28-07-2024, 04:43 PM
#கனவே_நிஜமாகு
தொடர்கதை 19
ஸ்டேசன் விட்டு சிவனேசன் ரதிமீனா முத்தழகன் வெளியேவர
கயல்விழி பதறியடித்துக் கொண்டு ஓடி வந்தாள் மகனே என்னாச்சு
அக்கா பதற வேண்டாம்
திருட்டு கூட்டம் வழிபறி க்கு முயன்று என்னால மாட்டிக் கொண்டது
சிவனேசா என்னடா இது சோதனை
அக்கா எல்லாம் நன்மைக்கே
அவன் நடத்தும் நாடகத்தில் வெறும் பொம்மலாட்டம் பொம்மை நாமே
அவன் ஆட்டுவித்தால் நாம் ஆடுகிறோம்
கார்ல ஏறுக்கா
குணசேகர் வழக்கறிஞர் தம்பி தாங்கள் போங்க நாளை ஆபீஸ் வாங்க மற்றதை பேசிக்கலாம்
கார் புறபட்டது சைதாப்பேட்டை நோக்கி
அதே நேரம் பானுமதி வீட்டில் துடித்துக் கொண்டிருந்தாள்
தன்னவனை போலீஸ் அடிக்குமோ கவலையா க அழுது கொண்டிருந்தாள்
அடிக்கடி வாசலுக்கு ம் கேட்டிலும் ஓடி ஓடி எட்டி பார்த்தாள்
வரவில்லை
சோர்வோடு போய் சோபாவில் அமர்ந்தாள்
பானுமதி யை மேலும் அழவிடாமல்
கேட்டை தாண்டி போர்டிகோவில் வந்து நின்றது கார்
பானுமதி சரெலென பார்வையை சுழற்ற
காரிலிருந்து
அப்பா அம்மா கயல்விழி மட்டும் இறங்க முத்தழகனை தேடிய்து கண்கள்
அப்பா அவர் எங்கே
சிவனேசன் புன்னகையுடன் காரை காட்ட கடைசியாக முத்தழகன் இறங்க
பானுமதி தன்னை மறந்து ஓடிப்போய்
கட்டி பிடித்து கொண்டாள்
இந்த காட்சியை பார்த்த ரதிமீனா கயல்விழி இருவரும் அதிர்ந்தார்கள்
சிவனேசன் முகத்தில் மட்டும் சிரிப்பு
மாமா என்னங்க இது பானுமதி இப்படியா ரதிமீனா பதற்றத்துடன் கேட்க
அவர்கள் காதலர்கள் அப்படி தான்
என்னாது காதலர்களா
படுபாவி எனக்கே தெரியாம. காதலா ஏய் அழுத்தக்காரி அவனை விடுடி
ம் மாட்டேன்
ஏன்டி பைத்தியமா நீ
பானுமதி அப்பாவை பார்த்தாள்
பானுமதி பார்வை கண்டு
பானு அவனை கூட்டிட்டு உன்னோட அறைக்கு போ
சொல்ல உடனே இழுத்து கொண்டு தன்னோட அறையை நோக்கி சென்றுவிட்டாள் பானுமதி
என்னங்க மாமா இதென்ன கூத்து காதல் கத்திரிக்கா னு சுற்றாதவ எப்படி
ரதி உனக்கு தான் காதலை பத்தி தெரியாதே
பருவ வயதில் காதல் பிறப்பது இயற்கை தான்
பானுமதி கண்டவனை காதலிக்கவில்லை
கயல்விழி அக்கா அடிக்கடி நம்ம வீட்டுக்குவர கூடவே வரும் முத்தழகன் பானுமதி யுடன் பழகி இருக்கான் அது காதலா மாறிவிட்டது அவ்வளவுதான் சர்வசாதாரணமாக சொன்னான்
ரதிமீனா முகத்தில் ஈயாடவில்லை
கயல்விழி தான் குனிகுறுகி நின்றாள்
அக்கா என்ன இது எதற்கு இப்படி இயல்பாக இருக்கா
சிவனேசா என்மகன் இப்படி பானுமதி யை காதலிப்பான்னு நினைக்கல தெரிந்தா கண்டித்து இருப்பேன்
அக்கா காதல் கடிவாளம் இல்லாத குதிரை கண்டித்தாலும் அடங்காது
