26-07-2024, 03:34 PM
(This post was last modified: 26-07-2024, 03:35 PM by krishkj. Edited 1 time in total. Edited 1 time in total.)
#கனவே_நிஜமாகு
தொடர்கதை 16
ஞாயிறு கிழமை அதிகாலை குளித்தெழுந்த ரதிமீனா பூஜையறையில் பூஜை செய்ய முயல
பூஜையறையை பார்த்தாள்
ஆர்செய்த வேலையிது
சுற்றுமுற்றும் பார்க்க மாமா சோபாவில் இருக்க மாமா முகத்தில் சந்தன பொட்டு
புரிந்து போனது எனக்கு முன்னலேயே குளித்து விளக்கேற்றி பூஜையை முடித்துவிட்டார் போல
சூடம் இப்பவும் எரிந்து கொண்டிருக்க தட்டை எடுத்து ஆரத்தி சுற்றி குங்குமம் நெற்றியில் இட்டு கொண்டாள்
என்ன மாமா எனக்கு முன்னால பூஜையறைல கரடி புகுந்து டிச்சோ
ஆமாம்ல புகுந்தா தானே நல்லா இருக்கும்
மாமா எதை சொல்ல வருகிறார் என புரிந்து முறைத்தாள் சீ போங்க மாமா நீங்க மோசம்
ஓ நான் கடிச்சி விட்டதாலயா
இரு உன்னை செல்லமாக அடிக்க போக
காலையிலேயே வீட்டுக்குள்
டாக்டர் கயல்விழி நுழைந்திருந்தாள்
அக்கா வாங்க வாங்க
சிவனேசன் வரவேற்றான் கூடவே ரதிமீனா வும்
தம்பி நீ வந்திருப்பதால் லீவு நாளில் உங்களுடன் கலந்துகொண்டு பேச வந்திருக்கேன்
அதனால் என்ன அக்கா இங்கயே நிரந்தர மாகூட இருக்கலாமே
அது சரிபடாது தம்பி
நிச்சியம் ஓர்நாள் சரிபடும் அக்கா
சிவனேசன் எதை வைத்து சொல்கிறான் புரியாமல் விழித்தாள்
ஏய் கயல் எப்படி வந்தே ரதிமீனா அம்மா பத்மாவதி தான் வரவேற்றாள்
என்னடி பத்மா நான் வரகூடாதா
யாருடி சொன்னது ஏய்
ஐயோ பாட்டிமாரே சண்டையை நிறுத்துங்க
அடபாவி நாங்க பாட்டிமாரா இருடா உன்னை அத்தை தான் சிவனேசனை அடிக்க ஓடிவந்தாள் அத்தையிடம் இருந்து தப்ப ரதிமீனா வை முன்னே பிடித்து கொண்டான்
சிரிப்பு சத்தம் கேட்டு பானுமதி யும் ஓடிவந்து கலந்து கொண்டாள் வீடே சிரிப்பலைக்கு மாறியது
சிரிப்பலையை நிறுத்துவது போல கேட்டை தாண்டி நான்கு கார்கள் போர்ட்டிகோவில் வந்து நின்றன
என்னப்பா கூனி மறுபடியும் கூலிப்படை கொண்டு வந்துட்டாளா
அதெல்லாம் இல்லை பானு கூழ் குடிக்க வழியில்லாதவ கூலிப்படை க்கு கூலியா தரமுடியும் வருவது யாரோ
காரிலிருந்து முதலில் இறங்கியவன் வீட்டுக்குள் வந்து ரதிமீனா விடம் மேடம்
அமைச்சர் வந்திருக்கார்
ஏன் ஏதற்கு
அதெல்லாம் தெரியாது மேடம்
சரி வர சொல்லுங்க
காரிலிருந்து உள்துறை அமைச்சர் கார்மேகம் அவரோட மனைவி நகைகடையாக வந்திருந்தாள்
கூடவே அவரோட மகன்
காவலர்கள் வாசலிலேயே தங்கிவிட
அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள் சூழ வீட்டுக்குள் நுழைந்தார்
வாங்க வாங்க
ரதிமீனா வரவேற்றாள் கூடவே சிவனேசனும் பணிவாக
இவர் யாரு
அதிகார தோரணையில் அமைச்சரின் மனைவி கேக்க
இவ என்னோட பொண்டாட்டி முந்திக்கொண்டு சிவனேசன் சொல்ல
