04-08-2024, 01:05 PM
#கனவே_நிஜமாகு
தொடர் 22
ரதிமீனா வைதேகி மகளை முழுவதுமாக சோதனை செய்ய மாதவிடாய் கோளாறு காரணமாக கருப்பை கட்டி உருவானதை அறிந்தாள் கருப்பை கட்டி ஆரம்பம் என்பதால் கருப்பைக்கு ஆபத்தோ குழந்தை பிறக்காத குறையோ அமையாமல்
லேசர் கதிர் மூலம் கட்டியை கரைக்க முடிவெடுத்தாள்
நர்ஸ்சிடம் ஊசி மருந்து மாத்திரை விவரங்கள் தந்து கவனிக்க சொல்லிவிட்டு
வைதேகி பயபட ஏதுமில்லை
அறுவை சிக்கிச்சை அற்ற அதிநவீன லேசர் கதிர்வீச்சு மூலம் நாளை கட்டியை கரைத்து குணபடுத்தி விடுவோம் கவலை வேண்டாம்
நன்றிங்க மா
வைதேகி உங்களிடம் கொஞ்சம் பேசனும்
மகளை பார்த்துக்கனுமே
நர்ஸ் கூடவே எப்பொழுதும் இருப்பாங்க முறையாக மருந்து கொடுக்க
சரிம்மா வர்றேன்
ரதிமீனா கூட அறையில் சென்றாள்
கம்பவுண்டர் அரைமணி நேரம் பிசி அதன்பின் நோயாளிகளை பார்க்கிறேன்
சரிங்க மேடம்
கதவை சாத்திவிட்டு அமர்ந்தாள்
வைதேகி மாமாவை பத்தி உங்களிடம் கேக்க போறேன் பதில் சொல்விங்களா
மாமாவா யாரும்மா
உங்களுக்கு உதவ சொன்னாரே பக்கத்தில இருந்தாரே அவர் தான்
முனியப்பன் ஐயா உங்க மாமா வா
ஆமாம் என்னோட தாய்மாமா மகன் தான் அவர்
அம்மா அவர் பாரஸ்ட் ஆபீசர் வளர்ப்பு மகனாச்சே
அது உண்மை தான்
மாமாவின் குடும்பம் கொல்லபட்டதில் இருந்து மாமா மட்டும் சிறுவனாக தப்பியோடி பாரஸ்ட் ஆபீசரால் வளர்க்க பட்ட வரலாறை சொல்லி முடித்தாள்
அம்மா பெரும் பணக்கார குடும்பத்து பிள்ளையா ஐயா
அங்கே ஊர்ல இருந்தவரை எதற்கும் ஆசைபடாதவர்
தப்பானவர் இல்லை அந்த பிரியா இவர் வாழ்வில் குறுக்கிடாதவரை நல்லவரா இருந்தார் அதன்பின் குடிக்காரன் ஆயிட்டார் பிரியா வுக்காக இல்லைமா ஊட்டி வளர்த்த ஆபீசர் பிரியா பேச்சை நம்பி இவரை தப்பா நினைத்து விரட்டியதால் தான்மா
பிறகு எப்படி வாழ்ந்தார்
பிரியா வுடனும் வாழவில்லை பிரியா வீட்டிலும் வாழவில்லை
எங்க வீடு மற்றும் நல்லவங்க வீட்டு திண்ணையில் படுத்துக் கொள்வார்
தினசரி கிடைத்த வேலைக்கு போவார் அதில் ஓட்டல்லயே சாப்பிடுவார்
எப்போதாவது நாங்க அன்பா கொடுத்தா சாப்பிடுவார்
இதை வைச்சு தான்மா பிரியா விஷம் கலந்த உணவை என்மூலமா கொடுத்து கொல்ல முயன்றார் நடந்ததை சொல்லி முடித்தாள் வைதேகி
அட இவ்வளவு கொடுரமானவளா
அதுமட்டும் இல்லைமா அவர் சுயமாக உழைத்த பணத்தை வீட்டுல திருடியதா ஊரைக் கூட்டி பிடுங்கிடுவா ஊர் நாட்டாமையை கைக்குள் வைத்துள்ளதால் அவரே குற்றவாளி ஆக நிற்பார் இன்னும் சொல்ல முடியலைமா
அவ என் கைல கிடைச்சா தூக்கி சிறையில் போட வைச்சிடுவேன்
அம்மா அந்த பிரியா இங்க தான்மா இருந்தா கேட்டேன்
அவ பையனுக்கு சீரியசான நோயாம்
ஓ இங்கே தானே வந்தாகனும்
இருக்கு அவளுக்கு ரதிமீனா நினைத்து கொண்டாள்
சரிங்க வைதேகி மகள் வார்டு லயே தங்கிடுங்க இரவு உணவு வீட்டில் இருந்தே அனுப்பறேன்
சரிங்கம்மா
தொடரும்