அதுவும் உறவு பெண்ணை காதலிப்பது குற்றமே இல்லை
அப்போ என்னங்க செய்யட்டும்
ரதிமீனா அடுத்த ஆவணியில் மணம் முடிப்போம்
சிவனேசா நீ எங்கே நான் எங்கே உறவு தான் என்றாலும் நாங்க வசதி குறைவு
சிவனேசன் வாய்விட்டு சிரித்தான்
அக்கா ஏழை பணக்காரன் பேதமே தான் உறவுகளை பிரித்து வைத்துவிடுகிறது
இவ்வளவு சொத்துக்கு வாரிசான நானே ஏதோ கிராமத்தில் கிடைத்ததை சாப்பிட்டு வாழூம் நிலை அதோடு பலருடன் படுத்து கெட்டவள் நான் கெடுத்து கர்ப்மாக்கியதாக நாடகமாடி என்னை மணந்தவ நோக்கம் பின்னால தான் புரிந்தது ஊரில் பெரும் பணக்காரன் சின்னவீடாக இருந்தவள் கர்பமான உடன் பணக்காரனை காட்டிதர விரும்பாமல் என்னை மாட்டிவிட்டு பணக்காரனுடன் இப்பவும் சின்ன வீடாக வாழ்கிறாள் அவளுக்கு நான் சும்மா பொம்மை புருசன் தான் பெண் சுகமே அறியாத நான் ரதிமீனா வுட.ன் தான் முதலிரவு கண்டேன்
ரதிமீனா வியந்தாள் நானாக கெடவில்லை எனினும் கெடுக்கபட்டும் ஆண் சுகம் விரும்பாமல் வாழ்ந்தது போல மாமாவுமா கண் கலங்கினாள்
சிவனேசா இவ்வளவு கொடுமையா
சிவனே அப்பா
அக்கா கடந்து போனதை நினைத்து ஒன்றும் ஆகப்போவதில்லை
பானுமதி நள்ளிரவில் யாருடனோ போன் பேசி வாடா போடானு அரட்டை அடிப்பதை கண்டு காலையில் பார்க்கலாம் என நழுவி விட்டேன்
பானுமதி யை பின் தொடர்ந்தேன் காதலனை சந்தித்தாள் முத்தம் கொடுத்துட்டு கல்லூரி சென்றாள்
காதலன் யாரென்று அறிய விசாரித்தேன் உன்னோட மகன்னு தெரிந்து சிரிப்போடு கண்டிக்காமல் விட்டுவிட்டேன்
உங்க கட்டிட பிரச்சினையில் எத்தனை கோடி ஆனாலும் பரவயில்லை என ஏலத்தை எடுத்து கட்டிடத்தை உங்களிடமே ஒப்படை க்க தான் நினைத்தேன் எதையும் நீங்க ஓசில வாங்க மாட்டிங்க அதனால உங்க வருங்கால மருமகள் பானுமதி பெயரில் பதிவு செய்துட்டேன்
கயல்விழி வாயடைத்து போனாள்
ரதிமீனா வோ திருதிருவென விழித்தாள்
என்னடி விழிக்கிறே
உங்க உள்ளாடி வேலைல மலைப்பா இருக்கு மாமா
அதானே சிவனேசன்
அக்கா என் மகளை ஏற்க சம்மதமா
சம்மதமாவா
மனபூர்வ சம்மதம் சிவனேசா
நல்லதுக்கா நாளை
மருத்துவமனையை கண்காணிக்க முத்தழகன்
மனோஜிங் டைரக்டராக போட நினைக்கிறேன் பானுமதி யிடமும் சொல்லி விட்டேன்
இந்த சிடுமூஞ்சி சம்மதம் மட்டுமே பாக்கி
ஏய் ஓட்டைபல்லு வாயா நான் சிடுமூஞ்சி யா இருடா உன்னை அடிக்க பாய்ந்தாள் விளையாட்டாக நழுவி ஓடினான்
கயல்விழி முகத்தில் சந்தோசம்
அப்பா குற்றலீஸ்வரா இவர்களை சோதிக்காம எப்போதுமே காப்பாற்று
உள்ளுக்குள் வேண்டிக் கொண்டாள்
தொடரும்