28-07-2024, 04:37 PM
#கனவே_நிஜமாகு
தொடர்கதை 17
ஏலம் எடுத்த சிவனேசன் கயல்விழி அக்காவுடன் காரில் ஏற போக
முன்னால் வந்து தடுத்தாள்
ஏமாற்றுக்கார பெண்
கயல்விழி என்னையே ஏமாற்றி விட்டாயே
கயல்விழி ஏதும் பதிலளிக்கவில்லை மௌனமானாள்
கேக்கிறேன் இல்ல
ஆமா என்ன கேக்கிறே மூளிநாயே
சிவனேசன் தான் ஆவேசமானான்
என்னடி சொன்னே ஏமாற்றி னாருன்னா
மூளியங்காரியைவிட நீ பயங்கர ஏமாத்துகாரியாச்சே
என்னோட அக்கா பாடுபட்டு சேர்த்த பணத்தை ஏமாற்றி அபகரித்துவிட்டு அக்காவையே ஏமாற்றி விட்டதா உளறுகிறாயா
நீயாருடா அதை கேக்க
ஏய் மூளி நான் யாரா ரதிமீனா டிரஸ்ட் சிஇஓ நான் நினைத்தா உன் குடும்பமே சிறையில் போக வைக்க என்னால முடியும் நீயென்ன சும்மா சில கோடிகளை சுருட்ட நாடகம் போட்டே நானோ சென்னை கோடீஸ்வரர்களின் ஒருவன் பதினைந்தாயிரம் கோடி சொத்துக்கு அதிபதி என்னிடமா உன்னோட ஆட்டம்
ஆமா திண்டுக்கல் பைனன்சியரிடம் 20 கோடிக்கு கடன் வாங்கி
கட்டிடத்தை ஏலம் எடுக்க டம்மி ஆட்கள் பலரை கலந்துக்க வைத்து 20 கோடிக்குள் முடிக்க பார்த்தே இல்ல அந்தோ பாவம் நான் களத்தில் குதிப்பேன்னு எதிர்பார்க்கல போல
சிவனேசன் வாய்விட்டு சிரித்தான்
பாவம் இன்றிலிருந்து மூன்றே நாளில் அனைத்தையும் இழந்து நடுதெருவுக்கு வரதான் போகிறாய்
அதெல்லாம் நடக்காது போடா
நடக்காதா பாவம்
ஒருத்தன்கிட்ட 20 கோடி கடன் கந்து வட்டி யில்
பில்டிங்கை 45 கோடிக்கு விற்பதாக சொல்லி 30 கோடி அட்வான்ஸ் பெற்று சொகுசு வாழ்க்கைகு செலவிட்ட கடனை அடைச்சிட்டே
சரி பில்டிங் என் கையில்
பில்டிங்குக்கு அட்வான்ஸ் பணம் 30 கோடி கொடுத்தவருக்கு எப்படி பணத்தை திருப்பி தருவே இருக்கும் வீட்டை வித்தாலும் மேலும் 2 கோடி தான் கிடைக்கும் அப்போ
22 கோடியில் மிச்சம் 8 கோடிக்கு எங்கே போவாய்
ஒருபக்கம் பில்டிங் விற்க பெறபட்ட பணமும் போச்சு பைனான்சியல் பணமும் பில்டிங் வாங்க நினைத்தவருக்கு போகும் மீதி 8 கோடி அவருக்கு தரவேண்டும்
அதைவிட பைனான்சியல் கந்துவட்டி க்கு 20 கோடியுடன் வட்டியும் தரனும் சரியா
இப்போ பாவம் இதிலிருந்து தப்பிக்க ஒரே வழிதான்
என்ன
குடும்பத்தோடு எங்காச்சும் ஓடி போயிடு வரட்டா
ஏமாற்றுகார பெண் திகைத்தாள் சிவனேசன் சொன்ன உண்மைகளால் பயத்தால் நடுங்கி போனாள்
கூட இருந்த கூட்டங்கள் இவளால் லாபமில்லை என நினைத்து ஆளுக்கு தந்த ஒருகோடி டெபாசிட் பணத்துடன் எஸ்கேப் ஆகின
தன்வினை தன்னை சுடும்
அக்கா காரில் ஏறுங்க
கத்தியை எடுத்தவனுக்கு கத்தியாலேயே தான் சாவு
ஏமாற்ற நினைத்தவனுக்கு ஏமாற்றத்தாலேயே தான் சாவு போலாமே அக்கா
ரதிமீனா காரை கிளப்பினாள்
என்னம்மா மீனா வந்ததில் இருந்து ஒன்னுமே பேசலியே
ஆங் ஒன்னுமில்ல மா மாமா பார்த்துக்குவாருனு கம்முனு இருந்துட்டேன்
