாசினி உயிர் பிரிந்ததை அவன் அறிந்தால் அவன் தற்கொலை செய்து கொள்வான் என்று எனக்கு தெரியும்.அப்படி அவன் உயிர் வெளியேறும் பொழுது காத்தவராயன் ஆவியும் வெளிவந்து தீரவேண்டும்.அப்படி வெளிவந்த ஆவியை உடனே சிறை பிடித்து விட்டேன்.."

"ஆனால் இப்போ இவ்வளவு நேரம் விராடன் உடலில் என்ன செய்து கொண்டு இருந்தீர்..அக்ரூரரே..!"

"அவன் உடலில் மீண்டும் அவன் உயிரை சேர்ப்பித்தேன்."என்று அக்ரூரர் கூற மன்னன் ஆச்சரியம் அடைந்தான்.

"என்ன..!உடலில் பிரிந்த உயிரை மீண்டும் சேர்க்க முடியுமா.."என அவர் கேட்க

"ம்..முடியும்..நம் உடலில் ஒன்பது வாயுக்கள் உள்ளன மன்னா.உயிர் பிரியும் பொழுது எட்டு வாயுக்கள் உடனே வெளியேறி விடும்.ஆனால் தனஞ்செயன் என்ற வாயு மட்டும் கடைசியாக தான் வெளியேறும்.அந்த தனஞ்செயன் வாயு மட்டும் உடலில் இருந்து விட்டால் மீண்டும் உயிரை உடலில் சேர்ப்பித்து விட முடியும்..அதை தான் நான் இப்பொழுது செய்தேன்".

"அப்போ உடனே வாருங்கள் அக்ரூரரே..!விலாசினியின் இறந்த உடல் எனக்கு தெரியும்.அவளுக்கும் உயிர் தர முயற்சி செய்யலாம்.."

அக்ரூரர் கண்களில் கண்ணீர் வழிந்தது.

கண்ணீருடன்,"அது முடியாது மன்னா..!என் மகளின் உடல் சவமாகி விட்டது.அதாவது அவள் உடலில் இருந்து தனஞ்செயன் வாயு இந்நேரம் பிரிந்து போய் இருக்கும்.நான் ஒரு கணக்கு போட்டேன்,ஆனால் காத்தவராயன் வேறு ஒரு சம்பவத்தை நிகழ்த்தி விட்டான்.அதாவது  விராடன் உயிர் பிரியும் அதே நேரத்தில் விலாசினி உயிரையும் பிரியும்படி செய்து விட்டான். உயிர் பிரிந்த பிறகு தனஞ்செயன் வாயு உடலில் 30 நிமிடங்கள் மட்டுமே தங்கி இருக்கும்.அதனால் என்னால் இரண்டு உயிர்களில் ஏதாவது ஒரு உயிரை மட்டுமே காப்பாற்ற முடியும் என்ற சூழ்நிலை இருந்தது.விராடனா..!இல்லை என் மகளா..!சுயநலமா..இல்லை பொது நலமா..என்ற கேள்வி வரும் பொழுது நான் இம்முறை பொது நலன் என்று தான் என் மனம் சொன்னது..அதனால் என் மகளை விட்டுவிட்டு விராடனை மட்டும் உயிர்ப்பித்தேன்."என்று அவர் அழுது கொண்டே சொல்லி முடித்தார்.

அவர் அழுகை கோபமாக மாறியது..அந்த கோபம் காத்தவராயன் மீது திரும்பியது.

"காத்தவராயா..!உனக்கு நான் சாபம் இடுகிறேன்.நீ ஆவியாக இருப்பதால் தானே ஒவ்வொரு உடலில் புகுந்து ஆட்டம் போடுகிறாய்.இதற்கு மேல் உடலுக்கு சொந்தக்காரன் அனுமதி தந்தால் மட்டுமே நீ அந்த உடலுக்குள் பிரவேசிக்க முடியும். மானிட உடலில் இதற்கு மேல் உன்னால் போகவே முடியாது என்ற சாபத்தை உனக்கு என்னால் தர முடியும்.ஆனால் சில காரணங்களுக்காக சாபத்தை இவ்வாறு கொடுக்கிறேன்.."என அவர் சபித்த உடன் வானம் இடி இடித்து மழை பொழிய ஆரம்பித்தது.

விராடன் உடலில் அசைவுகள் தெரிய ஆரம்பித்தது..

விராடன் கண்விழித்து பார்த்து,அக்ரூரரை பார்த்து கோபம் கொண்டு,"ச்சீ நீங்கள் எல்லாம் ஒரு தந்தையா..என்னை காதல் செய்த ஒரே ஒரு காரணத்திற்காக உங்க மகளை நீங்களே கொன்று விட்டீர்களே..!இது அநியாயம்..!"

