⭐♥️♥️காம அசுரன் காத்தவராயனும் மாயமலை கட்டழகு தேவதைகளும் ♥️♥️⭐
பாகம் - 104

மன்னர் காலம்

வந்த வேலையை முடித்து கொண்டு அக்ரூரர் தன் வீட்டுக்கு விடியற்காலை 3 மணிக்கே கிளம்ப தயாரானார்.

"அப்புறம் சம்பந்தி,சீக்கிரமே நீங்க பொண்ணு கேட்டு வாங்க..உங்க வரவை நான் எதிர்பார்க்கிறேன்."என சொல்லிவிட்டு அக்ரூரர் கிளம்ப தயாரானார்..

மாப்பிள்ளை வீட்டார்"என்ன சம்பந்தி அவசரம்,இன்னும் கொஞ்சம் நேரம் இருந்து விடிந்ததும் காலையில் போகலாமே.."என கூறினார்கள்.

அக்ரூரர் அதை மறுத்து"நேற்று இரவு முழுக்க விலாசினி தனியா இருந்திருப்பா சம்பந்தி..நான் நேற்றே சென்று இருக்க வேண்டும்..இதுவே தாமதமாகி விட்டது.."என சொல்லிவிட்டு அவசரம் அவசரமாக கிளம்பினார்.

அவசரமாக கிளம்பிய அக்ரூரரிடம் மாப்பிளை வீட்டார்"முக்கியமான விசயம் சம்பந்தி,தாங்கள் விலாசினியை மணம் முடித்து தரும் பொழுது சியாமந்தகா ரத்தினத்தை சீதனமாக தர வேண்டும் என கோரிக்கை விடுக்க,

அக்ரூரர் தயக்கத்துடன்,"நானே இதுவரை அதை உபயோகிக்கவில்லை சம்பந்தி,அதை நல்லதிற்காக மட்டுமே உபயோகிக்க வேண்டும் என்று தான் வம்சாவளியாக நாங்கள் பாதுகாத்து வருகிறோம்.அந்த ரத்தினத்தை தன் நலனை கருதாமல் பொது நலனுக்காக யார் நல்ல வழியில் பயன்படுத்த விரும்புகிறாரோ அவரிடம் மட்டுமே கொடுக்க எனக்கு உத்தரவு  இருக்கு.விலாசினி மணம் முடிந்து சில காலங்கள் போகட்டும்,நானே உங்களுக்கு அந்த ரத்தினத்தை தருகிறேன்."

