28-07-2024, 04:47 PM
#கனவே_நிஜமாகு
தொடர்கதை 20
ரதிமீனா மருத்துவமனை
காலையிலேயே நோயாளிகளால் நிறைந்து கொண்டிருக்க
காலை 8 மணிக்கே பானுமதி முத்தழகனுடன் வந்திருந்தாள்
முத்தழகனுக்கு ஒடுக்கப்பட்ட அறை மருந்தகம் பில் கவுண்டர் அருகிலேயே அமைக்க பட்டிருந்தது
பணம் செலுத்தும் பில் கவுண்டர் மற்றும் மருந்தகம் பணியாளர்கள் அனைவருக்கும்
பானுமதி
இதோ புதிதாக பணியேற்றுள்ளவர்
முத்தழகன் கம்யூட்டர் சாப்ட்வேர் இஞ்சினியர்
மருத்துவமனை மனோஜிங் டைரக்டராக நியமிக்க பட்டுள்ளார் அம்மா ரதிமீனா வுக்கு என்ன அதிகாரம் உள்ளதோ அத்தனையும் இவருக்கு உண்டு
அறிமுக படுத்திவிட்டு கிளம்ப தயாரானாள்
பானு எங்கே கிளம்பறே
கோயம்பேடு மார்க்கெட் க்கு
போடா காலேஜ் போகனும்ல அதுவும் மூன்று மாசம் தான்
அப்புறம்
அப்புறம் இருக்கு இந்த மருத்துவமனை சிஏஓ ஆக வந்து உன்னை ஆட வைக்கிறேன்
போடி
போடியா சரி மாலை வந்து கவனிக்கிறேன் சிரித்து கொண்டே நகர்ந்தாள்
முத்தழகன் மருத்துவமனை கம்யூட்டரை இயக்கி கணக்கு வழக்குகளில் மூழ்கி விட்டான்
சரியாக 9 மணிக்கு தலைமை டாக்டர் ரதிமீனா வந்தாள்
பணியாளர்கள் வணக்கத்தை புன்னகையுடன் ஏற்றுகொண்டே வந்தவள்
மருந்தகம் பில்கவுண்டர் தாண்டி போக
அடுத்து அறையில் முத்தழகன் இருப்பதை கண்டு
ஹாய் தம்பி எப்போ வந்தே
8 மணிக்கே வந்துட்டேன் அக்கா
பணி நேரம் 9 தானே
பானுமதி தான் அறிமுக படுத்த முன்கூட்டியே அழைத்து வந்துட்டா
அப்படியா சரிப்பா
நான் போறேன் பொறுப்பாக பார்த்துக்கோ
கிளம்ப பார்க்க
மேடம் யாரோ அழைத்தார்கள்
ரதிமீனா திரும்பினாள்
மருந்தக ஏஜண்ட் இரண்டுபேர் நின்றிருந்தார்கள்
என்ன வேண்டும் தாங்களுக்கு
மேடம் ஊசி மருந்துகள் சப்ளை செய்ததில் பணவரவு பிரச்சினை தான் மேடம்
ஓ என்னால் கவனிக்க நேரமில்லை நான்கு அபரேசன் உள்ளது
இதோ மனோஜர் இவரிடம் பாருங்கள்
ரதி மீனா நகர்ந்தாள்
இருவரும் திகைத்தார்கள்
மருந்தகம் கேபினில் விசாரித்தார்கள்
சார் இவர் புதிதாக வந்தவர் முன்னால் பணி செய்தவர்கள் கம்பெனி பணம் கையாடல் காரணமாக நீக்கபட்டு விட்டனர்
இருவருக்கும் வேர்த்து வழிந்தது
தயக்கத்துடன் மனோஜர் அறையில் நின்று கதவை தட்டினார்கள்
உள்ளே வாருங்கள்
இருவரும் உள்ளேவர
உக்காருங்கள் நீங்கள் யார்
சார் மருந்து சப்ளை செய்யும் கம்பெனி ஏஜண்ட் நாங்க
ஓ சரிங்க வந்த நோக்கம்
மருந்து சப்ளைக்கான பாக்கி பணம் தரவேண்டும் சார்
மருந்து சப்ளை செய்யப்பட்ட பில் கொடுங்கள்
கொடுத்தார்கள்
வாங்கிய முத்தழகன்
கம்யூட்டரில் சரி பார்த்தான்
கணக்கில் குளறுபடி இருவரையும் ஏறிட்டு பார்த்தான்
உதட்டை பிதுக்கினான்
மன்னிக்கவும் நாங்க பாக்கி பணம் வைக்கவில்லை
மருந்து கம்பெனி தான் ஒன்றரை கோடி மருத்துவமனைக்கு பாக்கி வைத்துள்ளது
சார் அப்படி இருக்காதே
பிறகு எப்படி இருக்கும்
