28-07-2024, 04:40 PM
#கனவே_நிஜமாகு
தொடர்கதை 18
பானுமதி அப்பாவின் சேதியை சொல்ல காதலன் முத்தழகனுக்கு கைபேசி செய்ய
நொடியில் மறுமுனையில் எடுத்தான்
என்ன பானு அதிசயமா இந்த நேரத்தில்
அதுவா நாளைக்கு நமக்கு கல்யாணம் டா
என்ன கிண்டலா
போடா சுண்டல் அப்பா தான் சொன்னாரு
என்னாது நாளைக்கு கல்யாணம் னா
ஆசைய பாரு அதில்ல
என் மாமியார் ஆசைபட்ட பில்டிங் கட்டிடத்தை மீட்டதில் இருந்து கட்டத்தை என் பேருக்கு வாங்கி ஏன் எதற்காக என அப்பா சொன்னதை எல்லாமே சொல்லி முடித்தாள்
பானு உண்மைல எனக்கு தங்கமான மாமனார் அமைஞ்சிருக்கு
பானு கொஞ்சம் லைன்ல இரு
என்னாச்சுடா
எவளோ ஒருத்தி என் கைபை கைபேசி யை பிடுங்க பார்க்கிறா வழிபறி திருடியா இருப்பா
ஏய் கையை எடுடி இல்ல
இல்லைனா அடிச்சிடுவியா ஒழுங்கா கொடுத்துட்டு ஓடி போயிடு
முடியாது ஓங்கி அறையும் சத்தம் பானுமதி க்கு கேட்டது
அந்த பெண் ஊரை கூட்டியதும் கூட்டம்கூடி முத்தழகனை தாக்குவதும் கடைசியில் போலீஸ் வந்து பிடித்து போனதும் பானுமதி க்கு கேட்டது
மறுமுனையில் முத்தழகன் பானு ஏமாற்றபட்டு போலீஸ் ல சிக்கிட்டேன் ஸ்டேசன் கூட்டிட்டு போறாங்க சொல்லும் போதே கைபேசி பிடுங்கபட்டு ஆப் செய்யபட்டதை உணர்ந்தாள்
பானுமதி பதறியடித்து கொண்டு அப்பாவை தேடி மூச்சிறைக்க ஓடினாள்
பானுமதி பதறியடித்து ஓடிவருவதை கண்டு சிவனேசன் ரதிமீனா இருவரும் பதற்றமடைந்தனர்
அப்பா அவரை எவளோ வழிமறித்து வம்பு பன்னி போலீஸ் ல பிடிச்சு கொடுத்திருக்கா
கைபேசி பேசியதில் இருந்து கைபேசி பிடுங்கபட்டதுவரை சொல்லி முடித்தாள்
பானு பதட்டபடாதே நானிருக்கேன்
ரதிமீனா டிரஸ் வழக்கறிஞரை உடனே தொடர்புக்கொள் காரை எடு
பானு அவர் எந்த ஏரியாவில் பேசினார்னு தெரியுமா
அப்பா அவர் வீடு சமிபத்தில் பெருங்குடி கிளாப் வாசலில் பைக்கை நிறுத்தி பேசி கொண்டதை சொன்னார் பா
பானு அவர்மேல கைவைக்க முடியாது உடனே அழைத்து வந்திடறேன்
அப்பா நானும் வருகிறேன் பா வேண்டாம்மா காவல்நிலையம் ல இளம்பெண்ணை கூட்டி போனா வேறு மாதிரி பேசும் உலகம் அதுவும் இரவு நேரத்தில் பானு பதட்டபடாதே அந்த பெண் திருடியா தான் இருப்பா தைரியமா இரு
மீனா காரை பெருங்குடி விரட்டு
பெருங்குடி நோக்கி சீறி பாய்ந்தது ஆடிக்கார்
பெருங்குடி நண்பர்கள் கிளாப் பானுமதி சொன்ன இடத்தில் நின்று சுற்றிலும் பார்த்தார் சிவனேசன்
முத்தழகன் நின்ற பக்கமே வடமாநில இளைஞர்க.ள் நடத்தும் தேனீர் மற்றும் கடையும் இருந்தது
ரதியும் சிவனேசனும்
கடையில் சென்றார்கள்
தம்பி ஓர் உதவி செய்ய முடியுமா
கேளுங்க அண்ணே
கொஞ்ச நேரம் முன் ஓரு இளைஞரிடம் இளம்பெண் தகறாறு செய்து போலீஸ் ல பிடிச்சு கொடுத்த சம்பவம் தெரியுமா