சியாமந்தகா ரத்தினம் என்பது சூரிய பகவான் அணிந்து இருந்த ரத்தினமணி.அது பார்ப்பதற்கு கோகினூர் வைரம் போல ஆனால் அதை பெரிதாக இருக்கும்.அதை சத்திரஜித் என்ற மன்னன் சூரிய பகவானை நோக்கி தவம் இருந்து பெற்றான்.அந்த ரத்தினத்தை  அணிந்து இருப்பவருக்கு தோல்வியே கிடையாது.அதை அணிந்து வந்தால் அணிந்து வரும் நபர் ஜொலிப்புடன் சூரிய பகவானே நடந்து வருவது போல தோன்றும்.முக்கியமாக அந்த சியாமந்தக ரத்தினமணி மூலம் நாம் கடந்த காலம் ,மற்றும் எதிர் காலத்தை பார்க்க முடியும்.ஒருநாள் சத்திரஜித்திடம் அதை யாதவ மன்னருக்கு கிருஷ்ணன் கொடுக்க சொன்னார்.ஆனால் அதை அவன் மறுத்துவிட்டான்.சத்திரஜித்தின் தம்பி ஒருநாள் வேட்டைக்கு அந்த ரத்தினத்தை அணிந்து செல்லும் பொழுது வேட்டையில் சிங்கம் அவனை கொன்றுவிட்டது.சியாமந்தக ரத்தினமணிக்கு ஆசைப்பட்டு கிருஷ்ணர் தான் தன் தம்பியை கொன்று விட்டான் என்ற செய்தியை சத்திரஜித் நாடு முழுவதும் பரப்ப அது கிருஷ்ணருக்கு இழுக்கு ஆகி விட்டது.உடனே சத்திரஜித் தம்பி கடைசியாக சென்ற காட்டை நோக்கி கிருஷ்ணர் சென்றார்.ஆனால் கரடிகளின் ராஜாவான சிரஞ்சீவி ஜாம்பவான் சிங்கத்தை கொன்று அந்த சியாமந்தக ரத்தினத்தை கொண்டு சென்று தன் மகள் ஜாம்பாவதிக்கு அணிவித்து அழகு பார்த்தார்.கிருஷ்ணர் காட்டுக்கு வந்து பார்க்கும் பொழுது சத்திரஜித் தம்பி ஒட்டி வந்த குதிரை அருகே அவன் சடலம் இருப்பதை பார்த்தார்.அவனை கொன்றது சிங்கம் என அவரால் எளிதாக கண்டுபிடிக்க முடிந்தது.
அவன் சடலத்திற்கு சற்று தூரத்திலேயே சிங்கத்தின் சடலத்தையும் அவர் கண்டுபிடித்தார்.சிங்கத்தை  கொன்ற விலங்கின் கால் தடத்தை பின்பற்றி தொடர்ந்து போக அது ஒரு குகையில் சென்று முடிந்தது.அந்த குகைக்குள் உள்ளே சென்ற உடன் குகை முழுவதுமே ரத்தினத்தின் ஒளியால் மிக பிரகாசமாக இருந்தது..ரத்தினத்தை அணிந்து இருந்த பெண்ணின் அருகில் அவர் செல்ல,சிரஞ்சீவி ஜாம்பவானை கிருஷ்ணர் எதிர்கொள்ள நேர்ந்தது.இருவருக்குள் துவந்த யுத்தம் ஆரம்பமாகியது..21 நாட்கள் தொடர்ந்து நடந்த போரில் இருவருக்குமே வெற்றி,தோல்வி கிட்டவில்லை..ஆனால் ஜாம்பவான் களைப்பு அடைந்தார்.இதற்கு மேல் தன் பக்தனை சோதனைக்கு உள்ளாக்க விரும்பாத கிருஷ்ணர் தன் முந்தைய அவதாரமான ராமர் உருவை எடுக்க ஜாம்பவான் உடனே கண்களில் கண்ணீர் தளும்ப ,"பிரபு..!என்னை மன்னித்து விடுங்கள்.எப்பேர்பட்ட இழிவான காரியத்தை செய்து விட்டேன்."என கிருஷ்ணன் கால்களில் விழுந்து மன்னிப்பு வேண்டினார்..ஜாம்பவான் இராமரின் சேவகன்.ராமர் இராவணனுடன் போர் புரிந்த பொழுது அனுமனோடு சேர்ந்து போர் புரிந்தவர் தான் ஜாம்பவான்.
கிருஷ்ணர் தான் வந்த காரணத்தை உரைக்க,ஜாம்பவான் தன் மகளை அவருக்கு மணம் முடித்து சியாமந்தக ரத்தினத்தையும் பரிசாக கொடுத்தார்.அந்த சியாமந்தக மணியை சத்திரஜித்திடம் ஒப்படைத்த கிருஷ்ணர் நடந்த உண்மையை சொல்ல,சத்திரஜித் தன் தவறை உணர்ந்தான்.பின் அவன் மகள் சத்ய பாமாவை கிருஷ்ணருக்கு மணம் முடித்து சியாமந்தக மணியை கிருஷ்ணருக்கே சீதனமாக கொடுத்து விட்டான்..அந்த சியாமந்தக மணி தான் கிருஷ்ணர் மூலமாக அக்ரூரர் முன்னோர்களுக்கு கொடுக்கப்பட்டது.அதை யாருக்கும் விற்க கூடாது,சீதனமாக மட்டுமே கொடுக்க வேண்டும்.அந்த ரத்தினம் இருக்கும் இடத்தில் மகாலட்சுமி வாசம் புரிவார்.செல்வம் தழைத்தோங்கும்,முக்காலத்தையும் அறிந்து கொள்ளலாம்.தவறான காரணத்திற்கு உபயோகித்தால் அந்த ரத்தினம் உபயோகித்தவரையே அழித்துவிடும்..அந்த ரத்தினத்தை தான் அக்ரூரரின் சம்பந்தி சீதனமாக கேட்கிறார்.ஆனால் அந்த சியாமந்தக ரத்தினம் யாரிடம் போய் சேர வேண்டும் என்ற நபரை ஏற்கனவே தேர்ந்தெடுத்து விட்டது.