முகம் சுளித்தாள்
காக்கைகும் புறாவுக்கும் கல்யாணம் யாருடா பன்னி வைச்சாங்க உள்ளுக்குள்ள நினைத்து கொண்டாள்
சிவனேசன் தான்
கருநாகத்துக்கும் வெண்நாகத்துக்கும் கட்டி வைச்சா யாரும் பக்கத்துல நெருங்க முடியாதில்ல
பெண்மணி க்கு தூக்கிவாரி போட்டது படுபாவி மனதையே படிச்சிட்டானே முனுமுனுத்தாள்
அமைச்சர் தான் விஷயத்துக்கு வந்தார்
மேடம் உங்கமக படிக்கும் கல்லூரியில் தான் என் மகனும் படிக்கிறான் உன்மகளை விரும்புவதை என்னிடம் சொன்னதால் உங்க மகளை கேட்க வந்திருகோம்
ரதிமீனா அதிர்ந்தாள் பானுமதி யும் கூட
ரதிமீனா பரிதாபமாக மாமாவை பார்த்தாள் மாமா முகத்தில் அதிர்ச்சியோ படபடப்போ ஏதும் இல்லை இயல்பாக இருந்தார்
ஏன்மா நான் கேட்டா அவர் முகத்தை பார்க்கிறே
சார் என்கணவர் அனுமதி இன்றி நான் ஏதும் சொல்ல இயலாது சார்
ஓ ஏம்பா உன் பெண்ணை தரமுடியுமா
சார் சொல்றேன்
அதற்கு முன் வீட்டுக்கு வந்தவர்களை உபசரிக்கும் பழக்கம் உண்டு
முதலில் காபி தேனீர் எடுத்து கொள்ளுங்கள் ஐயா
பணிவோடு பேசுபவனை கண்டு மகிழ்ந்து எப்படியும் பெண் கொடுத்திடுவான் என காபி தேனீர் எடுத்து கொண்டார்கள்
கார்மேகம் பேச்சை எடுத்தார்
அப்புறம் தட்டை மாத்திக்கலாமா
எங்க வசதிக்கு குறைச்சல் ஏதுமில்லை உங்க மகளை மகாராணி போல பார்த்துப்போம்
ஏங்க சும்மா பேசிக்கிட்டு தட்டை எடுத்து கொடுங்க அம்மணி தான் அதட்டினாள்
கார்மேகம் தட்டை எடுத்து நீட்ட
சிவனேசன் பானுமதி யை பார்த்தான் வேண்டாம் என்பதுபோல சைகை காட்டினாள்
வேண்டாம்னு சொன்னாலும் விடமாட்டாங்களே அப்பாவை அடித்துடுவாங்களே உள்ளுக்குள் பயந்தாள்
மகளின் நிலை கண்டு தனக்குள் சிரித்து கொண்டான்
நீட்டிய தட்டை வாங்காமல்
சிரித்தான்
சார் நான் கேக்கும் கேள்விக்கு பதில் சொல்வீரா
என்ன கேளு சொல்கிறேன்
பாத்திரம் அறிந்து பிச்சையிடு
கோத்திரம் அறிந்து பெண் கொடு
இதென்ன
இது எவனோ உளறிவைச்ச கிறுக்கு
இதற்கும் பெண் கேட்பதற்கு ம் என்ன சம்மந்தம்
சம்மந்தம் இருக்கு எங்களுக்கு குலம் கோத்திரம் முக்கியம் நாங்க வெளியே பெண் கொடுப்பதும் எடுப்பதும் கிடையாது
அதைவிட எங்க குலத்திலேயே மகளுக்கு ஓராண்டு முன்பே நிச்சியம் செய்தாச்சு இப்ப மகளும் நிச்சயம் செய்த மாப்பிள்ளையும் கணவன் மனைவியாக தான் பழகுகிறார்கள்
இவர்களை பிரித்து வெளியாட்களுக்கு மகளை தர இயலாது
அப்பாவின் அதிரடி பதிலால் பானுமதி அதிர்ந்தாள்
அதைவிட பானுமதி யை சும்மா காதலித்து கைவிட நினைத்த அமைச்சர் மகனுக்கு தான் கோபம் பொங்கியது
உன்மக என்னை தவீர வேறு யாரை காதலித்தாலோ கல்யாணம் பன்னாலோ விடமாட்டேன்
அப்படியா என்ன அமைச்சரே உன் மகனோட ஆட்டம்