மகேந்திரவர்மன் உடனே அவனிடம்,"அவரை குற்றம் சொல்லாதே விராடா..!அவர் மீது ஏதும் தவறு இல்லை."

"யோவ் முதலில் நீ யாருய்யா.."என விரக்தியில் கத்தினான்.

"நான் தான் உன் தாத்தா.. மதிவதனியின் தந்தை.."என்று சொன்னவுடன் விராடனுக்கு கோபம் வந்தது.

அவன் கோபத்துடன் "பிறந்தவுடன் என்னை தூக்கி எறிந்து சென்ற ஒருவளின் தந்தையா நீ..!அவளை பெற்ற உன்னை தான் முதலில் கொல்ல வேண்டும்."என கத்தினான்..

மதிவதனி பற்றி குறைகூறிய உடன் மகேந்திரவர்மனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது."முட்டாளே..!தன்னோட சுயநலத்துக்காக நீ பிறந்தவுடன் உன்னை கொல்ல முயன்ற காத்தவராயன் நல்லவனா..!அல்லது உன்னையும் காப்பாற்றி,எதிர்காலத்தில் காத்தவராயனால் யாருக்கும் பாதிப்பு வரக்கூடாது என தவம் செய்ய சென்ற மதிவதனி நல்லவளா..!ஏன் இதை உன்னை வளர்த்த தாய் சொல்லவில்லையா.."

விராடன் தலைகுனிந்து"சொன்னாங்க..!" என்று மெல்லிய குரலில் சொன்னான்.

"தெரிந்தும் ஏன் மாயமலை வந்தாய்..!"என கோபமாய் கேட்க,

"விலாசினி மீது கொண்ட மோகம்,அவளை அடைய அக்ரூரரை எதிர்க்க,எனக்கு என் தந்தையின் உதவி தேவைப்பட்டது.அதனால் இங்கு வந்து என் தந்தையின் உதவியை கேட்டேன்.."

"பிறகு உன் தந்தை என்ன செய்தான் தெரியுமா..!"என மன்னன் கேட்டார்.

விராடன் புரியாமல் விழித்தான்..

"உன் உடலை ஆக்கிரமித்து, தன் மகன் காதலித்த பெண் என்றும் பாராமல் அவளிடம் உடலுறவு கொண்டான்.மேலும் அவள் வயிற்றில் உருவான கருவிற்கு சென்ற சக்தியையும் பிடுங்கி கொண்டான்.அதனால் உன் ஆத்மாவை தட்டி எழுப்ப அக்ரூரர் மாய விலாசினியை உருவாக்கி கொல்வது போல நடித்தார்.ஆனால் இதை அறிந்த காத்தவராயன் உண்மையிலேயே விலாசினியை கொன்று விட்டான்..அக்ரூரருக்கு அவர் மகளை காப்பாற்ற வாய்ப்பு இருந்தும் உன்னை தான் காப்பாற்றினார்."என்று மகேந்திரவர்மன் சொல்லி முடிக்க விராடன் உண்மை அறிந்து அக்ரூரர் காலில் விழுந்தான்.

அக்ரூரர் அவனை எழுப்பி,மதிவதனி இருக்குமிடம் செல்ல வேண்டிய நேரம் இது.." என சொன்னார்.. விலாசினி உடல் மறைத்து வைக்கப்பட்டு இருந்த  இடத்தை தேடி கண்டுபிடிக்க மிக சிரமப்பட்டனர்.கடைசியில்  அறையில் சுவரை ஒவ்வொரு இடமாய் தட்டி பார்க்க ஒரு இடத்தில் வித்தியாசமான சத்தம் வந்தது.தடவி பார்க்க அது கண்ணாடி போல தெரிந்தது.விராடா,நீ மகேந்திரவர்மனுடன் மேலே சென்று முற்றத்தின் வழியே உள்ளே இறங்கு" என்றார்.அவனுக்கு சியாமந்தக ரத்தினமணியை அணிவித்தார்.

அவர் சொல்படியே விராடன் செய்தான்.அவன் கயிற்றின் மூலம் உள்ளே இறங்கிய உடனே சியாமந்தக ரத்தினமணியின் ஒளி கண்ணாடி வழியே அக்ரூரருக்கு மெலிதாக தெரிந்தது.காலால் அதை எட்டி உதைக்க கண்ணாடி சுக்குநூறாக உடைந்து வழி கிடைத்தது.