அக்ரூரருக்கு நேற்றில் இருந்து ஏனோ மனசே சரியில்லை..ஏதோ தவறு நடக்க போகிறது என இடக்கண் தொடர்ந்து துடிப்பதை வைத்து உணர்ந்து கொண்டார்.
போதாக்குறைக்கு அவர் வாசற்படியில் காலடியை வைத்த நேரம் அவர் பின்னந்தலையில் பல்லி விழுந்து நெருக்கமானவர்களுக்கு ஏதோ ஆபத்து என்பதை உணர்த்தியது.
ஓட்டமும் நடையுமாக தன் இருப்பிடத்தை நோக்கி விரைந்தார்.அவர் தன் வீட்டை அடைவதற்குள் சூரியன் உச்சியை நெருங்கி விட்டு இருந்தது.அவர் நினைத்தது போலவே விலாசினி அங்கு இல்லை.சுற்றும் முற்றும் விசாரிக்க அவள் நேற்று மாலை  இருந்தே காணவில்லை என கூறினர்.

வேறு வழியின்றி கதவை தாளிட்டு மறைத்து வைத்து இருந்த சியாமந்தக ரத்தின மணியை வெளியில் எடுத்தார்.

அக்ரூரர் சம்மணமிட்டு அமர்ந்து,ரத்தினமணியை முன்னே வைத்து அதன் முன் இரு கைகூப்பி,"சுயநலனுக்காக இந்த ரத்தினத்தை பயன்படுத்த கூடாது என்று எனக்கு தெரியும் ரத்தினமே,ஆனால் எனக்கு வேறு வழியில்லை.என் மகளுக்கு என்ன ஆயிற்று கூறு ரத்தினமே..!என்று வேண்டினார்.

அந்த ரத்தினத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் அப்படியே படக்காட்சிகள் போல விரிந்தன.. ஆரா மற்றும் அவன் மனைவி, விலாசினியை அழைத்து சென்றதையும், விலாசினி காத்தவராயன் பிடியில் சிக்கி தன் விலாசத்தை இழந்ததையும் அவரால் கண்கூடாக பார்க்க முடிந்தது.

இந்த ஊரில் யாருக்கும் எது நடக்கக்கூடாது என சப்த கன்னியர்களை காவல் வைத்தாரோ,கடைசியில் எல்லாவற்றையும் மீறி அவள் பெண்ணே காத்தவராயனிடம் சென்று பலியாகி விட்டாள் என்று நினைக்கும் பொழுது அவரால் கண்ணீரை அடக்க முடியவில்லை.

அவரது குடிசையின் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது.
உடனே அவசரம் அவசரமாக கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்து கொண்டு வெளியே வர,அங்கு மகேந்திர்வர்மன் தன் படைகளோடு நின்று இருப்பதை பார்த்ததும் துணுக்குற்றார்.

அவர் முகத்தில் தெரிந்த கலக்கத்தை பார்த்த மகேந்திரவர்மன்,"முனிவரே, நான் தங்களிடம் தனிமையில் பேச விரும்புகிறேன்.."என்று கூறினார்.

ஏற்கனவே நொந்து போய் இருந்த அக்ரூரர்,"நான் தற்போது யாரையும் பார்க்க எண்ணமில்லை.."என சொல்லிவிட்டு கதவை தாழிட முயற்சி செய்ய மகேந்திரவர்மன் தடுத்தார்..