என் மகன் ஆசைபட்டா அடைந்தே தீருவான் நானும் விடமாட்டேன் பெண்மணி யும் சீறினாள்
ரதிமீனா பயத்தால் நடுங்கினாள்
ஆனால் சிவனேசன் பலமாக சிரித்தான்
அம்மா அவசர குடுக்கை
உங்க ஆட்டம் எல்லாமே போதும்
உன் மகன் ஆசைபடுவான் போய் நிச்சியம் பன்னுவே நிச்சியம் பன்ன பெண்ணோடு பலநாள் சுற்றுவான்
அலுத்து போய் கைவிடுவான் இதானே நடக்குது
திலகா
சுசிலா
ரேகா
மேகலை இவர்களோடு சுற்றியவன் உன்மகன் காதலித்து கைவிட்டு இருக்கலாம் ஆனா
உன் வீட்டு தோட்டத்திலேயே கொன்று புதைத்தது என்ன நியாயம்
என் மகளும் உ.ன் சைக்கோ மகனால் சாக நான் தரனுமா
சிவனேசன் பதில் பையனையும் பெண்மணியையும் உலுக்கினாலும்
அதிகார பலத்தால்
ஏய் என்மகனை சைக்கோ என்கிறாயா உன்னை உள்ளே தள்ள வைத்திடுவேன் பெண் கொடுப்பதாக சொல்லு
ஏய் நிறுத்துடி இதுக்கு மேல பேசினா நான் யாருன்னு காட்ட வேண்டிவரும்
என்னை உள்ளே தள்ளுவியா பார்ப்போமா
ஏய் கூனி பெண்ணே இப்போ பேசும் உரையாடல் அனைத்தும் நேரலை மூலமாக என்னோட எக்ஸ் வலைதளம் முகநூல் டிவிட்டர் எல்லாவற்றிலும் நேரலையாகிறது
இதெல்லாம் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முதலமைச்சர்
காவல் துறை பொதுமக்கள் வரை நேரலையாகிறது தெரியுமா
அதெல்லாம் நாங்க பார்த்து கொள்வோம் பேசாம எங்க பேச்சை கேள்
ஏன்டா கார்மேகம் முட்டாள்
சிங்கத்தின் குகை தன்னிலே சிறுநரியே ஊளையீடுதே இப்ப பாரு
உன்மகனும் உன் மனைவியையும் சிறையில் தள்ள உயர்நீதிமன்ற உத்தரவே பிறப்பித்துள்ளதை
என்ன விளையாடுறியா
அவர் விளையாடவில்லை
உயர்நீதிமன்ற உத்தரவு உங்க பாதுகாப்பு அதிகாரிகள் எங்களுக்கே வந்துள்ளது
ஏன் எதற்காக
உங்க மகனும் மனைவியும் நான்கு இளம்பெண்களை கொன்ற குற்றத்துக்காக உங்க அமைச்சர் பதவியும் பறிக்கபட்டுள்ளது
நான்கு பெண்களை கொன்றதாக யார் சொன்னது ஆதாரம் என்ன பெண்மணி சீறினாள்
சொன்னது சிவனேசன் சார் தான்
நேரலையில் சொன்னதில் நான்கு கல்லூரி மாணவிகள் காணமல் போனது எப்படினு தேடி அலைந்த காவல் துறை க்கு தெரிந்து போனது உடனே மோப்ப நாய் உதவியுடன் வீட்டு தோட்டத்தில் புதைக்கபட்ட நான்கு பிணங்கள் மீட்கபட்டுவிட்டது மன்னிக்கவும்
தாங்களை கைது செய்கிறோம்
பெண்மணி திகைத்தாள் முதலில் மனதை படித்தவனின் ஆற்றலை புரியாம போன முட்டாள் தனத்தால் வசமாக மாட்டிக் கொண்டதை உணர்ந்தாள்
உணர்ந்து என்ன பயன் போடி சைக்கோ மர மண்டைகளா
ஆளானபட்ட என்னிடமா உங்க ஆட்டம்
தலைகுனிந்து சென்றன
படுபாவி மனைவியாலும் மகனாலும் பதவியும் பெயரும் கெட்டு போச்சே
வீட்டின் வெளியேவரை வந்த கார்மேகம் திடீரென காவலரின் துப்பாக்கி யை மின்னலென எடுத்து தற்கொலை செய்து கொண்டார்
நல்லவரும் கெட்டவரால் பரிதாபமாக மடியும் நிலை
தொடரும்