தெரியுமாவா நானும் நண்பரும் பார்த்துட்டு தான் இருந்தோம்
நிச்சயமா அந்த அண்ணா தப்பு செய்யல அந்த பெண் வழிபறில ஈடுபட்டு அடி வாங்கியதால் பழி வாங்கி இருக்கு அதான் தெரியும்
அதை போலீஸ் ல சொல்லி இருக்கலாமே
அண்ணே நீங்க வேற நாங்க பொழைப்புக்காக இங்கே வந்தோம் உண்மையை சொன்னா எங்களையும் தோலூரித்துடுவாங்க
உண்மை தான் தம்பி
அண்ணே அந்த அண்ணா யாரு
அது என்னோட மருமகன் என் மகளோட வருங்கால கணவர்
அப்படியா அண்ணே வருத்தமா இருக்கு
அதேநேரம் டிரஸ் வழக்கறிஞர் வந்து சேர்ந்தார் விவரம் அறிந்தார்
உடனே ஜாமீன் ல எடுத்துடலாம் விடுங்க
விடுவதா இல்லை அந்த பெண்ணை இன்றே சிறையில் தள்ளனும்
ஆவேசமானான் சிவநேசன்
சுற்றுமுற்றும் பார்த்தான் பார்வையில் பொறி தட்டியது
தம்பி அந்த சிசிடிவி கேமரா யாருடையது
எங்களுடையது தாண்ணே இங்கே குடித்துட்டு வம்பு பன்னா ஆதாரத்துக்காக வைச்சிருக்கோம்
தம்பி இந்த கேமரா கோணம் அந்த இடத்தை காட்டுமா
என்னண்ணே அப்படி கேட்டுட்டிங்க வாசல்ல இருந்து அடுத்த தெரு கடைவரை துள்ளியமா பதிவாகும்
அப்படியா நல்லதா போச்சு தம்பி அந்த சிசிடிவி புட்டேஜை டவுன்லோட் செய்து தரமுடியுமா
நொடியில் அண்ணே
பதிவிறக்கம் செய்து உடனே தந்தான்
தம்பி ரொம்ப நன்றி எந்த உதவி தேவைனாலும் தாராளமா கேள் விசிடிங் கார்ட்டை நீட்டினார்
சரிங்கண்ணே
பெருங்குடி காவல்நிலையம்
சிவனேசன் ரதிமீனா வழக்கறிஞர் உடன் உள்ளே நுழைய முத்தழகனை பெண் சப் இன்பெக்டர் பிரம்பால் விளசி கொண்டிருந்தாள்
அதை பார்த்த கண்கள் கோபத்தில் கொதித்தன
ஏய் நிறுத்துடி
எதிர்பாரத விதமாக ஸ்டேசனே அதிரும்படி குரல்வர ஒருகணம் பெண் சப் இன்பெக்டரே அதிர்ந்தாள் மறுகணம் சுதாரித்தாள்
ஏய் யார்நீ இங்கே வந்து கத்தறே
கத்தாம உன்னை கத்தியால குத்தனுமா
டேய் என்ன சொல்றே
சிவனேசனை அடிக்க கை ஓங்க
அடுத்த கணம் அந்த பெண் வயிற்றில் உலக்கையால் குத்தியது போல வயிற்றை பிடித்து கொண்டு கீழே வீழ்ந்து வலியால் துடித்தாள் மற்ற காவலர்கள் தாக்கவர
சிவனேசன் எச்சரித்தான் இந்த திருடியோடு கூட்டு சேர்ந்தா உங்களுக்கு ம் அதோ கதிதான் காவலர்கள் பின்வாங்கின
சிவனேசன் சார் போலீசை அடிப்பது சட்டப்படி குற்றம்
சட்டப்படி குற்றம் தான் ஆனா இவ சட்டப்படி போலீஸ் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடந்திருந்தா நான் தாக்கியது சட்டப்படி குற்றமே ஆனா இவ திருட்டு கூட்டங்களை ஏவி திருடு தொழில் செய்யும் இவ போலீசா
முத்தழகனிடம் வம்பு செய்த பெண்ணும் பக்கத்தில் இருந்தாள்
சிவனேசன் அந்த பெண்ணின் தலைமுடியை கொத்தாக பிடித்து தூக்கினான்
என்ன தைரியம் இருந்தா என் மருமகன் மேலேயே பழி போடுவாய் முகத்தில் ஓங்கி அறைந்தான் வாழ்நாளில் வாங்காத அடி பயத்தால் அலறினாள் சார் என்னை விட்டுடுங்க இவரால தான் நாங்க திருடறோம்