மகேந்திரவர்மன் உடனே கதவில் கைவைத்து,"நான் இங்கு மன்னனாக வரவில்லை..உங்களை போன்று காத்தவராயனால் பெண்ணை பறிகொடுத்த தகப்பனாக வந்து இருக்கிறேன்"என்று கூற அக்ரூரரின் தடை நின்றது.மகேந்திரவர்மனை மட்டும் உள்ளே அனுமதித்தார்..

"தாங்கள் மதிவதனியின் தந்தை மகேந்திரவர்மன் தானே..!"என அக்ரூரர் கேட்க,

"ஆம் முனிவரே..!என் மகளின் விருப்பப்படி உங்கள் உதவியை நாடி வந்துள்ளேன்."

அக்ரூரர் விரக்தியுடன் சிரித்து கொண்டே,"என்னாலேயே என் பெண்ணை காப்பாற்ற முடியவில்லை.நான் எப்படி உங்களுக்கு உதவ முடியும்..!"

"உங்களிடம் எல்லா சக்தி இருந்தும் ஏன் உங்கள் பெண்ணை காப்பாற்ற முடியவில்லை என கொஞ்சமாவது சிந்தித்தீர்களா முனிவரே..!"என மகேந்திரவர்மன் கிடுக்கிப்பிடி போட அக்ரூரர் திடுக்கிட்டு பார்த்தார்

மகேந்திரவர்மன் தொடர்ந்து பேசலானார்.
"முனிவரே..!காத்தவராயனால் பல பெண்கள் பாதிக்கப்படும் பொழுது,அதை தடுக்கும் சக்தி உங்களுக்கு இருந்தும்,உங்கள் இனம் சார்ந்த பெண்களை மட்டும் காப்பாற்ற சுயநலமாக ஒரு பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி கொண்டீர்கள்..அதனால் தான் உங்கள் பெண் காத்தவராயனிடம் மாட்டி கொண்டாள்.."

"நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை தான் மன்னவா..என் சக்தியை கொண்டு முன்பே காத்தவராயனை கட்டுப்படுத்தி இருக்க வேண்டும்.என் இனம் மட்டும் பாதுகாப்போடு இருந்தால் போதும் என சுயநலமாக வேடிக்கை பார்த்ததால் வந்த வினை என்று உணர்ந்து கொண்டேன்."என்று அக்ரூரர் தொடர்ந்து அழுதார்.

"அழாதீர்கள் முனிவரே..! மேலும் யாரும் பாதிக்கப்படாமல் இருக்க காத்தவராயனை உடனடியாக கட்டுபடுத்த வேண்டும்.உடனே மாயமலை செல்லலாம் வாருங்கள்.."என்று மகேந்திரவர்மன் அழைத்தார்.

ஆனால் அக்ரூரர் அமைதியாக இருந்தார்..

"என்ன ஆயிற்று முனிவரே..உங்கள்  பெண்ணை காப்பாற்ற வேண்டும்.உடனே கிளம்புங்கள்.."என மீண்டும் மகேந்திரவர்மன் அழைக்க,

அக்ரூரர் பொறுமையாக மன்னனிடம்,"காலம் கடந்து விட்டது மன்னா,காத்தவராயன் அவன் மகன் உடலிலேயே புகுந்து என் மகளிடம் உடலுறவு கொண்டதால்,இப்பொழுது விராடன் உடம்பில் இருந்து காத்தவராயனை பிரிப்பது மிக கடினம்.மேலும்...?என அக்ரூரர் பீடிகை போட்டார்.

