04-08-2024, 01:03 PM
#கனவே_நிஜமாகு
தொடர்கதை 21
மருந்து கம்பெனி ஏஜண்டுகள் வெளியேவர
சிவனேசன் அவர்களை பார்த்தான்
யாருப்பா நீங்க
நாங்க யாரா இருந்தா உனக்கென்ன எரிச்சலா க பதிலளித்தனர்
சிரித்துக் கொண்டே முத்தழகன் அறையில் நுழைந்தார்
வெளியே மருந்தகம் ஊழியர்
சார் யாரிடம் எப்படி பேசுவதுனு தெரியாதா
யாரிடம் என்ன பேசினேன்
இப்போ உள்ளே போறாரே அவரிடம்
யாரோ கிராமத்தான் யாருனு கேட்டா இப்படி தான்
சரியா போச்சி
அவர் கிராமத்தார் என்றாலும்
இந்த மருத்துவமனை சிஇஓ அதாவது ஓனர்
ரதிமீனா மேடம் தானே ஓனர்
சரிதான் ரதிமீனா மேடத்தோட கணவர் தான் அவர்
அதைகேட்டு இருவரும் திகைத்தார்கள்
தவளை தன் வாயால் கெடும் தமக்கும் பொருந்தும் போல பேசாமல் வெளியேறினார்கள்
முத்தழகன் அறையில்
என்ன மாப்பிள்ளை இரண்டுபேரும் புலம்பிட்டு போறாங்க
மாமா மருத்துவமனை நிர்வாக மே சரியில்லை ஏமாத்த மட்டுமே சிலர் இருக்காங்க மாமா
அதான் நீ வந்தாச்சே உன்னை மீறி யார் ஏமாத்துவான்
வாயாடி பானுமதி க்கு வாய்சவரை
போங்க மாமா முத்தழகன் சிரிக்க
மருந்தகம் கவுண்டரில் சலசலப்பு
சிவனேசன் வெளியே வந்து பார்த்தார்
ஏழ்மையான இளம்பெண் மன்றாடி கொண்டிருந்தாள்
சார் டாக்டர் இந்த மருந்தை அவசர மா வாங்கிவர சொல்கிறார் பணம் கணவர் முதலாளி யிடம் வாங்க போயிருக்கார் வந்தா கட்டிடுவார் சார்
தயவு பன்னுங்க
ஏம்மா உன்னோட தொந்தரவா போச்சு அங்கே பணம் கட்டி பில் தந்தா தான் மருந்தை தர முடியும்
சார் குழந்தை நிலமை மோசமா இருக்கு சார்
ஏய் செக்யூரிட்டி இவளை வெளியே அனுப்பு பா
செக்யூரிட்டி இளம்பெண் கையை பிடிக்க மின்னலாய் தாக்கியது
சிவனேசன் கரங்கள்
செக்யூரிட்டி அரண்டு போனான்
மருந்தக ஊழியரிடம் திருய்பினார்
ஏய் உன்னை யாரு இங்கே வேலைக்கு வைத்தது
சார் பணம் செலுத்தி ய பில் இல்லாமல் மருந்தை தர முடியாதே
நீ தரமுடியாது தான் என்னிடமோ மீனாவிடமோ மனோஜரிடமோ கேக்க சொல்லி இருக்கலாம்
அதைவிட்டு குழந்தையை காப்பாத்த வந்த தாயை வெளியே இழுத்து போட சொல்றே சரி
உள்ளே இருக்கும் குழந்தைக்கு ஆபத்து .என்றால் நீ பொறுப்பு ஏற்பாயா
சாரி சார்
டேய் உன் சாரி யாருக்கு வேண்டும்
இந்தாம்மா இங்கே வா
மருந்து சீட்டை கொடு
சார் பணம் கணவர் வந்தா
சிவனேசன் கையமர்த்தினார்
நர்ஸ் இந்த மருந்துகளை உடனே கொடு
நர்ஸ் ஓடிபோய் தேடி எடுத்து தந்தாள்
இந்தம்மா குழந்தை எந்த வார்டில்
சொன்னாள் சரி சீக்கரம் போ டாக்டரிடம் சொல்றேன்
இளம்பெண் விரைந்து ஓடினாள்
மாமா கோபமான சத்தம் கேட்டு
முத்தழகன் வெளியே வந்தான்
மாமா என்ன பிரச்சினை
பிரச்சினை தான் மூளையில்லாத முட்டாள்களை வேலைக்கு வைத்தா
மருத்துவமனையே மனித உயிரை காக்க தான் ஆனா இங்கே இருக்கீம் சில முட்டாள்களால் விலைமதிக்க இயலாத மனித உயிர்கள் போப்விடுகிறது
சலிப்போடு ரதிமீனா அறையை நோக்கி நடந்தான்
மோகனா என்ன நடந்தது
சார் அந்தம்மா மருந்து க்கு தர கைவசம் பணம் இல்லை கணவர் வெளியே பணம் வாங்க போயிட்டார்
குழந்தைக்கு அவசரமா ஊசி மருந்தை செலுத்தனும்
பணம் கணவர் வந்தவுடன் தந்துவிடுகிறேன் அவசரமா மருந்தை தாங்கனு அழுது கேட்டும் தரவில்லை செக்யூரிட்டியை அழைத்து வெளியே இழுத்துவிட சொன்னதாலும் செக்யூரிட்டி அந்தம்மா மேல கை வைத்ததாலும் ஓனரின் கோபம் அதிகமாகிவிட்டது
என்ன மோகனா இது
அவசர சிக்கிச்சைக்கு பணம் முக்கியமா
சார் நானும் சொல்லி பார்த்தேன் அந்தம்மா கணவர் வந்தா நான் பில் போட்டுடறேன் அவசரமா கொடுத்தனுப்ப சொல்லியும் கேக்கலை
யார் மோகனா
மருந்தகம் ஊழியர்கள் இரண்டுபேரும் தான் சார்
மோகனா உடனே மருந்தகம் தெரிந்த இரண்டு நர்ஸ்களை உடனே வரவழைத்து மருந்தகம் கவனிக்க சொல்
இருவரின் வேலையை நீக்கி அனுப்பிவிடு
சரி சார்
தொடரும்