விலாசினி உடலோடு அனைவரும் மதிவதனி இருக்குமிடம் கொண்டு சென்றனர்.

மரமாய் நின்ற மதிவதனியிடம் மௌன மொழியில் பேச அவர்களுக்கு நிறைய விடைகள் கிடைத்தது.

மதிவதனி மௌன மொழியில் விராடனிடம்,"விராடா..நீ பிறந்த உடனே உன்னை கைவிட்டு வரும் சூழ்நிலை எனக்கு..!ஒருவேளை உனக்காக என் உடலை துறக்காமல் இருந்திருந்தால் கண்டிப்பா காத்தவராயன்  என்னையும்,உன்னையும் கொன்று இருப்பான்..என்னால் இப்போ உனக்கு ஒரு உதவி செய்ய முடியும். விலாசினி உடம்பில் உள்ள கருவை  என்னால் உனக்கு வளர்த்து தர முடியும்"என சொல்ல மூவரும் புரியாமல் விழித்தனர்.

"விலாசினி தான் இறந்து விட்டாளே..!இது எப்படி நடக்கும்?"என மூவரும் குழம்பினார்கள்.

கடைசியில் மதிவதனியே கூறினாள்."அக்ரூரரே.. விலாசினி உடம்பில் தேவ அணு கலந்து உள்ளது என உங்களுக்கு தெரியும்..தேவஅணு மூலம் உருவான சிசு அன்னை இறந்தாலும் அவள் வயிற்றில் ஒரு நாள் முழுக்க உயிரோடு இருக்கும்.என் மரத்தின் நடுப்பகுதியில் குழியை உருவாக்கி அவள் வயிற்றில் உள்ள சிசுவை அதில் வைத்து பின்பு மூடிவிடுங்கள்.நான் அந்த சிசுவை வளர்த்து விராடன் கையில் ஒப்படைக்கிறேன்"என்று அவள் கூற மூவர் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது.
அக்ரூரர் தன் மந்திர சக்தியின் மூலம் விலாசினி  வயிற்றில் இருந்த சிசுவை வெளியில் எடுத்து மரத்தின் நடுப்பகுதியில் வைத்து அதன் வழியை அடைத்தார். நூறாவது நாள் குழந்தை உருவாகிய உடன் விராடன்‌ எடுத்து கொண்டான்.

தான் நினைத்தது நடக்கவில்லை என்று தெரிந்த உடனே விலாசினியை கொன்ற தன் தந்தையும்,ஆனால் குழந்தையை மீட்டு உருவாக்கி கொடுத்த தன் தாயையும் ஒரு நிமிடம் ஒப்பிட்டு பார்த்தான்.

சியாமந்தக மணியை அக்ரூரர் ,விராடனிடம் கொடுத்துவிட்டு "இதை உன் வம்சாவளியினர் பாதுகாத்து வா விராடா..மதிவதனி மறுபிறப்பு எடுத்து வரும் பொழுது, இதை நீ அவளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறினார்.

விராடன் தன் சொந்த நாட்டுக்கு செல்லாமல் மகேந்திரவர்மன் உடன் சென்றுவிட்டான்.அங்கு இருந்து மகேந்திரபுரி நாட்டை ஆண்டு வந்தான். ஆவியாய் திரிந்து கொண்டு இருந்த விலாசினிக்கு அக்ரூரர் சில சக்திகளை கொடுத்து அவளை சகோச்சியாக மாற்றி யட்சிகளின் ராணியாக மாற்றினார்.காத்தவராயனை முழுமையாக அழிக்க தளம் அமைக்கப்பட்டு விட்டது.


[Image: 20240709-210336.jpg]

 [Image: Her-h-tness-is-killing-me-priyankaamohan...l-heic.jpg]
[/quote]

Heart yourock clps

Excellent narration brother... Sirapana sambavam.... Antha sisu vachi edho twist palamah irukum pola antha vamsaliviga mulam future la useful aguraa pola kondu ponaah vitham superb

Unexpected twist and turns ... Madhi dad fights are excellent  
Maya manthiram use pannama jeika mudila pola...

Sirapana kadhai nagarvu...rathinam ipo yaru kitta iruko Sleepy happy


Hope for ravanan son indrajitha reborn in their blood line
[+] 1 user Likes krishkj's post
Like Reply


Messages In This Thread
RE: ⭐♥️♥️காத்தவராயன் ஆவியின் ◉⁠‿⁠◉ மோகதாபம்♥️♥️⭐(பிரியங்கா மோகன்) - by krishkj - 04-08-2024, 11:06 PM



Users browsing this thread: 141 Guest(s)