"என்ன மேலும்..! தயங்காமல் கூறுங்கள் முனிவரே.."மகேந்திரவர்மன் கேட்க,

மாயமலையில் நடக்கும் நிகழ்ச்சிகளை நான் கண்கூடாக கண்டேன்..விலாசினி தற்பொழுது கர்ப்பம் அடைந்து உள்ளாள்.அவளை காத்தவராயன் மயக்கத்தில் ஆழ்த்தி படுக்க வைத்து உள்ளான்.மேலும் காத்தவராயன் ஆவிக்கும்,அவன் உடலுக்கும் இன்னும் நூலிழை தொடர்பு உள்ளது.அதனால் அவன் விராடன் உடலில் புகுந்து விலாசினியுடன் உடலுறவு கொள்ளும் பொழுது,விலாசினி மேனிக்கும்,விராடன் உடம்பு மூலம் காத்தவராயன் ஆவிக்கும் தொடர்பு உண்டாகி இப்போ அது நீண்டு காத்தவராயன் மேனி வரை தொடர்பு உண்டாகி விட்டது.இதனால்
விலாசினி உடம்பில் இருந்து சிசுவுக்கு செல்லும் ஆக்க சக்தியை   காத்தவராயன் இறந்த மேனி உறிஞ்சி கொண்டு இருக்கிறது. சரியாக நூறாவது நாள் அவன் பிரேதம் மீண்டும் உயிர் பெற்று எழும்.இந்த நேரத்தில் அவனை நேரில் சென்று எதிர்ப்பது எமனை நேருக்கு நேர் சந்திப்பதற்கு சமம்.அவன் உயிர் பெற்று வந்து விட்டால் உங்கள் மகள் செய்யும் தவம் எல்லாம் வீண் தான்.."என்று அக்ரூரர் சொல்லி முடிக்க

இதை கேட்டு மகேந்திரவர்மன் வெகுண்டு எழுந்தார்.

"இல்லை அப்படி நடக்க நான் விடமாட்டேன்..நீங்கள் வராவிட்டாலும் பரவாயில்லை..என் மகளின் கட்டளைப்படி நான் மாயமலை சென்று என் உயிரை கொடுத்தாவது காத்தவராயனின் இந்த செயலை தடுத்து நிறுத்துவேன்"என சீறி கொண்டு மன்னன் கிளம்ப,மீண்டும் அக்ரூரர் தான் சுயநலமாக சிந்தித்ததை வெட்கி தலை குனிந்தார்.

"நில்லுங்க மன்னா..!எதிர்த்து நிற்பது எமன் என்று தெரிந்தும்
உங்கள் மகளுக்காக தங்கள் உயிரை கொடுக்க துணிந்து விட்டீர்கள்.உங்கள் தியாகத்தை பார்த்து என்மேல் எனக்கே வெறுப்பு வருகிறது.உலக நலனை சிந்திக்கக் வேண்டிய நான் மீண்டும் சுயநலமாக சிந்தித்ததை எண்ணி எனக்கே வெட்கமாக இருக்கிறது..நானும் உங்களுடன் வருகிறேன்..என் உயிர் போனாலும் காத்தவராயனை தடுக்க என்னால் ஆன எல்லா முயற்சியையும் செய்வேன்..என அவரும் மன்னனுடன் கிளம்பினார்..ஞாபகமாக சியாமந்தக ரத்தினமணியை எடுத்து கொண்டார்.

மாயமலையில்,
       கார்கோடா என்று காத்தவராயன் அழைத்தான்..

ஒரு பிரமாண்ட உருவம் வளைந்து நெளிந்து வந்தது..அந்த உருவத்தை பார்த்த காத்தவராயன்,"என்னோட உடலை பெறும் நிகழ்வை தடுக்க வருபவர் யாராயினும் அவர்களை கொல்வது உன் பொறுப்பு" என்று அவன் கட்டளையிட பிரமாண்ட உருவம் அதற்கு அடிபணிந்து வந்த வழியே வளைந்து நெளிந்து சென்றது.

யார் இந்த கார்கோடன்? அக்ரூரரும்,மகேந்திரவர்மனும் சேர்ந்து காத்தவராயன் திட்டத்தை தடுப்பார்களா..!

[Image: %3E20240731-221059-922.jpg]

[Image: IMG-hmlw3j.gif]
Like Reply


Messages In This Thread
RE: ⭐♥️♥️காத்தவராயன் ஆவியின் ◉⁠‿⁠◉ மோகதாபம்♥️♥️⭐(பிரியங்கா மோகன்) - by Geneliarasigan - 31-07-2024, 10:22 PM



Users browsing this thread: 123 Guest(s)