ஆமா கம்முனா இருந்தே என்னையே பார்த்துட்டு சில்மிஷம் செய்துட்டு தானே இருந்தே
ஏய் மாமா உஷ் சொல்லாத
கயல்விழி சிரித்துவிட்டாள்
அக்கா வீட்டுக்கு வருகிறீர்களா
இல்லைப்பா ஒரே மகன் அவனுக்கு சமைக்கனும் அதனால
பெருங்குடி வீட்டில் டிராப் பன்னிடுப்பா
சரிக்கா
ரதிமீனா வண்டியை அடையாறு நோக்கி பெருங்குடி போ
அங்கிருந்து கிண்டி வழியா சைதை வீட்டுக்கு போயிடலாம்
சரி மாமா சந்தோம் சாலையை கடந்த கார் அடையாறு நோக்கி விரைந்தது பதினைந்தே நிமிடத்தில் தரமணி பெருங்குடியில் கயல்விழி வீட்டை அடைந்தது
வாடா தம்பி மீனா நீயும் வா ஒரு வாய்காபி குடிச்சிட்டு போப்பா
காபி தானா சாப்பிட இல்லையா
சமைக்கிறேன் வெயிட் பன்றியா
ஐயோ அக்கா இன்னொரு நாள் குடும்பத்தோடு வருகிறேன் காபி போதும் பானுமதி கோபத்துல இருக்கு சமாதான படுத்தனும்
காபியை குடித்து கொண்டே சிவனேசன் சொன்னான்
ஆமா அக்கா மருமகன் எங்கே
மருமகனா யாரு
அட உங்க பையனை கேட்டேன்
அவனா ராத்திரி வேலை பகல் வேலைனு இருப்பான் பத்துமணி ஆகும் வர
சரிக்கா கிளம்பறோம்
அம்மா போய்வருகிறோம் மா
போம்மா மீனா நாளை மருத்துவமனை வருகிறேன்
கார் சைதாப்பேட்டை நோக்கி விரைந்தது
சைதாப்பேட்டை பங்களா வீட்டில்
பானுமதி அறையில் இப்பவும் கோபம் குறையாமல் இருக்க
பானுவை செல்லமாக அடித்து சமாதான படுத்தினான் சிவனேசன்
பில்டிங் பத்திரத்தை பானுமதி யிடம் நீட்டினான்
பத்திரம் பானுமதி பெயருக்கு இருந்தது
அப்பா என் பேருக்கு எதுக்கு
அதுவா உன் அத்தை பாடுபட்டு கட்டநினைத்த கட்டிடம் ஏமாத்துகாரியால் கைபற்றட்டது மீட்டு வந்துவிட்டேன் நடந்ததை சொல்லி முடித்தான்
அப்பா அதுக்காக என் பேருக்கு ஏன்
கயல்விழி அக்கா சும்மா கொடுத்தாலும் வாங்க மாட்டாரே அதான் உன் பேருக்கு
ஒன்னுமே புரியலப்பா
புரியனுமா கயல்விழி அக்காவின் செல்ல மருமகளாச்சே நீ
அப்பா எப்படி
பானு காலைல உம்முனு இருந்தே
நான் உன்னை நிச்சயம் பன்னிட்டதாகவும் நிச்சயம் செய்த மாப்பிள்ளையுடன் கணவன் மனைவியாக சுற்றுவதையும் சொன்னேன் இல்ல
ஆமாம்பா ஆனா
ஆனா ஆவன்னா
கயல்விழி அக்கா மகனுடன் உனக்கு இருக்கும் காதல் எனக்கு தெரியும்மா
அப்பா அது தலை குனிந்தாள்
பானு நல்லவனை தான் தேர்ந்தெடுத்து இருக்கே மறுப்பு சொல்ல என்ன இருக்கு
பானுமதி ஓடிவந்து அப்பா கன்னத்தில் சந்தோசமாக முத்தமிட்டாள்
பானுமதி போதுமா இப்பவும் உம்முனு இருப்பியா
இல்லைபா
பானு இன்னொன்னு ம் செய்யனுமே
சொல்லுங்கப்பா
அக்கா மகன் முத்தழகன் தனியார் ஐடி கம்பெனி ல வேலை பார்க்க வேண்டாம்
நம்ம மருத்துவமனையை கவனிக்கும் மனோஜிங் டைரக்டர் போஸ்ட்ல உக்கார வைத்துவிடு சரியா
அப்பா நிசமாவா அம்மா ஏதும்
அம்மாவா அம்மாவோட குடுமியே என் கையில்
போங்கப்பா சிரித்துவிட்டு
ஓடினால்
தன்னோட காதலனிடம் சேதி சொல்ல
தொடரும்