முன்னால பசிக்காக திருடுவோம் ஆனா இவரால திருடறோம் மறுத்தா திருட்டு கேஸ்ல போட்டுடுவா சார்
வழக்கறிஞர் கேட்டிங்களா இவளோட முகமூடியை
மறுபடியும் சப் இன்பெக்டர் முகத்தில் எட்டி உதைதான் ஏய் உன் திருட்டு தொழிலுக்கு என் மருமகன் தான் கிடைத்தானா
மறுபடியும் உதைக்க போக
போதும் முனியப்பா நிறுத்து
வாசலில் ஸ்டேசன் இன்பெக்டர்
வந்து கொண்டிருதார்
சிவனேசன் பார்த்தான்
ஏய் கருப்பசாமி பாண்டியா இங்கே எப்படி
நானே கேக்க வேண்டிய கேள்வி
எங்கேடா சென்னைல
கல்லிடை குறிச்சில தான் அடாவடி பேர்வழினா இங்கேயுமா
சார் இவர் தப்பு பன்னல அந்த பெண் தான் வழக்கறிஞர் சொல்லவர
கருப்பசாமி பாண்டியன் கையமர்த்தினார்
முனியப்பன் மேல தப்புனு சொல்ல ஆண்டவனே வர மாட்டான் நான் எம்மாத்திரம்
சார் இவரை தெரியுமா தெரியுமாவா
இவர் என்னுயிர் தோழன்
ரதிமீனா வியந்தாள்
சார் இவர் என்னை அடித்துட்டாரே
சப் இன்ஸ்பெக்டர் முறையீட
அப்படியா ஏன்டா இவளை இப்படி அடிச்சே
தோ இப்படி தான் அடிச்சிருக்கனும்
கையில் இருந்த பிரம்பால் விளசு விளசு என விளசி தள்ளினார்
ஸ்டேசனே அதிர்ந்து போனது
பாண்டி நடந்தது என்னன்னா
டேய் முனியா அங்கே டீகடைல ஏதெச்சையா பார்த்தேன்
நம்ம முனியப்பன் போல இருக்கேனு விசாரிக்க நெருங்க கிளம்பிட்டே கடைகாரனிடம் விசாரித்தேன் நடந்த கூத்து தெரிந்துவிட்டது
இங்கே வந்தேன் உன்னோட அடி எப்படினு இந்த திருடிங்க உணரட்டும்னு காத்திருந்தேன் அவ்வளவு தான்
ஆமா இந்த அழகி யாரு
அதுவா என் பொண்டாட்டி டா
என்ன உளறுறே அடங்காபிடரி பிரியா தானே உனக்கு
அவ எனக்கு மனைவியா
சாரி முனியா சுத்தமாக நீ இருந்தும் சுத்தமில்லாத வேசியாபோயிட்டா விட்டுதள்ளு கத்திரிக்கா மனைவி கிடைச்சாச்சு இல்ல
என்னாது நான் கத்திரிக்கா யா
அட சும்மா மா
கத்திரிக்கா னா எங்களுக்கு ள் கட்டழகி தான்
போங்கண்ணே இவரைவிட நீங்க பெரும் குறும்பு
சரிம்மா இவரை கூட்டிட்டு போ முன்கோபக்காரன் இந்த பெண்ணை அடிச்சே கூட கொன்னுடுவான்
இவங்கள நான் பார்த்துக்கறேன்
சரிங்கண்ணே இந்தாங்க விசிடிங் கார்ட் நேரம் கிடைத்தா வீட்டுக்கு வாங்க
சரிம்மா பத்திரமா போம்மா டேய் கோபத்தை விட்டு மெதுவா போடா
சரி சரி வேகமா போனா பொண்டாட்டி பறந்துடுவா
பாண்டி சிரித்தான்
சார் அந்த சிசிடிவி புட்டேஜ்
தேவையில்லை நானே வாங்கிட்டேன்
இவளுக்கு இவ மட்டும் கிடையாது 27 வழிபறி திருடர்கள் இதற்கு தலைமை இவதான் சப் இன்பெக்டர் போர்வையில் இவளின் முகமூடியை முனியப்பன் தான் கிழிச்சு காட்டி இருக்கான் எனக்கே தெரியல வழக்கறிஞர் நீங்க கோர்ட்ல இவளுக்கு எதிரா வழக்கு தொடருங்க
நிச்சயமாக சார்
தொடரும்