மருத்துவமனை மருந்து கம்பெனி க்கு செலுத்தி ய பட்டியலை பாருங்கள்
கம்யூட்டரை அவர்கள் முன் காட்டினான்
பார்த்தார்கள்
சார் போன மாசம் வரை தானே தவறாமல் கட்டியுள்ளீர்கள்
இந்த மாசத்துக்கு தான் கட்டவில்லை
மிஸ்டர் மருந்து சப்ளைக்கான பணம் போன மாதம் வரை கட்டியுள்ளோம்
சரியே
மருந்து கம்பெனி அனுப்பும் மருந்துகளை விற்பனை செய்த வகையில் மருத்துவமனைக்கு கம்பெனி விற்பனை வருமானம் கடந்த ஓராண்டாக ஒன்றரை கோடி தரவில்லை அப்படி தந்திருந்தா
மருத்துவமனை கணக்கில் பதிந்திருக்கும்
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்
என்ன சொல்கிறீர்கள்
சார் அதுவந்து
போதும் கையமர்த்தினான் முத்தழகன்
மருந்து கம்பெனி சப்ளை செய்த மருந்துகள் ஒருகோடியே முப்பது லட்சம் ஸ்டாக் உள்ளது
மருத்துவமனை மருந்துகள் விற்ற விற்பனை லாபத்தொகையான ஒன்றரை கோடியை உடனே கட்டினால்
வழக்கம்போல் தொடரலாம்
இல்லை மருந்து ஸ்டாக் பணத்தையும் தர இயலாது
மேற்கொண்டு மருந்து கம்பெனி ஆர்டரை கேன்சல் செய்துவிட்டு
முறையாக விற்பனை லாபம் தரும் கம்பெனி யுடன் ஒப்பந்தம் போடுகிறோம்
நீங்கள் போகலாம்
சார் பெரிய கம்பெனி யோடு விளையாடுகிறீர்கள்
பெரிய கம்பெனியோ சிறிய கம்பெனி யோ பொருட்டே இல்லை
நேர்மை தான் முக்கியம்
உங்க கம்பெனி சிஏஓ நேரில் வரட்டும் அவர்களிடம் பேசிகொள்கிறோம் நீங்க போகலாம்
இருவருக்கும் வெலவெலத்து போனது
கம்பெனி சிஏஓ வுக்கு உண்மை தெரிந்தால் இருவரும் உயிரோடு இருக்க முடியாது என்பதை உணர்ந்தார்கள்
சார் கம்பெனி டீலை கேன்சல் பன்னாதிங்க கம்பெனி ல சொல்லி நாளையே பாக்கியை செலுத்தி விடுகிறோம்
நல்லது நீங்கள் போகலாம்
வெளியே வந்தார்கள்
மருந்து கம்பெனி யையே ஏமாற்றி ய பயம்
இதனால் இருவர் மட்டுமல்ல இருவரின் குடும்பமே அழிக்கபடலாம்
டேவிட் என்ன செய்வது
என்ன செய்ய சுருட்டியதை திருப்பி தந்துவிட்டா வேலையாவது தாங்கும்
சரிவா இப்பவே
நம்ம கணக்கில் உள்ளதில் திருப்பிடுவோம்
மறுபடியும் மனோஜர் அறையில் நுழைந்தார்கள்
என்ன புருவத்தை உயர்த்தினான்
சார் கம்பெனியில் பேசினேன் உடனே அனுப்பி விட்டனர்
இங்கே வரவில்லை யே
எங்க கணக்கில் போட்டுள்ளனர்
அப்படியா
பக்கத்து பணம் செலுத்துமிடத்தில் மருந்து கம்பெனி பெயரை பதிந்து கட்டி விடுங்கள்
சரிங்க சார்
பில் கவுண்டரில் இருவர் கணக்கில் இருந்து ஒன்றரை கோடி மருத்துவமனை கணக்கில் மாறிவிட்டது
மெசேஜ் மனோஜர் கம்யூட்டரிலும் பதிவானது
முத்தழகன் தனக்குள் சிரித்து கொண்டே போன மாச மருந்து விற்பனையில் விற்பனை லாபம் போக மருந்து கம்பெனி கணக்கிலேயே உடனே பணத்தை செலுத்தி விட்டான்
இருவரும் உள்ளேவர
பில்லை நீட்டினான்
சார் என்ன இது
இந்தமாத மருந்து விற்பனைக்காக கம்பெனி க்கு நேரடியாக பணம் செலுத்திய பில்
தொடரும்